வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்

100% சிரிக்க

‘நாகை சிவா’ பகுப்புக்கான தொகுப்பு

வாராரு வாராரு…

பதிந்தவர் vavaasangam மேல் ஏப்ரல் 3, 2007

ஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ
ஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ

வாராரு வாராரு நாட்டாமை வாராரு

ஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ
ஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ

வாராரு வாராரு நம்ம நாட்டாமை வாராரு
புதரகத்தில் இருந்து வாராரு நம்ம சங்கத்தின் அட்லாஸா இருக்க போறாரு
நம்மை சிரிக்க வைக்க வாராரு, எல்லா ஆப்பையும் தானே சுமக்க வாராரு

வராரு வாராரு நாட்டாமை வாராரு
ஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ
ஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ

அப்ப அப்ப TBI போட்டு நம்மள மகிழ வச்சவரு நாட்டாமை
மகிழ வச்சவரு நாட்டாமை
R ன் சேட்டைகள் போட்டு நம்மை குலுங்க வச்சவரு நாட்டாமை
குலுங்க வச்சவரு நாட்டாமை
சமயங்களில் அவரு கடைய பூட்டி வச்சவரு நாட்டாமை
பூட்டி வச்சவரு நாட்டாமை
சமயம் வந்தா கெளதமி கிட்ட வழிஞ்சு வைக்குறவரு நாட்டாமை
வழிஞ்சு வைக்குறவரு நாட்டாமை

முந்துது முந்துது சாதி சனம் அட நாட்டாமை இன்னும் கண்ணுல காணலயே
வந்தது வந்தது கோடி சனம் இவருக்கு இங்கு ஆப்படிக்கவே

வாராரு வாராரு நாட்டாமை வாராரு
ஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ
ஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ

வாராரு வாராரு நம்ம நாட்டாமை வாராரு
ஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ
ஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ

இவரு பீட்டர கேட்டு சாதி சனங்க மண்டய பிச்சுக்கிடு அலையுது
இவரு கவித கண்டதும் கோடி சனங்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் முழ்குது

இவர் ஊடலை கண்டு சிரிப்பு உச்சந்தலைக்கு ஏறுது
யம்மா, இவரு பொலம்பலைகண்டு பொங்கி பொங்கி சிரிப்பு வருது

பின்னூட்ட பின்னூட்ட சாமியடி இது ப்ளாக்கரின் ஏழு பக்கமும் நிக்கும்மடி
நன்மையடி நன்மையடி இவர் பின் ஊட்டம் வந்தால் பதிவருக்கு நன்மையடி

தொட்டா துலங்கும் காலம்மடி இவரு இப்ப நம்ம சங்கத்திலடி
தொட்டும்மடி தொட்டுமடி இவரின் நக்கல் பதிவுகள் கூரைய பிச்சுக்கிட்டு கொட்டுமடி

தத்தோம் தகிட தத்தோம் தகிட தத்தோம் பாடி ஆடிடுங்களேன்
தத்தோம் தகிட தத்தோம் தகிட தத்தோம் பாடி ஆடிடுங்களேன்

**********

ஏப்ரல் மாத அட்லாஸ் வாலிபராக வந்து இருக்கும் தினமும் எல்லாரையும் பின்னூட்டத்தில் கவனிக்கும் நம்ம நாட்டாமையும், பதிவுலக டம்மி முதல்வரும், புளியோதரை மன்னனும், பக்கார்டி பாஸ்கருமாகிய திரு. ஷாம் வீரக்குமாரை சங்கம் பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றது. மார்ச் மாதம் முழுவதும் நம்மை மகிழ வைத்த ஜாவா பாவலர் கயவன் கப்பிக்கு மீண்டும் ஒரு முறை சங்கத்தின் மனமார்ந்த நன்றிகள்.

.... இங்கே பதியப்பட்டது நாகை சிவா | 66 மறுமொழிகள் »

அந்தி சாயும் பொழுது!!!

பதிந்தவர் vavaasangam மேல் மார்ச் 13, 2007

இடம் : சங்க திண்ணை
நேரம் : அந்தி சாயந்த பொழுது

தேவ், இளா, சிபி மூவரும் பதுங்கி பதுங்கி கைப்புள்ளக்கிட்ட வருகின்றார்கள்.

என்னா, எல்லா பயலும் இப்படி பம்மிக்கிட்டு வரீங்க, என்னா மேட்டரு.

மணியாச்சு, வீட்டுக்கு போகனும் இது இளா

ஆரம்பிச்சாட்டான்யா, பொழுது சாய கூடாதே, 16 வயதினிலே கமல் மாதிரி மணியாச்சு வீட்டுக்கு போகனும், பொண்டாட்டி வையும் ஆரம்பித்து விடுவீங்களே…….. சரி என்னத்த பண்ணுறது உங்க தலைவிதி அப்படி…. சரி போயிட்டு காலையில சீக்கிரம் வந்து சேருங்……. அட அதுக்குள்ள மறைஞ்சுட்டானுங்களே……….. ஹும் பொண்டாட்டினா அம்புட்டு பயம் நம்ம பய புள்ளகளுக்கு……

யப்பா பாண்டி, வயிற்ற லேசா இல்ல இல்ல நல்லாவே பசிக்குது, கேரியர கொண்டா, இன்னிக்கு என்ன மெனு

ஆமாம் சரவணபவன்ல இருந்து நமக்கு கேரியர் வருது பாருங்க, என்ன மெனு னு ஒரு கேள்வி வேற – இது சிவா

நம்ம தலைவலி கீதாக்கா வழக்கம் போல தயிர் சாதமும் மாவடும் தான் அனுப்பி இருக்காங்க – பாண்டி ஒரு சலிப்புடன் சொல்ல

அந்த அம்மா தாயுள்ளத்துடன் நமக்கு வக்கனையா சமைச்சு அனுப்புவாங்கனு பாத்தா அதே தயிர் சாதம் தானா, சரி அதோட அந்த நெத்திலி கருவாட கொஞ்சம் எடுத்து வை அப்ப தான் அந்த தயிர் சாதம் உள்ள போகும்.

