வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்

100% சிரிக்க

‘Udhaykumar’ பகுப்புக்கான தொகுப்பு

சேட்டன்

பதிந்தவர் vavaasangam மேல் டிசம்பர் 19, 2006

சேட்டன் அப்படின்னா எதோ வயசானா டீக்கடை நாயர் இல்லைங்க. என்ன மாதிரி இளவட்டந்தான் (சைடுல நின்னு இளவட்டத்துக்கு அர்த்தம் தெரியுமான்னு கேக்கறது எனக்கு கேக்கலை, புரிஞ்சுதா?). தமிழராயிருந்தாலும் பாலக்காட்டில் பிறந்து வளர்ந்தவர். என்ட கடவுள் குருவாயுரப்பன், என்ட சீப் மினிஸ்டர் ஈ.கே.நாயனார், என்ட நாதம் தண்டை, என்ட நடனம் கதகளி, என்ட பீடி மலபார் பீடி, என்ட சாப்பாடு மீன் கறி, என்ட தேவி ஷகீலான்னு ஒரு குருப்பையே சொல்ல வைச்சவரு. அவரு இருந்தா அந்த இடமே கலகலன்னு இருக்கும்.

அவரோட பார்வையே கொஞ்ச வித்தியாசமானது. ஃபிகர் கரெக்ட் பண்ணனும்னா யமஹாவிலயோ பல்சாரிலோ வீலிங் பண்ணின பசங்களை பார்த்திருப்பீங்க. ஆனா, அரை மூடி தேங்காயை மளிகை கடையிருந்து ஆட்டைய போட்டுடு வந்து பக்கது சந்து முக்கு மாரியம்மன் கோவிலில் சுவத்தில் இருக்கும் திருநீறு, குங்குமத்தை எடுத்து தேய்ச்சுட்டு ஆன்ட்டி இன்னைக்கு சஷ்டி, கந்த கோட்டம் போயிட்டு வந்தேன். இந்தாங்க பிரசாதம் அப்படின்னு பதவிசா நீட்டுனார். அப்புறமென்ன எந்த ஃபிகருக்காக குட்டிக் கரணம் போட்டுட்டு இருந்தீங்களோ அதே பொண்ணு அம்மா குடுத்தாங்கன்னு வடை கொண்டு வருவதும், இல்லாத காய்ச்சலுக்கு கசாயம் வைச்சுக் குடுத்த அளும்பும் நடந்தது.

சேட்டா, எப்படி இந்த மாதிரி எல்லாம் உங்களால யோசிக்க முடிங்சதுன்னு கேட்டா எப்பவுமே கண்ணு காதெல்லாம் தொறந்து வைச்சு உஷாரா இருக்கணும். ஒரு வாரம் அவங்க என்ன பேசறாங்கன்னு கேட்டா அவங்களுக்கு என்ன புடிக்கும்ன்னு தெரிஞ்சுடும். உங்களுக்கெல்லாம் அதெலாம் வாரதுடா என அவிழாத வேட்டியை முட்டிக்கு மேல் மடித்துக் கட்டுவார். இவ்வளவு தெளிவா இருந்த நீங்க அப்புறம் ஏன் ஆறு அரியர் கிளியர் பண்ண ரெண்டு வருஷம் ஆச்சுன்னு கேட்டா அதுக்கும் ஒரு கதை ரெடியா வச்சிருந்தாரு.

