வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்

100% சிரிக்க

‘நாமக்கல் சிபி’ பகுப்புக்கான தொகுப்பு

நான் ஒரு தடவைச் சொன்னா..

பதிந்தவர் vavaasangam மேல் பெப்ரவரி 1, 2007


அதிகாலை பத்து மணி. தூரத்தில் பாலைவன மணலில் கால் புதைந்து வரும் கைப்புள்ளையக் கண்டதும் டீக்கடை காரருக்கு திக் என்கிறது.
“ஐயோ.. இவன் இப்போ ஒட்டகப்பால் கேட்டு வம்பிழுப்பானே.. சரி.. சமாளிப்போம்”

டக்கென்று அரை டம்ளர் பாலில் கொஞ்சம் மைதாவைக்கலந்து திக்கான பாலாக்குகிறார். அதில் கொஞ்சம் டிக்காஷனை ஊற்றி டீயாக்கி மட்பாண்டத்தில் ஊற்றி தயாராக வவத்துக்கொள்கிறார்.

“வாங்க கைப்புள்ளை, சூடா டீ சாப்பிடறீங்களா? ஒட்டகப் பால்ல டீ போட்டிருக்கேன்”

“ஒட்டகப் பால்லயா! சரி குடு!”

வாங்கி டீயை ஒரு வாய் உறிஞ்சியவுடன் “த்த்தூ… என்ன இது ராஸ்கல்! டீ இவ்ளோ கெட்டியா இருக்கு? இப்படியெல்லாம் டீ போட்டா மனுஷன் குடிப்பானா?”

“என்னப்பா நீ! நீதான அன்னிக்கு ஒட்டகப்பால்ல டீ வேணும்ணு கேட்டே!”

“ஓ! அதான் இவ்ளோ திக்கா இருக்கா! ஆமா! என்னைய வெச்சி ஏதும் காமெடி கீமெடி பண்ணலியே!”

“இன்னாப்பா இது! உன்னன வெச்சி நான் காமெடி பண்ணுறதாவது?”
(தனக்குள்ளேயே) “உன்னை வெச்சி நீ பண்ணிக்குற காமெடியே போதாதா”

“என்னாது? என்னா அங்கே முணகுறே”

“ஒண்ணுமில்லைப்பா, அங்கன ஒக்காந்து டீயக் குடிச்சிட்டு நடையக் கட்டு”
அங்கே இருக்கும் பெஞ்சின் மேல் அமர்ந்து டீயை ரசித்துக் குடித்து விட்டு, மட்பாண்டத்தை கீழே போட்டு உடைக்கிறார் கைப்புள்ளை.

“ஆங்! இன்னிக்கு பேப்பர்லே என்ன நியூஸு…?” என்று தனக்குத்தானே பேசியவாறு ஒரு பேப்பரை எடுத்து கையில் பிடித்துக் கொண்டு பேப்பரில் மூழ்குகிறார்.

சாலை திருப்பத்திலிருந்து “ஐயோ..யாராவது காப்பபத்துங்களே… ச்சீ.. போ..போ.. யாராவது காப்பாந்துங்களே” என்றவாறே ஒருவர் மூச்சிரைக்க ஓடிவர பின்னாலேயே ஒரு நாய் துரத்தி வருகிறது. சப்தம் கேட்டு கவனம் கலைந்த கைப்புள்ளை பேப்பரிலிருந்து தலையை எடுத்து எட்டிப் பார்க்க
அந்த நாய் அந்த ஓடிவந்த நபரை சுற்றி வளைத்து ஓட விடாத வண்ணம் மரித்துக் கொண்டிருக்கிறது.

அந்த நபர் பதறியபடியே “யாராவது காப்பாத்துங்க” என்று கதறுகிறார்.
கூட்டம் கூடியவாறு நின்று அனனவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, சட்டென எழுந்த கைப்புள்ளை மிடுக்காக இடமும் வலமும் திரும்பிப் பார்த்து
“அந்த நாயை விரட்டக் கூட யாருக்கும் தெகிரியம் இல்லல.. எல்லாத்துக்கும் நாமளே போக வேண்டியிருக்கு” என்று தனக்குத் தானே பேசியவாறு அருகில் செல்கிறார்.

சுற்றும் முற்றும் பார்க்க ஒரு கருங்கல் கிடைக்கிறது.
சட்டென கல்லை கையிலெடுத்த கைப்புள்ளை, நச்சென்று ஒரே போடாக நாயின் தலையின் மீது எறிய, தலை நசுங்கி “அவ்..அவ்..” என்று முனகியவாறே உயிரை விடுகிறது.

