வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்

100% சிரிக்க

‘ILA’ பகுப்புக்கான தொகுப்பு

உங்களுக்கு 40, எங்களுக்கு மட்டும் 105

பதிந்தவர் vavaasangam மேல் ஏப்ரல் 23, 2007

“நகைச்சுவைப் போட்டின்னு அறிவிச்சா யாரு வந்து எழுதப்போறாங்க, வேலையை பாருங்கப்பா” இது நண்பர்

” இல்லீங்க, தமிழ் வலைப்பதிவர்களும் நகைச்சுவையா எழுதறாங்க”- இது நம்ம சிங்கம்.

“அப்படியா வேணுமின்னா பாரு ஒரு பத்து பேரு தேறமாட்டாங்க”

“சரிங்க, போட்டி நடத்திட்டு சொல்றோம், தமிழ்ப்பதிவர்ங்க எவ்ளோ பேர் நகைச்சுவயாவும் எழுதறாங்கன்னு”

“இப்போ இந்த போட்டி நடத்தி என்னாத்த கிழிக்கப் போறிங்க”

“வ.வா.ச ஆரம்பிச்சு ஒரு வருசம் ஆச்சுங்க. அதுக்கு Global Warming Awareness’ம் அறிவிச்சு இருக்கோம். போட்டிக்கு வர பதிவுகளை தொகுப்பாக்கினா அப்படியே நல்ல நகைச்சுவை தொகுப்பும் கிடைக்கும். பதிவர்ங்ககிட்டே இருக்கிற நகைச்சுவை உணர்வையும் வெளிக் கொணர ஒரு நல்ல சந்தர்ப்பமாவும் அமையும்”

“சொன்னா கேட்கவா போறீங்க, எப்படியோ போங்க”

கைப்பு: ஆஹா, அந்த நண்பர் சொன்ன மாதிரியே மக்கா கவுத்திட்டாங்கய்யா கவுத்திடாங்க. போட்டிக்கு வந்த பதிவுகள் மட்டும் அதிகமில்லை அப்பு
105
.

ஷ் ஷ் அப்பப்பா இப்பவே கண்ண கட்டுதே, அன்னந்தண்ணி இல்லாம படிச்சாவே 2 வாரம் ஆவுமே. மின்னாடி சொன்ன மாதிரி 26ம் தேதிக்குள்ள ரிஜல்ட்டை சொல்லிருவாய்ங்களா? சொல்லுங்க அப்ரசண்டிகளா?

சிங்கங்கள் எல்லாம் ஒன்னா கோரஸாக: முயற்சி பண்றோம்…

.... இங்கே பதியப்பட்டது ILA | 11 மறுமொழிகள் »

வ.வா.சங்கத்தின் 1ம் ஆண்டு ஆர்ப்பாட்டம்

பதிந்தவர் vavaasangam மேல் ஏப்ரல் 7, 2007

அட, உண்மையா இது? அதுக்குள்ளேவா? நெசமாவா? உண்மைதாங்க, மலைப்பா இருக்கு. வ.வா.சங்கம் ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆகப்போகுது. 2006-ஏப்ரல் மாசம் 26ம் தேதி பொன்ஸ்ஸும், தேவும் ஏதேச்சையா ஏதோ பேசிக்க்ட்டு இருக்க அப்போ உதயமானதுதான் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

நகைச்சுவை மட்டுமே எங்களின் மைய கரு என்று அன்று எடுத்த முடிவு இன்றும் தொடர்கிறது. பொன்ஸ்தான் வ.வா.சங்கத்துக்காக ஒரு சோதனை பதிவிட்டாங்க. அடுத்த நாளே யார் யார் சங்கத்துல இருக்கப்போறோம்னு தெரியாமலேயே ஒரு படம் அனுப்பிச்சதும், பொன்ஸ் அதையே ஒரு பதிவா போட்டாங்க. 45 பின்னூட்டம் விழுந்ததும் எங்களுக்கு உற்சாகம் பத்திக்கிச்சு. அப்ப ஆரம்பிச்ச ஆர்ப்பாட்டம்தான் இன்னும் அடங்கவே இல்லீங்க. ஆப்புக்களின் வேகம் அதிகமாக சங்கம் சாராத இன்னொருத்தர புடிச்சு மாசம் அட்லாஸ் வாலிபர்ன்னு பேர் வெச்சொம். அப்படியே தமிழ்ச்சங்கம், கதைச்சங்கம்ன்னு நிறைய கிளைகளும் உருவாகிச்சு.

