வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்

100% சிரிக்க

‘வெட்டிப்பயல்’ பகுப்புக்கான தொகுப்பு

கவுண்டர்’ஸ் டெவில் ஷோ – விஜய்

பதிந்தவர் vavaasangam மேல் ஏப்ரல் 24, 2007

முன் குறிப்பு: விஜய் ரசிகர்கள் இதை படித்து டென்ஷனானால் கவுண்டரை பிடிக்கவும்… இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே!!!

எல்லா விசேஷத்துக்கும் டீ.வி பேட்டிக்கு முதல் ஆளா வந்து நிக்கறது நம்ம இளைய தளபதி தான். அவரையே இன்னைக்கு நம்ம நிகழ்ச்சிக்கும் புத்தாண்டு சிறப்பு விருந்தினரா கூப்பிட்டுருக்கோம். அவரும் வழக்கம் போல வர ஒத்துக்கிட்டாரு. சரி இனி நிகழ்ச்சிக்கு போவோம்.

க: வாப்பா விஜய். ஆரம்பத்துல நீ நடிச்ச கேவலமான படத்தை பார்த்துட்டு நீ இவ்வளவு பெரிய ஆளா வருவனு நான் நினைக்கவேயில்லப்பா…

வி: அண்ணா. என்னங்கணா இப்படி சொல்லிட்டீங்க? நான் நடிச்ச எல்லா படமுமே சூப்பர் ஹிட் தானுங்கணா.

க: ஏனுங்க தம்பி இந்த நாளைய தீர்ப்பு, செல்வா, தேவா, விஷ்ணு, சந்திரலேகா, மாண்புமிகு மாணவன், வசந்த வாசல், ராஜாவின் பார்வையிலே இந்த படத்தையெல்லாம் நீங்க தியேட்டர்ல போய் பார்த்துருக்கீங்களா தம்பி?

வி: அண்ணா. நானும் என் ஃபிரெண்ட்ஸும் இந்த படத்தை எல்லாம் தியேட்டர்ல போய் பாத்தோங்கணா.

க: தெரியும். எவனும் வர மாட்டாங்கர தைரியத்துல போய் பார்த்துருப்பீங்க. உங்க கெட்ட நேரம் எவனாவது தப்பி தவறி தியேட்டர் பக்கம் ஒதுங்கியிருந்தானா உங்களுக்கெல்லாம் அப்படியே பொதுமாத்துதான்டீ…

வி: என்னங்கணா இப்படி சொல்லிட்டீங்க. ராஜாவின் பார்வையிலே நானும் அஜித்தும் சேர்ந்து நடிச்சத பார்த்து எங்க ரெண்டு பேர் ரசிகர்களும் தொடர்ந்து பாராட்டிக்கிட்டு இருக்காங்க.

க: ஓ! அந்த படத்துல அந்த கொடுமையெல்லாம் வேற இருக்கா? நல்ல வேளை நான் பார்க்கல.அது சரி அந்த ரசிகன் படத்துல ஹீரோயினோட அம்மாவுக்கு சோப்பு போடற சீன் யாரோட சிந்தனைல வந்துச்சுப்பா?

வி: அது எங்க அப்பாவோட சிந்தனைதானுங்கணா. அந்த படம் ஹிட்டானது அதுவும் ஒரு முக்கிய காரணம்.

க: டேய்! கேவலமா இப்படி ஒரு சீன் வெச்சிட்டு இதுல உங்களுக்கு பெருமை வேற. உன் வாழ்க்கையிலே நீ பண்ண ஒரு நல்ல விஷயம் என்ன தெரியுமா?

வி: என்னங்கணா?

க: உங்க அப்பா டைரக்ஷன்ல நடிக்கறத நிறுத்தனதுதான்…

வி: இதையே தானுங்கணா எங்க அம்மாவும் சொன்னாங்க.

க: உங்க அம்மா பேச்ச கேளு. அப்பறம் கேப்டன் கூட ஒரு படம் நடிச்சையே அது என்ன படம்பா?

வி: அப்படிங்களா? நியாபகம் இல்லையே! (விஜய் தீவிரமாக சிந்திக்கிறார்)

க: அதாம்பா அந்த யுவராணியோட கபடி ஆடுனியே!

வி: ஓ! நம்ம செந்தூரப்பாண்டி

க: அடப்பாவி. கேப்டனோட நடிச்ச படம்னா நியாபகம் இல்லை யுவராணியோட நடிச்ச படம்னா அடுத்த நிமிஷமே அடிக்கறியே…

வி: அதெல்லாம் மறக்கமுடியுமாங்கணா… அதெல்லாம் ஒரு பொற்காலம்னா. இன்னும் கண்ணுலயே இருக்கு. அப்பறம் இந்த பூவே உனக்காக வந்ததுக்கப்பறம் வாழ்க்கையே மாறிடுச்சிங்கணா.

க: நீ ஒழுங்கா நடிச்ச முதல் படமே அதுதான்.

வி: ஆமாங்கணா. அதுக்கப்பறம் வந்த எல்லா படமும் பயங்கர ஹிட்…

க: டேய்! சும்மா அடிச்சு விடாதடா. எல்லாமே லிஸ்ட்ல இருக்கு. இங்க அவனவனுக்கு தூக்கமே வர மாட்டீங்குது உனக்கு மட்டும் எப்படிடா கனவுல கண்ட இடத்துல எல்லாம் மச்சம் இருக்குற மாதிரி பொண்ணு வருது?

வி: ஏனுங்கணா, உங்க வயசுக்கு எப்படினா அதெல்லாம் வரும்? எங்கள மாதிரி யூத்துக்கு தானுங்க அதெல்லாம் வரும்… (சொல்லிவிட்டு நக்கலாக சிரிக்கிறார்)

இதை கேட்டு கவுண்டர் ஜெர்க்காகிறார்… (மனதிற்குள் நினைத்து கொள்கிறார் : உனக்கு இருக்குடி)

க: அது சரி… இந்த ஷாஜஹானு ஒரு படம் நடிச்சியே. அதுல எதுக்குடா வேற படத்து ஃப்ளாஷ் பேக்கை எடுத்து வைச்ச?

வி: இல்லைங்களே! அது அந்த படத்து ஃப்ளேஷ் பேக் தானே?
ஆனா படத்த பார்த்த எல்லாருக்குமே இப்படி ஒரு டவுட் இருந்துச்சாம். எனக்கு என்னனே இன்னைக்கு வரைக்கும் புரியல

க: அது சரி… அது என்னடா புறாவுக்கு பெல்லடிக்கிறது?

வி: அதுங்களாணா? நம்ம படையப்பால வர பாம்பு புத்துல கை விடற டயலாக்கு இக்வளா இருக்கனும்னு யோசிச்சி வெச்சதுங்கணா.

க: ஏன்டா அடுத்தவனை பார்த்து காப்பி அடிக்கறீங்க? உங்களுக்குனு ஒரு ஸ்டைல வெச்சிக்கோங்கடா. அப்ப தான் வாழ்க்கையில பெரிய ஆளாக முடியும். அப்பறம் அந்த பகவதினு ஒரு படம் நடிச்சியே. அத கதை கேட்டு தான் நடிச்சியா?

வி: அது பாட்ஷா மாதிரி இருக்கும்னு எங்க அப்பா சொன்னாரு. அதனாலதான் கதை கேக்காமலே நடிச்சேங்கணா.

க: இனிமே நான் சொல்றேன். உங்க அப்பா பேச்சை கேக்காத. அப்பறம் உன்னை யாராலும் காப்பாத்த முடியாது…

(தொடரும்…)

(இன்னும் பல படங்கள் இருப்பதால் ஒரே பகுதியில் முடிக்க இயலவில்லை… அடுத்து பல சூப்பர் ஹிட் படங்கள் காத்திருக்கின்றன)

.... இங்கே பதியப்பட்டது வெட்டிப்பயல் | 11 மறுமொழிகள் »

டெவில் ஷோ – ராயல் ராம்

பதிந்தவர் vavaasangam மேல் ஏப்ரல் 19, 2007

மக்களே அடுத்து ஒரு சினிமா பிரபலத்த தான் டெவில் ஷோல கூப்பிடலாம்னு இருந்தோம். தல கூட ரெடியாயிட்டேனு சொன்னாரு. அப்பதான் நம்ம போர்வாள்கிட்ட இருந்து ஒரு போன் நம்ம ராயலுக்கு இன்னைக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லலையானு? சரினு வாழ்த்து சொல்லலாம்னு போன் பண்ணா எனக்கு டெவில் ஷோ போடலைனா நான் பேச மாட்டேனு ஃபீல் பண்ணிட்டாரு. சரினு, அப்படியே டெவில் ஷோக்கு அப்படியே ரெடியாகியாச்சு. இப்ப எல்லாம் நிகழ்ச்சிக்கு போவோம்

கவுண்டர்: “பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராம்”

ராயல்: “மிக்க நன்றி கவுண்ட்ஸ். ஆனா எம் பேர இப்ப வெறும் ராம் இல்லை. “ராயல்” ராம். கெஸட்ல கூட மாத்தியாச்சி.”

கவுண்டர்: “அது என்ன ராயலு. நீ என்ன மைசூர் மகாராஜா பேமிலியா இல்லை இங்கிலாந்து எலிசபத் ஃபேமிலியா?”