காலேஜ் முதல் வருஷத்துல இஞ்ஜினியரிங் டிராயிங்ல சிவில் டிராயிங்கும் சேர்ந்து இருந்திருக்கு. தலைவர் ஷகீலா மேல் இருந்த ஆர்வத்துல மதியம் இருந்த சிவில் டிராயிங் கிளாஸ் ஒன்னு கூட போகலை. செமெஸ்டர்க்கு முத நாள் வீட்டு படம் போடறது எப்படின்னு ஒருத்தன் கிட்ட கேட்டுருக்காரு. அவனுக்கு என்ன கோவமோ தெரியலை அதெல்லாம் ஒன்னும் இல்லை, சாதாரணமான மேட்டர். உங்க வீட்டை மனசுல வைச்சுட்டு வரைஞ்சுடுன்னு சொல்லிட்டு போயிட்டான். இவங்க வீட்டுக்கு பின்னாடி ரெண்டு தென்னை மரமும், சைடுல ஒரு வாழை மரமும் இருந்துதாம். அதெல்லாம் வரைஞ்சுட்டு காக்கா ரெண்டு மூணு பறந்தா நல்லா இருக்கும்ன்னு அதையும் போட்டாராம். சிவில் புரபொசர் கூப்பிட்டு சொன்னாராம் நீ 7 வருஷத்துக்கு முன்னாடி இஞ்சினியரிங் முடிச்சா என் பேரை மாத்திக்கறேன்னு சொன்னாராம். அதுக்கப்புறம் எவனையும் நம்பற மாதிரி இல்லை என் வழி தனி வழின்னாரு.

அவரு கண்ணாடி ஒடைஞ்சு மூணு நாள் ஆச்சு. மாத்துங்க சேட்டா, ஏதாவது ஏடாகூடமா ஆயிடப் போகுதுன்னு சொன்னா, இப்போத்தான் நான் அஜீத் மாதிரி இருக்கேன். உங்களுக்கெல்லாம் பொறாமைன்னு சொல்லிட்டே திரிஞ்சுட்டு இருந்தார். வெள்ளிக் கிழமை நைட் ரொம்ப நேரம் ஆகியும் காணோம், ஒரு கை குறையுதேன்னு எல்லாம் வெளிய உக்கார்ந்துட்டு இருந்தோம். சேட்டனை ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணியிருப்பாதாக தகவல் வர அடிச்சு புடிச்சு போய் சேர்ந்தோம். முதல்ல வெளிய நிக்கறவர் கிட்ட 3000 ரூபாய் குடுத்து அனுப்புங்கன்னு சொன்னார்.

யாரையோ ICU ல சேர்க்கற அளவுக்கு அடிச்சு நொறுக்கிட்டு வெறும் 3000 ரூபாயில படுத்துட்டே முடிச்சுட்டாரேன்னு நினைச்சுட்டு பணத்தை குடுத்தா “அவருக்கு நல்லா கண்ணாடியா வாங்கி குடுங்க. நடு ரோட்டுல படுத்திருந்த எருமை மேல வண்டி ஏத்தி கொன்னுட்டாரு. எனக்கு இன்னும் 3 எருமை இருக்கு. தினமும் அந்த ஏரியாவுலதான் மேயும்”ன்னு சொல்லிட்டு நகர்ந்தாரு எருமையோட ஓனர். “நான் என்ன பண்னறது? ஸ்பீட் பிரேக்ன்னு நினைச்சுட்டு மேல விட்டுட்டேன். அந்த எருமைக்கு ஆயுசு அவ்வளவுதான்” காலை ஆட்டிட்டே சொன்னார்.

.... இங்கே பதியப்பட்டது Udhaykumar | 7 மறுமொழிகள் »

ஸ்கீயிங் ஸ்கீயிங் ஸ்கீயிங்…

பதிந்தவர் vavaasangam மேல் டிசம்பர் 14, 2006


ESPN , Star sports -ல எல்லாம் சும்மா சர்சர்ன்னு சறுக்கிட்டு வருவாங்களே அதே மாதிரி ஒரு நாள் நானும் சறுக்கனும்ன்னு நினைச்சுட்டே இருந்தது போன வாரம் நடந்தே நடந்துருச்சு.

பொறுப்பா ஒரு பெரியவர் பாடம் சொல்லிக் குடுத்தார். அதெயெல்லாம் பார்த்து தெரிஞ்சுக்காமா பொட்டு, பொடுசு, ஜிகிடி, ஜாங்கிரின்னு சும்மா பறந்து பறந்து வந்ததை பார்த்துட்டே நின்னுட்டு இருந்தேன். எங்க சறுக்கு பார்க்கலாம்ன்னு அந்த பெரியவர் சொல்லிட்டு இருந்தபோது நான் ராசுக்குட்டி பாக்யராஜ் மாதிரி இந்த பக்கம், அந்த பக்கம்ன்னு சாய்ஞ்சு சாய்ஞ்சு போட்டோ எடுக்க சொல்லிட்டு இருந்தேன். அப்பவே எனக்கு ஸ்கீயிங் போன திருப்தி வந்துடுச்சு.