ஆப்புக்களும், அட்லாஸ்களும் நிரம்பி, ததும்பி வழிஞ்சுகிட்டு இருக்கிற இந்த நேரத்துல முதலாமாண்டு நிறைவு விழாவை சாதாரணமா காமெடி பண்ணாமல் சமூகத்துக்கு (குறைந்தப்பட்சம் பதிவுலகத்துக்கு) ஏதாவது சொல்லனும்னு தோணியது. ஆதலால் எங்களுடைய முதலாமாண்டு நிறைவு விழாவை உலகையே ஆட்டிப்படைக்கும் ‘GLOBAL WARMING” awarenessஆக அறிவிக்கிறோம்.

Global Warming awarenesssன்னா என்னான்னு நாங்க சொன்னா நல்லா இருக்குமா? விக்கிப்பசங்க சொன்னாதானே நல்லா இருக்கும். அதான், சங்கத்தின் முதல் அட்லாஸ் வாலிபரும், விக்கி பசங்கள்ள ஒருவருமான இலவச கொத்தனார் Global Warming பத்தி ஒரு பதிவு போடப்போறாரு. அதைத் தொடர்ந்து, சங்கத்துக்கு அட்லாஸ்ன்னு ஒரு எண்ணம் வர காரணமான கோவி.கண்ணனின் ஆர்ப்பாட்ட பதிவு ஒன்றும் வரப்போகுது. எந்தவொரு வெற்றிகளும்,சாதனைகளும் உங்களை போன்ற நல்லோர் ஆதரவு இல்லாமல் ஏற்படுவதில்லை. இதுவரைக்கு எங்களுக்கு ஆதரவ(லி)ளித்து வந்த அனைத்து தரப்பு மக்களுக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றி!

இதோ ஆரம்பிக்குது நமது ஆர்ப்பாட்டம்!! நகைச்சுவையை மட்டுமே கருத்தாக கொண்ட ஒரு போட்டியும் நடத்தலாமென்று உத்தேசம் உள்ளது, அதற்கு தாங்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். இன்று வரையிலும் தாங்கள் அளிந்தவந்த புரிந்துணர்வுடன் கூடிய ஒத்துழைப்பை இப்பொழுதும் அளிப்பிர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்கள் நண்பர்கள்.

.... இங்கே பதியப்பட்டது ILA | 22 மறுமொழிகள் »

கங்குலிக்கு வாரிசு நம்ம நாட்டாமை

பதிந்தவர் vavaasangam மேல் ஏப்ரல் 4, 2007

எல்லாரும் அடிச்சு, கிழிச்சு, தொவச்சு, தொங்கப்போட்ட இந்தியா கிரிக்”கெட்டு” மாதிரி இல்லிங்க இந்தப் பதிவு. நாட்டாமைய பத்தின ஒரு ஸ்பெஷல் ரிப்போட்டுங்க இது.

Maggi செய்யுற நேரமும், கங்குலி பேட்டிங் பண்ற நேரமும் ஒன்னு, கங்குலி பேட்டிங்க் பண்ண groundக்கு போகும்போது ஐஸ்கிரீமை வாங்கி வைய்யி, கறையருதுக்குள்ள வந்துருவாருன்னு எல்லாம் நக்கல் நையாண்டி பண்ணினா, நம்ம நாட்டாமை அதுக்கும் மேலைங்க.

நேத்து சரியா Tue- Apr 03, 11:43:00 PM IST க்கு சரித்திர பதிவு ஒன்ன போட்டாரு. சாப்பிட்டு வந்து, தமிழ்மணத்துல அந்தப்பதிவ தேடிப்பார்த்தா காணோம். அதுக்குள்ள அந்த பதிவு தமிழ்மணத்தை விட்டு போயிருச்சு. எப்படின்னு யோசிச்சு பார்த்தா அரை செஞ்சுரி அடிச்சுட்டு நக்கலா ஒரு சிரிப்பு சிரிக்கிறாரு நம்ம ஊரு நாட்டாமை. ஏன் இப்படி? அதனால

நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு

நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு

நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு

நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு

நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு

ஒரு echo effect போட்டு படிச்சுக்குங்க.