ராயல்: “நோ நோ நோ நோ. எலி எல்லாம் எங்க வீட்ல இல்லை. எல்லாத்தையும் தம்பி பிடிச்சிட்டு போயி மஞ்சுளாக்கு கொடுத்துட்டான். என் சொந்த ஊர் மதுரை. அதனால பாண்டிய வம்சமா தான் இருக்கும்னு நினைக்கிறேன்”

கவுண்டர்: “ஏன்டா, பாண்டியன் படத்த தியேட்டர்ல பாக்க காசு இல்லாம சன் டீவில பாத்தவன் நீ? நீ ராயல் ஃபேமிலியா? ஏன்டா உனக்கு இந்த ஓவர் பில்டப்। “

ராயல்: “அது இல்லைங்க கவுண்ட்ஸ். ராயல்னு சொன்னா ஒரு ரிச் இருக்குமேனு தான். அதுவுமில்லாம எனக்கு ரிச்சி ரிச்னா ரொம்ப பிடிக்கும் அதான்.”

கவுண்டர்: “அது எவன்டா அந்த ரிச்சி ரிச்?”

ராயல்: “ப்ளாக்ல என் ஃப்ரோபைல் போட்டோல இருக்கான் இல்ல.அவன் தான் ரிச்சி ரிச். நான் கூட ஏன் போட்டோ மாத்தினேனு ஒரு பதிவு போட்டேனே. நியாபகமில்லை.”

கவுண்டர்: “ஓ! நீ ஏதோ ஒரு பொண்ணுக்கூப்பிட்டு ஃபோரம் போனப்ப இன்னும் ரெண்டு பொண்ணுங்க வந்து ப்ரோபஸ் பண்ணி, கடைசியா மூணு பேரும் சேர்ந்து மொத்தனாங்கனு போட்டியே அதா? அது எப்படிடா உனக்கு மட்டும் இத்தன ஃபிகர் மாட்டுது?”

ராயல்: “அது நம்ம எழுத்து திறமைய பாத்துதான்.”

கவுண்டர்: “டேய்! யாகூ சேட்ல நீ பண்ண அலும்பதான் உங்க போர்வாள் புட்டு புட்டு வெச்சிட்டாரே. இன்னுமும் ஏன்டா உனக்கு இந்த பில்டப்பு.”

ராயல்: “ஹி ஹி ஹி…”

கவுண்டர்: “ஆமா அப்பறம் எதுக்கு அமெரிக்கால இருந்து வரவன எல்லாம் கலாய்ச்ச?”

ராயல்: “ஓ அதுவா? கப்பி வரும்போது சாக்லேட் வாங்கிட்டு வர சொன்னேன். அவன் வாங்கிட்டு வரல. அதனால தான். ஹி ஹி ஹி”

கவுண்டர்: “ஏன்டா அந்த ஒன்றையனா சாக்லேட்டுக்கு நீ இவ்வளவு அலும்பு பண்ணிருக்க.ஆமா அப்பறம் மதுரைல உங்க அப்பத்தாக்கிட்ட பெங்களூருக்கு போறதுக்கு பாஸ்போர்ட், வீசா எல்லாம் வாங்கனும்னு சொல்லியிருக்கியாமே. நிஜமாவா?”

ராயல்: “இந்த உண்மையெல்லாம் உங்களுக்கு யாருங்கண்ணா சொன்னா?”

கவுண்டர்: “நீ உங்க ஊர்ல சொல்லிருக்க விஷயமெல்லாம் கொஞ்ச கொஞ்சமா வெளிய வர ஆரம்பிடுச்சி கண்ணா… அப்பறம் எதுக்குடா ஆனா ஊனா ஃபீலிங் ஆகிடற?”

ராயல்: “ஓ! அதுவா??? சின்ன வயசுல இருந்தே யாராவது எதுனா சொன்னா இப்படி ஃபீல் ஆகற மாதிரி ஆக்ட் விடுவேன். உடனே சாக்லேட் வாங்கி கொடுத்துடுவாங்க.”

கவுண்ட்ஸ்: “இந்த சாக்லேட் பிரச்சனை பெரும் பிரச்சனையா இருக்கும் போல இருக்கே. ஆமா குஷி படம் பார்த்துட்டு வரும் போது பேய் துரத்துச்சி, நாய் கடிச்சினு எல்லாம் போட்டிருந்தியே அது என்ன மேட்டரு?”

ராயல்: “அது ஒண்ணுமில்லைங்க… என் கூட வந்த என் ஃபிரெண்டுக்கும் எனக்கும் ஓட்ட பந்தயம் வெச்சோம்। அப்ப ஓடும் போது நாய் கடிச்சிடுச்சி. “

கவுண்ட்ஸ்: “டேய் எவண்டா ராத்திரி ஒரு மணிக்கு ஓட்ட பந்தியம் வைப்பான்? இதுக்கு தான் ஆன்லைன் ஆவிகள், ஆவி அம்மணி எல்லாத்தையும் பகைச்சிக்க கூடாதுனு சொன்னது. ஏதோ உன் நல்ல நேரம் நாய் உன்னைய விட்டுவெச்சிடுச்சி…”

ராயல்: “ஆமாங்க கவுண்ட்ஸ். சரிங்க கவுண்ட்ஸ் பர்த்டே அதுவுமா நான் ஆம்பிளைங்க கூட பேசி நான் டைம் வேஸ்ட் பண்ண விரும்பலை. நான் கிளம்பறேன்…”

கவுண்ட்ஸ்: “சரி பொறந்த நாளா இருக்கேனு நானும் உன்னை மன்னிச்சி விடறேன். இந்தா சாக்லேட்டு.”

சந்தோஷமாக வாங்கி ஃபிகர்களிடம் கொடுக்க ஓடுகிறார் ராயல் :-)

.... இங்கே பதியப்பட்டது வெட்டிப்பயல் | 8 மறுமொழிகள் »

கவுண்டர்’ஸ் டெவில் ஷோ – போர்வாள் தேவ்

பதிந்தவர் vavaasangam மேல் மார்ச் 30, 2007

மக்களே போன வாரம் கிரிக்கெட் மேட்ச்ல கொஞ்சம் பிஸியா இருந்ததால டெவில் ஷோக்கு லீவ் விட்டாச்சு… ஏண்டா தோத்தீங்கனு நம்ம திராவிட்கிட்ட கேட்டா நீங்க எங்களுக்காக டெவில் ஷோ போடாம விட்டு கொடுத்ததை பார்த்து மனசு வலிச்சுது அதனால இலங்கைகிட்ட நாங்க விட்டு கொடுத்துட்டோம்னு சொல்றான்.

தோத்ததுக்கு என்ன காரணம் சொல்லுது பாருங்க… சரி அத அடுத்த டெவில் ஷோல பார்ப்போம். இப்ப நம்ம நட்சத்திர பதிவர், என்னுடைய சிஷ்யன் கைப்புள்ளய கலாய்க்கற சங்கத்தின் சிங்கம் தேவ் வந்துருக்காரு…

க: “வா தேவு… அது என்ன உன் ப்ளாகுக்கு பேரு சென்னை கச்சேரி? உனக்கு பாட்டு பாட தெரியுமா மேன்??? சொல்லு…”

தேவ்: “அது ஒண்ணுமில்லைங்க கவுண்ட்ஸ்… நான் பொறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைல தான். நான் முன்னாடி தங்கிருந்த வீட்டு கக்கூஸ்ல தாழ்ப்பாள் கிடையாது… சரினு தினமும் நம்ம கச்சேரி தான். இப்ப புது வீடு வந்தாச்சி. என்ன இருந்தாலும் பழச மறக்ககூடாதுனு என் வலைப்பதிவுக்கு சென்னை கச்சேரினு பேர் வெச்சிட்டேன்!”

க: “அட தேவ் மண்டையா… இதுக்குள்ள இத்தன ரகசியத்தை மறைச்சி வெச்சிருக்கியா நீயி… ஆமாம் நீ என்ன வேலை பாக்கற?”

தேவ்: “நான் சாப்ட்வேர் பீல்ட்ல இருக்கேன்..”

க: “டேய் யாருக்கிட்ட டக்கால்ட்டி விடற??? நீ சென்னைல ஏதோ சாய் சாந்தி தியேட்டர்ல ரீல் ஓட்ற வேலை பாக்கறதா கேள்வி பட்டேன்…”

தேவ்: “இது அநியாயம்… அக்கிரமம்…”

க: “டேய் ஓவர் சவுண்ட் விடாத… அப்பறம் கச்சேரில பாட முடியாம போயிடும்…! ஏன்டா அந்த லீ படத்த உலகத்துல பார்த்த ஒரே ஆள் நீயாதாண்டா இருப்ப?? சரி படம் எப்படினு சத்தியராஜுக்கு போன் பண்ணா, “மாம்ஸ் விஜய் டீ.வில டப்பிங் பண்ணி போட்டிருந்தான். என்னமா சண்டை போடறான் அந்த லீ பய. நம்மல மாதிரி யூத்க்கு பிடிச்ச மாதிரி பறந்து பறந்து சண்டை போடறான் மாம்ஸ். என்ன இருந்தாலும் சைனிஸ் படம் சைனிஸ் படம்தான்” அப்படினு ப்ரூஸ் லீ, ஜெட் லீ படத்த பத்தி பேசறான். அவன் மகன் நடிச்ச அவனே பார்க்க மாட்றான். அந்த படத்தையும் விடாம பார்த்து விமர்சனம் எழுதறனா நீ கண்டிப்பா அந்த தியேட்டர்ல ரீல் சுத்தறவனாத்தானே இருப்ப??.”

தேவ்: “மக்கள் பாவம் கஷ்டப்பட கூடாதேனு அந்த கஷ்டத்த நான் ஏத்துக்கிட்டேன்… எங்க தல கைப்ஸ் இந்த மாதிரி பல கஷ்டங்களை அனுபவிச்சிருக்கார்…!”