மலை மேல போறதுக்கு கயிறை மெசின் மூலமா சுத்த விட்டுருந்தாங்க. மாடு தாம்புக்கயிறை அத்துட்டு ஓடுனா எப்படி கயிறை புடிச்சு நிறுத்துவுமோ அதே மாதிரி கயித்தை புடிச்சுட்டு மேல போயாச்சு. காலை எடுத்து அப்படியே சரிவுல வைச்சவுடனே புடிங்க, புடிங்கன்னு கத்தறேன் ஒரு பய உதவிக்கு இல்லை. மேல போன வேகத்துல கீழே வந்தாச்சு. மேல போனப்பா ஸ்கீ மேல நான் நின்னுட்டு இருந்தேன். கீழே ரிட்ட்ர்ன் வந்தப்போ ஸ்கீ ரெண்டும் என் மேல இருந்தது.

இதுக்கெல்லாம் பயந்தா ஆகிறதான்னு திரும்பவும் மேல போயி கீழ வந்து மேல போயி கீழ வந்து ரெண்டு சைடும் கொஞ்சம் கொஞ்சமா வீங்க ஆரம்பிடுச்சு (மீசைல மண் ஒட்டக்கூடாதுன்னு விழுகறப்போ எல்லாம் சைடு வாக்குல விழுந்தேன், ஹிஹிஹி…). ஒவ்வொரு தடவையும் ஸ்கீ, கண்ணாடின்னு எல்லாத்தையும் தேடி புடிச்சிதான் கண்டுபுடிக்க வேண்டி இருந்தது.

கடைசியா ஒரு தடவையாது முழுசா மேல இருந்து கிழே வரணும்னு மேல போனதுக்கு அப்புறம் கை காலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுடுச்சு. அதையெல்லாம் வெளிய காட்டிக்காம சும்மா ஸ்கீ ரெண்டையும் நேராத்தான் வைச்சேன். அந்த பெரியவர் டைனமிக்ஸ், பிசிக்ஸ்ன்னு சொன்னப்ப வேடிக்கை பார்த்ததுக்கு நல்லா அனுபவிச்சேன். எனக்கு 15 அடிக்கு கீழே 4 பேரு உக்காந்து வம்பு பேசிட்டு இருந்தாங்க. சறுக்கறதுக்குன்னு வந்துட்டு என்ன வெட்டி பேச்சுன்னு நேரா அவங்க மேல என்னை பார்க் பண்ண முயற்சி பண்ணினேன். என் பலம் தாங்க முடியாமா திசைக்கு ஒருத்தரா தெரிச்சுட்டாங்க.

அதுல ஒரு பொண்ணு கீழ போயிடுவியா? இல்லை லிப்ட் வேணுமான்னு கேட்டாங்க. ஆத்தா, நீங்க நல்லா இருப்பீங்க. அப்படியே உங்க டிக்கில என்னை கட்டி கீழ இழுத்துட்டு போயிடுன்ங்கன்னு கதறினேன். அப்படியெல்லாம் போக முடியாது, நான் பின் பக்கமா சறுக்கிட்டு கீழ வரேன், என் கையை புடுச்சிட்டு அப்படியே நீயும் என் பின்னாடி கீழே வந்துடுன்னு சொல்லிட்டு ஸ்கீயோட பிசிக்ஸ், டைனமிக்ஸ் எல்லாம் சொல்லிக் குடுத்தா அப்படியே மண்டைல கும்மு கும்முன்னு ஏறுது. பத்து பதினைஞ்சு நிமிஷம் அப்படியே என் கையை புடிச்சு சொல்லிக் குடுத்துதல கீழ வந்ததே தெரியலை.