.... இங்கே பதியப்பட்டது ILA | 26 மறுமொழிகள் »

Sangam Technologies-ஆப்புரைசல் டைம்

பதிந்தவர் vavaasangam மேல் ஏப்ரல் 3, 2007

ஆப்புரைசல் மாசம் வந்துட்டாலே எல்லோருக்கும் வயித்துல புளிய கரைக்கும். ஆணி புடுங்கறேன்னு கதைவுட்டே ஒரு வருசத்தை ஓட்டினாலும் இந்த மாசம் அதை கண்டுபுடிச்சு ஆப்பு வெச்சுருவாங்களே இந்த டேமேஜருங்க. சே சே மேனேஜருங்க. இந்த பிராஜக்ட் மானேஜருங்களுக்கு உண்மையாலுமே ரொம்ப ஞாபக சக்தி அதிகமோ? போன வருசம் நான் கண்டுபுடிக்காத ஒரு பக்கை இப்போ ஒரு bugஆ சொல்லீ ஆப்புரைசல்ல ஒரு பாயிண்ட கம்மி பண்ணிபுடுறாங்கப்பா. ஜால்ரா அடிக்கிறவங்க எல்லாம் இந்த மாசம் காலரை தூக்கிவிட்டுக்குவாங்க, அப்படியே குட்மார்னிங் சார், குட் ஆப்டர்நூன் சார், குட் ஈவிங் சார் அப்படின்னு சொல்லிகிட்டே இருப்பானுங்க. சரி சரி இந்தப் படங்களையும் பார்த்துட்டு ஆப்புரைசலுக்கு போயிருங்க..




.... இங்கே பதியப்பட்டது ILA | 9 மறுமொழிகள் »

சங்கம் டெக்னாலாஜீஸ் -ERA

பதிந்தவர் vavaasangam மேல் மார்ச் 22, 2007

Year: 2030 !!!!!!!!!!!!!!!!!!!!!!!(இத்தனை ஆச்சரியக்குறி போட்டுருக்கமில்லே! நம்புங்க)

Place : IBM, USA (Two Americans Talking)

Currency Conversion Rate : INR 1 Rs = USD $ 100

Alex: Hi John, you didn’t come yesterday to office?
அலெக்ஸ்: ஜானு, நேத்து ஆப்பீசுகு வரலியா?

John: Yeah, I was in Indian Embassy for stamping.
ஜான்: அட ஆமாம்பா, விசா வாங்க இந்தியா எம்பஸிக்கு போயிருந்தேன்

Alex: Oh really, what happened, I heard that nowadays it has become very strict.
ஆஹ் அப்டியா?அப்பாலிக்கா இன்னாபா ஆச்சு? அவுங்க ரொம்பதான் ஸ்டிரிக்டா கீராங்கப்பா

John: Yeah, but I managed to get it.
நாம யாரு, வாங்கிட்டோம்ல

Alex: How long it took to get it stamped?
எவ்வளவு நேரம் ஆச்சு?

John: Oh, it was nasty man, long queue. Bill Gates was standing in front of me and they played with him like anything. That’s why it got delayed. I went there at 2 AM itself and waited and returned by 4 PM.
ஆஹ். அதா. அது ரொம்ப நேரம் ஆச்சு. அனுமார் வால் கணக்கா பெரிய கியூ வரிசை. நம்ம பில்லு எனக்கு முன்னாடிதான் நின்னுகிட்டு இருந்தார்ன்னா பாரேன். அவுர செம ரவுசு வுட்டாங்கப்பா. அதான் கொஞ்சம் லேட் ஆகிருச்சு. காலாங்காத்தால பல்லு கூட விளக்காம 2 மணிக்கே அங்கிட்டு போயிட்டேன். திரும்பி வரதுக்கு மத்தியானம் 4 ஆகிருச்சு.

Alex: Really? In India, it is a matter of an hour to get stamped for USA
அப்படியா? இதே இந்தியாவா இருந்தா புதரகத்துக்கு விசா வாங்க ஒரு மணி நேரம் இருந்தா போதுமாம். அதுவும் எல்லா பொட்டி கடையிலையே வாங்கிக்கலாமாம்.

John: Yeah, but that is because who in India will be interested in coming to USA man, their economy has been booming.
அட நீ வேற அவன் புதரகம் வர ஆசைப்படுறாங்க. அவுங்க பெரிய பணக்கார நாடுப்பா, நம்மல மாதிரி இல்லே.

Alex: So, when are you leaving?
எப்போ இந்தியா போகப்போறே?

