வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்

100% சிரிக்க

‘Uncategorized’ பகுப்புக்கான தொகுப்பு

உலகக் கோப்பை 2011

பதிந்தவர் vavaasangam மேல் ஏப்ரல் 19, 2007

இந்திய கிரிக்கெட் அணியை தண்டிக்கவும் தமிழ் சினிமா நடிகர்களை தண்டிக்கவும் நமது வ.வா சங்கத்திடம் மனு குவிந்தது.
எமது தீர்ப்பு “இனி தமிழ் நடிகர்கள் கிரிக்கெட் ஆடுங்கள், கிரிக்கெட் வீரர்கள் தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்பதே!”

முதல் பகுதி:

இதில் தமிழ் வீரர்கள் கிரிக்கெட் ஆடுவார்கள். அதன் நேரடி வர்ணணை முதல் பகுதியில் வெளிவரும். இரண்டாம் பகுதியில் கிரிக்கெட் வீரர்கள் நடிக்கும் தமிழ் படங்கள் திரையிடப்படும்.

அப்போ ஆட்டத்தை ஆரம்பிப்போமா?

பேட்டிங் ஆர்டர்:

சிம்பு
தனுஷ்
S.J. சூர்யா
விஜய் (Vice Captain)
அஜித்(விஜயகாந்த் ………….. அதாவது Captain)
பிரகாஷ்ராஜ்
கார்த்திக்
நமீதா(Fast Bowler)
பாக்கியராஜ்
வடிவேல் சிங்
ராஜ்கிரண் (கடைசியில் அழுபவர்)

Substitues (அல்லகை’s): T.R. & விஜயகாந்த்
Coach: கவுண்டமணி
Manager: செந்தில்

Toss:
டாஸ் போட ரிக்கி பாண்டிங்கும், Referreeயும் ரொம்ப நேரமாக காத்திருக்கிறார்கள். கடுப்பாகி போன பாண்டிங், நேராக இந்திய Dressing Room நோக்கி விரைகிறார்.

“Captain, Captain, Indian Captain, please வாங்க” என்று கூக்குரலிடுகிறார், பாண்டிங்.
அப்பொழுது, சலங்கை சப்தம் கேக்கிறது. “இன்னிசை அளபெடையே” என்று பாட்டும் ஒலிக்கிறது.
பாண்டிங் குரல் கேட்டதும் சப்தம் திடுக்கென்று நின்றது. ஒய்யாரமாக சலங்கையுடன் நடந்து வருகிறார் அஜித்.

“பாண்டிங்! இனிமேல் என்னை ‘தல’ன்னு கூப்பிடுங்க, ஏன்னா, இந்திய கிரிக்கெட் உலகத்துல இது புது சகாப்தம்……கெட்டதுக்கும் நல்லதுக்கும் நடக்கிற யுத்தம்.” 10 செகண்ட் மெளனத்திற்கு பின் ‘அது’ என்று சத்தமாக கர்ஜிக்கிறார்.

பாண்டிங்கிற்கு விளையாடமலேயே வேர்க்கிறது. “தல! வாங்க Toss போட போகலாம். ஆனால், அதுக்கு முன்னாடி சலங்கையை கழட்டிட்டு வாங்க” என்கிறார். இதற்கு அஜித் மறுத்து வேகமாக தலையாட்ட அங்கே வருகிறார், Vice Captain, விஜய், அஜித்திற்கு சப்போர்ட்டாக.

நிறுத்துங்க Ponting (பூவே உனக்காக background music ஒலிக்கிறது)

“காதலுங்கிறது கால்ல கட்டியிறுக்கிற சலங்கை மாதிரிதான். கட்டறவங்க கட்டி ஆட்டம் போட்டா ஆட்டம் நின்ன பிறகும் சத்தம் கேட்கும்…..
நான் கிரிக்கெட் ஆட்டத்தை சொன்னேன்” என்று பிதற்றுகிறார் விஜய். அஜித்தும் விஜயும் கைத்தட்டிக் கொள்கிறார்கள்.

Ricky Ponting தலைமுடியை பிய்த்துக் கொள்கிறார். “யோவ், light போக போகுதய்யா” என்று கதறுகிறார்.

“ஒரு நிமிஷம் Ponting, நான் இப்போ வர்றேன்” என்று escape ஆகிறார் அஜீத். நேராக canteenல் அமர்ந்திருக்கும் coach கவுண்டமணியிடம் “Tossன்னா என்ன?” என்கிறார். அப்போது கவுண்டமணி அதிர்ச்சி தாங்காமல் குடித்துக் கொண்டிருந்த teaயை எதிரில் அமர்ந்துக் கொண்டிருந்த T.R. முகத்தில் துப்பி விடுகிறார்.

அஜீத்தை பார்த்து “என்ன கண்ணா சொன்ன”. அஜீத் “Tossனா என்ன?” என்கிறார். கவுண்டர் “எங்க இன்னொருக்கா சொல்லு”, அஜித் “Toss, Toss, Toss” என்று கத்துகிறார். கவுண்டர் தலை குணிந்து “இதென்ன சோதனை!, Tossன்னா என்ன அப்படிங்கிறத கூடவா coach சொல்லி தரணும். கடவுளே இது எனக்கு தேவையா?”

Tea முகத்தை துடைத்துக்கொண்டு T.R. பேச ஆரம்பிக்கிறார்.

அஜீத், இந்த Teamற்கு நீ Bossu

அதனால் நீ போடனும் Tossu

1 ரூபாய் coinஅ மேல வீசு!

Ponting சொல்றபடி வீழ்ந்தா நம்ம closeu

எப்படி இருந்தாலும் நம்ப all out for no lossu…..(ஏய் டண்டணக்கா டணுக்ணக்கா என்று இடத்தை விட்டு நகர்கிறார் T.R.)

Toss என்றால் என்னவென்று சரிவர புரியாமல் groundற்கு போகிறார் அஜித்……….இனி ஆட்டம் இனிதே தொடரும் – கமலேஷ் கண்ணன்.