க: “வாடீ வா… இத்தன நாள் தான் அவன் பேர சொல்லி ஊர ஏமாத்திட்டு இருந்தே? உனக்குனு எழுத சொல்லி ஒரு வாரம் கொடுத்த அதையும் என்னனா அவுட் சோர்ஸ் பண்ணிட்டு இருக்க…??

தேவ்: “நான் அவுங்களுக்குள்ள இருக்கற திறமைய வெளிய கொண்டு வந்துட்டு இருக்கேன்…!!”

க:“இந்த டகால்டி எல்லாம் இங்க வேண்டான்டி… முதல்ல உன் திறமைய வெளிய கொண்டா? அப்பறம் அடுத்தவங்க திறமைய வெளிய கொண்டு வரலாம்!!”

தேவ்: “நான் ஸ்டார் ரிப்போர்ட்டராயிட்டேனு உங்களுக்கு பொறாமை…”

க: “மக்களே!!! இந்த பாவத்துக்கு எல்லாம் நான் ஆள் இல்லை… இவர் ஸ்டாராயிட்டாராம் உடனே நாலு பேர கேள்வி கேட்டு ஸ்டார் ரிப்போர்ட்டராயிட்டாறாம். என்னுமோ ஸ்டார் டீவி ரிப்போர்ட்டர் கணக்கா பேசிட்டு இருக்கான் பாருங்க… அப்பறம் அது என்னடா பக்கம் 78, பக்கம் 102னு உன் இஷ்டத்துக்கு பேர் வெச்சிருக்க?”

தேவ்: “அதுவா… என் தெருல இருந்த 78ம் நம்பர் வீட்ல இருந்த ஃபிகரத்தான் நான் பத்தாவது படிக்கும் போது ரூட் விட்டுட்டு இருந்தேன். அப்ப எல்லாம் தினமும் அவ வீட்டு முன்னாடி தான் சைக்கிள் எடுத்துட்டு சுத்திட்டு இருப்பேன். அதெல்லாம் ஒரு பொற்காலம்…”

க: “ஏண்டா அது பொற்காலம் மாதிரியா இருக்கு? அது ஒரு கனாக்காலம் ரேஞ்சுக்கு இருக்கேடா… அதனால தான் அதுல உன் கதை, கவுஜ எல்லாம் எழுதி பிலிம் காட்டறயா?”

தேவ்: “ஆமாம்னா… நான் அது அவளுக்காக எழுத நினைத்த கவிதைகள்… ஆனா எதுவும் கொடுக்க முடியாமலே போச்சு!!”

க: “ஓ நோ!!! உனக்குள்ள இவ்வளவு சோகம் இருக்கா??? ஆமாம் உனக்கும் இந்த சாம்பு, இரவுக்கழுகு குழுவுக்கும் என்ன சம்பந்தம்? எல்லா பதிவுளையும் அவுங்கள பத்தியே கேள்வி கேட்டுட்டு இருக்க?”

தேவ்: “கவுண்ட்ஸ்… அப்படியெல்லாம் இல்லை, இந்த புலிய பத்தி எல்லாம் கிசு கிசு எழுதி பெரிய ஆள் ஆக்கறாங்க. அப்படியே நம்மலையுல் எழுதினா பெரிய ஸ்டாராயிடலாம் இல்லை.. அதான் பாக்கறேன்!”

க: “இந்த சினிமாகாரவங்க தான் இப்படி கெட்டு போயிருக்காங்கனா… நீங்களுமா??? சரி தேவு.. இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிட்டு ஓடி போயிடு… அது என்ன போர் வாள்??? நீ என்னைக்காவது போர்ல வாள் எடுத்து சண்டை போட்டிருக்கியா???”

தேவ்: “ஓ அதுவா??? சண்டைனு வந்துட்டா நான் வாள் வாள்னு கத்திட்டு இருப்பேன்… அது அப்படியே போர் வாளாயிடுச்சி.. இத மட்டும் வெளிய சொல்லிடாதீங்கண்ணா… நான் பெரிய லெவல்ல பில்ட் அப் கொடுத்து வெச்சிருக்கேன்…”

சொல்லிவிட்டு அடுத்த பேட்டி எடுக்க ஓடிவிடுகிறார் போர் வாள்!!!

.... இங்கே பதியப்பட்டது வெட்டிப்பயல் | 28 மறுமொழிகள் »

இரு துருவம் – 3

பதிந்தவர் vavaasangam மேல் மார்ச் 19, 2007

பாகம் – 2

நண்பர்களே, இவ்வளவு லேட்டா இந்த பாகத்தை போடறதுக்கு முதல்ல மன்னிப்பு கேட்டுக்கறேன்… ஆணி ரொம்ப அதிகம்.

இனி கதைக்கு போகலாம்…

……………………………………………….

ஆடிட்டோரியத்திற்குள் பரபரப்பாக சுற்றி கொண்டிருந்தான் சரவணன். ஒரு வழியாக அனைத்து வேலைகளும் முடிந்த பிறகு வெளியே வந்தான். அங்கே வாசலில் அருமையாக இடப்பட்டிருந்த கோலத்தை பார்த்து ஆச்சரியமானான். அதன் அருகே இருந்தவர்களிடம் சரண்யாவை பற்றி விசாரித்தான். அவள் கோலம் போட்டு கை, கால் எல்லாம் கலரானதால் ஹாஸ்டலுக்கு சென்றிருக்கிறாள் என தெரிய வந்தது.

சரவணனும் மாணவர் விடுதிக்கு வேகமாக சென்று குளித்து ஃப்ரெஷாக வந்து சேர்ந்தான். அவன் வந்து சிறிது நேரத்திலே சீப் கெஸ்ட் வந்து சேர்ந்தார். ஒரு வழியாக விழா நல்ல படியாக முடிந்து சீப் கெஸ்டை காரில் ஏற்றி அனுப்பிவிட்டு வரும் போது வாசலில் கோலத்தை பார்த்தவுடன் தான் அவனுக்கு சரண்யா ஞாபகம் வந்தது.

அவளை தேடிய பிறகு தான் அவனுக்கு முதலாமாண்டு மாணவர்கள் டிப்பார்ட்மெண்ட் நிகழ்ச்சிகளில் பங்கு பெறவில்லை என்ற ஞாபகமே வந்தது. சரி போன் செய்து சொல்லிவிடலாம் என்று அருகிலிருக்கும் ஒரு ரூபாய் பூத்திலிருந்து லேடிஸ் ஹாஸ்டலுக்கு போன் செய்தான்.

போனை எடுத்த மாணவியிடம்

“ஹோலோ! ஃபர்ஸ்ட் இயர் சரண்யா இருக்காங்களா?”

“நீங்க யார் பேசறது?”

“நான் அவுங்க டிப்பார்ட்மெண்ட் ஜாயிண்ட் செக்ரட்டரி சரவணன் பேசறேன். கொஞ்சம் கூப்பிட முடியுமா?”

“டேய் சரவணா! நான் தான் வித்யா பேசறேன். எதுக்குடா ஃபர்ஸ்ட் இயர் பொண்ணுக்கு ரூட்விடற?”

வித்யா சரவணின் க்ளாஸ் மேட்…

“ஏய் லூசு… நீதானா? ரூட்டும் இல்ல ஒண்ணும் இல்லை. சும்மா தேங்க்ஸ் சொல்லலாம்னு கூப்பிட்டேன்”

“எதுக்கு தேங்க்ஸ் சொல்லனும். ஏன்கிட்ட சொல்லு அப்பதான் கூப்பிடவேன்”

“முதல்ல கூப்பிடு அப்பறம் சொல்றேன். சீக்கிரம் கால் கட்டாயிடும். இன்னும் 120 செகண்ட்ஸ் தான் இருக்கு. என்கிட்ட வேற காயின் இல்லை”

“சரி இரு கூப்பிடறேன்” சொல்லிவிட்டு
“ஃபர்ஸ்ட் இயர் சரண்யா… போன்” என்று சத்தமாக கத்தினாள். உடனே முதல் மாடியில் “சரண்யா போன்… சரண்யா போன்” என்று சத்தம் வந்தது.

“டேய் கூப்பிட்டுட்டேன். இப்ப சொல்லு”

“ஒண்ணும் இல்ல. இன்னைக்கு டிப்பார்ட்மெண்ட் ஃபங்க்ஷனுக்கு ஹெல்ப் பண்ணா. அதுக்கு தான் தேங்க்ஸ் சொல்லலாம்னு கூப்பிட்டேன்”

“டேய். ஏன்டா நாங்களும் தான் வேலை செஞ்சோம் எங்களுக்கு இப்படி போன் பண்ணி சொன்னியா என்ன?”

“லூசா நீ… நம்ம டிப்பார்ட்மெண்ட் ஃபங்ஷனுக்கு நீ பண்ண. அவளுக்கு என்ன டிப்பார்ட்மெண்ட் எல்லாம் இருக்கு. சரி நீ முதல்ல அவள்ட குடு”

சரியான நேரத்தில் வந்து நின்றாள் சரண்யா.

அவளிடம் போனை கொடுத்துவிட்டு “பேசி முடிச்சிட்டு செகண்ட் ஃப்ளோர்ல ரூம் நம்பர் 207க்கு வா” சொல்லிவிட்டு வேகமாக சென்றுவிட்டாள் வித்யா.

“ஹலோ” பயம் நிறைந்த குரளில் பேசினாள் சரண்யா.