அப்புறம்… அப்படினு நான் சொன்னத்துக்கு அப்புறம் நான் சொன்ன விசயங்களும் அவங்க சொன்னதும் சந்தூர் சோப்பு விளம்பரத்துல 10 வருஷத்துக்கு முன்னாடியே காட்டிட்டாங்க. எனக்கு விதிச்சது அவ்வளவுதான். சும்மா சொல்லக் கூடாதூங்க, ஸ்கீயிங் சூப்பருங்கோவ்…

.... இங்கே பதியப்பட்டது Udhaykumar | 21 மறுமொழிகள் »

ஒரு டைரி குறிப்பு -1

பதிந்தவர் vavaasangam மேல் டிசம்பர் 6, 2006

ஜூலை 18, 2006
johnny_walker
எங்க குடும்பம் கொஞ்சம் பெருசுங்க. தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா ந்னு ஒரு 100, 150 பேரு எங்க ஊருல இருப்பாங்க எனக்கு வயாசாகிட்டு இருக்குன்னு ஊரு முழுக்க கவலை. பாசக்காரனுகன்னு நினைச்சேன், அவனவன் அவனவனுடைய ஆசைய நிறைவேத்திக்க என்னைய பலிகடாவா நிக்க வைச்சிருக்கானுகங்க அப்படிங்கறது ரொம்ப லேட்டா எனக்கு இப்போத்தான் தெரிஞ்சுது…

எனக்கு இப்போத்தான் ஏழரை சனி ஜாதகக் கட்டம் முழுசுமா ஒரு சுத்து சுத்தி கபடி ஆடிட்டு போயிருக்கிறாரு… அவரு ஆடுன ஆட்டத்துல செவ்வாய், புதன், வெள்ளி எல்லாம் எடம் மாறி அவங்க வீட்டையெல்லாம் வாடகைக்கு விட்டுட்டு தெறிச்சு ஓடி போயிட்டாங்க. கல்யாணத்துக்கு நான் ரெடின்னு சொன்னா பத்தாது, குருவாம்… அவர் வீட்டை இப்போ யாரோ பார்த்துட்டு இருக்காங்களாம், அவர் அவர் வீட்டுல காலடி எடுத்து வைச்சாத்தான் கல்யாணம்ன்னு சொல்லீட்டாங்க… ஏங்க, நான் தெரியாமத்தான் கேக்கிறேன், அவரு வீட்டுக்கு அவரு வரட்டும் போகட்டும். அதுக்கு ஏன் என் வாழ்க்கையில் விளையாடணும்?

சரி, விசயத்துக்கு வருவோம். தம்பிக்கு குரு பலன் மட்டும் வரட்டும், கோயம்புத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடுன்னு பல ஊருல இருந்து பொண்ணுக ஜாதகத்தை இறக்கிற மாட்டோம்னு வீட்டுக்கு வந்தா வாய் ஓயாம பேசிட்டே இருப்பாங்க.

அவங்க பாச மழையில் நனைஞ்சு போய் ஒரு நாள் என் பாங்காளிகிட்ட என் மேல உனக்கு அவ்வளவு பாசமாடான்னு கேட்டா, “பங்கு, ஜான் வாக்கர்ன்னு ஒருத்தர் கருப்பு லேபிள், சிவப்பு லேபிள்ன்னுட்டு 1820 லிருந்து காய்ச்சிட்டு இருக்காராம். அதெல்லாம் நாங்க எப்ப கண்ணுல பாக்கறது? உனக்கு கல்யாணம்ங்கற சாக்குலதானே இதெல்லாம் நினைச்சுக்கூட பார்க்க முடியும். அது மட்டுமில்லாம டாஸ்மாக் சரக்கு குடிச்சி குடிச்சி உடம்பு பழகிடுச்சி. அது ஒசத்தி சரக்கு, ஒத்துக்காம போயிடுச்சின்னு ரெண்டு நாள் வீட்டு பக்கம் போகலைன்னா கூட யாரும் கண்டுக்க மாட்டாங்கள்ல???” ன்னு அவன் கனவை நினைவாக்க நாள் பாத்துட்டு இருக்கான்.