சிவா கருவாட்டுடன் வர பாண்டி, கைப்புள்ள, சிவா மூவரும் அந்த தயிர் சாதத்தையும் விடாமல் ஒரு வெட்டு வெட்டி முடிகின்றார்கள்.

ஆமாம் எங்க இந்த வெட்டிப்பயலயும், ராமையும் காணாம் என கைப்பு கேட்க
சாப்பிடுற வரைக்கு கேட்கல, எல்லாத்தையும் காலி பண்ணிட்டு கேட்பதை பாரு என்று முனவி கொண்டே, வெட்டி அவன் பிரிவுல ரொம்ப நல்லா ஆணி புடுங்குறதால அவன இனிமே கடப்பாரை புடுங்குற பிரிவுக்கு மாத்திட்டாங்க, அதான் கடப்பாரை புடுங்க பயற்சி எடுக்க போய் இருக்கான்.

அவன களப்பணி பாருடா என்றால் கடப்பாரை புடுங்குற பணியா பார்த்துக் கிட்டு இருக்கான், அவன அப்பால தனியா டீல் பண்ணுறேன், இந்த ராயல் பயலுக்கு என்னாச்சு?

நம்ம ஜாவா புலவர இந்த மாசம் நம்ம சார்பா அடி வாங்குறது கூட்டிக்கிட்டு வந்தோம்ல, அவரு வந்த உடனே ஒடி போயிட்டாப்புல, அதான் அவர தேத்தி ஒட்டிட்டு வர போயி இருக்கான்.

ஒ, அதானா. நாம எல்லாம் பொழுதன்னைக்கு அடி வாங்கிட்டு இருக்கோம், எதாச்சும் அசந்து இருக்கோமா என்ன? என்று சொல்லி கொண்டே கைப்பு உடம்பை ஒரு மாதிரியாக வளைத்து ஏலேய் பாண்டி அந்த கட்டிலை எடுத்து அப்படி வெளியில் போடுடா, உடம்பு ஒரு மாதிரி நோகா இருக்கு………

ஆரம்பிச்சாட்டான்யா, இன்னிக்கும் நம்மள கை, காலு அமுக்க சொல்ல, இத தெரிஞ்சு தான் வெட்டி பய சாயங்காலம் ஆனா எதையாச்சும் சொல்லிட்டு ஒடி விடுகின்றான் போல என முனவி கொண்டே பாண்டி கட்டிலை கொண்டு வந்து போடுகின்றார்.

கட்டிலில் கைப்பு படுத்துக் கொள்ள சிவாவும், பாண்டியும் ஆளுக்கு ஒரு புறம் அமர்ந்து கைப்பூவின் கை கால்களை அமுக்குகின்றார்கள்.

ஏன் தல, சூரியன் சாய்ந்தா போதும் இந்த இளா, சிபி, தேவ் இந்த மூனு பெயரும் ஒடி விடுகின்றார்களே., நீ ஒன்னும் தெரியாத அப்பிராணிகளான என்ன, சிவா, வெட்டிபய, ராயல் னு போட்டு படுத்தி எடுக்குற. இது நியாயமா………

அடே பாண்டி, அவங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆச்சுடா, நம்மள மாதிரி வெட்டி பசங்களா அவங்க, அவங்களுக்கு குடும்பம் ஒன்னு இருக்குல, அதான் சாயங்காலம் ஆனா உடனே போயிடுறாங்க கைப்பு சமாதானம் படுத்த முயல்கின்றார்.

அப்ப நமக்கும் அது போல குடும்பம்(!!!) எல்லாம் எப்ப வரும் பாண்டி ஆர்வப்பட…

பாண்டி வேணாம், நீ ஏதுக்கோ அடி போடுற, அந்த மேட்டர இப்ப ஆரம்பிக்காத, எனக்கு தூக்கம் வருது. ஒரு நல்ல பாட்டா பாடு என கைப்பு சொல்கிறார்.

என்ன பாட்டு பாட என பாண்டி விழிக்க

அம்மா பாட்டு தான் என கைப்பு சிம்ம குரல் எழுப்ப முயல

சிவா இடையில் புகுந்து வேணாம் அவரு மாதிரி வாய்ஸ் குடுக்க முயற்சி பண்ணி அவர அசிங்கப்படுத்தாத விட்டுடூ… ஏலேய் பாண்டி எதாச்சும் ஒரு பாட்ட பாடி தொல…….