John: Anytime, after receiving my tickets from the client in India and you know, I will be getting a chance to fly Air-India. Sort of dream come true.
எப்ப வேணுமின்னாலும் போயிருவேன். இந்தியாவுலிருந்து டிக்கெட் அனுப்பிச்சா உடனே கிளம்பிற வேண்டியதுதான். அதுவும் ஏர்-இந்தியாவுல் போவப்போறேன், என்னோட ரொம்ப நாள் கனவு இது. இல்லைன்னா கஜா தோணிதான். எப்படியாவது போயே தீரனும்.

Alex: How long are you going to stay in India.
எவ்வளவு நாள் அங்க இருக்க போறே?

John: What do you mean by how long? I will be settled in India, my company has promised me that they will process my Hara Patta ..(green card)
என்னா பேசுற நீ ராஸ்கல். அங்கனையே டேரா போட்டுற வேண்டியதுதான். என்னோட கிளையண்ட் பச்சை கலர் ரேசன் அட்டை குடுக்குறேன்னு சொல்லி இருக்காங்க. வேலை கிடைக்காட்டியும் பரவாயில்ல சரவண பவன்ல இல்லைன்னா ஃபுட் வேல்ட்ல வேலை பார்த்தே பொழைச்சுக்குவேன். திரும்பி மட்டும் வரவே மாட்டேன்.

Alex: Really, lucky person man, it is very difficult to get a Hara Patta in India.
அதிர்ஷ்டகாரன்பா நீ. பச்சை கலர் ரேசன் அட்டை கிடைக்க குடுத்து வெச்சு இருக்கனும்.

John: Yeah, that’s why, I am planning to marry an Indian girl there.
அதனால தான் அங்கேயே ஒரு செம கட்டையா பார்த்து, இல்லைன்னா ஜொள்ளுபாண்டிகிட்ட சொல்லி ஒரு இந்திய ஃபிகர் பார்த்து கல்யாணம் கட்டி பச்சை கலர் ரேசன் அட்டை வாங்கிரனும், புதரகம் மட்டும் திரும்பி வரவே கூடாது. மனுசன் இருப்பானா இங்க.

Alex: But you can find lots of US girls in Hyderabad, Bangalore and Mumbai.
நம்ம பொண்ணுங்களே அங்கே இருப்பாங்களே, ஆனா எவன் அவளுகளை பார்ப்பானுங்க. சே. ராயல் ராமுன்னு ஒரு மானஸ்தன் இருப்பாரு, அவரோட ரெகமண்டோட ரவிக்கிட்ட சொல்லி எனக்கும் ஒரு வேலை ஏற்பாடு பண்ணுய்யா, நல்லா இருப்பே.

John: But, I prefer Indian girls because they are beautiful and cultured.
பார்ப்போம், நான் இந்திய ஃபிகரத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன், அவுங்கதான் அழகா இருக்காங்க. கலாச்சாரமாவும் இருக்காங்க.

Alex: Where did you get the offer, Bangalore ?
எங்கே வேலை கிடச்சு இருக்கு, பொங்கலூர்லயா?(சரியாதான் எழுதி இருக்கோம், 2030ல இப்படிதான் பெங்களூர் பேர மாத்தி வெச்சு இருப்பாங்க)

John: Yeah, salary is good there, but cost of living is quite high, it is Rs. 200000 for a single room accommodation.
சம்பளம் நல்லா கிடக்கும் ஆனா ஒரு ரூம் வாடகைக்கு இங்கே இருக்கிற சொத்தை எல்லாம் வித்துட்டுதான் போவனும்.

Alex: I see, that’s too much for US people, Rs.1/- =$100/-. Oh God! what about in Hyderabad , Mumbai?
பரவாயில்லை, அங்கே போய் சம்பாரிச்சு இங்கே இருக்கிற மாதிரி பத்து மடங்கு சொத்த ஒரே வருசத்துல வாங்கிருவே. ஒரு டாலரு 100 ரூவாயாம்ல.