சரி இவன் சின்ன பையன், நம்ம கிட்ட காமெடி பண்ணறான்னு நினைச்சுட்டு ஒரு பெருசு கிட்ட எனக்கு கல்யாணம் பண்ணி பார்க்க உங்களுக்கு அவ்வளவு ஆசையான்னு கேட்டேன். “நாம தட்டை கையில கொண்டு போய் வரிசையா நின்னு வாங்கி சாப்பிடுவோமே அதுக்கு பேரென்ன பஃபே தானே?” ன்னு கேட்டார். ஆமா தாத்தா, அதுக்கென்ன இப்போ??? என நான் திருப்பி கேட்டேன். காங்கிரசம்புதூர்காரர் பையன் கல்யாணத்துல சீட்டு விளையாண்டுட்டு இருந்தோம். அந்த கல்யாணத்துல சாப்பாடு அது மாதிரிதான். பேச்சு வாக்குல இதே மாதிரி எங்க ஊரு பசங்க கல்யாணத்துலையும் போடணும்னு சொல்லிட்டு இருந்தேன். உடனே இந்த ஆயிக்கவுண்டன் பாளையத்துக்காரங்க “எச்சை கையில காக்கைய கூட துரத்தாதவங்க சாப்பாடு போடறாங்களாம்ன்னு கிண்டல் பண்ணுனாங்க. அன்னைக்கு என் துண்டை உதறி சபதம் போட்டிருக்கேன்னு அவரு ஒரு கொசுவர்த்தியை சுத்தி முடிச்சாரு.

பிச்சைக்காரங்க மாதிரி “கையில ஏந்தி சாப்பிடறது, ஜெயில களி வாங்க லைன்ல நிக்கறது மாதிரியான சாப்பாடெல்லாம் தேவையில்லை, வந்தவங்களுக்கு உக்கார வைச்சு தலை வாழையில் வடை பாயசத்தோட சாப்பாடு போடறதுதான் மரியாதைன்னு சொல்லிட்டு நீங்க பாட்டுக்கு ரம்மியை கன்டினியூ பண்ணிருக்கலாம். எதுக்கு வயசான காலத்துல இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகிட்டு??” ந்னு அவரை சமாதானம் பண்ணலாம்னு பார்த்தா “உன்னோட ஒரு கல்யாணந்தான் பாக்கி, அதுல இதை பண்ணியே ஆகணும்ன்னு திரும்பவும் துண்டை உதறி தோளில் போட்டார்.

தாத்தா, இதெல்லாம் நீங்க பார்த்து கல்யாணம் பன்னினா? நான் பெங்களூரிலிருந்து ஒரு பொண்ணை இழுத்துட்டு வந்து நான் இவளை கல்யாணம் பண்ணிட்டேன், ஆசிர்வாதம் பண்ணுங்கன்னு சொன்னா என்ன பண்ணுவீங்கன்னு அப்பாவியாய் அவங்களோட ரெஸ்பான்ஸ் எப்படி இருக்குன்னு பார்க்கறதுக்காக கேட்டேன்.

உன்னை வெட்டி போட்டுற மாட்டோம், நம்ம சாதியென்ன, சனமென்ன?? கனவுலகூட நீ இதை நினைச்சிறக்கூடாது என கட்டளை போட்டார். தாத்தா, எனக்காக சபதம் எல்லாம் போட்டிருக்கிறீங்க, இப்போ என்னை வெட்டிடுவீங்கன்னு அசோகன், நம்பியார், பி.எஸ்.வீரப்பா மாதிரி பேசறீங்க, என்ன தாத்தா இதெல்லாம்ன்னு கேட்டேன். ஆமா, நீ பாட்டுக்கு கல்யாணம் பண்ணிட்டு பெங்களூருக்கு போயிடுவ, இங்க டீக்கடை, ஆலமரம்ன்னு எங்க போனாலும் எங்களை எளக்காரமாத்தான் பார்ப்பாங்க. உன்னைய வெட்டுனும்ன்ன வைச்சுக்க, எங்க பார்த்தாலும் எந்திரிச்சு நிப்பாங்க என மீசையை முறுக்கினார்.