“அப்பாடா தப்பினோம்..” என்ற நிம்மதியுடன் ஓடிவந்த அந்த நபர் கண்களில் நன்றியுடன் கைப்புள்ளையைப் பார்த்துக் கையெடுத்து கும்பிடுகிறார்.

“அண்ணே.. நல்ல வேளை ஆண்டவன் போல வந்து காப்பத்துனீங்க.. இந்த உதவியை என் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன் என்று ஒரு வித ஃபீலிங்குடன் கூற கைப்புள்ளையையும் அந்த ஃபீலிங்க் தொற்றிக் கொள்கிறது.

“என்ன தம்பி இப்படியெல்லாம். பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிகிட்டு, தம்பிக்கொரு கஷ்டம்னா அண்ணன் நான் வராம வேற யாரு வருவா.?”

“சரிண்ணே நான் கெளம்பறேண்ணே”.

“பார்த்து பத்திரமா போப்பா, போ!” என்று கண்ணில் நீருடன் வழியனுப்பி வைக்கிறார் கைப்புள்ளை.

அதற்குள் வெகுவாக கூடிவிட்ட கூட்டத்தைப் பார்த்து தனக்குத்தானே பேசிக்கொள்கிறார். “ம்ஹூம், இவ்ளோ பேரு இருக்கானுவ, எவனுக்காவது காப்பாத்தணும்னு தோணிச்சா? அதான். அதான்யா இந்த கைப்புள்ளை”

கூட்டம் கலைவதற்குள் சர்ர்..என்று ஒரு போலீஸ் ஜீப் கைப்புள்ளைக்கு வெகு அருகில் வந்து நிற்கிறது. அதிலிருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் கைப்ஸை ஏற இறங்க வெகு ஏளனமாக பார்த்து கூட்டத்தை நோக்கி திரும்புகிறார்.

“இந்த நாயைக் கொன்னது யாரு?” என்று சத்தமாகக் கேட்கிறார்.

“ஏன் என்னைப் பார்த்தா கொன்ன மாதிரி தெரியலையா? நம்மகிட்ட கேக்குறது?” என்று படு பந்தவாக கைப்புள்ளை கேட்க

“யோவ், உன் வேலையைப் பாருமைய்யா…சாவு கிராக்கி, செத்த நகரு அந்தப் பக்கம்,…” என்று ஒதுக்கி விட்டு மீண்டும் சத்தமாகக் கேட்கிறார்.

“இந்த நாயைக் கொன்னது யாரு?”

“நாந்தான் சொல்றனில்ல! இன்னும் என்ன வெசாரணை, சின்னப்புள்ளத்தனமா?”

“ம்ஹூம், சோப்ளாங்கி போய்யா அந்தப்பக்கம்… கேக்குறனில்லே சொல்லுங்க!
யாரு கொன்னது?”

கூட்டத்திற்குள்ளிருந்து ஒரு குரல் கேட்கிறது.

“கைப்புள்ளதான் கொன்னாரு!” குரல் வந்த திசையிலிருந்து கூட்டத்தை
விலக்கிக் கொண்டு வெளியில் வருகிறார் தேவ்.

“ஆமாம், கைப்புள்ளைதான் கொன்னாரு! ” இன்னொரு பக்கம் இருந்து வருகிறார் நாகை சிவா.

“கைப்புள்ளைதான்!” என்று கூறிக் கொண்டே வேட்டியை மடித்துக் கட்டிக்
கொண்டே வந்து நிற்பது விவசாயி.

“எலேய்! எடுபட்ட பயலுவலா! எங்க தலை கைப்புள்ளை கொல்லாம வேற யாரு கொல்ல முடியும்” என்று எகத்தாளமாகக் கேட்டபடி ஜொள்ளுப் பாண்டி.
இப்படியே சொல்லிக்கொண்டு ராயல் ராம், வெட்டிப் பயல், சிபி ஆகியோரும்
கூட்டத்திலிருந்து ஒவ்வொருவராக வெளியில் வந்து பாட்ஷா படத்தில்
பாட்ஷாவின் அடியாட்கள் போல் பில்டப் கொடுத்து அணிவகுத்து நிற்க

“ஓ! அப்போ உங்க கைப்புள்ளைதான் கொன்னாருன்னு சொல்றீங்க!, இதை எங்க வேணும்னாலும் வந்து சொல்வீங்களா?” என்று அந்த போலீஸ் காரர் கேட்கிறார்.