.... இங்கே பதியப்பட்டது Uncategorized | 17 மறுமொழிகள் »

ராயல் ராம்-பொறந்த நாளு

பதிந்தவர் vavaasangam மேல் ஏப்ரல் 19, 2007

ராம்,

  • அவர எல்லாரும் குழந்தைன்னு சொன்னாலும் அவரு வளர்ந்த ஒரு குமரன்.
  • சதா வேலை நினைப்பாவே இருக்கிறவருங்க.
  • வல்லவரு, நல்லவரு நாலும் தெரிஞ்சவரு.
  • திறமை ரெம்வே அதிகம்.
  • மூளை கவுட்டி கவுட்டியா வேலை செய்யும்.
  • பொய் பேசவே மாட்டாரு.
  • பொண்ணுங்களை ஏறெடுத்தும் பார்க்காதவரு, பொண்ணுங்க கிட்டே சேட் பண்ணவே மாட்டாரு.
  • காலையில எழுந்த உடனே பல் விளக்கிருவாரு.
  • பொய் பேசவே தெரியாது.
  • தம், தண்ணின்னு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.
  • கை போன்ல பொண்ணுங்க கிட்டேயும் பேசவே மாட்டாரு, பசங்ககிட்ட கூட அதிகமா பேச மாட்டாரு.
  • சீட்டு, ரேஸ், கேம்பிளிங்க் எதுவுமே தெரியாது.
  • பெங்களூரிலேயே இருந்தா Pubக்கு போனதே கிடையாது.
  • கடைசியா ஒன்னு. அவரு ரெம்ப நல்லவருங்கோஓஓஓஓஓஓஓ

டிஸ்கி: “ஒரு பதிவு முழுசா பொய் மட்டுமே பேச முடியுமான்னு கேட்டவருக்காக”

ராயல் ராமின் பிறந்த நாளுக்காக(Apr-19) இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறோம்

.... இங்கே பதியப்பட்டது Uncategorized | 19 மறுமொழிகள் »

சங்கப் போட்டிப் பதிவுகள் – முழுப் பட்டியல்

பதிந்தவர் vavaasangam மேல் ஏப்ரல் 17, 2007

வ.வா.சங்கத்தின் போட்டிக்கு வந்துள்ளப் பதிவுகள்

டோண்டு ராகவன்- 1
டோண்டு ராகவன்- 2
டோண்டு ராகவன்- 3
டோண்டு ராகவன்- 4
டோண்டு ராகவன்- 5

செந்தழல் ரவி -1
செந்தழல் ரவி -2
செந்தழல் ரவி -3
செந்தழல் ரவி -4

ஜி -1
ஜி -2
ஜி -3
ஜி -4

குலவுசனப்பிரியன் -1
குலவுசனப்பிரியன் -2
குலவுசனப்பிரியன் -3
குலவுசனப்பிரியன் -4
குலவுசனப்பிரியன் -5
குலவுசனப்பிரியன் -6
குலவுசனப்பிரியன் -7
குலவுசனப்பிரியன் -8

மாறன் – 1
மாறன் – 2

சந்தோஷ் – 1
சந்தோஷ் – 2
சந்தோஷ் – 3
சந்தோஷ் – 4

ஷைலஜா – 1
ஷைலஜா – 2
ஷைலஜா – 3

செந்தில்- 1
செந்தில்- 2

கோல்மால் கோபால் -1
கோல்மால் கோபால் -2
கோல்மால் கோபால் -3
கோல்மால் கோபால் – 4

அருண்குமார் – 1
அருண்குமார் – 2
அருண்குமார் – 3

சி.வி.ஆர் -1
சி.வி.ஆர் -2
சி.வி.ஆர் -3

மாதங்கி – 1

டுபுக்கு – 1
டுபுக்கு – 2
டுபுக்கு – 3

டேவ் தேவ் – 1

லக்கி லுக் – 1
லக்கி லுக் – 2
லக்கி லுக் – 3
லக்கி லுக் – 4
லக்கி லுக் – 5
லக்கி லுக் – 6
லக்கி லுக் – 7
லக்கி லுக் – 8
லக்கி லுக் – 9
லக்கி லுக் – 10
லக்கி லுக் – 11
லக்கி லுக் – 12
லக்கி லுக் – 13
லக்கி லுக் – 14
லக்கி லுக் – 15
லக்கி லுக் – 16
லக்கி லுக் – 17
லக்கி லுக் – 18
லக்கி லுக் – 19
லக்கி லுக் – 20
லக்கி லுக் – 21
லக்கி லுக் – 22
லக்கி லுக் – 23

அபி அப்பா -1
அபி அப்பா -2
அபி அப்பா -3
அபி அப்பா -4
அபி அப்பா -5
அபி அப்பா -6
அபி அப்பா -7

ராம்C -1

ACE -1

இலவசக் கொத்தனார் – 1

அம்பி – 1
அம்பி – 2
அம்பி – 3
அம்பி – 5

கண்மணி – 1
கண்மணி – 2

உதய் – 1
உதய் – 2
உதய் – 3
உதய் – 4

செல்வன் – 1

மை ஃபிரெண்ட் – 1
மை ஃபிரெண்ட் – 2

நாகை பாலமுரளி – 1
நாகை பாலமுரளி – 2
நாகை பாலமுரளி – 3
நாகை பாலமுரளி – 4
நாகை பாலமுரளி – 5
நாகை பாலமுரளி – 6
நாகை பாலமுரளி – 7

Jayashree -1
Jayashree -2

.... இங்கே பதியப்பட்டது Uncategorized | 17 மறுமொழிகள் »

பாண்டி- அவசரக் கச்சேரி

பதிந்தவர் vavaasangam மேல் நவம்பர் 22, 2006

Image Hosted by ImageShack.us

கிழக்கப் பார்த்த கம்பத்துல்ல நம்ம பாண்டியை பாட்சா படத்து ரஜினிகாந்து மாதிரி கட்டிப் போட்டிருந்தாங்க…

சங்கத்துல்ல அடிச்ச போனை எடுத்தப்போத் தான் விவரம் தெரிஞ்சுது..
ஆஹா சிக்கிட்டான்ய்யா பாண்டி… இனி சிதறு தேங்காத் தான்டீயோன்னு சங்கத்து சிங்கம் ஒண்ணு டைனமைட்டை மிதிச்ச எபெக்ட்ல்லக் கர்ஜிச்சுட்டு ஒதுங்கிருச்சு.