John: No idea, but it is less than what we have in Bangalore . It is like the world headquarters of software
தெரில, ஆனா சாஃப்ட்வேர் சிலிக்கான் பள்ளத்தாக்குன்னு பேசிக்கிறாங்க. ஆனா அங்கே தெரு நாய்ங்க ரொம்ப ஜாஸ்தி. கடிச்சு கொதரிரும். அத எதிர்த்து மேனகா காந்தி போராட்டி இருக்காங்க. போன வருசம் மட்டும் 1 லட்சம் பேரு நாய்க்கடியால செத்து போயிருக்காங்க. அதுவுமில்லாம காவேரி ஆத்து பிரச்சினை வேற வரும் அதனால கருநாடகா ரிஜிஸ்ட்ரேசன் வண்டியா பார்த்து வாங்கிக்க, அப்போதான் தப்பிக்க முடியும்.

Alex: By the way, who is your client?
யாரு உனக்கு வேலை தர போறது?

John: Sangam Technologies, a pure Indian company, specialising in Embedded and aappudeed Software.
கைப்பு நடத்துற சங்க டெக்னாலஜீஸ்ன்னு ஒரு பெரிய கம்பேனி, அவுங்க எம்படெட், ஆப்புடெட்ல பெரிய ஆளுங்களாம்.

Alex: How are you going to cope with their language?
அது சரி, எப்படி அவுங்க பாஷைய கத்துக்கப் போறே?

John: Why not? From my school days I have been learning Hindi as my first language here at New York. At the Consulate they tested my proficiency in Hindi and were quite impressed by my cent per cent score in TOHIL i.e. Test of Hindi as International Language.
எனக்குதான் ஹிந்தி தெரியுமே, பள்ளிக்கூடத்துல இருந்தே படிக்கிறேனுல. அதுவும் தொஹில் பாஸ் பண்ணிருக்கோம்பு.

Alex: So, you are going to have fun there.
அப்படியா என்சாய் பண்ணு. ஹ்ம், நான் எப்போ அங்கே போறதோ, எனக்கு ஒரு காலம் வராமையா போயிரும். இன்னொன்னையும் தெரிஞ்சிக்க, ஸ்டாலினோட பையன் ஆட்சிக்கு வரது வாரிசு அரசியல்ன்னு விஜயாகாந்தோட பையனும் மச்சானும் அப்பப்போ அறிக்கை விடுவாங்க, அதை மொழிமாத்தி எனக்கு அனுப்பிவை, என்னா?. அப்புறம் ரசி கண்ணா ரசி’னு ஒரு தமிழ்நாட்டுல ஒரு பொஸ்தகம் வருதான் அதையும் அனுப்பி வைச்சுரு. அப்படியே வரும்போது ஒரு கட்டு கணேஸ் பீடியும், செண்ட் பாட்டில் ஒன்னும் வாங்கிட்டு வா. அங்கே போனது எங்களை மறந்துடாதடா மாமு.

Thanks: இங்கிலி பீசுல “Sunil Gazula”
நன்றி- அவுட் சோர்ஸிங்க் புதரகத்திலிருந்து “வெட்டி”
தமிழாக்கம்- ஆன்சைட் இந்தியாவிலிருந்து “விவசாயி”

.... இங்கே பதியப்பட்டது ILA | 10 மறுமொழிகள் »

30 ஆச்சுன்னா ரிட்டயர்மெண்டு!!!

பதிந்தவர் vavaasangam மேல் பெப்ரவரி 28, 2007

தமிழ்மணத்துல இனிமே 30தாண்ட கூடாதுன்னு சொல்லிட்டாங்க. யோவ், யார்யா அடிக்க வர்றது, பின்னூட்டத்தைதாம்பா சொல்றோம்.
வயசை சொல்றோம்னு நெனைச்சு கைய கீய வெச்சீங்க,
அப்புறம் …அப்புறம்

அப்புறம் அப்புறம்

அப்புறம்

அப்புறம் அப்புறம்

அப்புறம் அப்புறம்

அழுதுபுடுவோம்ல.

சரி, கொலை வெறிப்படை என்னய்யா பண்ணுவாங்க. கம்னு இந்த அறிவிப்புக்கு எதிர் கொரலு வுடுற மாதிரி செந்தழல் ரவிய கொளுத்திப்புடலாமா? அப்படியே பெங்களூரு-காவிரி பிரச்சினைன்னும் சொல்லி அரசியல் ஆக்கிரலாம். எப்படி ஐடியா? இதெல்லாம் தெரிஞ்சுதான் ரவி அப்பபோ “நான் அவுஸ்திரேலியா போய்ருவேன்னு” சொல்றாரோ?
ஒரு தில்லாங்கடி பண்ணலாமே,

எப்படி?