சிம்ரன் கடுங்கோபக்காரின்னு தினமலரில் போட்டிருக்கிறதை 10 தடவை படிக்கறதுக்கு டீக்கடைக்கு போவீங்க… தாயம் ஆடுவதுக்கு ஆலமரத்துக்கு போவீங்க. அங்க இருக்கறவங்க எல்லாரும் ஐநா சபையில நிரந்தர உறுப்பினர்கள். அவங்ககிட்ட மரியாதை வாங்கறதுக்கு ஆடு வெட்டுவேன் கோழி வெட்டுவேன்னு சொல்லற மாதிரி என்னைய வெட்டுறன்னு சொல்லறீங்கன்னு சொல்லிட்டு (எல்லாம் மனசுக்குள்ளதான்) சொல்லிட்டு எஸ்ஸாகி அமெரிக்கா வந்தாச்சு.

Johnny sitting_1

“இனி மேல் இந்த மாதிரி யாருகிட்டையும் கேக்க மாட்டேன்” அப்படின்னு 100 தடவை எழுதிருந்தது. (இம்போசிசன் போலிருக்கு!!!).
இது ஒரு வருத்தமுள்ள வாலிபனின் டைரிக் குறிப்பு. டைரி அதுக்கப்புறம் காலியா இருந்தது. ஒரு வேளை பயலுக்கு டைரி எழுதறக்கெல்லாம் நேரம் இல்லை போலிருக்கு… படிச்சது தப்புத்தான், ஆனா அடுத்தவன் வகையா ஆப்பு வாங்குறப்போ மட்டும் பல்லு மொத்தமும் வெளிய குதிக்குதே… அதுக்காகவே திரும்பவும் அவனோட பழைய டைரிய படிக்கலாம்ன்னு இருக்கேன், படிக்கட்டுமா?

.... இங்கே பதியப்பட்டது Udhaykumar | 17 மறுமொழிகள் »

வ(லி)ழி தெரியாத வாலிபன்

பதிந்தவர் vavaasangam மேல் டிசம்பர் 4, 2006

உதய்: யப்பா… அந்த ஃபேனை போடுங்கப்பா. இப்போத்தான் தமிழ்மணம், தேன்கூடு எல்லாம் சுத்திட்டு வந்திருக்கேன். எந்த சந்துல இருந்து யாரு அடிப்பாங்கன்னே தெரியல. தாகமாவும் இருக்கு, கொஞ்சம் ஐஸ் வாட்டர் இருந்தா குடுங்க.

வெட்டிப்பயல்: சங்கத்து சிங்கங்களே, நம்ம அட்லாஸ் வாலிபர் வந்திருக்காரு. விசிறியும், பானைத் தண்ணியும் கொண்டு வாங்க.

உதய்:என்னது அட்லஸா ? அதெல்லாம் ஸ்கூல் படிச்சப்போ பார்த்ததோட சரி. என்னைய வைச்சு காமெடி பண்ணறேன்னு தெரியுது. அதென்ன விசிறியும், பானைத் தண்ணியும்? கரண்ட் இல்லையா?

வெட்டிப்பயல்: சங்கமே கடன்லதான் போவுதுன்னு தெரியாதா உங்களுக்கு? தலை கைப்பு கட்ட வேண்டிய 10 அபராதம் பாக்கி இருக்கு. இதுல சித்தூர்கட் செலவு, அப்புறம் பஸ்ல கண்டக்டர்ன்னு சொல்லிட்டு ஓசி ட்ரிப் வேற அடிச்சிருக்காரு, அதுக்கு எவ்வளவு கேப்பாங்கன்னு தெரியலை…. அட விடுங்க, அதெல்லாம்கூட எதிர்பார்த்ததுதான்…

இந்த தேவ் இருக்காப்புல இல்ல, வல்லவன் படம் பார்த்துட்டு விமர்சனம் எல்லாம் எழுதராரு. அதை பாக்காலாம் வாங்கடா கூட்டிட்டு போன ரெண்டு பேரு தூக்குல தொங்கிட்டாங்க. அதுக்கு பாடி எடுக்கறது சம்பந்தமா பஞ்சாயத்து பண்ணத்தான் தலயும் போயிருக்கறாரு. அங்க என்ன ரணகளம் ஆயிட்டு இருக்குன்னு தெரியலை. தல எப்படியும் பத்து சட்டை மாத்த வேண்டியிருக்கும்.

உதய்: பஞ்சாயத்துக்குதானே போயிருக்காங்க, அதுக்கு எதுக்கு பத்து சட்டை?