“ராத்திரி நேரத்து பூங்குயில்” என பாண்டி ஆரம்பிக்க

கைப்பு அலறிக்கிட்டே ஏய் இந்த பாட்டு எதுக்குடா இப்ப பாடுற, இது வேணாம் வேற எதாச்சும் ஒரு பாட்ட பாடு என சொல்ல

“நேத்து ராத்திரி” என மறுபடியும் பாண்டி தொடங்க

நிறுத்து…..நீ பாட்டே பாட வேண்டாம், நீ பாட ஆரம்பிச்சா வில்லங்கம் ஆயிடும் போல இருக்கு, யப்பா சிவா நீ எதாச்சும் ஒரு நல்ல தாலாட்டு பாட்டா பாடு. இந்த பாண்டி பய என்ன இன்னிக்கு அழு வைப்பதிலே குறியா இருக்கான் என கைப்பு சொல்கின்றார்.

அக்கஹ அக்கஹ என சிவா இறுமி காட்டி பாட ஆயுத்தமாக

பாண்டி இந்த சத்தத்தை கேட்டு ஒரு வித பயத்துடன் ஏய் சிவா இப்ப என்ன பண்ணுன, இதுக்கு அப்புறம் என்ன பண்ண போற என ஒரு மிரட்சியுடன் கேட்க

அடேய் பாண்டி அவன் எட்டு கட்டையில் பாடுவதற்கு ஒரு சவுண்ட் உட்டு பாத்தான், அம்புட்டு தான் நீ பயப்படாத, இல்ல எதுக்கும் நீ என் கையை கொஞ்சம் சேர்த்தே புடிச்சுக்கோ என பாண்டியிடம் சொல்லிவிட்டு யப்பா சிவா உனக்கு எட்டாம் நம்பர் ஒத்து வராது அதுனால ஏழு கட்டையிலே பாடு

ஆராரோ ஆராரிராரோ
ஆரோ ஆராரிராரோ – என சிவா ஆரம்பிக்க

ஏய் நிறுத்து நிறுத்து உன்ன பாட்டு பாட சொன்னா என்ன நீ தாலாட்டு பாட ஆரம்பிச்சுட்ட என பாண்டி மறுபடியும் ஆரம்பிக்க

பாண்டி தல என்ன சொன்னார் என்னபதை நீ கொஞ்சம் ரிவைண்ட் பண்ணி யோசிச்சிக்கிட்டு இரு. நான் பாடி முடிக்கும் வரை வாய திறக்காதே என்ன? என்று பாண்டியை அடக்கி விட்டு சிவா மறுபடியும் பாட்டை ஆரம்பிக்கின்றார்.

ஆராரோ ஆராரிராரோ
ஆரோ ஆராரிராரோ

கண்ணே நீ உறங்கு
ஆரிரோ ஆராரோ

காணே மயில் உறங்கு
ஆரிரோ ஆராரோ

பசும் பொண்ணே……… நீ உறங்கு
பூவரசு வந்து உறங்கு

யாரடிச்சு நீ அழுத
அடிச்சார சொல்லி அழு

மாமன் அடிச்சானோ
மல்லிக்கை பூ செண்டாலே

அத்தை அடிச்சாலோ
அரளி பூ செண்டாலே

அடிச்சாரை சொல்லி அழு
ஆக்கினைகள் செஞ்சு வைப்போம்

ஏய் ஏய், நிறுத்து நிறுத்து என பாண்டி மறுபடியும் ஆரம்பிக்க

இப்ப என்ன என்கிற மாதிரி சிவா பார்க்க

நீ பாடுன பாட்டில் குற்றம் இருக்கு என பாண்டி இழுக்க

பாண்டி என்ன பாடி முடிக்க விடு, அப்புறம் நீயே சந்தோஷப்படுவ, நடுவில் தொந்திரவு பண்ணாத என்ன….

அது எல்லாம் இல்ல, எனக்கு பதில் சொல்லிட்டு நீ மிச்சத்தை கண்டினியூ பண்ணு என பாண்டி வம்படி பண்ண

சரி கேட்டு தொல என சிவா அழுத்துக்கொள்ள, நம்ம தல “யாருக்கு கிட்ட அடி வாங்கவில்லை” என்று பாடு அதில் ஒரு அர்த்தம் இருக்கு அத விட்டு விட்டு “யாரு அடிச்சா சொல்லி அழுனு” சொன்னா என்ன அர்த்தம்னு கேட்குகிறேன் என பாண்டி பெருமித பார்வை பாக்க………

பாண்டி, உன்ன கொன்னுடுவேன் சொல்லிட்டேன், நம்ம சிவா பய எம்புட்டு பீல் பண்ணி நான் தூங்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு தாலாட்ட பாடிக்கிட்டு இருக்கான், நீ என்னடான உடால உடால கேள்வி கேட்டு அவனை டிஸ்டர்ப் பண்ணுற, மவனே நான் சொல்லுற வரைக்கும் நீ வாயை திறக்க கூடாது சொல்லிட்டேன் என கைப்பு பாண்டியை கண்டித்து விட்டு, சிவா நீ கண்டினியூ பண்ணுடா செல்லம் என சொல்ல

சிவா நமட்டு சிரிப்புடன் தலையசைத்து கொண்டே ஒகே தல என சொல்லிவிட்டு

யாரும் அடிக்கவில்லை
ஐவிரலும் சீண்டவில்லை
தானே அழுகுறாண்டி
தனக்கு ஒரு துணை வேண்டுமுனு – என முடிக்க

கைப்பு பதறி அடித்துக் கொண்டு கட்டிலில் இருந்து எழுந்து கோபப் பார்வையுடன் சிவாவை பார்த்து

நீ ஒருத்தன் தான் சங்கத்தில உருப்படியா இருக்கனு நினைச்சேன் நீயுமா… சரி நடத்துங்கடா என்ன அடி வாங்க வைக்க என்ன எல்லாம் பண்ணனுமோ அம்புட்டையும் பண்ணுறீங்க நீங்க……… டேய் பாண்டி இவனுக்கு இது மாதிரி பாட சொன்னது நீ தானா என கேட்க

பாண்டி தலை மேலும் கீழும் ஆட்டி விட்டு பின் இடதும் வலதுமாக ஆட்டுகின்றார்.