“ஹலோ நான் சரவணன் பேசறேன்”

“எந்த சரவணன்? எனக்கு அப்படி யாரையும் தெரியாதே”

“ஹலோ நான் உங்க டிப்பார்ட்மெண்ட் ஜாயிண்ட் செக்ரட்டரி”

“ஓ!!! சாரி சார்… சொல்லுங்க”

“இந்த சார் மோர் எல்லாம் செகண்ட் இயர் பசங்களோட வெச்சிக்கோ! கோலம் ரொம்ப நல்லா இருந்துச்சி”

“தேங்க்ஸ்”

“அது நான் தான் சொல்லனும். தேங்க்ஸ். சரி அதுக்குத்தான் போன் பண்ணேன். பை” சொல்லிவிட்டு போனை வைத்தான் சரவணன்.

அடுத்த நாள் காலை இண்டர்வெலில் காண்டினில் நண்பர்களுடன் உட்கார்ந்து டீ குடித்து கொண்டிருந்தான் சரவணன்.

அவனை நோக்கி வந்தாள் சரண்யா. “சார் உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசனும்” அவள் சொன்னதை கேட்டதும் அவன் நண்பர்கள் அனைவரும் சரவணனை ஒரு மாதிரி பார்த்தனர். அவனுக்கு ஒரு மாதிரி இருந்தது.

“இருங்கடா வரேன்” சொல்லிவிட்டு கேண்டினை விட்டு வெளியே வந்தான் சரவணன்.

“நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு நான் இல்லை. நான் ரொம்ப நல்ல குடும்பத்து பொண்ணு. இந்த மாதிரி விஷயமெல்லாம் தெரிஞ்சா எங்க வீட்ல என்னை கொன்னு போட்டுடுவாங்க. ப்ளீஸ் இனிமே என்கிட்ட பேசாதீங்க” சொல்லிவிட்டு வேகமாக க்ளாஸ் ரூமை நோக்கி நடந்தாள் சரண்யா…

அவளை குழப்பத்துடன் பார்த்து கொண்டிருந்தான் சரவணன்…

(தொடரும்…)

.... இங்கே பதியப்பட்டது வெட்டிப்பயல் | 16 மறுமொழிகள் »

இரு துருவம் – 2

பதிந்தவர் vavaasangam மேல் பெப்ரவரி 20, 2007

இரு துருவம் முதல் பகுதி படிக்க

“டேய் குமாரு! இப்பவே கட்டிக்கப்போற பொண்ண பத்தரமா சைக்கிள்ல வெச்சி ஓட்டிட்டு வர” குமார் சைக்கிளை நிறுத்தியவுடனே சொன்னார் பக்கத்துவீட்டு தாத்தா. அதை கேட்டு சிரித்து கொண்டே வீட்டிற்குள் ஓடினாள் சரண்யா.

“அதெல்லாம் இல்லை” சொல்லிவிட்டு வேகமாக வீட்டிற்குள் சென்றான் குமார்.

அங்கே அத்தையின் மடியில் போய் உக்கார்ந்து கொண்டாள் சரண்யா. நேராக அம்மாவிடம் வந்தான் குமார்.

“அம்மா! ஏன் அந்த தாத்தா எப்ப பார்த்தாலும் இப்படியே சொல்லிட்டு இருக்காரு? இதுக்கு தான் நான் இவளை கூப்பிட்டு வர போக மாட்டேனு சொன்னேன்” கொபம் கலந்த குரலில் கேட்டான் குமார்.

“அவர் கிடக்கறாரு போடா. பாட்டி உள்ள சாப்பாடு போட்டு வெச்சிருக்கு, நீ போய் சாப்பிடு”

குமார், உள்ளே சென்று பாட்டியிடம் சாப்பிட ஆரம்பித்தான். வெளியே அத்தையுடன் கொஞ்சி கொண்டிருந்தாள் சரண்யா.

சரண்யா, குமாரின் ஒன்று விட்ட மாமன் மகள். குமாரின் அம்மாவிற்கும் கூட பிறந்தவர்கள் யாரும் அருகில் இல்லாததால் இந்த அண்ணனையே சொந்த அண்ணன் போலவும், சரண்யாவை மருமகள் போலவும் பார்த்து கொண்டாள். அவளை வீட்டிற்கு மருமகளாக்கும் திட்டமும் அவளுக்கு இருந்தது. சரண்யாவின் அப்பாவிற்கும் தங்கை பையனுக்கு கொடுத்தால் பிரச்சனையில்லை என்ற எண்ணம் இருந்தது. அவர்கள் குமார் வசிக்கும் தெருவிற்கு பக்கத்து தெருவிலே இருந்தனர்.

சரண்யாவும், குமாரும் ஒரே பள்ளியிலே படித்து வந்தனர். குமார் ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தான், சரண்யா மூன்றாம் வகுப்பு படித்து கொண்டிருந்தாள். பள்ளிவிட்டு இருவரும் ஒன்றாக வந்து கொண்டிருந்தனர்.

“இங்க பாரு, இனிமே என்னை அண்ணனுதான் கூப்பிடனும். புரியுதா? மாமானு எல்லாம் கூப்பிட கூடாது” குமார் சொல்லி கொண்டு வந்தான்.

“சரி” தலையசைத்தாள் சரண்யா.

சரண்யா குமாரை அண்ணா என்று அழைப்பதை பார்த்துவிட்டாள் குமாரின் பாட்டி.

“ஏன்டி யாராவது அத்தை பையனை அண்ணானு கூப்பிடுவாங்களா? மாமானு தான் கூப்பிடனும். சரியா?” விளக்கி கொண்டிருந்தாள் பாட்டி.

“பாட்டி நான் தான் அண்ணானு கூப்பிட சொன்னேன். பள்ளி கூடத்துல மாமானு கூப்பிட்டா பசங்க எல்லாம் கேலி பண்றாங்க. இவ ஒண்ணும் என்னை மாமானு எல்லாம் கூப்பிட வேண்டாம். அண்ணானு கூப்பிட்டாலே போதும்” வேகமாக சொன்னான் குமார். பாட்டி எவ்வளவு சொல்லியும் அவன் கேட்கவில்லை.

…………………………………..

சரவணன் பரபரப்பாக சுற்றி கொண்டிருந்தான். அன்று அவன் டிப்பார்ட்மெண்ட் துவக்க விழா. அவன் டிப்பார்ட்மெண்ட் ஜாயின் செக்ரட்டரி என்பதால் முன் நின்று வேலை பார்த்து கொண்டிருந்தான்.

“சார்! இன்னைக்கு எங்க டிப்பார்ட்மெண்ட் இனாகரேஷன் ஃபங்ஷன். கொஞ்சம் சேர் எடுத்து போட ஆள் வேணும். ஒரு பத்து பசங்களை மட்டும் அனுப்ப முடியுமா?” எலக்ட்ரிக்கல் லேப் ஆசிரியரிடம் கெஞ்சி கொண்டிருந்தான் சரவணன்.

“அதேல்லாம் முடியாதுப்பா. உங்க பசங்களை வெச்சியே பண்ணிக்கோங்க. செகண்ட் இயர் பசங்கதான் சேர் எடுத்து போடணுமா?” சீரியஸாக சொல்லி கொண்டிருந்தார் அந்த ஆசிரியர். அவரிடம் விவாதிக்க மனமில்லாமல் டிப்பார்ட்மெண்டை நோக்கி நடந்தான் சரவணன்.

உள்ளே சென்று HODயை பார்த்தான்.

“சார் நம்ம செகண்ட் இயர் பசங்களுக்கு இன்னைக்கு எலக்ட்ரிக்கல் லேப். அந்த சார் விட மாட்றேனு அடம் பிடிக்கிறாரு. வேலை செய்ய பசங்க கொஞ்ச பேர் வேணும். நீங்க ஏதாவது சொல்லிவிடுங்க சார்” கோபமாக சொன்னான் சரவணன்.

“அதெல்லாம் வேணாம்பா. நீ நம்ம ஃபர்ஸ்ட் இயர் பசங்களை கூப்பிட்டு போ. நான் சொல்லிக்கறேன்” பொறுமையாக சொன்னார் HOD.

முதலமாண்டு மாணவர்களின் வகுப்பிற்குள் சென்றான் சரவணன். உள்ளே எந்த ஆசிரியரும் இல்லாத்தால் மாணவர்கள் தொண தொணவென்று பேசி கொண்டிருந்தார்கள். சரவணனை பார்த்ததும் அமைதியாகிவிட்டார்கள்.

“ஹாய் ஜினியர்ஸ். நான் உங்க டிப்பார்ட்மெண்ட் ஜாயின் செக்ரெட்டரி. இன்னைக்கு நம்ம டிப்பார்ட்மெண்ட் இன்னாகரேஷன் ஃபங்ஷன். எனக்கு ஹெல்ப் பண்ண ஒரு பத்து பேர் வேணும். யார் வறீங்க?” அவன் கேட்டு முடித்ததும் வகுப்பு மேலும் அமைதியானது.

“வரவங்களுக்கு ஓ.டி இருக்கு” இதை அவன் சொன்னவுடன் உடனே ஒரு இருபது மாணவர்கள் எழுந்தனர்.

“சரி நீங்க பத்து பேர் மட்டும் வாங்க” முதலிலிருந்த பத்து பேரை பார்த்து சொன்னான்.

“அப்பறம் அந்த ரங்கோலி போட ஒரு 4-5 பொண்ணுங்க வேணும். யாருக்கு போட தெரியும்” அனைவரும் அமைதியாக இருந்தனர்.