எங்கேப்பா நம்ம சங்கத்து வாகனம்… எடுங்கப்பான்னு ஆளுக்காளு கொரலு விட.. போன மாதம் பேரீச்சபழ ஆசையில் பாண்டி செய்த பழைய ஊழல் வெளியே வந்தது. வாகனம் விலைக்குப் போடப்பட்ட விவகாரம் பாண்டி மீது இருந்த குற்றங்களின் எண்ணிக்கையை கணிசமாய் உயர்த்தியது.

சங்கத்து சபையின் முன் வாசலில் தளபதியும், இளைய தளபதியும் கம்பத்துப் பக்கம் பாண்டிக்குப் பக்கா காவலாய் நின்றுகொண்டிருந்தனர். தல அகமதாபாளையத்துகாரர்க்ளோடு அண்டாவுக்கு அளவெடுத்து அல்ட்ரா டிஸ்டம்பர் அடிப்பது எப்படி என்று அடிக்கடி மீட்டீங் போட்டு பேசவேண்டி இருப்பதாலும் விவசாயியாரின் டிராக்டர் பாகிஸ்தான் பார்டரில் பஞ்ச்ர் ஆகி நிற்பதால் அவரும் சங்கத்தில் மிஸ்ஸிங்.

கச்சேரிக்கான மைக்செட், சவுண்ட் சர்வீஸ் எல்லாம் பக்காவா செட் பண்ணிட்டு திருப்பதியா.. ச்சே திருப்தியான்னு நான் தளபதியைப் பார்த்துக் கேட்டுட்டு ஓரமா ஓதுங்கி நின்னுட்டேன். சிவா கையிலே சாட்டை எடுத்து தளபதி கையிலேக் கொடுக்க.. ராசுக்குட்டி என்ன நடக்கப் போவுதோன்னு பயத்துல்ல என் கையை எடுத்து அவர் கண்ணை அரையும் கொரையுமாப் பொத்திகிட்டு வேடிக்கைப் பார்த்தார்.

அப்போ நிறுத்துடா….என்று சவுண்ட்

வெள்ளைக் குருதப் பூட்டுன்ன சாரியட்ல்ல இருந்து ட்ரிம் பண்ண மீசையோட புலிக்கேசி மன்னர் இறங்குறாரு…

“ஏ…பாண்டி.. என்ன இது?”

“என்ன என்னாது?”

“என்னச் செய்தாய்?”

“என்ன என்ன செய்தாய்?”

“ம்ம்ம்ம்கும்..நான் கேட்பதை என்னிடமே திருப்பிக் கேட்கிறானே?”

“என்ன..ம்ம்ம்ம்கும்..நான் கேட்பதை என்னிடமே திருப்பிக் கேட்கிறானே?”

“பாண்டி தம்பி எல்லாத்துல்லயும் விலாட்டுத் தனம் இருக்கப் பிடாது?”

“என்ன பாண்டி தம்பி எல்லாத்துல்லயும் விலாட்டுத் தனம் இருக்கப் பிடாது?”
“அய்யோ அய்யோ.. இன்னும் சின்னப் பில்லயாவே இருக்க நீயு?”

“என்ன அய்யோ அய்யோ.. இன்னும் சின்னப் பில்லயாவே இருக்க நீயு?”

“டேய் பாண்டி வேணாம் எனக்கு கோவம் வராது….?”

“என்ன டேய் பாண்டி வேணாம் எனக்கு கோவம் வராது….?”

“ஸ்ப்பப்பபா இப்போவே கண்ணைக் கட்டுதே?”

“என்ன ஸ்ப்பப்பபா இப்போவே கண்ணைக் கட்டுதே?”

“வேணாம் எனக்கு கோவம் வராது”

“என்ன வேணாம் எனக்கு கோவம் வராது”

“ஒழுங்காச் சொல்லு.. இட்லி வடை சாப்பிட்டியா?”

“என்ன ஒழுங்காச் சொல்லு.. இட்லி வடை சாப்பிட்டியா?”

“டேய் ரகசியமா இட்லி வடைச் சாப்பிட்டியா?”

“என்ன டேய் ரகசியமா இட்லி வடைச் சாப்பிட்டியா?”

“மரியாதையாச் சொல்லு யாராவது இட்லி வடைச் சாப்பிடறதை ஒழிஞ்சு இருந்துப் பார்த்தீயா?”

“என்ன மரியாதையாச் சொல்லு யாராவது இட்லி வடைச் சாப்பிடறதை ஒழிஞ்சு இருந்துப் பார்த்தீயா?”

“டேய் நீ பண்ணுனது ரைட்டாத் தப்பா?”

“என்ன டேய் நீ பண்ணுனது ரைட்டாத் தப்பா?”

“சொல்லிருடா தப்பா ரைட்டா?”

“என்ன சொல்லிருடா தப்பா ரைட்டா?”

நீ அவன் ஆளுதானே.. அவன் பிட்ட எனக்கேப் போடுறீயா.. இனி வாய் பேசி பிரயோஜனம் இல்லை…

புலிக்கேசி கையில் இருந்து கிளம்பிய சாட்டை சரியாகக் குறி தவறி பாண்டியின் இடமும் வலமும் மாறி மாறி அடிக்க.. புலிக்கேசி மன்னர் களைத்துக் கன்னத்தில் கை வைத்து உட்கார்கிறார். டேய் மன்னருக்கு எதாவது புத்துணர்ச்சிக்கு வழி பண்ணுங்கடான்னு மிகவும் பரிதாபமானக் குரலில் மன்னர் கெஞ்சுகிறார்…

அவ்வளவுத் தான் பாண்டி கைக் கட்டுக்களை நொடியினில் அறுத்தெறிந்து விட்டு மின்னலெனப் போய் தலக் கொடியில் காயப்போட்டிருந்த வேட்டியை அவிழ்த்து கம்பங்களுக்கு நடுவினில் கட்டி.. டிஜிட்டல் டால்பி டிஸ்க் பிளேயரில் ஜெசிக்கா சிம்சனின் லோ ஹிப் நடனக் காட்சியினை ஓட விடுகிறான்.

மன்னர் மெய்மறந்து குத்துப் போடுகிறார். கூடவே கச்சேரியும் களைக் கட்டுகிறது..