ஏய் பாண்டி எதாச்சும் ஒரு பக்கம் ஆட்டு, இப்படி இரண்டு பக்கமும் ஆட்டுனா என்ன அர்த்தம், ஏன் நீ வாய திறந்து பதில் சொல்ல மாட்டிங்களோ…

நீங்க தான் தல நான் சொல்லாம வாயை திறக்க கூடாதுனு சொன்னீங்க என பாண்டி குழந்தைத்தனமாக சொல்ல

கிளம்பிட்டானுய்யா கிளம்பிட்டானுங்க………………

.... இங்கே பதியப்பட்டது நாகை சிவா | 9 மறுமொழிகள் »

அட்லாஸ் வாலிபர் – நவம்பர்

பதிந்தவர் vavaasangam மேல் நவம்பர் 1, 2006

டுபுக்கு அக்டோபர் மாதத்தில் அடலாஸ் வாலிபராக இருந்து ஒரு கலக்கு கலக்கிட்டாரு. அக்டோபர் மாதமும் முடிஞ்சு போச்சு. அடுத்து, அதாவது நவம்பர் மாதத்தின் அட்லாஸ் வாலிபர் யாருங்கோ அப்படினு தானே கேட்குறீங்க. நம்ம……………. ஆங் ஆசை தோசை அப்பள வடை. எனக்குத் தெரியும். ஆனா சொல்ல மாட்டேனே… இப்ப என்ன பண்ணுவீங்க இப்ப என்ன பண்ணுவீங்க…

அடாடா ரொம்ப தான் கெஞ்சுறீங்களே….

ஆனா சொன்ன சொல்லையும், போட்ட கோட்டையும் மீறுவதில்லை என்ற எங்க தல கைப்புவின் கொள்கையில் ஊறினவன் நான். அதனால் அவர் பெயர என் வாயாலா சொல்ல மாட்டேன். கையாலையும் டைப் பண்ணவும் மாட்டேன். இருந்தாலும் உங்களை எல்லாம் பாத்தா பாவமா இருக்கு, அதனால கொஞ்சம் க்ளு கொடுக்குறேன். நீங்களே தெரிஞ்சிக்கோங்க

கிருஷ்னருக்கு குசேலர் என்ன வேணும்….. ஆங்க அதான்
கர்ணனுக்கு துரியோதனன் என்ன வேணும்….. ஆங்க அதான்
எம்.எஸ்.விக்கு ராமமூர்த்தி என்ன வேணும்…. ஆங் அதே
ரஜினிக்கு கமல் என்ன வேணும்….. அதே, தளபதி சூர்யாவுக்கு தேவா என்ன வேணும்?

புரிஞ்சு இருக்குமே நண்பன் என்று…..

இவங்க எல்லாம் தங்கள் இனமான இன்னொரு மனிதனிடம் தான் நண்பராக இருக்கின்றார்கள். ஆனா நம்ம ஆள் பெரிய தில்லாங்கட்டி…. வானத்தில் வட்டமா வெள்ளை இருக்குமே, அதாங்க அந்த வச்சு தான் நம்ம தமிழ் சினிமா பாடல் ஆசிரியர்கள் பொழப்ப ஒட்டிக்கிட்டு இருக்காங்களே….. ஆங் நிலா தாங்க. அதுக்கே தோஸ்த் நம்ம ஆள்.

இவருக்கு தான் ஒரு ஹீரோவா இல்ல காமெடியானா டவுட்கீதாம், ஆனா கண்டிப்பா அவரு வில்லன் கிடையாதாம். அவரு அடிக்கடி கவுஜ எழுதுவாரு சந்தோஷமா இருப்பதுக்கு. சில சமயத்தில கவுஜ எழுதியே சோகமா ஆயிடுவார். இது மாதிரி பல கவுஜ எழுதி புக் எல்லாம் போட்டு இருக்காருங்க. ஆனாலும் அவர் நம்மள மாதிரி ஒரு வருத்தப்படாத வாலிபர். தன்னை சுற்றி இருப்பவர்கள் எந்த வருத்தமும் இல்லாமல் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர். பலருக்கு பல வகைகளில் தன்னால் முடிந்த உதவிகளை செய்துக் கொண்டு இருப்பவர். சமீபமாக கல்யாணம் ஆனவர். அப்ப வானத்தில் பறக்க ஆரம்பித்தவர், இன்னும் தரையில் கால் வைக்காமல் சந்தோஷ வானில் சிறகடித்து தன் துணையுடன் பறந்து கொண்டு இருக்கின்றார். அது போல என்றும் அவர் தன் துணையுடன் சந்தோஷ வானில் பறக்க சங்கம் வாழ்த்துகின்றது.