“ஓ.. சொல்வமே!” கோரஸாய் பதில் வருகிறது.

“ஓ! அப்ப சரி!, யோவ் கைப்புள்ளை வண்டில ஏறு?”

இதைக் கேட்டதும் ஒரு கணம் அதிர்ந்து போன கைப்புள்ளை
“வண்டிலயா? என்னாத்துக்கு?” என்று வழக்கம்போல கேட்கிறார்.

“என்னாத்துக்கா..? ஏண்டா! கஷ்டப்பட்டுத் தேடிகிட்டிருந்த தீவிரவாதிய எங்க
போலீஸ் நாய் கண்டு பிடிச்சி விரட்டிட்டு வந்தா, அந்த நாயை நீங்க கொன்னுட்டு பாட்ஷா ஸ்டைல்ல பில்டப்பு வேற கொடுப்பீங்களோ? ஏறு வண்டில, உன்னையெல்லாம் லாக் அப்புல போட்டு முட்டிக்கு முட்டி தட்டணும்”

“என்னாது? போலீஸ் நாயா! சொல்லவே இல்ல… அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்”
என்று ஆரம்பிக்கிறார் கைப்புள்ளை.

.... இங்கே பதியப்பட்டது நாமக்கல் சிபி | 5 மறுமொழிகள் »

மீண்டும் அரியாசனத்தில்…!

பதிந்தவர் vavaasangam மேல் ஜனவரி 25, 2007

அந்தப்புறத்தில் இத்தனை ஆடிப் பாடிக் களைத்துவிட்டு மீண்டும் அரியாசணத்திலேறி ஆட்சி புரிய வந்துவிட்டார் எங்கள் தலை கைப்பு!
பராக்…பராக்… பராக்….

ஊழலின்றி தயாரிக்கப்பட்ட பீட்டாயுதத்தோடு போர்க்களங்கள் காணப் புறப்பட்டுவிட்டார்.

மீண்டும்………
அரசவை கூடட்டும்!
ஆப்புகள் தொடங்கட்டும்!
சங்க நாதம் ஒலிக்கட்டும்!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்………………………………………!

.... இங்கே பதியப்பட்டது நாமக்கல் சிபி | 115 மறுமொழிகள் »

தலயா கொக்கா!!!

பதிந்தவர் vavaasangam மேல் செப்டம்பர் 22, 2006


இது சங்கத்து சிங்கங்களின் கல்லூரியில் நடந்த ஒரு ரணகளமான நிகழ்ச்சி!!!

பிராக்டிக்கல் முடித்து காண்டீனில் ஓசி டீ குடித்து கொண்டிருக்கிறார் நம்ம தல கைப்பு!!!

ஜொள்ளு பாண்டி வேகமாக ஓடி வருகிறார்…

ஜொ.பா: தல… இந்த தடவையும் நம்ம தளபதிக்கு லேப்ல ஆப்பு வெச்சிட்டாங்க!!!

கைப்பு: என்னது!!! லேப்ல குத்திட்டாங்களா?சங்கத்து ஆளுனு சொன்னியா??

ஜொ.பா: சொன்னதுக்கு அப்பறம்தான் குத்துனாங்க!

கைப்பு: அந்த HODக்கு நம்மல சீண்டி வெளயாடுறதே வேலையாப்போச்சு. அவருக்கு ஹெட் லெட்டர் சரியில்லன்னு நினைக்கிறேன்…ஸ்டார்ட் பண்ணுங்கடா வண்டிய!!!

ஜொள்ளு பாண்டி இஞ்சினாக மாற, அவர் பின்னால் விவசாயி இளா, கை தேவ், வெட்டிப்பயல், நாகை சிவா நால்வரும் ரயில் பொட்டிகளாக மாற வண்டியில் இணைகிறார் கைப்புள்ள.

ரயில் வண்டி டிப்பார்ட்மெண்டு அருகே நின்றது.

டிப்பார்ட்மெண்ட்க்கு வெளியே தளபதி நின்று கொண்டிருக்க, உள்ளே HOD மற்றும் அவருக்கு அல்லக்கையாக இரண்டு வாத்தியார்கள்.

கைப்பு (கோவமாக) : சங்கத்து ஆள ஃபெயில் பண்ணவது யாரு?