வழக்கம்போல 20 பின்னூட்டம் வரைக்கு விளையாட்டு,
அப்புறம்?
20 பின்னூட்டத்தையும் Cut-Paste to ஒரு பின்னூட்டமா ஆக்கிறது. அப்பிடியே பழைய 20 பின்னூட்டத்தையும் டெலிட் பண்ணிறுவோம், அப்படியே 21 வரைக்கும் மறுபடியும் விளையாட்டு, மறுபடியும் Cut-Paste to ஒரு பின்னூட்டம் அப்ப்டியே 29 வரைக்கும் விளையாடலாம்.

என்ன ஒரு இது.. அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்ல இது வராது. அதுக்காக என்ன பண்றது..20-21-22ன்னு 29 வரைக்கும் முன்னேறனும் .. 30 ஆச்சுன்னா?

ஆச்சுன்னா என்ன? ஆட்டைய கலைச்சுபுட்டு போய்ட்டே இருக்க வேண்டியதுதான்.

என்ன பண்ண? இப்படியெல்லாம் ரோசனை பண்ணித்தான் பொழப்ப ஓட்ட வேண்டியிருக்கு. விடுங்க விடுங்க.. 30 ஆச்சுன்னா ரிட்டயர்மெண்டு!!!

இந்த விளையாட்டை இந்த பதிவிலே இருந்தே ஆரம்பிக்கிறோம்ய்யா.. ஆரம்பிக்கிறோம்ய்யா..!!!

[டிஸ்கி: நாங்களும் தமிழ்மணத்தின் 30 அம்ச(மான) திட்டத்தினை வரவேற்கிறோம்]

.... இங்கே பதியப்பட்டது ILA | 18 மறுமொழிகள் »

சங்கத்த இழுத்து மூடியாச்சு

பதிந்தவர் vavaasangam மேல் ஜனவரி 27, 2007

சுட்டிப்பையன்: சார்,என் தலை’ல எறும்பு ஏறுது பாருங்க..!

வாத்தியார்:அதை எடுத்து போடாம, ஏண்டா என்கிட்ட சொல்ற?

சுட்டிப்பையன்: நீங்க தானே சார் சொன்னீங்க,! என் தலை’ல ஒன்னுமே ஏறலனு ?


Student 1: நம்ம டீச்சர்க்கு என்ன ஆச்சு?

Student 2: ஏன்டா??

Student 1: இப்ப தானே போர்ட்’ல திருக்குறள் ‘ அவுங்களே எழுதிட்டு, திருக்குறள எழுதினது யாருன்ன்”னு கேக்குறாரே?


டீச்சர்: படிக்கிற பசங்க ஒரு நாளைக்கு 6 மணிநேரம் தூங்கினாபோதும் .

சுட்டிப்பையன்: ஸ்கூல்லையா?? வீட்லையா சார்??


டீச்சர் :( 1) ஒரு தவளை இருக்கு,
(2) கப்பல்ஒன்னு மூழ்கிகிட்டு இருக்கு,
(3) உருளைகிழங்குவிலை ரூ 3 ஒருகில்லோ . அப்ப எனக்கு வயசு என்ன??

சுட்டிப்பையன்: 32 இருக்கும் சார்.

வாத்தியார்:உனக்கு எப்படி தெரியும் ?

சுட்டிப்பையன்: அதுவா சார்..!, என் தங்கைகு வயசு16, அவ ஒரு அரை-லூசு, அதவச்சி தான் சொன்னேன்.


நோயாளி: டாக்டர்..!எனக்கு தினமும் 16 மணி நேரம் தூக்கம் வருது..!அதுக்கு அலுப்புதானே காரணம்..?

டாக்டர் :அதுக்கு காரணம்அலுப்பு இல்ல..!” கொழுப்பு”..


டாக்டர் : முதல்ல, நீங்க மீன், நண்டு, கோழி சாப்பிடுறதெல்லாம் உடனடியா நிறுத்தியாகனும்..!!

நோயாளி : டாக்டர்..!! இது என்னங்க அநியாயம்..! அதுங்க சாப்பிடுறத போய் நான் எப்படி நிறுத்தமுடியும்??!


டாக்டர்: காதுல பல்லி போகுறவரைக்கும் என்ன பண்ணிட்டு இருந்தீங்க?

நோயாளி : மொதல்ல கரப்பான்பூச்சி தான் டாக்டர் போச்சி. அத புடிக்க தான் போகுதுனு நினைச்சேன்..!