இவ்வளவு சொல்லியும், படம் போட்டும், அவரு யாருனு என்னைய மறுக்கா கேள்வி கேககப்பிடாது. ஏதா இருந்தாலும் அவரு வருவாரு. அவருக்கிட்ட பேசுக்கீங்க. சாரு, மாப்பிளை முறுக்குடன் தான் வருவார். அதனால் கொஞ்சம் பாத்து பத்திரமாக ஆப்பு அடிங்க செல்லங்களா. அப்ப நான் வரட்டா……

.... இங்கே பதியப்பட்டது நாகை சிவா | 15 மறுமொழிகள் »

செயற்குழு கூட்டம்!

பதிந்தவர் vavaasangam மேல் ஆகஸ்ட் 9, 2006

சங்கத்தின் நூறாவது நாளை முன்னிட்டு சென்னை லீ-ராயல் மெரீடியன் ஒட்டலுக்கு எதிரில் இருந்த கரும்பு ஜுஸ் கடையில் சங்கத்து சிங்கங்கள் அனைவருக்கும் கரும்பு ஜுஸ் கொடுப்பட்டது. ஜுஸ் குடிக்க வந்த கூட்டத்தால் கத்திபாரா ஜங்கசனில் வரலாறு காணாத போக்குவரத்து நெரிச்சல் ஏற்பட்டது. இந்த கூட்டத்தை கண்டு அரசியல் கட்சிகள் எல்லாம் அரண்டு போயி இருப்பதாக தகவல். மேலும் கமிஷ்னர் அலுவலகத்தில் இருந்து எச்சரிக்கை கடிதம் வந்ததால் அன்று மாலை மெரீனா கடற்கரையில் நடக்க இருந்த பொதுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டு, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. அன்று மாலை சங்கத்தின் செயற்குழு கூட்டம் சங்கத்து திண்ணையில் நடைப்பெற்றது. ஒவர் டூ செயற்குழு கூட்டம்.

கலந்து கொண்டவர்கள் : சங்க திண்ணையில் தல கைப்பு, தளபதி சிபி, போர்வாள் தேவ், விவ் இளா, ஜொள்ஸ் பாண்டி, டெலி காண்பரஸ் மூலமாக நாகை சிவா. மற்றவர்கள் களப்பணியில் தீவிரமாக இருப்பதால் கலந்துக் கொள்ள முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