HOD: என்னது? ஒன்னும் கேக்கல… உள்ள வந்து சொல்லு

கைப்பு: உள்ளயா?? நானா?? (கைப்பு தனது வழுக்கமான வீர சிரிப்பை சிரிக்கிறார்).நானும் டிப்பார்ட்மெண்டுக்குள்ள வர மாட்டேன் நீங்களும் வெளிய வர கூடாது…ஆமாம் சொல்லிட்டேன்… பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்.

HOD: ஏன்டா அவன ஃபெயில் பண்ணா உனக்கு என்னடா?

கைப்பு: எங்க சங்கத்துல இது வரைக்கும் யாரும் கப் வெச்சது இல்ல (பெருமையாக சொல்கிறார்)

HOD: ஏன்டா போன செமெஸ்டர்ல தான நீ வாஷ் அவுட் ஆன?

கைப்பு (நக்கலாக): அது போன செம்மு… நான் சொல்றது இந்த செம்மு

HOD (பக்கத்திலிருப்பவருடன்): இவன் அடங்க மாட்டான் போலிருக்கு… அந்த மார்க் ஷீட்ட எடுத்துட்டு வாங்க. தொலஞ்சு போறானுங்க இல்லைன்னா ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்னு அழுதே சாதிப்பானுங்க

கைப்பு (தளபதியிடம்): பாத்த இல்ல… அண்ணன் சொன்னா ரிடர்ன்வரப்படாது. கொண்டு போய் குடுத்துட்டு வா.
மார்க் லிஸ்ட் HOD கைக்கு வர, அதில் ஏதோ திருத்தம் செய்கிறார்.

HOD: சரி.. உன் விருப்பப்படி அவன பாஸ் பண்ணிட்டேன்… (கைப்பு பெருமையாக சிரிக்கிறார்)ஆனால் என் விருப்பப்படி உன்னைய ஃபெயில் பண்ணிட்டேன்…

சங்கத்து சிங்கங்கள் எல்லாம் பெருமை பொங்க கைதட்டுகிறார்கள்.

தளபதி: தல!!! நீ சாதிச்சிட்ட தல! பரிட்ச எழுதாத என்னையே பாஸாக வெச்சிட்டன்னா நீ சாதாரண ஆளே இல்ல தல???

கைப்பு: என்னாது??? நீ பரிட்சையே எழுதலையா???

ஜொ. பா: ஆமாம் தல!!! நேத்து நைட்டு தளபதிக்கு கொஞ்சம் ஓவரா போயிடுச்சு. அதனால நாந்தான் நீ பரிட்சை எல்லாம் எழுத வேணாம்… நம்ம தல பாத்துக்குவாருனு சொல்லிட்டேன்… நீ சாதிச்சிட்ட தல…

தேவ்: பரிட்சை எழுதாமலே பாஸாக வைத்ததால் இன்றிலிருந்து நீங்கள் “பரிட்சை கொண்டான்”னு அழைக்க படுவீர்கள்.

கைப்பு (மெதுவாக): பட்டத்த வேற கொடுத்துட்டானுங்களா! இனிமே எதுவுமே பேச முடியாதே…

அனைவரும் மறுபடியும் ரயில் வண்டியை ஆரம்பிக்க, இந்த முறை தளபதியும் இணைகிறார்.

பக்கத்து டிப்பார்ட்மெண்ட் வழியாக செல்லும் போது காதில் விழுந்தது.”பரிட்சை எழுதாத சிபியையே பாஸ் பண்ண வெச்சிட்டானே நம்ம கைப்புள்ள.. இந்த தடவ அவன் யுனிவர்சிட்டி ஃபர்ஸ்ட் தான்”…

கைப்பு:இப்படி பேசி பேசிதாண்டா இன்னும் என்னிய பர்ஸ்ட் இயரையே தாண்டவுடாம பண்ணிட்டீங்க.

.... இங்கே பதியப்பட்டது நாமக்கல் சிபி | 33 மறுமொழிகள் »

ஒன்று இரண்டாவது எப்படி?