வெட்டிப்பயல்: சும்மா விளையாடாதீங்க… அடி வாங்கி சட்டை கிழிஞ்சு போனா தல திரும்ப புது சட்டை போட்டுட்டுத்தான் அடிக்க விடுவாரு.

உதய்: சங்கத்து சிங்கங்களேன்னு கூப்பிட்டு ரொம்ப நேரம் ஆகுது, யாரையும் வரக் காணோம். சரி வா, நாமளே போயி விசிறியும் பானையும் எடுத்து வந்துரலாம்.

வெட்டிப்பயல்: அய்யோ உதய், விசிறியும் காணோம்,பானையும் காணோம். ஒரு நிமிசம் இருங்க…இப்போத்தான் சுவாமி பித்தானந்தா கெட்டப்புக்கு விசிறி இருந்தா நல்லா இருக்கும்னு சிபி சொல்லிட்டு இருந்த மாதிரி இருந்தது. அதை அவரு எடுத்துட்டு போயிட்டாரு போல இருக்கு.

உதய்: அதான் சிம்புவுக்கும் நயன் தாராவுக்கும் லடாய்ன்னு வந்துடுச்சுல்ல, அப்புறம் எதுக்கு இன்னமும் அந்த வேஷம்? கோர்ட் ஜெயிலில் எல்லாம் அவங்கள மாதிரி 420 ஆளுகளாக நிறைஞ்சு இருக்காங்கன்னு ஈ படத்துல ஜீவா சொன்னாரு. இவரு சாமியாரா கோர்ட்டுக்கு போயி அவங்க மனக்குறைய தீர்த்து வைக்கட்டும். அப்புறம் அந்த பானை என்ன ஆச்சு? அதையும் அடகு வைக்க கொண்டு போயிட்டிங்களா? சேட்டு செவுள்ளையே அறைவான்.

வெட்டிப்பயல்: எங்க ஆளுக அதெல்லாம் ஏற்கனவே சேட்டுகிட்ட வாங்கிட்டாங்க. நம்ம இளா இல்ல, ஊரெல்லாம் நல்ல மழை, ஆர்யம் நல்லா விளைஞ்சிருக்கு, அதை போட்டு வைக்க பானை வாங்கனும்ன்னு சொல்லிட்டு இருந்தாரு. இங்க இருந்தே ஆட்டையை போட்டுட்டாரு போல இருக்கு.

(யாரோ சங்கத்து முன்னால் நின்று சுந்தர தெலுங்கில் சத்தமாக ஏதோ சொல்லுகிறார்கள்)

உதய்: லகலகலக… எவருதி? சங்கத்து வாசல்ல சாணி தெளிக்கிறது…

வெட்டிப்பயல்: அய்யோ உதய், பேசாம உக்காருங்க. அவன் பாட்டுக்கு கத்திட்டு போயிடுவான். அப்புறம் நாம வெளிய போலாம். இதுதான் சாக்குன்னு ஜோதிகா மாதிரியே குடுத்த காசுக்கு மேலயே நடிக்கறீங்க.

உதய்: ஹிஹிஹி…அவன் மொத்த பரம்பரையவே திட்டுனா மாதிரி இருந்தது, அதான் கொஞ்சம் உணர்ச்சிவசபட்டுட்டேன்.

வெட்டிப்பயல்: சங்கத்து வாழ்க்கையில இதெல்லாம் சாதாரணம். தெலுங்கு பட விமர்சனம் எழுதலாம்ன்னு 3 டிவிடி வாங்கிட்டு வந்தேன். சார்மி, இலியானா, ஜெனிலியாவையெல்லாம் பார்த்ததுக்கு அப்புறம் டிவிடி ரிட்ட்ர்ன் பண்ண மனசு வரலை. இன்னமும் 1 மாசத்துல குடுத்துருவேன். அதுக்கபுறம் அவன் வர மாட்டான்.