கைப்பு : யப்பா, முதல் முறையாக செயற்குழு கூட்டம் போடுறோம். இதுல எப்பவும் பண்ணுவது போல இந்த கோமாளித்தனம், கேப்பாரித்தனாம் ஏதும் பண்ணாம எல்லாத்தையும் முறைப்படி செய்யுங்கப்பா.
(உடனே தேவ் வேகமாக எழுகின்றார்)
தேவ் : இந்த செயற்குழு கூட்டத்தை தளபதியார் சிபி அவர்களை நடத்தி தரும்படி கேட்டுக் கொள்கின்றேன்.
சிவா : அதை நான் வழிமொழிகின்றேன்.
சிபி : நன்றி, இந்த கூட்டத்திற்கு தல கைப்பூ தலைமை வகிக்கும் படி கேட்டுக் கொள்கின்றேன்.
கைப்பு : எப்பவும் நான் தானே தல, அப்புறம் என்ன, நடக்கட்……..
(இடையில் கைப்பு அருகில் அமர்ந்து இருக்கும் இளா மிக வேகமாக எழுந்து)
இளா : இதை நான் வழிமொழிகின்றேன்.
கைப்பு : யோவ், மெதுவா எந்துறியா, இப்படி போசுக்குனு எழுவதை பாத்தா உயிர் போயி உயிர் வருது
தேவ் : தல, உயிர் பிரச்சனை உன்னோட தனிப்பட்ட பிரச்சனை, அத சங்கத்துக்கு கொண்டு வராத
கைப்பு : நான் எங்கய்யா கொண்டு வந்தேன்.
தேவ் : இப்ப தானே உயிர் போயி உயிர் வருதுன்னு சொன்ன
கைப்பு : அது விவ் வேகமாக எழுந்ததுக்கு சொன்னேன். ஒரு சொல் சொல்லக்கூடாதே. அந்த சொல்ல நெல் ஆக்கி, அத அரிசியாக்கி பொங்கல் வச்சி என்னை சட்னியா தொட்டு சாப்பிடாட்டி உனக்கு தூக்கம் வராதே. கொஞ்ச நேரம் நீ கம்முனு இரு. சிபி, யூ ஸ்டார்ட் மியூச்சிக் (சே ராசா பதிவ படிச்சு படிச்சு நானே இப்படி ஆகிட்டேன்) யூ கண்டியூ.
சிபி : நன்றி தல. இன்றுடன் நாம் ஒரு புது வரலாற்றை படைத்து உள்ளோம். மாபெரும் சரித்திர வெற்றியுடன் சங்கத்தை நூறு நாட்கள் நடத்தி உள்ளோம். இந்த வெற்றி பொன் எழுத்துக்களால் கல்வெட்டில் பதித்து, அதை நயன் தாராவை கொண்டு திறந்து வைக்க வேண்டிய வெற்றி.
பாண்டி : இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
தேவ் : இப்ப அது எல்லாம் வேண்டாம், தற்சமயம் அதற்கு நம் பொருளாதார நிலைமை ஒத்துழைக்காது.
சிவா : ஹுக்கும் என்னைக்கு தான் ஒத்துழைத்து இருக்கு.
சிபி : சரி, சரி, இந்த விசயத்தை பிறகு பொதுக்குழுவில் விவாதித்து முடிவு எடுக்கலாம். இப்ப இந்த 100 வது நாள் வெற்றி கொண்டாடும் வகையில் சிறு விருந்து.
(திண்ணையில் அமர்ந்து இருக்கும் அனைவருக்கும் சிங்கிள் டீயும், டபுள் பொறையும் வழங்கப்படுகின்றது. அவர்கள் சாப்பிடுவதை சிவா வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றார்)
சிபி : இப்ப நம்மளை நாமே சரி பார்த்துக் கொள்ள வேண்டிய நேரம். அதனால் இந்த தருமணத்தில் நாம் கடந்து வந்து நூறு நாட்களில் நாம் சந்தித்த சாதனைகளையும், சோதனைகளையும் அனைவரும் கூறலாம். அதை பிறகு தீர்மனாமாக நிறைவெற்றி வாசலில் அலைமோதும் பத்திரிக்கையாளர்களிடம் தரலாம். முதலில் இளா நீங்க சொல்லுங்க
இளா : சங்க வரலாற்றை உலகறிய செய்யும்படி சங்க சிங்கங்களின் சரித்திரத்தை சங்கப்பலகையில் ஒட்டியதும், கத்தாரில் போய் உதார் விட்டதும் சாதனை. அதுக்கு என் கை காச செலவு பண்ணியது சோதனை.
சிபி : சரி சரி, சங்கத்துக்காக தானே விடுங்க, எப்பா தேவ் நீ சொல்லு
தேவ் : கல்கியில் தல வந்தது சாதனை. அவருக்காக பின்னாடி கழுதைப்புலியால கடிப்பட்டது வேதனை. சீ சோதனை
சிபி : அதுக்கு தான் சங்கம் மருத்துவ செலவ ஏத்துக்கிட்டுல அப்புறம் என்ன
தேவ் : (மெதுவாக) ஹுக்கும் சுண்ணாம்ப தடவி விட்டு, அதையும் செலவு கணக்குல எழுதிட்டாங்க.
சிபி : என்ன அங்க முணுமுணுப்பு,
தேவ் : நீங்க இன்னும் சாதனை சோதனைய சொல்லயே அத கேட்டேன்.
சிபி : எல்லாரும் சொல்லிய பிறகு சொல்லாம் என்று இருந்தேன், நீ கேட்டதால் இப்பவே சொல்லுறேன். சிங்கப்பூரில் நடைப்பெற்ற வ.வா.ச.வின் நாமக்கல் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் வரலாறு காணாத கூட்டத்தை கூட்டி அதற்கு நயன் தாராவை தலைமை ஏற்க வைத்தது சாதனை. கூட்டம் முடிந்ததும் நயன் தாரா என்ன கண்டுக்காம போனது சோதனை.
சிவா : அடச்சே எப்ப பாத்தாலும் நயன் தாரா தானா. வேற எதுமே தெரியாதா..
சிபி : சரி, சரி. நீங்க சொல்லுங்க உங்க சாதனைகளையும் சோதனைகளையும்
சிவா : நம்ம தல கைப்பு உலக கோப்பை உதைப்பந்தில் கலந்து கொண்டது சாதனை, அதில் உதை வாங்கியது சோதனை.
சிபி : அது எப்பவும் நடப்பது தானே, வேற எதுவும் இருக்கா
சிவா : ஆங் இருக்கு, உங்க எல்லாத்தையும் பிரிந்து மிக தொலைவில் களப் பணியாற்றுவது மிகப் பெரிய சோதனை.
பாண்டி : நெஞ்ச நக்கிட்டான்யா. இந்த தடவை இண்கிரிமெண்ட் வாங்கிடுவான்.
(இடையில் கைப்பு அழுது கொண்டே எழுந்து)
கைப்பு : சிவா, நோ ஹார்டு பீலிங்கஸ்… எல்லாம் சங்கத்துக்காக தானே. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
சிபி : சரி சரி, கண்ட்ரோல் பண்ணுங்கப்பா உங்க பீலிங்கஸ்ச…. அடுத்து பாண்டி நீ சொல்லு உன் சாதனையையும், சோதனையும்.
பாண்டி : சோதனையா, எல்லாமே சாதனை தான். கொள்கைப்பரப்பு செயலாளராக இருந்துக் கொண்டு, ஜொள்ளு துறையையும் ஏற்று அயராது களப்பணி ஆற்றிய நான், பின் சங்கத்தை மகளிர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அனைத்து மகளிர் கல்லூரிகள் முன்பும் நின்று களப்பணி ஆற்றி சங்கத்தை உலகம் முழுவதும் பரவச் செய்தை விட வேற என்ன சாதனை வேண்டும்.
சிபி : அப்பாடா, கொஞ்சம் தண்ணி குடி முதல, இப்படி விடாம பேசுற. இது மாதிரி எல்லாம் நீ பேச மாட்டியே. என்ன ஆச்சு உனக்கு. ஹும் சோதனைகளை சொல்லுங்க.
பாண்டி : நான் தான் முன்னாடியே சொன்னேனே எல்லாமே சாதனை தான் என்று அப்புறம் என்ன தனியா சோதனை என்று மறுபடியும் கேட்டுக்கிட்டு.
சிபி : சரிப்பா. தெரியமா கேட்டுட்டேன்.
சிவா : (மெதுவாக) எல்லாம் குங்குமம் பண்ணும் வேலைனு நினைக்கிறேன். பாப்போம் எம்புட்டு நாளைக்குனு.
சிபி : அங்க என்ன சத்தம். தல நீ சொல்லுமா
கைப்பு : பேரன்பு கொண்ட பெரியோர்க்களே, தாய்மார்களே