“ஆடி வா.. ஆடி வா.. ஆணழகைத் தேடிவா.. பாடல் ஸ்பீக்கரில் அலறுகிறது…”

ஆடலின் உச்சத்தில் புலிக்கேசியின் மீசை மண்ணில் விழுகிறது…

“ஆ..தல.. நீயா?” பாண்டி வாய் பிளக்க…

சத்தம் போடாதே… உன்னிய விசாரிக்கத் தான் இந்த வேசம்… இந்தா அந்த பில்ல இடுப்பு மட்டும் தனியாக் கழண்டு விழற மாதிரி என்ன அழகா ஆடுது.. அதை எம்புட்டு அழகா நீயும் ரசிச்சு எங்களையும் ரசிக்க வைக்கற மாதிரி பண்ணியிருக்க்.. இதுல்ல உன்னிய மாதிரி திறமைசாலி நாட்டுல்ல காட்டுல்ல் ஏன் நெட்டுல்ல கூட உண்டாச் சொல்லு?

பாண்டி தல்யைப் பெருமையாய் பாக்குறான்.

“அதை செய் ராசா..அதைச் செஞ்சு மக்களைச் சந்தோசப்படுத்து.. அதை விட்டுட்டு இட்லி சுடுறேன்.. வடைத் திங்குறேன்னு என்ன இது சின்னப்பில்லத் தனமா இல்ல இருக்கு..அதுக்குன்னு இருக்கவங்க அதைச் செய்வாங்க.. நீ வேணாம்.. என்ன?”

விவசாயின் டிராக்டரின் சத்தம் கேட்க எல்லாரும் வாசலைப் பார்க்க…

விவசாயிக்கு ஸ்பெஷலா… ஜெனிபர் லோபஸ் பாடல் 1000 வாட் ஸ்பீக்கரில் அலறியது….

“நல்லது யார் செய்தாலும் சங்கம் கண்டிப்பாப் பாராட்டும்ய்யா…. நல்லதைச் செய்ங்கய்யா…செய்ங்கன்னு தல சவுண்ட்டா சொல்லிகிட்டே அகமதாபாளையத்து அடுத்த மீட்டிங்க்கு விவசாயி டிராக்டரில் கிளம்பிப் போனார்.

வாழ்க வளமுடன்.

.... இங்கே பதியப்பட்டது Uncategorized | 9 மறுமொழிகள் »

ஜூலை 7 எச்சரிக்கை !!!

பதிந்தவர் vavaasangam மேல் ஜூலை 6, 2006

எச்சரிக்கை !

வாலிப வயோதிக அன்பர்களே!!!

ஜூலை 7ம் தேதி யாரும் சங்கத்துப் பக்கம் வரவேண்டாம் என எச்சரிக்கப் படுகிறீர்கள் !!

சொன்னா கேளுங்க!

எச்சரிக்கையை மீறி நுழைபவர்களுக்கு ஏற்படும் விளைவுகளுக்கு சங்கம் வழக்கம்போல வருத்தப்படாது என்பதினை எங்க ‘தல’ கைப்பூ மீது ஆணையாக அழுத்தம் திருத்தமாக சொல்லிக்கொள்கிறோம் !!

.... இங்கே பதியப்பட்டது Uncategorized | Leave a Comment »

முக்கிய அறிக்கை – நாகை சிவா

பதிந்தவர் vavaasangam மேல் மே 31, 2006

நம் இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகள் அணியிடம் தொடரை இழந்த சேதியை மூன்று நாள் தாமதமாக ஜொள்ளு பாண்டியின் மூலம் அறிந்த நம் தல கைப்புள்ளளை மன வேதனையும் ஆத்திரமும் அடைந்தார்.

நம் மகளிரணி தலைவி புதகரத்தில் இருந்து அனுப்பிய புது கைப்பேசியின் மூலம் ஜமைக்காவில் இருக்கும் ராகுல் டராவிட்டை தொடர்பு கொள்ள பலமுறை முயன்றும் முடியாத காரணத்தால் மனம் கொதிப்பு அடைந்து உள்ளார்.

தான் உதைப்பந்து விளையாட சென்ற காரணத்தால் தான் இந்திய கிரிக்கெட் அணி தகுந்த ஆலோசனை கிடைக்காமல் தோல்வி அடைந்து இருக்குகலாம் என்ற குற்ற உணர்ச்சியில், உதைப்பந்தை உதறி விட்டு ஜமைக்கா புறப்பட தயார் ஆன அவரை தேவ் சமாதனப்படுத்தி நம் சங்க விருந்தினர் மாளிகையில் தங்க வைத்து உள்ளார்.

இதுகுறித்து முடிவு எடுக்க, சங்கத்தின் செயல்வீரர்கள் அனைவரையும் இன்று இரவு 11.11மணிக்கு நடைப்பெரும் அவரச கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிகிறோம்.

இக்கூட்டத்தில்,
நம் தல கைப்புள்ள உதைப்பந்தில் தொடர்ந்து உதை வாங்குவதா, இல்லை இந்திய கிரிக்கெட் அணியின் பெருமையை நிலைநிறுத்த ஜமைக்காவுக்கு உடனடியாக புறப்படுவதா? என கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறோம்.

பின் குறிப்பு: ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் நம் சங்க பத்திரிக்கையின் வாயிலாக சங்கத்தின் சிங்கங்களுக்கு அறிவிக்கபடும் என தெரிவித்துக் கொள்கிறோம்.

.... இங்கே பதியப்பட்டது Uncategorized | Leave a Comment »

வரு.வா.சங்கம் – 25வது பதிவு

பதிந்தவர் vavaasangam மேல் மே 30, 2006


சங்கத்தின் இனிய செல்வங்களே

இது சங்கத்தின் சார்பாக வெளிவரும் 25வது பதிவு.

இந்தச் சங்கத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து அன்பு
உள்ளங்களுக்கும் இனிய நன்றி….