பதிந்தவர் vavaasangam மேல் ஆகஸ்ட் 3, 2006

நம்முள் பலருக்கு தண்ணியடித்தால் ஒன்று இரண்டாவதாகத் தெரிவது எப்படி என்ற ஐயம் காலம் காலமாக இருந்து வருகிறது. என்னிடம் கூட நண்பர்கள் கேட்பதுண்டு. அப்படி என்னதான் இருக்குன்னு தண்ணியடிக்கறே என்று? அதைக் கண்டு பிடிக்கத்தான் மச்சி தொடர்ந்து அடிக்கிறேன். கண்டு பிடிச்சி திஸீஸ் சப்மிட் பண்ணியவுடன் நிறுத்திடுவேன் என்று கூறுவேன். அவர்களும் (அப்புறமா மப்பூ ஓவரா பூடுச்சுனா அலம்பல் தாங்கறது யாரு? என்று)அத்தோடு கப்சிப் ஆகிவிடுவார்கள்.
சரி இத்தனை நாள் அடித்ததில் கண்டறிந்த அந்த உலக ரகசியம் என்னவென்று பார்ப்போம்.
கணித ரீதியாகவே விளக்குகிறேன்.

முதலில் ஒரு வட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வட்டத்திற்கு எத்தனை குவார்ட்டர்? (அதாவது எத்தனை கால் பாகம்) – 4. வட்டத்திற்கு மொத்தம் எத்தனை – 360 பாகை (இது யாஹூ 360 அல்ல)

அப்போ ஒரு குவார்ட்டருக்கு – 90 பாகை. முழு வட்டத்திற்கு 360 பாகை. சரியா.

இப்போ சரக்குக்கு வருவோம்.
ஒரு குவார்ட்டருக்கு எத்தனை 90? இரண்டு. அதாவது (2X90) அதாவது 180. அப்போ ஒரு ஃபுல்லுக்கு எத்தனை மில்லி – 4 குவார்ட்டர் ( 4X180) ஆக மொத்தம் 720 மி.லி.

இப்போது இரண்டையும் ஒப்பிடுவோம்.

குவார்ட்டர் (வட்டம்) : குவார்ட்டர்(சரக்கு)
90 : 180

ஃபுல்(சர்க்கிள்) : ஃபுல்(சரக்கு)
360 : 720

ஆக கிடைக்கும் விகிதம் 1 : 2
அதனால்தான் சரக்கு அடிக்கும்போது மட்டும் ஒன்று இரண்டாககத் தெரிகிறது.

அது ஏன் வட்டத்துடன் சரக்கை ஒப்பிடவேண்டும். தலை சுற்றுகிறது என்று சொல்லும்போது வட்டத்துடன்தானே ஒப்பிடவேண்டும்!

அப்படியே சொல்லியும் பாருங்க! காரணம் என்னன்னு விளங்கும்!

சர்க்கிள் : சரக்கில்

.... இங்கே பதியப்பட்டது நாமக்கல் சிபி | 62 மறுமொழிகள் »

அட்லாஸ் வாலிபருக்கு அட்லாஸ்ட் நன்றி!

பதிந்தவர் vavaasangam மேல் ஜூலை 30, 2006

சங்கப் பலகையில் சங்கத்து முகங்களையே பார்த்து அலுத்துப்போன பெருவாரியான வாசக உள்ளங்களுக்கு மாற்றம் தரும் வகையில் சிறப்பு விருந்தினர்களை அழைத்து அவர்களுக்கு(ம்) ஆப்பு வாங்கித்தரும் விதமாக
எங்கள் முதல் அட்லாஸ் வாலிப விருந்தாளியாக ஆப்புகளை அள்ளிக் கொள்ள இலவசக் கொத்தனார் அவர்களை அழைத்திருந்தோம்.

அவரும் அயராத அலுவலகப் பணிகள் மற்றும் எழுத்து, தமிழ் வளர்ப்பு, வெண்பா வடித்தல் போன்ற வலையுலகப் பணிகளுக்கிடையிலும் எங்கள் அழைப்பை ஏற்று அட்லாஸ் வாலிபராக ஆப்புகளைத் தாங்கியதோடு மட்டுமின்றி, பின்னூட்ட எண்ணிக்கையில் அவரது பழைய சாதனைகளையும் முறியடித்து, சங்கத்திலும் சாதனையை ஏற்படுத்தி சங்கத்தை சிறப்பித்திருக்கிறார்.