தேவ் : தலலலலலலல….
கைப்பு : சாரிப்பா, பொதுக் கூட்டம் ஞாபகம் வந்து விட்டது. அதான். சரி நான் சாதனைகளையும் சோதனைகளையும் சொல்லுறேன் கேட்டுங்க. இந்த சங்கத்தில் நீங்க எல்லாம் இருப்பதே ஒரு மிக பெரிய சாதனை தான்.
இளா : சூசூசூச்ச்ச்ச்சோ
கைப்பு : ஏலேய், யாரு அது சைட்ல சவுண்ட் விடுது, நானே ஏத சொல்ல ஏத விட யோசிக்கினு இருக்கேன். இதுல இது வேற, ஹும் சரி, நம்ம படத்த புதர பத்திரிக்கையில் வந்தது சொல்வேனா, நம்ம சங்கப்பத்திரிக்கை டாக்டர் நமது கைப்பு வெளியிடப்பட்டதை சொல்வேனா, ஜெர்மனியில் உதைப்பந்தாட்டத்தில் கோலாயிச்சியதை சொல்வேனா, ஜமைக்காவில் இந்திய அணி வெற்றி பெற ஆலோசனை வழங்கியதை சொல்வேனா, எல்லாத்துக்கும் முத்தாய்ப்பு வைப்பது போல நமது சங்கத்திற்கு அட்லாஸ் வாலிபராக சிறப்பு வருகை தரும் “முக்கி”யஸ்தற்களை சொல்வேனா….அவ்வ்வ்வ்வ்வ்வ் என்னால் பேசப் முடியலப்பா பேசப் முடியல…… அவ்வ்வ்வ்வ்வ்வ்.
பாண்டி : ஆஹா, தல அழுக்காச்சி ஆரம்பிட்டாரயே. நிறுத்த மாட்டாரேய….இப்ப என்ன பண்ணுறது.
சிபி : சரி, சரி விடுங்க. சாதனைகளை விடுங்க சோதனை ஏதும் இருக்கா.
கைப்பு : என்னத்த சொல்ல, நீங்க எல்லாம் சாதனை பண்ணுறேன் பேர்வழினு எனக்கு ஆப்பு மேல ஆப்பு கொடுத்து சோதனை கொடுத்துகிட்டு இருக்கீங்க. அது ஒன்னு தான். ஆங்! இன்னும் ஒன்னு இருக்கு. ஆனா இப்ப வேணாம், இந்த சாதனை திருநாளில் அதை பத்தி பேச வேணாம், இன்னவொரு நாள் பாத்துக்கலாம்.
இளா : சோதனைகளை களைந்து சாதனைகள் படைக்க வேண்டும் என்பது தான் நம் எண்ணம், அதனால் இன்றே சொல்லுங்க.
கைப்பு : விவ், சொல்வதும் சரியா தான் இருக்கு. சரி சொல்லுறேன். யாரும் தப்பா எடுத்துக் கூடாது. என்னா….
சிவா : பீடிக்கை எல்லாம் பலமா இருக்கு. என்னனு சீக்கிரம் சொல்லுங்க. யாரும் தப்பா எடுத்துக்க மாட்டோம்.
கைப்பு : சரி, சொல்லுறேன். சாதனைகள் பல இருந்தாலும் நம்ம சங்கத்து ஆட்களில் சிலர் மேல் ஏற்பட்ட சில ஊழல் புகார் எனக்கு சோதனையா தெரியுது.
தேவ் : சுத்தி வளைக்காம யாரு மேல அந்த புகார் வந்துச்சுனு சொல்லுங்க
கைப்பு : நான் உன்ன சொல்லப்பா, பொதுவா தான் சொன்னேன்.
தேவ் : பொதுவாக சொல்கின்றேன் என்று சொல்லிவிட்டு, என்னை சொல்ல என்று தனிப்பட்ட முறையில் கூறுவது ஏன்?
கைப்பு : ஆஹா, கிளம்பிட்டாங்கய்யா, கிளம்பிட்டாங்க. எப்படி சொன்னாலும் இப்படி தான் சொன்னேனு சொன்ன நான் என்ன பண்ணுறது.
தேவ் : சொல்வதை சொல்லிட்டு, அப்பறம் என்ன சமாளிப்பு. சரி தல, நான் முடிவு பண்ணிட்டேன். என் மேல இப்படி ஒரு அபாண்ட குற்றச்சாட்டு ஏற்பட்டதை முன்னிட்டு நான் என் செயற்குழு பதவியை ராஜினாமா செய்கின்றேன்.
பாண்டி : ஐய்யகோ, என்ன இது தீடிரென்று இப்படி ஒரு முடிவு எடுத்துட்டீங்க. போர்வாள் இல்லாமல் களப்பணி எப்படி ஆற்றுவது. நீங்க சங்கத்தில் இல்லாட்டி…..
தேவ் : பாண்டி ரொம்ப ஆசைப்படாத, நான் செயற்க்குழு பதவியை தான் ராஜினாமா செய்கின்றேன். அடிப்படை உறுப்பினர் பதவியை இல்ல.
சிபி : சரி சரி. பிரச்சனை வேண்டாம். தேவ்வின் இந்த முடிவை குறள் ஒட்டு எடுப்பிற்கு விடுகின்றேன். முதலில் நான்,
குறள் – “இட்லிக்கு சட்னி இல்லையென்றால் சிறிது
சாம்பார் ஈயப்படும் “
- நன்றி இட்லிவடையார் என்ற குறளை கூறி தன் மேல ஏற்பட்ட பழியை தொடைத்து எடுத்து, அதன் மேல் எச்சா பண்ணி தலை சுற்றி, விட்டு எறிந்து விட்டு மீண்டும் சங்கத்தின் செயற்க்குழு பதவியை ஏற்க வர வேண்டும் என்று கூறி என் ஆதரவை தேவ்வுக்கு தெரிவிக்கின்றேன்.
இளா : “தண்ணீர் என்ப உரம் என்ப இவ்விரண்டும்
கண் என்ப விவசாயத்திற்கு”
– நன்றி வரப்பு என்ற குறளை கூறிய தேவ் அவர்கள் தன் முடிவை உடனே கைவிட வேண்டும் என்று கூறி அவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றேன்.
தேவ் : “கற்க கற்கண்டு, குமுதம், விகடன் கற்றப்பின்
விற்க பாதி விலைக்கு”
என்ற குறளை கூறி செயற்க்குழு எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுகின்றேன், நானாக ஏதுவும் உளர விரும்பவில்லை, இருந்தாலும் என் முடிவிற்கு நானே ஆதரவு தெரிவிக்கின்றேன்.
பாண்டி : குறளா….. குறளா……… நான் எங்குட்டு போவேன் குறளுக்கு……..குறள் எல்லாம் எங்கிட்ட இல்ல ஜொள்ளு தான் இருக்கு. அத வச்சி ஜொள்ளிகிட்டே சொல்லுறேன். தேவ் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றேன்.
சிவா : “உதையினால் வாங்கிய அடி உள்ளாரும் ஆறாதே
ஆப்பினால் வாங்கிய காயம்”
என்ற குறளை சொல்லி எனக்கு இந்த பிரச்சனையின் ஆழம் தெரியாதால் நான் நடுநிலை வகிக்கின்றேன்.
இளா : ஆழம் அதிகம் இல்ல ஜெண்டில்மேன், ஒரு இருபத்தைந்து அடி தான்.
சிபி : உச்ச்ச்ச்ச்ச். பாண்டி குறள் சொல்லாதால், அவரின் ஒட்டை ஒதுக்கி விட்டு பார்த்தால் தேவ் ஆதரவாக இரண்டு ஒட்டுக்களும், எதிர்ப்பாக ஒரு ஒட்டும் உள்ளது, ஆதலால் தல நீங்க உங்க முடிவை சொல்லி இதற்கு ஒரு முடிவை ஏற்படுத்த வேண்டுகிறேன்.
கைப்பு : “சதாரணமாக வாங்கும் ஆப்பு எல்லாம் ஆப்பு இல்ல
ஸ்பெஷலாக வாங்கு ஆப்பே ஆப்பு”
என்ற குறளை சொல்லி தேவ் தன் முடிவை உடனே கை விட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு இந்த பிரச்சனையை இத்துடன் முடிக்கம்படி கேட்டுக் கொள்கின்றேன்.
சிபி : தல கூறியதை கருத்தில் கொண்டு அத்த இத்தோட விட்டு விட்டு செயற்குழுவின் தீர்மானத்தை தாக்கல் செய்யுமாறு சிவாவை கேட்டுக் கொள்கின்றேன்.
சிவா : இன்றைய கூட்டத்தில் எந்த தீர்மானம் நிறைவேற்ற படவில்லை என்ற தீர்மானத்தை சபையின் முன் வைக்கின்றேன்.
(அனைவரும் கோரஸ்சாக)
அதை நாங்கள் வழிமொழிகின்றோம் என்று கூறி அந்த தீர்”மானத்”தை நிறைவேற்றி, மீண்டும் பொதுக்குழுவில் சந்திப்போம் என்று விடைப்பெற்றார்கள்.