அன்று அவன் பார்த்த பேசிய அந்த பெண் முதல் பெஞ்சில் அமர்ந்திருந்தாள். அவள் அருகே சென்றான்.

“உனக்கு கோலம் போட வருமா?”

“ம்ம்… ஆனா ரங்கோலி எல்லாம் தெரியாது”

“சரி. நீ உன் ஃபிரெண்ட்ஸ் 4 பேரை கூப்பிட்டு ஆடிட்டோரியம் வந்துடு” அவன் சொன்னவுடன் அவள் திரு திருவென்று முழித்து கொண்டிருந்தாள்.

“ஆமாம். உன் பேரு என்ன?”

“சரண்யா…”

(தொடரும்…)

.... இங்கே பதியப்பட்டது வெட்டிப்பயல் | 19 மறுமொழிகள் »

இரு துருவம்

பதிந்தவர் vavaasangam மேல் பெப்ரவரி 13, 2007

“சார் வர சொன்னீங்களாமே… அட்டேண்டர் சொன்னாரு” ஹெச்.ஓ.டி முன் நின்றிருந்தான் சரவணன்.

“இன்னைக்கு ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட்ஸ் ஜாயின் பண்றாங்கனு தெரியும் இல்லை”

“தெரியும் சார்” அமைதியாக சொன்னான் சரவணன்.

“நம்ம பசங்க யாரையும் ராகிங்க்ல இன்வால்வ் ஆக வேண்டாம்னு சொல்லு. போன வருஷம் அதிகமா மெக்கானிக்கல் பசங்களை சஸ்பெண்ட் பண்ணிட்டோம்னு அந்த டிப்பார்ட்மெண்ட் ஹெ.ஓ.டீ கடுப்புல இருக்காரு. நம்ம பசங்க யார் மாட்டினாலும் கண்டிப்பா சஸ்பெண்ட் தான். புது ஸ்க்வாட்ல அந்த டிப்பார்ட்மெண்ட் வாத்தியாருங்க தான் அதிகம். புரிஞ்சிதா?”

“யெஸ் சார்”

“அப்பறம் யார் மாட்டினாலும் உங்களுக்காக நான் பேசமாட்டேன்… போய் உங்க ஜூனியர்ஸ்கிட்ட சொல்லிடு”

ஹெச்.ஓ.டீ அறையிலிருந்து வெளியே வந்தான் சரவணன்.

சரவணன் கம்ப்யூட்டர்ஸ் டிப்பார்ட்மெண்டில் மூன்றாமாண்டு படிக்கும் மாணவன். அந்த டிப்பார்ட்மெண்டின் ஜாயிண்ட் செக்ரட்டரி அவன். படிப்பிலும் சுட்டி, ஆசிரியர்களிடமும் நல்ல பேர். அதே சமயம் காலேஜ் மாணவர்களுக்கே இருக்கும் துடிப்பும், குறும்பும் அவனிடம் இருந்தது.

அவன் செகண்ட் இயர் க்ளாஸ் ரூமிற்குள் நுழையும் போது அங்கே கூட்டம் கூட்டமாக மக்கள் இருந்தனர். பாதி மாணவர்கள் கோழி திருடியவர்கள் போல் திருட்டு முழி முழித்து கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் முதலாமாண்டு மாணவர்கள் என்பது அவர்கள் நெற்றியில் எழுதி ஒட்டியிருந்தது.

முதல் பெஞ்சிலேயே டேபிள் மேல் இருவர் மட்டும் டெஸ்க் ஓரத்தில் அமர்ந்திருக்க அவர்கள் முன் ஒரு பெண் நின்றிருந்தாள். நேராக அவர்களிடம் அவன் செல்ல…

டெஸ்க் மேல் அமர்ந்திருந்தவர்கள் கீழே இறங்கினர்.

“என்னடா ரேகிங்கா?”

“இல்லைனா… சும்மா…” அப்படியே வழிந்தான் ஒருவன்

“ஏன்ணா நீங்க பண்ணாத தான்னா நாங்க பண்றோம்” என்று பம்மி கொண்டே சொன்னான் மற்றொருவன்

அந்த பெண்ணை பார்த்தான் சரவணன். அவள் அழுது முகம் சிவந்திருந்தது.

“எந்த டிப்பார்ட்மெண்ட்?”

“கம்ப்யூட்டர் சயின்ஸ்” அவள் குரல் அழுகையோடு வந்தது.

“சரி நீ கிளம்பு” சொல்லிவிட்டு மற்ற அனைவரையும் பார்த்தான்…

“இங்க ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூண்ட்ஸ் யார் இருந்தாலும் உடனே வெளிய போகலாம். ஹெச்.ஓ.டி இப்ப இங்க வருவாரு. உங்ககிட்ட ஏதோ பேசனுமாம்”

அவன் சொல்லியவுடன் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் ஒரு 10 – 15 பேர் வெளியே சென்றனர்.

“ஏன்டா முதல் நாளே ராகிங் பண்ணனுமா? அதுலயும் பொண்ணுங்கள கூப்பிட்டு பண்றீங்க. அறிவு இல்லை. இன்னைக்கு எப்படியும் ரெய்ட் வருவாங்கனு தெரியாதா? மாட்னா சஸ்பெண்ட் தான் அப்பறம் யாராலையும் காப்பாத்த முடியாது” அவன் டென்ஷனாக சொல்லி கொண்டிருந்தான்.

“ஏன்னா நீங்க மட்டும் ரொம்ப நல்லவர் மாதிரி பேசறீங்க? போன வருஷம் எங்களை எப்படி பண்ணீங்க?” சரவணனிடம் போன வருடம் கிரிக்கெட் மேட்சில் சத்தம் போட்டு அடி வாங்கிய ஒருவன் பேசினான்.

“டேய்… உங்களை ரேகிங் பண்ணாதீங்கனு சொல்லல. எப்பவுமே முதல் ஒரு மாசத்துக்கு யாரடா சஸ்பெண்ட் பண்ணலாம்னு திரியுவானுங்க. அப்ப மாட்டிக்கிட்டா சங்கு தான். மோர் ஓவர் பொண்ணுங்களை எப்பவுமே பசங்க ரேக் பண்றது தப்பு. அத ஈவ் டீசிங் கேஸ்லையும் போட்டுவிட்டுடுவாங்க. உங்களுக்கு சப்போர்ட் பண்ணி பேசக்கூட முடியாம போயிடும். ஜாக்கிரதையா இருக்க சொல்லி ஹெச்.ஓ.டி சொல்லிருக்காரு. இதுக்கு மேல பண்ணா உங்களை யாரும் காப்பாத்த மாட்டோம்” சொல்லிவிட்டு அவன் வெளியே வந்தான்.

அந்த காரிடரின் இறுதியில் அந்த பெண் நின்றிருந்தாள். அழுது சிவந்து போன முகம்.

“ரொம்ப தேங்க்ஸ்” அவளாகவே வந்து பேசியது அவனுக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது.

“சரி… முதல்ல போய் முகம் கழுவிட்டு வீட்டுக்கு கிளம்பு”

“நான் ஹாஸ்டல்ல இருக்கேன்” வருத்தமாக சொன்னாள் அவள்.

“ஓ”

” நீங்க தேர்ட் இயர் தானே?” கொஞ்சம் அப்பாவியாக கேட்டாள்.

“ஆமாம்! அப்பறம் நீ அழுவற மாதிரி அப்படி என்ன கேட்டானுங்க?”

“பேர் என்னனு கேட்டாங்க?”

“அப்பறம்?”

“அவ்ளோ தான் கேட்டாங்க” அப்பாவியாக சொன்னாள்.

“அதுக்கு எதுக்கு அழுத?”

“அழுதா அப்பறம் எதுவும் கேக்க மாட்டாங்க இல்லை.. அதனால தான்…” சொல்லிவிட்டு சிரித்து கொண்டே ஹாஸ்டலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

தொடரும்…

.... இங்கே பதியப்பட்டது வெட்டிப்பயல் | 9 மறுமொழிகள் »

சங்கம் ஸ்போர்ட்ஸ்| SANGAM SPORTS

பதிந்தவர் vavaasangam மேல் ஜனவரி 30, 2007

சங்கத்து வாசலில் கையை இடுப்பில் வைத்து கொண்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்கிறார் தல கைப்பு…

“எலேய் எல்லாம் எங்கலே போயிட்டீக??? இங்கன ஒருத்தன் இருக்கறதையே மறந்துடறீக… சத்தம் போட்டு கொண்டிருக்கிறார்.”

அங்கே வேகமாக ஓடி வரும் ராயலை பார்த்ததும் பீதி அடைகிறார்…

“எலேய் ராயலு ஏன்யா இப்படி பீதிய கிளப்பற மாதிரி ஓடி வர?”

“தல!!! ஊர்ல ஜல்லிக்கட்டு நடக்குது. போன வருஷம் உன் கால உடைச்சி குப்ப தொட்டில தூக்கி எறிஞ்சிதே அந்த கட்டதுரையோட கன்னுக்குட்டி, அது
இந்த வருஷமும் உன்னைய பாசமா தேடிக்கிட்டு இருக்கு… “

“எலேய் ஜல்லிக்கட்டுனு வீர விளையாட்டுக்கு போனா அப்பப்ப அடிப்படத்தான் செய்யும்… அதெல்லாம் எங்க வீர வரலாறுல ஜகஜம்…”

“அதுக்கு பயந்து தான் இந்த வருஷம் நீ ஊருக்குள்ள வராம இருக்கனு கட்டதுரை எல்லார் முன்னாடியும் சொல்லிட்டு இருக்கான்…”

“அப்படியா சொல்றான் அந்த கட்டதுரை???”