இது ஒரு ஆட்டோகிராப் பதிவு

ஆமா சங்கத்தைப் பத்தி என்ன நினைக்கிறீங்களோ அதை வந்துப் பின்னூட்டமா எழுதிட்டுப் போங்க

வாழ்த்துங்க.. வைங்க… எந்த மொழியும் பயன்படுத்தப் படலாம்…

தொடர்ந்து உங்கள் ஆதரவை நாடும்

வரு.வா.ச

.... இங்கே பதியப்பட்டது Uncategorized | Leave a Comment »

ஆற்றலரசிக்குப் பத்துக் கேள்விகள்

பதிந்தவர் vavaasangam மேல் மே 29, 2006

வழக்கம் போல் சங்கத்துக்கு வந்த தபால் பையை நம்ம பாண்டியும் நானும் பாத்துகிட்டு இருந்தோம். துபாய் பக்கமா இருந்து நம்ம துபாய் ராசா ஒரு மூணு கிலோ பேரீச்சம் பழமும் கூடவே கிலோ கணக்குல்ல பாசமும் அனுப்பியிருந்தார். பிரிச்சுச் சாப்பிட்டோம் நல்லாயிருந்துச்சு… பேரீச்சம் பழத்தைத் தான்ய்யா சாப்பிட்டோம்

ச்சே விஷயத்துக்கு வர்ரோம்…

நமது கைப்புள்ள இதழ் மாதிரி புதரகத்துல்ல நமது புதர் ன்னு ஒரு பேப்பர் வருதாம் அந்தப் பத்திரிக்கையிலிருந்து பொன்ஸ் அக்காவுக்கு ஒரு லெட்டர் வந்து இருந்துச்சு.

வரு,வா.சங்கம் பெரும் புள்ளிங்க அம்புட்டுப் பேர்க்கும் வர்ற லெட்டரைப் பிரிச்சுப் படிச்சு அவங்கிளுக்குப் பதில் போடுறது அம்புட்டும் இந்தத் தொண்டர்கள் வேலைத் தானே… லெட்டரைப் பிரிச்சா.. அக்காவோட அரசியல் எதிரி யாரோ எழுதியிப்பான்(ள்) போல இருந்துச்சு..

அக்காவுக்குப் போன் போட்டா அக்கா சோறு வடிக்காம பர்கர் தின்ன கதையை வெட்டியாப் பேசி போன் பில்லை ஏத்தி விட்டிருச்சு…

அப்புறமா நாங்கப் பதட்டமா லெட்டர் மேட்டரை எடுத்து விட்டு இதுக்கு என்னப் பதில் சொல்லுரதுன்னு கேட்டோம்…

அக்கா விவரத்தை அசால்ட்டாக் கேட்டுட்டு இந்தப் பிஸ்கொத்து கேள்விக்கு எல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன்.. என் பேன்ஸ் பதில் சொல்லுவாயங்கன்னு நச்ன்னு போனைக் கீழே வச்சுட்டாயங்க…

அக்கா பேன்ஸ்ன்னு சொன்னது தலயிலே இருக்குமே அந்த மேட்டரா இல்ல தலக்கு எல்லாமே அந்த மேட்டரான்னு நானும் பாண்டியும் பாயைப் பிராண்டி ஒரு முடிவுக்கு வர முடியாமல் அந்தக் கேள்விகளை அப்படியே சங்கப் பலகையிலே ஒட்டுறோம்ய்யா.. அக்காவோட பேன்ஸ்க்குச் சமர்ப்பணம்.

நமது புதர் கேட்கும் பத்து கேள்விகள்

1. உங்கள் பதிவு ப்ரொபைலில் இருக்கும் அந்தப் பொன் குவியலை நீங்கள் எப்படி சம்பாதித்தீர்கள்?
சங்கத்தில் களவாடிய நிதியா? இல்லை சங்கம் பெயரைச் சொல்லி நீங்கள் ஊழல் செய்த நிதியா?

2. பலப் பதிவுகளிலும் உங்களை சின்னப் பெண் எனக் கூறும் நீங்கள்.. உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி சகப் பதிவாளர்களை மிரட்டி உங்களை அக்கா எனக் கூறுமாறு தொடர்ந்து பயமுறுத்துகிறீர்களாமே? இது சரியா?

3. தேர்தல் நேரத்தில் சங்கத்து வேட்பாளர்களுக்கு ஆதரவாக எங்குமே பிரச்சாரம் போக மறுத்து விட்டு… இப்போது மட்டும் அயல் நாட்டு சங்க வளர்ச்சி திட்டம் என்று புதிய திட்டம் வகுத்து அயல் நாடு சென்று டாலர் தேத்துவது நியாயமா?

4.புதரகத்தில் நீங்கள் மேற்கொண்டிருக்கும் அரிசி சோறு வடிப்பான் கருவி ஊழல் உண்மையா? தேவையின்றி சோறு வடிக்கும் சிறுப் பிரச்சனையைப் பெரிதாக்கி சங்கத்தாரின் பொன்னான நேரத்தை வீணானச் சோற்றுப் புராணப் பதிவுகளில் ஈடுபட வைப்பது மாபெரும் துரோகம் ஆகாதா?

5. சங்கத்தில் உங்களுக்கு பிகுலு பட்டத்துடன் வழங்கியப் பிகுலைத் தலக்கு எதிராகவே பயன்படுத்துவது.. அதாவது தல உதை பந்து விளையாடும் இடங்களில் ஒருவனைக் கூடவே தலப் பின்னால் ஓட விட்டு தலக் கைப்புப் பந்து எடுக்கும் போதெல்லாம் அவன் பிகுல் அடிப்பதைப் பார்த்து மகிழ்வது.. இது குற்றமல்லவா?

6. கைப்பொண்ணுவை வா.வ.சவில் ( சரியாகப் பார்க்கவும் வரு.வா.ச அல்ல) வா.வ.ச… இணையச் சொல்லி மிரட்டியது.. கைப்பொண்ணுக்கு மீசை முளைக்க வைத்தது.. அதற்கு விளக்கெண்ணெய் தடவியது எனக் கொடுமைகள் இழைத்தது சரியா?

7.சங்கத்துக்கு மிகவும் நெருக்கமானப் பின்னூட்ட சூப்பர் ஸ்டார் இலவசங்களின் இமயம் வாக்குறுதிகளின் வங்கி இலவசக் கொத்தனார் மீது சங்கத்திலிருந்து தட்டு முட்டுச் சாமான்களை லவட்டிச் சென்றதாய் குற்றம் சாட்டி மிரட்டியது.. இப்போது சாதம் வடிப்பது போன்ற சுமாரான சமையல் குறிப்புக்களைக் கொடுத்துவிட்டு பரோட்டாப் போடுவது எப்படி என்ற மாபெரும் சாதனைப் பதிவுப் போட்டு மீன்கொத்தி அன்பர்களின் அமோக ஆதரவு பெற்று அமைச்சரான கொத்தனாரின் உணவுத் துறை இலாகாவைக் கைப்பற்ற நீங்கள் சதி செய்கிறீர்களாமே?