மனைவியிடமும் காதலியிடமும் மறைக்க வேண்டியவை எவை?

மனைவியிடம் காதலியையும்,
காதலியிடம் மனைவியையும் மறைக்க வேன்டும்..


கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தார். நம் ‘குடி’மக்களை பார்த்து அவருக்கு பொறாமை வந்துருச்சு. அப்படி என்னதான் இருக்கு இந்த TASMAC கடைக்குள்ள அப்படின்னு தெரிஞ்சிக்க உள்ளே போய் 5 பீர் அடிச்சாரு. ஒரு மப்பும் ஏறல. அப்புறமா, 2 FULL.. அப்பையும் ஒன்னும் ஆவல..

மறுபடியும் 2 BEER, 3 பிராந்தி

கடைகாரர்க்கு ஆச்சர்யம்,

“யார்யா நீ??
இவ்வளவு சாப்பிட்டும் உனக்கு போதை ஏறல?

அதுக்கு நம்ம கடவுள் ” நான்தான் கடவுள் எனக்கு இந்த போதை ஒன்னும் பண்ணாது‘ன்னாரு

கடைக்காரருக்கு இப்போதான் திருப்தி வந்துச்சு “தொரைக்கு இப்பதான் ஏற அரம்பிச்சி இருக்கு ..! நடக்கட்டும்..! நடக்கட்டும்..!”

.... இங்கே பதியப்பட்டது ILA | 19 மறுமொழிகள் »

World AIDS Day

பதிந்தவர் vavaasangam மேல் டிசம்பர் 1, 2006

Support World AIDS Day

.... இங்கே பதியப்பட்டது ILA | 1 மறுமொழி »

ராயலோ ராயல்

பதிந்தவர் vavaasangam மேல் நவம்பர் 24, 2006


இன்றைய வருத்தப்படாத வாலிபனுக்கு என்ன வேணும், முதல்ல ஸ்டைல்லா ஓட்ட ஒரு வண்டி, அதுவும் பழைய ராயல் என்ஃபீல்ட் வண்டி வாங்கி ஹேண்டில் பாரை வளைச்சு, நெளிச்சு, நல்லா இருக்கிற வண்டிய கேனத்தனமா மாத்திட்டா “வாவ் சூப்பர்”ன்னு சொல்லுவாங்க மக்கள்.

அப்புறம் என்ன,

சொகமா ஒரு ராயல் சேலஞ்ச் பீர ஏத்திக்க வேண்டியது தான்.

ராயலா ஒரு டின்னர்.

எதுக்கு இதெல்லாம், வாலிபப் பசங்க வெளங்காம போவதான் இத்தனை ராயல் மேட்டரு.

என்னா இத்தனை ராயல் மேட்டருன்னு பார்க்குறீங்களா? அதாங்க வெளங்காம போக எத்தனை வழிங்க ராயலா இருக்கு, அதே மாதிரி “ராயல்” ராம் கைப்புவை வெளங்காம பண்ண வ.வா.சங்கத்துல சேர்ந்துட்டாரு. அவர வரவேற்கத்தான் இப்படி ஒரு வெளங்காத ராயல் பதிவு.

அப்படியே சோத்தாங்கை பக்கம் மேல் மூலையில் “Contributors” ல “ராயல்” ராம் பேர் இருக்குதான்னு பார்த்துக்கங்க.

.... இங்கே பதியப்பட்டது ILA | 22 மறுமொழிகள் »

கரகாட்டம்..டண்டணக்கா டணக்கா

பதிந்தவர் vavaasangam மேல் நவம்பர் 10, 2006

அண்ணே ஒரு விளம்பரம் தான்..

என்னடா விளம்பரம், அந்த நடிகருங்கதான் வருசா வருசம் தெரு முழுக்க போஸ்டர் அடிச்சு பொறந்த நாள் கொண்டாடுறாங்க. அட அப்படியாவது 30 வயச தாண்டறாங்களான்னு பார்த்தா அதுவும் இல்லே. இவுனங்க மட்டும் பொறந்தாங்களா இந்த உலகத்துல?

இந்தா என்ன அந்த பொன்னமாராவதி பார்ட்டில கூப்பிட்டாக……

செய்தி: கச்சேரி தேவுக்கு வர 12ம் தேதி பொறந்த நாளு. வாழ்த்துக்கள்

.... இங்கே பதியப்பட்டது ILA | 25 மறுமொழிகள் »