“ஆமாம் தல…”

“உண்மை எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சா?”

“ஆமாம் தல… அதுக்கு பதிலா தான் அங்க இந்த வருஷம் புதுசா நடக்க போற புட் பால் மேட்ச்ல சங்கம் உன் தலமைல கலந்துக்க போகுதுனு நம்ம போர் வாள் சவுண்ட் விட்டுட்டாரு…”

“இந்த போர் வாள் சும்மாவே இருக்க மாட்டான்யா!!! நம்மல வம்புல மாட்டி விடறதே அவனுக்கு வேலையா போச்சி… “

சரியாக அந்த நேரத்தில் உள்ளே வருகிறார் தளபதி!!!

“ஏன்யா ராயல இந்த புட் பாலுனா காலல பந்து உதைச்சி விளையாடறது தானே?”

“ஆமா தல…”

“ஏன்யா! நம்ம காலத்தான் உடச்சி புட்டானுங்களே அப்பறம் எப்படிடா நம்ம அதுல கலந்துக்க? வேணும்னே விளையாடி இந்த காலையும் உடைச்சிடுவானுங்களே!!!”

“தல!!! வேணும்னா நம்ம அமெரிக்கம் புட்பால் விளையாடலாம் தல” தளபதி புதிதாக ஐடியா தருகிறார்.

“ஏன்யா சிபி, இதுக்காக நம்ம அமெரிக்கா போய் விளையாட முடியுமா? சின்னப்புள்ள தனமா இல்ல இருக்கு”

“தல! அமெரிக்கன் புட்பால்னா அமெரிக்கா போக தேவையில்லை. கால்ல அடிச்சிட்டு ஆடறதுக்கு பதிலா கைல பந்த தூக்கிட்டு ஓடி போயி கோல் போடனும் அவ்வளவுதான்”

“ஆஹா.. தளபதினா நீதான்யா தளபதி…. கைல எடுத்துட்டு ஓடறதுதான??? பந்த எடுத்துட்டு எப்படி ஓடறேன் பார்”

“ஆமாம் தல… அன்னைக்கு அந்த பக்கத்து வீட்டு நாயிக்கு வெச்சிருந்த பொறைய எடுத்துட்டு எப்படி ஓடி வந்திங்க.. தெரு நாய் எல்லாம் துரத்தி கூட பிடிக்க முடியலையே!!! இந்த விளையாட்டுக்கு உங்களை விட்டா ஆளே இல்லை” தலயின் பெருமையை சொல்கிறார் ராயல்

“எலேய் ராயலு நீ பெருமையா சொல்றீயா இல்லை கலாய்க்கிறியானே தெரியலையா… பேசாம நீயும் என் கூட கலாய்த்தல்ல சேர்ந்துடு” சொல்கிறார் தளபதி…

“சரி.. போட்டிக்கு எல்லாத்தையும் தயார் பண்ண சொல்லுங்க… சங்கத்து சிங்கங்களுக்கு எல்லாம் அழைப்பை அனுப்பிடுங்க…
கட்டதுரையை களத்துல சந்திக்கிறோம்னு மெயில் அனுப்புங்க…
தயாராகட்டும் விளையாட்டு அரங்கம்.. கட்டதுரையா இல்லை இந்த கைப்புள்ளையானு மோதி பார்த்துடுவோம்” தல பெருமையாக சொல்கிறார்…

விளையாட்டு ஆரம்பிக்கிறது…

கைப்புள்ள தலைமையில் வ.வா.ச அணியிணர் ஆர்ப்பாட்டமாக திரண்டு நிற்க, கட்டதுரை தலைமையில் கொலை வெறியுடன் எதிர் அணி திரண்டு நிற்கிறது…

தல, சங்கத்து சிங்களுக்கு கேம் ஸ்ட்ரேட்டஜி சொல்லி தருகிறார்…

மக்கா, யாருகிட்ட பந்து கிடைச்சாலும் என்கிட்ட தூக்கி போட்டுடுங்க.. நான் ஓடி போயி கோல் போட்டுடறேன்… என்ன புரிஞ்சிதா?

சரி தல… சங்கத்து சிங்கங்கள் ஒன்று சேர சொல்கிறார்கள்…

இப்ப சவுண்ட் எல்லாம் நல்லா தான் கொடுக்கறீங்க.. இந்த ஆர்ப்பாட்டத்த ஆட்டத்துல காட்டனும்.

சரி… யோவ் அம்பையர் ஸ்டார்ட் த கேம்… நாங்க ரெடி… தல வீரமாக முழங்குகிறார்…

ஆட்டம் அமர்க்களமாக ஆரம்பிக்கிறது…

போர் வாள் பந்தை எடுத்து தலையை நோக்கி போட அதை தல சரியாக பிடிக்கிறார்…

எதிர் அணியினர் அனைவரும் தலயின் காலை பிடித்து இழுத்து மல்லாக்க படுக்க வைத்து ஒரேடியாக மேலே விழுகிறார்கள்…

“எலேய்!!! என்னய விடுங்கடா… பந்து என்கிட்ட இல்லை.. சொன்னா நம்புங்கடா” கதறுகிறார் தல

பந்து ஜொள்ளு பாண்டியின் கையில் போக… வேகமாக தரையில் கிடக்கும் கைப்புவின் கையில் பந்தை திணித்து ஓடுகிறார் ஜொ.பாண்டி…

“ஏலேய் ஐயோக்கிய அப்பரண்டீஸிகளா!!! கீழ கிடக்கறவன் கையில ஏன்யா பந்த திணிக்கிற?” தல சொல்லி முடிப்பதற்குள் எதிர் அணியினர் அனைவரும் தலயின் மேல் வேக வேகமாக விழுகிறார்கள்.

“அடப்பாவி மக்கா!!! இதுக்கு தான் பந்த திணிச்சிட்டு வேகமா ஓடுனியா?” கத்தி கொண்டிருக்கிறார் தல…

“இல்ல தல… அந்த பக்கம் நிறைய ஃபிகர்ஸ் இருக்கு அதப்பாக்கத்தான் வேகமா போறேன்” கடமை வீரனாக சொல்கிறார் ஜொ.பாண்டி

“ஏன்யா பாண்டி இந்த ரத்த பூமியிலும் உனக்கு ஒரு கிளுகிளுப்பு தேவைப்படுதா?”

மீண்டும் சிங்கங்களை கூட்டி புது ஸ்ட்ரேடஜியை சொல்கிறார்…

“இனிமே யாருக்கிட்ட பந்து கிடைச்சாலும் எனக்கு தரக்கூடாது புரியுதா? நீங்களே பந்த எடுத்துட்டு போய் கோல் போடுங்க… உடம்பு இப்பவே ரணகளமாயிடுச்சி”

“சரி தல” அனைவரும் கோரஸாக சொல்கிறார்கள்

போர்வாள் பந்தை எடுத்து வேகமாக ஓட…

கட்டதுரை டீமிலிருக்கும் அனைவரும் அப்பாவியாக நின்று கொண்டிருக்கும் கைப்பு மீது பாய்ந்து மேலே விழுகிறார்கள்!!!

“அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்…
என்கிட்ட தான் பந்தே இல்லையேடா.. அப்பறம் ஏன்டா இப்படி என் மேலயே விழறீங்க?” கண்ணீருடன் கட்டதுரையை பார்த்து கேட்கிறாட் கைப்பு

“உன் சங்கத்து ஆளுங்க யாருக்கிட்ட இருந்தாலும் உன் மேல தான் விழுவோம்” தெனாவெட்டாக சொல்கிறார் கட்டதுரை

“எலேய் சங்கத்து சிங்கங்களா… உங்களுக்கெல்லாம் குச்சி மிட்டாயும் குருவி உருண்டையும் வாங்கி தறேன்.. அந்த பந்தை அவனுங்க கையில கொடுத்துடுங்கடா” கெஞ்சுகிறார் கைப்பு

“தல!!! நம்ம முன் வெச்ச கால பின் வைக்க கூடாது.. எப்படியும் இந்த ஆட்டத்துல ஜெயிச்சி நம்ம வீரத்த நிலைநாட்டனும்” வீரமாக சொல்கிறார் போர் வாள்!!!

“எலேய் போர் வாளு!!! இங்கன ஒருத்தன் இரத்த வெள்ளத்துல மிதக்கறப்ப உனக்கு இந்த விளையாட்டுல கெளிக்கறதுதான் முக்கியமா??? அந்த பந்தை அவனுங்க கைல கொடுத்து தொலைங்கடா”

கைப்புவின் பரிதாப நிலையை பார்த்து பந்தை கட்டதுரையிடம் கொடுக்க அதன் பிறகு மீண்டும் கைப்பு மேல் வேகமாக விழுகிறார்கள் கட்டதுரையின் ஆட்கள். இதுதான் சமயம் என சங்கத்து ஆட்களும் கைப்பு மேல் விழுகிறார்கள்…

“அயோக்கிய பயலுகளா!!! எல்லாம் ஒரு முடிவோடத்தான் விளையாட்ட ஆரம்பிச்சிருக்கீங்களா???
எலேய் தளபதி ஒரு காலு மட்டும் உடைச்சிடப்போறாங்கனு நான் பயந்தா இப்படி உடம்பு முழுசா கட்டு போட வெச்சிடீயே!!!” கைப்பு கதற கதற அனைவரும் மீண்டும் ஒரு முறை தல மேல் தொப தொபவென விழுகிறார்கள்!!!