8.வெண்பாவைக் கட்டாயக் கல்வியாக்கி வருத்தப் படாத வாலிபர்களின் நெஞ்சில் வேல் பாய்ச்சியது மிகப் பெரியக் குற்றம் அல்லவா?

9.கீதா அக்காவின் ஆறு லட்சம் ரசிகர் மன்றங்களைக் கலைத்தது… இன்னும் அவருக்கென் இருக்கும் சில நூறு மன்றங்களையும் பின்னூட்டமிட்டு கலவரப் பூமியாக மாற்றுவது என பெரும் சதி திட்டம் தீட்டி வருகிறீர்களாமே?

10. எல்லாவற்றுக்கு மேலாக உங்கள் மீது கூறப் படும் குற்றச்சாட்டு சங்கத்தின் உயர்வான…உயிரான… கொள்கையான வருத்தப் படாமல் இருப்பதை மீறியது.. உங்கள்த் தனி பதிவில் மட்டுமின்றி பிற பதிவுகளிலும் சென்று ‘வருத்தப்படுவதாய்’ பிரகடனம் செயதிருப்பது உங்கள் இயக்கத்திற்கு இழைக்கும் கொடுந்துரோகம் என்று நீங்கள் நினைக்கவில்லையா?

அக்கா ஆற்றலரசியே பதில் சொல்லுங்கள்….

அக்கா இந்தக் கேள்வியைக் கேட்டவனைத் தூக்கிப் போட்டு துவம்சம் பண்ணிடுறோம்ன்னு நானும் பாண்டியும் பிளட் பாயிலாகிக் கேட்டப்போ

தம்பிகளா.. நீங்கப் பிளட் பாயிலாகதீங்க… போய ஆளுக்கொரு ஆப் பாயில் அடிச்சுட்டு உங்க வேலையைப் பாருங்க.. இந்தக் கேள்விகளுக்கு என் ரத்ததின் ரத்தங்களும் உடன்பிறப்புக்களும் பதில் சொல்லுவாயங்கன்னு கூலாச் சொல்லிட்டாங்கப்பூ

.... இங்கே பதியப்பட்டது Uncategorized | Leave a Comment »

உதை பந்து!

பதிந்தவர் vavaasangam மேல் மே 27, 2006


உலக கோப்பை கால்பந்தாட்டத்தில் கலந்து கொள்ள ஜெர்மனி சென்றுள்ள கைப்புவின் முதல் பேட்டி:
(சற்று முன்புதான் தல ஒரு பயிற்சி ஆட்டத்தில் வழக்கம் போல பலரை பந்தாடி விட்டு களைப்புடன் வந்து அமர்ந்தார்).

பேட்டி இதோ:

நிருபர்: எப்படி இருக்குங்க கால்பந்தாட்டம்

கைப்பு: மொதல்ல பேர மாத்துய்யா, உதை பந்துன்னு பேர் வை. உதைச்சுதானே ஆடுறாங்க அப்புறம் என்ன?

நிருபர்: எவ்வளவோ விளையாட்டு விளையாடி இருப்பீங்க இந்த விளையாட்டு உலகம் முழுசும் பிரபலமா இருக்கு, நீங்களும் சேர்ந்ததனால இன்னும் பரபரப்பாயிருச்சு.. அதனால்…

கைப்பு:(குறுக்கிட்டு) என்னைய்யா விளையாட்டு இது, இங்கிட்டும் அங்கிட்டும் ஓட ஓட ஒரே பந்தை உதைச்சுகிட்டு, சே. எல்லாருக்கும் ஒண்ணொண்ணு குடுத்துறலாமில்ல. சின்னபுள்ளத்தனமா.

நிருபர்: ரொனால்டோ, பெக்ஹாம், ரூனே எல்லாம் உங்களுக்கு பயந்துக்கிட்டு ஊர விட்டு ஓடிட்டாங்கன்னு பேசிக்கிறாங்களே, அது உண்மையா?

கைப்பு: அது உண்மைதான். நான் விளையாட்ட விட்டு போக என்கிட்ட கெஞ்சினாங்க . நாந்தான் அவுங்களையெல்லாம் சமாதானபடுத்தி கூட்டி வந்தேன். பின்னாடி சங்கத்துல சேர்த்துகிறதாவும் வாக்கு கொடுத்துட்டேன். இருந்தாலும் போட்டின்னு வந்துட்டா கைப்பு சிங்கம் மாதிரி குதிச்சிருவானுல. இந்த போட்டிக்கு அப்புறம் சங்கத்துல கேட்டு உதை பந்தாட்டத்திலிருந்து VRS வாங்கிரலாம்னு இருக்கேன். நமக்கு வேற வேலை இருக்குள்ள…

நிருபர்: இது வரைக்கும் நீங்க ஒரு கோல் கூட போடலையாமே?

கைப்பு: நான் கஷ்டப்பட்டு காலால பந்த உதைச்சுகிட்டே முன்னாடி போறேன் ஒரு லூசுப்பையன் கால குறுக்கால உடுறான், விட்டேன் பாரு ஒரு அறை, ஹாஹா அப்புறம் வருவான பக்கத்துல. யாருகிட்ட இதெல்லாம் நடக்கும். அப்புறமா ஒருத்தன் இடுப்புல இடிக்கிறான் ஒரே உதை..

நிருபர்: பந்தையா?

கைப்பு: அவனத்தான். பின்னே விட்டுறுவோமா? அது கூட பரவாயில்லை. இவ்வளவு கஷ்டப்பட்டு எல்லாரையும் ஏமாத்தி பந்த கொண்டுபோயி அந்த கூடையில போட்டா..