இதோ இன்றோடு அவரது அட்லாஸ் வாலிப பருவம் முடிவடையும் இவ்வேளையில் சங்கத்தின் தலை கைப்பு மற்றும் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்களான போர்வாள் தேவ், வேளாண் தோழர் விவசாயியார், புதரகத் திரும்பி ஆற்றலரசியார் பொன்ஸ், எள் என்றாலே நினைவுக்கு வரும் எண்ணெய் போல் ஜொள் என்றாலே நினனவில் வரும் பாண்டித்தம்பி ஆகியோர் சார்பாகவும், அலைகடலென திரண்டிருக்கும் சங்கத்தின் ஏனைய சிங்கங்களின் சார்பிலும் இலவசக் கொத்தனார் அவர்களுக்கு எங்கள் கோடானு கோடி நன்றிகளை தெரியப்படுத்திக் கொள்ள கடமைப்படுக்கிறேன்.

இலவசக் கொத்தனார் அவர்களுக்கு எங்கள் இமாலய நன்றிகள்
சங்கத்தின் முதல் அட்லாஸ் வாலிபரை மனதார மகிழ்ந்து, ஆனந்தக் கண்ணீர் மல்க, அரை மனதோடு, சென்று வருக, குட் பை, டாட்டா என்றெல்லாம் சொல்லி பிரியா விடை தரும் இத்தருணத்தில் எங்கள் அன்பு அண்ணன், தல கைப்பு அவர்கள் “விருந்தாளிகளை வெறுமனே வழியனுப்புதல் நமது பாரம்பரிய மரபு அல்லவே!” என்று அன்புக் கட்டளை இட்டதால்
சங்கத்தின் சகல வித உறுப்பினர்கள் சார்பாக அன்பு அண்ணன் இலவசக்கொத்தனார் அவர்களுக்கு
“பின்னூட்டப் புயல்”
என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவிக்கிறோம்.
பின்னூட்டப் புயல் கொத்தனார் வாழ்க! வாழ்க!

.... இங்கே பதியப்பட்டது நாமக்கல் சிபி | 38 மறுமொழிகள் »

இரண்டு மகிழ்ச்சியான செய்திகள்

பதிந்தவர் vavaasangam மேல் ஜூலை 4, 2006

சங்கத்துல இன்னிக்கு ரெண்டு ஸ்பெஷல் நியூஸ்!

செய்தி 1:

இத்தினி நாளா கேள்வி கேப்பாரு இல்லாம இஷ்டத்துக்கு பேச்சுலரா சுத்திட்டிருந்த நம்ம சங்கத்து உறுப்பினர் துபாய் ராசா இனிமே பேச்சு இலரா ஆகப் போறாராம். அவரே அழைப்பிதழையும் அனுப்பியிருக்கார். சங்கத்து சார்பா வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

செய்தி 2:

சங்கத்தின் போர்வாள், கைப்புள்ளையின் கை என்றெல்லாம் அழைக்கப்படும்
நம்ம சென்னைக் கச்சேரிக்காரர் தேவ் அவர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
அட! ஆமாங்க! நேத்து காலையில கோவை வந்துட்ட அவரு சாயங்கலாமா நமக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்புனாருங்க! ஒரு பெண் குழந்தைக்கு தகப்பனாகி இருக்கிறாருங்கோவ்.

சங்கத்து உறுப்பினர்கள் சார்பா அவருக்கும் வாழ்த்துக்களை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

தம்பி பாண்டி அவர்கள் இரண்டு சந்தோஷ சங்கதிகளுக்காகவும் சேர்த்து உடனடியாக ஒரு பெரிய அளவுல பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யணும்னு தலை கைப்புள்ளை ஃபேக்ஸ் அனுப்பி இருக்காரு!

அப்புறம் என்ன! கொண்டாடிட வேண்டியதுதான!

.... இங்கே பதியப்பட்டது நாமக்கல் சிபி | 28 மறுமொழிகள் »

தளபதியின் அறிக்கை

பதிந்தவர் vavaasangam மேல் ஜூன் 4, 2006

சங்கத்தின் புதிய சிங்கங்களாம் புதிய தோழர்கள் சங்கத்துப் பணியை செவ்வனே செய்வதோடு கடமையை எள்ளளவும் மறக்காது கேள்விகள் எழுப்புகின்றனர். இவற்றிற்கு விளக்கம் கொடுப்பது ஆற்றலரிசி பிகிலு அவர்களின் கடமை எனினும் சங்கத்து சிங்கங்களுக்கு தலை கைப்புவின் அனுமதியோடு ஒரு சில வார்த்தைகளைக் கூற விரும்புகின்றேன்.