.... இங்கே பதியப்பட்டது வெட்டிப்பயல் | 20 மறுமொழிகள் »

டிசம்பர் மாத அட்லாஸ் வாலிபர்

பதிந்தவர் vavaasangam மேல் நவம்பர் 30, 2006

“எலேய் தேதி முப்பதாச்சி சங்கத்து கூட்டுங்கப்பு” சவுண்ட் விட்டுக்கொண்டே தல கைப்பு உள்ள வர…கூடவே புதுசா சேர்ந்த ராயலும் சங்கத்துக்குள் வர…

உள்ளே இருக்கும் சங்கத்து சிங்கங்களெல்லாம் தலய ஒரு லுக் உட்டவுடனே ஜெர்க் ஆகிறார்…

“எல்லாம் இங்கனத்தான் இருக்கீங்கனு தெரியாம ஓவராத்தான் சவுண்ட் விட்டுட்டனோ” என்று மனதிற்குள் நினைத்தவாரு ஒரு கர்ஜனையோட ஆரம்பிக்கிறார்!!!

“எலேய் வெட்டி உங்கிட்ட என்ன சொன்னேன்?”

“என்ன சொன்னீங்க?”

“போன வாரம் உங்கிட்ட என்ன சொன்னேன்?”

“போன வாரம் எங்கிட்ட என்ன சொன்னீங்க?”

ஆஹா ஆரம்பிச்சிட்டான்யா!!!

“ராயலு இதுக்கு மேல நான் பேசினேனா ரணகளமாயிடும்… நீயே அவன்கிட்ட கேளு”

“வெட்டி, அதான்யா நம்ம தலைக்கு ஆப்பு வாங்கறதுக்கு துணையா ஒருத்தர பிடிப்போமேயா. அவர் பேரு என்ன?
ஹா…அதான் அட்லாஸ் வாலிபரு. இந்த மாசத்துக்கு அட்லாஸ் வாலிபரு ரெடியா?”

“அதெல்லாம் எப்பவோ ரெடி… பதிவோட வெயிட்டீங்ல இருக்காரு!”

“ஆஹா! யாருப்பா அது? நம்ம ரேஞ்சுக்கு ஆப்பெல்லாம் தாங்குவாறா?”

“ராயலு என்ன இப்படி கேட்டுட்ட? ஒரு பொண்ணு ஓட்டனதுக்கே நீ போட்டோவ மாத்திட்ட… நாலு தமிழ் பொண்ணுங்க கூட்டமா சேர்ந்து ஓட்டனத பெருமையா பதிவு போட்டு இன்னும் போட்டோ போட்டுருக்க சிங்கமுங்க!!!”

“அது சரி.. நம்ம ரேஞ்சுக்கு கவிதை எழுதுவாரா?” தளபதி பெருமை பொங்க கேட்கிறார்!!!

“தள!!! கடைசி ரெண்டு பதிவும் கவிதைனு ஏதோ எழுதி வெச்சிருக்கிறார். அதுல அவருக்கு ஏன் தூக்கம் வரலைனு ஒரு கவிதை பல பேர சிந்திக்க வெச்சிருக்கு”

“ஓ! நம்ம ரேஞ்சிக்கு ஏதாவது ஆராய்ச்சியெல்லாம் பண்ணியிருக்காறா?” ஜொள்ளு தவிப்போட கேட்கிறார்.

“ஜொள்ளு! உனக்கு முன்னாடியே ஏன் எதற்கு எப்படினு ஒரு ஆராய்ச்சி பதிவ போட்டுட்டாரு! அவரு கேட்ட கேள்விகளை பார்த்துதான் நம்ம ஜொள்ளு பேச்சியக்காவே பல பதிவுகள போட ஆரம்பிச்சாங்க!!! நிஜமல்ல கதைனு நிஜத்துல அவரு விட்ட ஜொள்ள பத்தி ஒரு தொடரே போட்டாருப்பா”

“சரி, நம்ம ரேஞ்சுக்கு நக்கல் நையாண்டி எல்லாம் வருமா?” புலி நக்கலாக கேட்க

“தீபாவளி அன்னைக்கு பொங்கல் பதிவு போட்டாருப்பா! இது போதுமில்ல”

“யாரடா அது நமக்கு தெரியாம இவ்வளவு பெரிய தில்லாலங்கடி?” விவசாயி ஆர்வமாக கேட்க

“விவா, வெடக்கோழிய எப்படி பிடிக்கிறதுனு நம்ம வாசுக்கு சொல்லி கொடுத்தாரே!!! இதுக்கு மேலையும் சொல்லனுமா?”

எல்லாரும் புரிந்துகொண்டு “வாவ் கலக்கல்” என்று சொல்ல…

தலை ஜெர்க்காகிறார்…

“ராஸ்கல்ஸ் என்னது இது சின்ன புள்ளத்தனமா? பேர சொல்லாம என்னதிது விளையாட்டு?”

“தல நீ மட்டும் கேள்வி மேல கேள்வி கேட்டு மனுசன கொல்லுவ… நாங்க பண்ணக்கூடாதா?”

“அதெல்லாம் சொல்லப்படாது!!! நான் கேள்வி கேப்பேன் நீ பதில் சொல்லனும். நீ கேள்வியெல்லாம் கேக்கப்படாது”

“சரி தல… ரொம்ப சவுண்ட் விடாத! நான் பார்ட்டிக்கு போறேன்… போயிட்டு வந்து சொல்றேன்” சொல்லிவிட்டு வெட்டி வெளியே போகிறார்.

“டேய் அப்பரண்டீசுகளா!!! யாராவது சொல்லுங்களேன்டா. யார்டா அந்த அட்லாஸு?”

“தல இன்னுமா தெரியல? நம்ம மில்வாக்கி நாயகன்தான்” சொல்லிவிட்டு இடத்தை காலி செய்கிறார் போர்வாள் தேவ்!!!

இதுக்கு மேலயும் கேட்டா நமக்கு விவரம் பத்தாதுலனு நெனச்சிக்குவானுங்க இந்த அப்பரண்டீசுங்க. எப்படியும் நாளைக்கு பதிவ போடும் போது
பார்த்துக்கலாம். அது வரைக்கும் தெரிஞ்ச மாதிரியே எஃபக்ட்ட கொடுத்துடுவோம் …

“சரி சரி!!! எல்லாம் பார்ட்டிக்கு ரெடி பண்ணுங்க. நான் போய் நம்ம கட்டதுரைய சந்திச்சிட்டு வரேன்” சவுண்ட்விட்டு எஸ்ஸாகிறார் கைப்பு!!!

.... இங்கே பதியப்பட்டது வெட்டிப்பயல் | 26 மறுமொழிகள் »

வ. வா. ஆட்டோகிராப் – 3!!!

பதிந்தவர் vavaasangam மேல் நவம்பர் 15, 2006

முந்தைய பாகம் பார்க்க

பாகம் 1
பாகம் 2

நமக்கும் நம்ம தமிழ் வாத்தியாருக்கும் எப்பவுமே பிரச்சனைதாங்க….
அதுக்கு முக்கிய காரணம் இந்த திருக்குறள் தான்…

எனக்கு தெரிஞ்சது மொத்தமே 2 குறள் தான்

அகர முதல எழுத்தெல்லாம் தகர
ஸ்லேட்டில் எழுதி பழகு

அடுத்து

இனிய உளவாக இன்னாத கூறல்
கேக்கிருப்ப பன்கவர்ந் தற்று

இந்த இரண்டு குறளை மட்டும் தெரிஞ்சி வெச்சிக்கிட்டு நானும் எவ்வளவு நாள்தான் சமாளிப்பேன்.

நமக்கு முதல் வார்த்தைய சொல்லி திருக்குறள் எழுத சொன்னாலே வராது. இதுல கடைசி வார்த்தைய வேற சொல்லி எழுத சொல்லுவானுங்க…

பரிட்சைல எப்படி கேட்பானுங்கனா அருளென்னும் என்று தொடங்கும் குறளையும், பிறர்க்கு என்று முடியும் குறளையும் எழுதுகனு கேப்பாங்க…

சரினு நானும் வேற வழியில்லைனு

அருளென்னும் உளவாக இன்னாத கூறல்
கேக்கிருப்ப பன்கவர்ந் தற்று

அகர முதல எழுத்தெல்லாம் தகர
ஸ்லேட்டில் எழுதி பிறர்க்கு

இப்படி எழுதிடுவேன். இதுக்கு அவர் மார்க் போடமாட்டாரு. அப்பறம் அவர்ட போய் சண்டை போட்டா அரை மார்க் போடுவாரு.

அப்பறம் அந்த பகுபத உறுப்பிலக்கணம்னு ஒண்ணு இருக்கு
நேரா போனா மாங்கா, குறுக்கால போனா புளியாங்கானு இருக்கும்.

எனக்கும் சொல்லி கொடுக்க அவர் ரொம்ப முயற்சி பண்ணாரு. பாவம் அவருக்கு அனுபவம் பத்தல.

இது இல்லாம அணினு (நமக்கு ஞாபகம் இருக்கறது வஞ்ச புகழ்ச்சி அணிதான்) ஒண்ணு இருக்கு. பாட்ட சொல்லி அது எந்த அணினு கேப்பாரு. நமக்கு பாட்டை சொல்லி எந்த படம்னு கேட்டா கரெக்டா சொல்லிடுவோம். இல்லை க்ரிக்கெட் ப்ளேயர சொல்லி எந்த அணினு கேட்ட கரெக்டா சொல்லுவோம். ரெண்டும் இல்லாம பாட்ட சொல்லி எந்த அணினு கேட்டா மனுசன் என்னதாங்க பண்ண முடியும்.