நிருபர்: என்னாது கூடையா? அது கோல் போஸ்ட்டுங்க

கைப்பு: எனக்கு தெரியாதா, உனக்கு தெரியுமான்னு டெஸ்ட்டு பண்ணேன்.(என்னா வில்லத்தனம்). எவ்வளவு கஷ்டப்பட்டு எல்லாரையும் ஏமாத்தி பந்த கொண்டுபோயி கோல் போஸ்ட்ல உதைச்சா பிக்காளி ஒருத்தன் கையால புடிக்கிறான், இருக்கட்டும்னு விட்டுட்டேன். அது யாரோ ஒருத்தன் நம்மல பார்த்து பிகுலு ஊதிட்டே இருக்கான் உதைக்கவும் மாட்டேன்கிறான், அவன் எதுக்கு வேஸ்ட்டா, அவனையும் மாத்தனும்.
பேட்டி தொடரும்

.... இங்கே பதியப்பட்டது Uncategorized | Leave a Comment »

கைப்பொண்ணுவின் கடைசி கடிதம்

பதிந்தவர் vavaasangam மேல் மே 26, 2006

இன்று காலை வரு.வா.சங்கம் தலைமை நிலையத்துக்கு வந்த கடிதங்களைப் பிரித்துப் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு கடிதம் மற்ற கடிதங்களில் இருந்து மிகவும் வித்தியாசமாக இருந்தது.

உடைந்த இதயம் வடிவில் இருந்த அந்தக் கடிதத்தை பாண்டியும் நானும் பார்த்து திடுக்கிட்டோம் காரணம்… அந்தக் கடித்தின் அனுப்புனர் பெயர்….எங்கள் ஒன்னே முக்கால் வயதில் இருந்து எங்களின் ஓரேத் தானை தலைவனாக நாங்கள் முழு மனதோடு ஏற்று கொண்ட எங்கள் ‘தல’ பாசமிகு அண்ணன் கைப்புவின் உயிருக்குச் சொந்தக் காரியாகிய அன்பு அன்றில் பேர்ட் மற்றும எங்கள் மரியாதைக்கும் பாசத்திற்குமுரிய அண்ணியாம்… கைப்பொண்ணு…
அந்தப் பெயர் கோழிக் கிறுக்கலாய் கவ்ரின் பின்புறம் இருந்தது .

எங்கள் இருவர் கண்களிலும் கண்ணீர் கட்டிக் கொண்டது.. அவ்வ்வ்வ்வ்வ் என்ற சங்கத்தின் நாத ஒலிக் கூட எழுப்பமுடியாமல் திக்கி திணறி விக்கி உதறி நின்றோம் நாங்கள்….

கடித்ததின் முதல் வரியிலேயே ஒரு பேரல் காதல் வழிந்தது….
அந்த முதல் வரி என்னன்னா…

இந்த பாரசீக பேரட் மனசுல்ல வந்து கொய்யாச் செடி நட்டு வச்ச என் மம்முதக் கொய்யாலே.. என் காதல் அய்யாலே….

அதுக்கு மேலப் படிக்க முடியாம நாங்க அப்படியே அழுக ஆரம்பிச்சிட்டோம்.

கடிதத்தின் ரிவர்ஸ்ல்ல விலாசம் தேடுனோம்… அதுல்ல எதோ அமெரிக்கா அட்ரஸ் இருந்துச்சு….(புத்ரகம் வரு.வா.ச கிளைக்கு கடித்தின் நகல் அனுப்பப்ப்ட்டுள்ளது.. விவரங்கள் தனிப் பதிவில்)

அதுக்கு அடுத்த வரி எங்களைப் பதற வைத்தது…

அது…மேக்னட் கலர்ல்ல வந்து பிஷ் நெட் போட்டு என்னைக் கவர் பண்ண களவாணி மாமனுக்கு இந்த க்யூட் கைப்பொண்ணு எழுதும் கடைசி மடல்…..

பாண்டி கூட்டிட்டு வந்தப் பிரெஞ்சுப் பொண்ணு அது பிரெஞ்சு இல்லன்னு சொல்லிருச்சு… கடித்திலே இதுக்குப் பொறவு வர்ற செயதி எல்லாம் தலை கீழா தமிழ்ல்ல தான் எழுதி இருக்கு இந்தா மொத்தம் கடிதமும் அதன் விவரமும்…

என் ஆச சிரிப்பு எம்.சீ.ஆரே.. உம்ம மேல கொண்ட லவ்க்கு எப்படி நான் விளக்கம் கொடுப்பேன்…?

மொதமொதல்ல வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்ட் பக்கம் என்னைப் பாத்ததும் என்னைய வச்ச கண்ணு வாங்காம சைட் அடிச்சுகிட்டே நின்னிங்க…அப்போ உங்களைப் பாத்துப்புட்ட உங்க அய்யாகிட்ட, அம்புட்டு பயலும் வேடிக்கைப் பாக்க டவுசர் கிழிய அடிய வாங்கிட்டும் கொஞசம் கூட அசராம என்னியப் பாத்து ஒரு சிரிப்பு சிரிச்சியளே அதச் சொல்லவா?

அதுக்கு அப்புறம் எங்கப்பார் இளவ்ட்டக் கல்ல தூக்குனாத் தான் உனக்கு எம்பொண்ணை உனக்குக் கொடுப்பேன்ன்னு சொன்னத்துக்காக இளவ்ட்டக் கல்லைத் தூக்கப் போய் மூச்சு திணறி முக்கி மூணு மாசம் ஆண்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியிலே கிடந்தியளே அந்த வீரத்தைச் சொல்லவா?

ஆத்தூர்ல்ல அச்சு முறுக்கும்… கம்பத்துல்ல கடலை உருண்டையும்… பெரிய குளத்துல்ல பெப்பர் மின்ட்டும் வாங்கி கொடுத்த என் வில்லேஜ் வீராண்டியில்ல நீங்க….

தேனி டவுண்ல்ல வசந்து தியேட்டர்ல்ல இன்ட்ர்வெல் விடும் போது தேன் முட்டாய் வாங்கப் போன நீங்க… அது இல்லாம திரும்பி வர… நான் கண் கலங்க…. அங்கிட்டு இருந்த தேன் கூட்டுல்லயே கைய விட்டு தேனீகிட்ட கொட்டு வாங்கியும் கம்பீரமாக் கதறி பெரும் கலவரமே செஞ்ச காதல் அரசா… என் கனவு புருசா…

என் அழகு ராசா மேல எம்புட்டு பேருக்கு கண்ணு….உங்க அழகு எனக்கு மட்டும் தான்ன்னு உங்க ஆத்தாக் கிடாரி மேல சத்தியம் ப்ண்ணியளே…

ம்ம்ம் இம்புட்டு வீரம்.. காதல்… பாசம்.. இது எல்லாம் எந்தப் புள்ளக்குக் கிடைக்கும்

டார்லிங்!!!! ராசா அழகு ராசா ஐ லவ்ஸ் யூ….