.... இங்கே பதியப்பட்டது நாகை சிவா | 37 மறுமொழிகள் »

சங்கத்தின் வாழ்த்து!

பதிந்தவர் vavaasangam மேல் ஆகஸ்ட் 6, 2006


“சங்கம் வைத்து தமிழ் வளர்த்தோம் அன்று
சங்கம்(சிரிக்க) வைத்து நண்பர்கள் வளர்கின்றோம் இன்று “

வ.வா.சங்கத்தின் சார்பாக தமிழ் வலைப்பதிவர்கள் அனைவருக்கும் எங்கள் நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் எங்கள் நன்றிகளையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம்.


மேலே இருக்கும் இந்த நண்பர்கள் பேண்டை அனைவரும் எடுத்துக் கட்டிக் கொள்ளவும். எப்படி என்று யாரும் கேள்விக் கேட்க கூடாது சொல்லிட்டோம்.

கடைசியா சில தத்துவங்கள் : (கைப்பு சொன்னது தான்)

“A hug is worth a thousand words. A friend is worth more.”
“Friends are the most important ingredient in this recipe of life.”
“The better part of one’s life consists of his friendships.”

உங்களின் தத்து(பித்து)வங்களை பின்னூட்டங்களில் எங்களுக்கு தெரிவிக்கவும்.

.... இங்கே பதியப்பட்டது நாகை சிவா | 21 மறுமொழிகள் »