கடைசியா அவரால எனக்கும் எங்க கணக்கு வாத்தியாருக்கும் சண்டை வந்ததுதான் மிச்சம்… அந்த சம்பவம் இன்னும் என் கண்ணுக்குள்ளே இருக்கு…

சுமார் 9 வருடங்களுக்கு முன்னால்… கணக்கு பரிட்சை நடந்து கொண்டிருந்தது (கொசு வத்திய சுத்துங்க)

கணக்கு வாத்தியார், “பாலாஜி! எழுந்திரி”

எழுந்து நின்றேன்…

“கைல என்ன புக்?”

“தமிழ் மீடியம் மேத்ஸ் புக் சார்” (நான் ஆங்கில மீடியம்)

“என்னடா காப்பி அடிக்கறயா?”

“இல்லை சார்… தமிழய்யா சொன்னதைத்தான் பண்ணேன்”

“என்னடா உளற?”

“எனக்கு தமிழய்யா தான் சொன்னாரு… வேற மொழில இருக்கறத பார்த்து எழுதினா அது காப்பியில்லைனு. வேணும்னா நீங்களே அவரை கூப்பிட்டு கேளுங்க”

“டேய் குமாரு நீ போய் உங்க தமிழய்யாவை கூப்பிட்டு வாடா”

குமார் சென்று தமிழய்யாவை கூப்பிட்டு வந்தான். நானும் கணக்கு வாத்தியாரும் (கையில் கணக்கு புத்தகத்துடன்) நின்றிருந்ததை பார்த்ததும் தமிழய்யாவிற்கு கொஞ்சம் பயம் வந்துவிட்டது.

“என்னா சார்… ஏதாவது பிரச்சனையா?” தயக்கத்துடன் தமிழய்யா கணக்கு வாத்தியாரை கேட்டார்…

“இங்க பாருங்க சார்… தமிழ் மீடிய புக்கை வெச்சி காப்பி அடிச்சிட்டு நீங்க தான் அந்த மாதிரி பண்ண சொன்னீங்கனு சொல்றான்”

“பாலாஜி… என்ன இது? நான் எப்ப உனக்கு சொன்னேன்”

“சார்… ஏன் பொய் சொல்றீங்க? போன வாரம் கம்ப ராமாயணம் கிளாஸ் ஞாபகமில்லை?”

மீண்டும் கொசுவர்த்தி…

“பாலாஜி எழுந்திரி… கம்பரின் பெருமைகள் என்னனு நேத்து நடத்தனனே சொல்லு பார்ப்போம்?”

“”

“இப்படி அமைதியா நின்னா என்ன அர்த்தம்?
கம்பனை போல், வள்ளுவனை போல், இளங்கோவை போல் இந்த பூமிதனில் எங்கேயும் காணோம் (தூர்தஷன்ல சொல்லி அறிவிப்புகள்ல போட சொல்ல வேண்டியதுதான?)

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்

இது கூட ஞாபகம் இல்லையா?”

“சார்… இது அநியாயம். வால்மீகி எழுதனத அவ்ர் காப்பிதான அடிச்சாரு”

“இங்க பாரு… அவர் ஒன்னும் காப்பி அடிக்கல… வடமொழில இருந்ததை தமிழுக்கு ஏத்த மாதிரி எழுதினார்”

இப்ப திரும்ப பரிட்சை ஹாலுக்கு வாங்க… (பரிட்சை எழுத இல்லை)

“சார் நீங்க சொன்ன மாதிரி நான் தமிழ்மீடியம்ல இருக்கறதை ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்துட்டு இருக்கேன்… நியாயமா பார்த்தா நீங்க என்னய புகழ்ந்து தான் சொல்லனும்…
பாலாஜி வீட்டு கட்டுத்தறியும் கணக்கு போடும்னு சொல்லனும்.

நானும் அப்படியே காப்பி அடிக்கல. அதுல x,y,z னு இருக்கறத a,b,cனு மாத்திதான் போடறேன்”

அதுக்கு அப்பறம் நமக்கு அட்வைஸ் பண்றதையே நிறுத்திட்டாரு…

.... இங்கே பதியப்பட்டது வெட்டிப்பயல் | 58 மறுமொழிகள் »

ஆர்குட்டில் "வருத்தப்படாத வாலிபர்களின்"!!??? அட்டகாசம்

பதிந்தவர் vavaasangam மேல் நவம்பர் 10, 2006

எப்படியெல்லாம் நம்ம பசங்க ஆர்குட்ல பொண்ணுங்களை ஃபிரண்ட்(?) பிடிக்கரானுங்கனு பாருங்க…

1. hi nice pictures …u in tat saree.try wearin a white or Red saree u will look amazing..bye …tc..do reply me

ஆமாம் இவர் பெரிய ஃபேஷன் டிசைனர்… அட்வைஸ் கொடுக்க வந்துட்டாரு… பேச்சை குறைங்கடா…

2. Hi. U look really awesome in the Photo and inside in the album in Saree. u look lik a tradional angel. i hav crossed ur profile once bfore, found intersting woman. can i b a part of ur friendship circle yar

டேய் நாயே இதுக்கு முன்னாடி முன்ன பின்ன ஏஞ்ஜல பாத்துருக்கியாடா? ஆமாம் அது என்ன ட்ரடிஷனல் எஞ்சல்? வாய்க்கு வந்ததெல்லாம் அடிச்சு உடறது…
அப்பறம் என்னடா நாயே ஃபிரெண்ட்ஷிப் சர்குலு, ஸ்கோயர்னு கதைய விட்டுட்டு இருக்க?

3. hi!!!!!!!!!this is mani 4rm chennai!!!!!!
int in bein ma friend then jus giv me a scrap dood!!!
well ab me!!!!I can sya that……….its upto ya !!!!B ma freind and know abt me dood!!!!!

மூணு லைன்ல முன்னூறு ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ற டாக் உனக்கு கடலை வேண்டி இருக்கு…

4. hello girlie!!!!!how r things wid u???am an engg guy who’s IGNORING BOOKS and trying 2 orkut wid u…how abt uuuuuu???

டேய் இத உங்க அப்பா அம்மா பாத்தாங்கனா… உனக்கு சங்குதாண்டி

5. Hi,how r u……ur so cute!!!!more if ur in my friends list!!!!will u!!!

அடாடா இவ்வளவு புத்திசாலித்தனம் ஒரு மனசனுக்கு கூடாதப்பா…

6. U looking Mallika Sheravathi looking Imran aasmiCome let us murder the world

(டேய் நாயே!! நீ முதல்ல இங்கிலிஷ மர்டர் பண்ணிட்ட… அடுத்து ஊர்ல இருக்கறவங்களை கொல்ல போறியா?)

7. hey annikku Ravi yoda b’day party la Krishna voda vandha Janani yoda school friend Ramya voda boy friend Sriram voda girl friend Anitha voda class mate Vanitha dhaaney nee???Hi..

(ஏன்டா இப்படியும் அவசியமா கடலை போடனுமா?)

8.Hi!if u retain this scrap I will understand that you are interested in meandif u delete this scrap, it means you are dreaming about me.Now u decide wat to do

(இவரு புத்திசாலியாம்… அப்படியே மடக்கிட்டாராம்)

9. hi,the numerical value of L+O+V+E=54but the numerical value ofF+R+I+E+N+S+H+I+P= 10854+54= 108LOVE+LOVE= FRIENDSHIPso friendship is two times greater than love………….so will u be my friend ?

(டேய் நாயே, அடுத்து We will divide our friendship by
2னு சொல்லுவ)

10.heyyy gal,Barcelona hav won the champions league finals!hurraaaayyyy!!!! come on lets be friends….

(மக்களே இதை பார்த்துட்டும் என்னய பொறுமையா இருக்க சொல்றீங்களா?)

11 .generally i never scrap to unknown ones but this pic just caught my eye…awesome pic gal.kalakita po.. lol

(இவரு நல்லவராம்…. ஆனா அந்த போட்டோ இவர மாத்திடுச்சாம்…மொன்ன நாயி…இதையே எல்லார் புக்லயும் எழுதி வெச்சியிருக்கு)

12. hi niki.. well can i expect a scrap back from ya..well thought u are a person who can read and write… is it true.,… ?

(டேய் நாயே எழுத படிக்க தெரியாதவங்க என்னைக்குடா ஆர்குட்ல அக்கவுண்ட் ஓப்பன் பண்ணாங்க?)

13.If u add me in ur list ill make ur life more pleasant and colorful…watsay?scrap me bak if u wannna be ma friend!

(ஆமாம் இவர் கொத்தமல்லி, அவரை சேத்துக்கிட்ட அப்படியே வாசனை வந்திடும்)

14.Scrap- Eyy black beauty,how are you so fair???If you don’t add me its very unfair…(இவருக்கு கவிதை வேற…)

15.Nice face, sexy smile, beautiful Eyes, Lustful Lips….Overall stunning effect…But Miss Do i know you??? Dont embarass me by saying-u dont know me..ya i know u dont know me.. but who bothers??come on-add me as friend..am waiting 2 b ur fan…

(மானத்த வாங்கறதுக்குனே இருக்கீங்கடா… ஒரு தடவை பாட்ஷா பாருங்கடா…)

மக்களே இதை நீங்க யாருக்காவது பயன்படுத்திடாதீங்கப்பா…

Courtesy: Gethu thaan aambalaiku sothu (Community)

.... இங்கே பதியப்பட்டது வெட்டிப்பயல் | 19 மறுமொழிகள் »