ஆனா அந்த சரளாக்கா அன்னிக்கு உங்களைப் பார்த்து ஆயிரம் இருந்தாலும் ஆம்பிளைன்னா மீசை வேணும்டான்னு சொன்னதேக் கேட்டு என் சின்ன இதயம் சிதறிப் போச்சு.

கரபுர கரடி லேகியமெல்லாம் தடவிப் பார்த்தும்.. ஏன் மடக் மடக்குன்னு குடிச்சுப் பார்த்தும் எம் பொம்முக்குட்டி சிங்கத்துக்கு மீசையும் தாடியும் வளரவேயில்லையே.

இந்த ஏக்கத்துல்லயே என் வெயிட்டும் குறைஞ்சது.. என் கலரும் போயிகிட்டு இருந்துச்சு…

ஆச ராசா மீசையிலே இந்த கருப்பு ரோசா முகம் புதைச்சு லவ்ஸ் பண்ணனும்ங்கற கனவெல்லாம் கலைஞ்சுப் போயிட்டே இருந்தது…

என் மம்முத ராசாவும் என் மனக் கவலையைப் போக்க ஐடெக்ஸ் பென்சில் வச்சு வித்விதமா மீசை வரைஞ்சிட்டு வந்து செல்லம் அழுவாதாடா கண்ணுன்னு ஆறுதல் சொல்லுவீங்க.. அது என் மனசை எவ்வளவு வலிக்க வச்சதுத் தெரியுமா?

பென்சில் மீசை முகம் கழுவும் போது அழிஞ்சுப் போயிரும்ன்னு எனக்காக மூணு மாசம் முகம் கழுவாம என் ராசா கருத்து வேறப் போயிட்டீங்க… என் மவராசா காதலைப் போல வருமா?

அப்புறம் முகம் கழுவல்லன்னா நாறிப் போயிரும்ன்னு எடுத்துச் சொல்லி நீங்களும் முகம் கழுவிட்டு என் ஆசைக்காக ஒட்டு மீசை வச்சுட்டு நிப்பீங்க…
அந்த ஒட்டு மீசையை அந்த எடுப்பட்ட பயல்வ பார்த்தீபனும் கட்டத்துரையும் ஊதுவத்தி வச்சு நீங்க உறங்கும் போது சுட்டு சுட்டு விளையாடுவாய்ங்க… அதைக் கூட எம்மேல இருக்க அளவுக்கதிமான பியார் காரணமாப் பொறுத்துகிட்டு புன்னகைப்பீங்களே…

அய்யா எருமைக்கெல்லாம் பெருமை, கருமை பொறுமைன்னு புத்தி சொன்னவரே…

என்னாலேத் தாங்க முடியல்ல நீங்க மீசை இல்லாம தனியாப் போய் கண்ட சரக்க அடிச்சிட்டு கண்டமேனிக்கு புலமபறதை..

அதுன்னாலே நான் ஒரு முடிவு பண்ணுனேன்… உங்களுக்கு மீசை வளர எம்புட்டு செலவு ஆனாலும் பரவாயில்லன்னு…

ஆராய்ச்சிக்கு அஞ்சு கண்டம் சுத்தி வந்தேன்… அன்டார்டிக்காவுக்கு கூடப் போயிட்டு வந்தேன்…

என் முயற்சிக்கு நல்ல பலன் வந்துச்சு… மீசை முளைக்கிற மூலிகையை புதரகத்துல்ல ஒரு புதருக்குப் பின்னாலேக் கண்டுபிடிச்சேன்…

ஆனா..எப்படி சொல்லுவேன்…

இந்தக் கட்டத்துரையும் அவன் குரூப்பும் நான் கண்டுபிடிச்ச மூலிகையைப் புடுங்கி என் முகத்துல்ல மூணு வாரம் தேய்ச்சு விட்டுட்டாங்க…

அதுனால்ல…

அய்யோ இனி நான் உங்க முகத்துல்ல எப்படி விழிப்பேன்…

என் அழகு ராசா.. வீரமாண்டி …அழகனுக்கெல்லாம் அழ்கன்ன்னு அசலூர் சந்தையில்ல பேர் எடுத்த மம்முத சிங்கத்து முகத்துல்ல நான் எப்படி முழிப்பேன்… அய்யோ

என்னிய சிரிக்கச் சொல்லி போட்டாவெல்லாம் புடிச்சாயங்க…

நான் என் பாட்டி ஊர் கிழக்காப்பிரிக்காவுக்குப் போறேன்… இனிமே நான் உன்னியப் பாக்க திரும்பி வரவேமாட்டேன்…

எனக்காக ஒண்ணு செய்வீயா மாமா.. அந்தக் கட்டத்துரை குரூப் கிட்டே தான் உனக்காக ஆசயாத் தயாரிச்ச மூலிகைத் தைலம் இருக்கு அதை எப்படியாவது நீ அவங்க கிட்ட இருந்து கைப்பற்றி மூணுவாரம் தேச்சு மீசை வளத்துக்கோ மாமா.. அப்போ நீ என் மேல வச்சுருக்க காதல் உண்மையானதுன்னு இந்த ஊருக்கே தெரியும்…

லவ் அன்ட் லவ் ஒன்லி
உன் பாச ஜிலேபி கைப்பொண்ணு:(

லெட்டர் கூட வந்த புகைப்படம் உங்கள் பார்வைக்கு….

அந்த புகைப்படத்துக்குப் பின்னாடி இருந்த விஷயம்

மாமா இன்னொரு விஷ்யம் அந்தக் கும்பல் கூட ஒரு பொண்ணும் இருந்துச்சு… அந்தப் பொண்ணு கைப்பொண்ணைக் கொல்லணும்.. அப்படின்னு சவுண்ட் வேற கொடுத்துச்சு.. நான் பயந்துப் போயிட்டேன்.. அந்தக் குரல் நம்ம சங்கத்துக் கூட்டத்துல்ல கேட்டுருக்கேன்…ஆனா யாருன்னு சொல்ல பயமா இருக்கு….பாத்து மாமா
மேலும் விவரங்களுக்கு காத்திருங்கள்…

.... இங்கே பதியப்பட்டது Uncategorized | Leave a Comment »