உடன் பிறப்புகளே….. சங்கத்து வரலாற்றை கொஞ்சம் உன்னிப்பாய் ஆராய்ந்து பாருங்கள். சங்கத்து உறுப்பினர்கள் எப்பொழுதெல்லாம் சற்று கண்ணயர்ந்து காணப்படுகிறார்களோ அப்பொழுதெல்லாம் இது போன்ற பிரச்னைகள் தலை தூக்குகின்றன. இவற்றின் காரணம் என்ன?

நமக்குள் ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும் அவநம்பிக்கையை பயன்படுத்தி சூழ்ச்சிகளால் சங்கத்தில் கலகம் ஏற்படுத்தி சங்கத்தின் புகழையும், அதிவேக வளர்ச்சியையும் கெடுக்க நினைக்கும் வீணர்களின் வேலை என்பதை நாம் உணர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

கடிதத்தில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகள் அனைத்தும் சங்கத்தின் கொ.ப.செ வான தங்கத் தலைவி, ஆற்றலரிசி பிகிலு பொன்ஸ் அவர்கள் மேல் களங்கத்தை சுமத்தி, கேள்விகள் கேட்பதும் நம் சங்கத்தின் உறுப்பினர்களே என்ற மாயத் தோற்றத்தை உண்டாக்கி சங்கத்தில் சலசலப்பை உண்டாக்குவதே இது போன்ற புல்லுருவிகளின் வேலை. இத்தகு விஷமங்களுக்கு இனி நாம் இடம் கொடுக்கலாகாது.

இனி நாம் கைப்புள்ளயை எப்படியெல்லாம் புதிது புதிதாய்க் கலாய்ப்பது என்பது குறித்து உட்கார்ந்து யோசிக்க வேண்டிய நிலையில், இது போன்ற வெளி கலாய்த்தல்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பதில் காலத்தை வீணாக்கலாமா?

சற்றே சிந்திப்பீர்.

வாழ்க வ.வா.சங்கம். வளர்க நமது கடமைகள்.

.... இங்கே பதியப்பட்டது நாமக்கல் சிபி | Leave a Comment »

மாவட்ட செய்திகள் – நாமக்கல்

பதிந்தவர் vavaasangam மேல் மே 10, 2006

நாமக்கல் மாவட்டம் நாமக்கல், கைவிஞர் இராமலிங்கம் பிள்ளை அரசு மகளிர் கலைக்கல்லூரி தமிழ் இளங்கலை மாணவிகளை உறுப்பினர்களாகக் கொண்ட நமது வ.வா.சங்கத்தின் நாமக்கல் மாவட்ட மகளிர் அணிக் கிளையின் உறுப்பினர் ஒருவரை கடந்த ஞாயிறு அன்று சந்தித்தேன்.

அவர்களும் தங்கள் கல்லூரியில் நமது சங்கத்தின் கிளையொன்றை நிர்வகித்து வருவதாக மகிழ்ச்சியுடன் கூறினார். அவர்தம் கல்லூரியில் நமது சங்க வளர்ச்சிப் பணிகள் குறித்து உரையாடினேன்.

அப்போதுதான் இக்கிளை அக்கல்லூரியில் கடந்த மூன்று வருடங்களாக நிர்வகிப்பட்டு வருவதாகவும், தினமும் நம்ம தலை கைப்புவின் வீர வரலாற்றை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியுற்று வருவதாகவும் கூறினார்.

என்னே கைப்புவின் புகழ்! என்னே சங்கத்தின் வளர்ச்சி!

.... இங்கே பதியப்பட்டது நாமக்கல் சிபி | Leave a Comment »

நாமக்கல் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம்

பதிந்தவர் vavaasangam மேல் மே 4, 2006


சமீபத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து சிங்கப்பூரில் நடைபெற்ற நாமக்கல் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

தலைமை : தலை கைப்பு
முன்னுரை : ஜொள்ளுப் பாண்டி, வெண்பா வாத்தியார் ஜீவா
சிறப்புரை : பிகிலு பொன்ஸ் மற்றும் கானா கீதா
நன்றியுரை : பேராசிரியர் கார்த்திக் ஜெயந்த் மற்றும் ஆர்த்தியக்கா
ஒருங்கிணைப்பு : மாநில செயற்குழு தலைவர் தேவ்
சிறப்புப் பேச்சாளர் : நடிகை நயன்தாரா

.... இங்கே பதியப்பட்டது நாமக்கல் சிபி | Leave a Comment »