உதய்: என்ன நடக்குது இங்க? கொல்ட்டி கதை, பட விமர்சனம், அப்புறம் தெலுங்கு மக்களோட சுந்தர தெலுங்கில் மாட்லாடறது… அம்மாயி தெலுகா? நாக்கு தெலுசுந்தி…

வெட்டிப்பயல்: பேசறதுக்கு எவ்வளவு மேட்டர் இருக்கு? அதைவிட்டுட்டு எதையோ நோண்டிட்டு இருக்கீங்க. ஜொள்ளுப்பாண்டியும் நீங்களும் எதோ ஆராய்ச்சிக் கட்டுரை எழுதறதா ஒரு பேச்சு இருந்துச்சே என்ன ஆச்சு?

உதய்: எனக்கு கைடா இருக்கறதுக்கு முதல்ல ஒத்துக்கிட்டாரு. இப்போத்தான் அடிபட்டு ICU வில இருந்து வெளிய வந்திருக்காரு. காயம் எல்லாம் ஆறட்டும்னு பார்க்கிறேன். பின்னாடி பட்ட காலிலே படும்னு பழமொழி எல்லாம் சொல்லக் கூடாதுல்ல… சரி வரட்டா? நான் வேறெங்காவது போயி தண்ணி குடிச்சிக்கிறேன்.

என்னது, வேறெங்காவது போயா? இன்னும் ஒரு மாசத்துக்கு இங்கதான். எல்லோருக்கும் சொல்லி விட்டாச்சு. சங்கு, சேவுண்டி கூட ரெடி அட்லாஸ் வாலிபரே!!! என கோரஸாக சொல்லியபடி சங்கத்து சிங்கங்கள் கைப்பு தலைமையில் உள்ளே வருகிறார்கள்.

உதய்: மக்கா, நீங்க எல்லோரும் இங்கதான் இருக்கீங்களா??? சொல்லவே இல்லை. இப்ப வரைக்கும் நாங்க ஒன்னுமே பேசவே இல்லை. யாரோ டப்பிங் குடுத்துருக்காங்கா, டப்பிங். சினிமால குடுக்கற மாதிரியே, ஆமாம்… ஒன்னும் மனசுல வைச்சுக்காதீங்க…வரட்டா????

கைப்பு: எனக்கேவா, இல்லை எனக்கேவான்னு கேக்கறேன். சட்டையெல்லாம் கிழிஞ்சு குத்துயிரும் குலை உயிருமா நின்னாக் கூடா பத்து பேர அடிச்சா சட்டை கிழியத்தான் செய்யும்ன்னு சொன்ன எனக்கேவா??? ஒரு மாசத்துக்கு அந்த பக்கம் இந்த பக்கம் நகரக் கூடாது. உக்கார்ந்த இடத்துலயே உனக்கு எல்லோரும் ஆப்பு வெப்பாங்க. சத்தமே வரப்படாது, சரியா?

தேவ்: செம ஆப்புல்ல…தோ பாரும்மா இப்பெல்லாம் யாரும் யாருக்கு ஆப்பு வைக்கிறதே இல்லை. எல்லா ஆப்பும் அங்க அங்கதான் இருக்கு. நாமதான் அதை தேடி ஓடி போயி சும்மா ஜம்ப் பண்ணி உக்கார்றோம்.

உதய்: நானும் வல்லவன் படம் பார்த்தேன். அதுக்காக இப்படியா டைமிங் வச்சு ஜோக் அடிக்கறது. தண்னி குடிக்க உள்ள வந்தவனை தலை தனியா, கால் தனியா பிரிக்கணும்னு முடிவு பண்ணீட்டீங்க, இதெல்லாம் வேண்டாம்ன்னா விடவா போறீங்க. யப்பா ராயல் ராம், திண்டுக்கல் தலைப்பா கட்டு பிரியாணியும் உங்கூரு ஜிகர்தண்டாவும் வாங்கிட்டு வாப்பா… அப்படியே சூடான் புலியை பாத்தீங்கன்னா ஏதாவது புதுசா அயிட்டம் சுட்டு பழகிட்டு இருப்பாரு, அதையும் ஒரு எட்டு பார்த்து வாங்கிட்டு வந்துடுங்க.

தெம்பா இருக்கணும்ல, என்ன நான் சொல்லறது???

.... இங்கே பதியப்பட்டது Udhaykumar | 25 மறுமொழிகள் »