வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்

100% சிரிக்க

‘இராம்’ பகுப்புக்கான தொகுப்பு

காணாமல் போன Greg கைப்புள்ள – வெளிவராத உண்மைகள்!

பதிந்தவர் vavaasangam மேல் ஏப்ரல் 25, 2007

சங்கத்திலே கொண்டாட்டம் ஆரம்பிச்சு ரொம்ப நாளா ஆகிப்போச்சு, ஆனா அகில உலக வருத்தப்படாத வாலிபர் சங்கத்தோட இணையற்ற ஒப்பிலா தலைவர் கிரேட் கைப்புள்ளயே மட்டுந்தான் காணோம். என்னாச்சு ஏதாச்சு’ன்னு அவருக்காக நைட்பகலா உழைச்சு ஓடாப் போனே சங்கத்து சிங்கங்கள் எல்லாமே கன்னத்திலே கைவைச்சிட்டு கஷ்டத்திலே இருக்கோமின்னு மட்டுமின்னு நினைச்சிராதீங்க, நாங்கெல்லாம் பயங்கரமான சந்தோஷத்திலே மிதந்துட்டு இருக்கோம்.

அதுக்கான காரணம் என்னான்னு பார்த்தா தல கிரேட் கைப்புள்ள’யா இருந்து கிரேக் கைப்புள்ள’யா ஆகி சங்கத்திலே ஆப்பு வாங்கினது பத்தாமே இந்திய கிரிக்கெட் டீம்’க்கே கோச்சா போயி அங்க ஒன்ன முடியாமே இப்போ டோட்டல் டோமேஜ் புள்ளயா ஆகிட்டாரு’லே. அந்த சந்தோஷத்துக்காக ஸ்விட் எடுத்து கொண்டாடி கொண்டாடி களைப்பாகி போயிருக்கோம். இந்தமாதிரி நேரத்திலே கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கட்டுமின்னு பங்களாதேஷ் vs பெர்முடா விளையாடின சரித்திரபுகழ் மேட்ச பார்த்திட்டு இருந்தோம்.

சரி மேலே இருக்கிறதெல்லாம் கதை சொல்லுறமாதிரி இருக்கு. இனிமே லைவ் கமெண்டரி…

தேவ்:-
“ஏலேய் மக்கா நல்லா என்ஞாய் பண்ணுங்கய்யா! இதிலே நாமே காயப்போட்ட பசங்களும் நம்மளை காயப்போட்ட பசங்களும் ஒன்னுக்கூடி மேட்ச் விளையாடிட்டு இருக்காங்க!”

சிபி:- “ஹி ஹி…. இன்னிக்கு யாரு ஜெயிச்சாலும் தோத்தாலும் நம்ம தல’க்கு பெரிய ஆப்பு வைக்கனும்”

ஜொள்ளு:- “டூட்ஸ், அந்த கேமிரா மேன்ஸ் எல்லாரையும் மாத்தனும்! ஒரு பயலுகளும் எனக்கு ஏத்த மேட்சை காட்டமாட்டேன்கிறாய்ங்கே”

வெட்டி:- “ஆனாலும் பாண்டி நீயி அநியாத்துக்கு கடமை வீரனா இருக்கீயே? நாங்கெல்லாம் மேட்ச் பார்த்திட்டு இருந்தா நீ அங்க திரியிற பட்சி தெரியலைன்னு அங்கலாய்க்கிறே?”

ஜொள்ளு:- “சுமா சுமா என்னையவே சொல்லாதீங்கய்யா? நீங்களெல்லாம் வாய் விட்டு சொல்லலை! நான் வாய் விட்டு ஜொள்ளிறேன்! அம்புட்டுதான் வித்தியாசம்!”

புலி:-” கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்”

இளா:- “என்ன புலி பசிக்கிதா? இந்த பாப்கார்ன் சாப்பிடு சரியா போயிரும்!”

புலி:- “யோவ் விவ், அந்த டிவி பின்னாடி இருக்கிற ஜன்னலிலே பாருங்கய்யா! ஏதோ கை தெரியுது? அய்யோ இங்க ஏதோ ஒரு ஜகன்மோகினி உள்ளே வந்துருக்கு சாமியோவ்!”

சிபி:- “நான் இங்கேதானே ஒட்கார்ந்து இருக்கேன்! யாரு எனக்கே தெரியாமே ஜகன்மோகினியா??”

சட்டென்னு ஒரு உருவம் உள்ளே நுழைக்கிறது, ஆளு பார்க்க பூனை பழமொழியிலே வர்ற விலங்கினத்தோட சுத்தமான நிறம், அந்த நிறத்துக்கு சம்பந்தமே இல்லாமே முட்டியை தொடற அளவுக்கு கிளிப்பச்சை கலருலே ஜிலுக்கு பர்முடா, ஜிவு ஜிவுன்னு கண்ணை பறிக்கிற செவப்பு கலருலே ஒரு தேநீர் சட்டையும் போட்டுக்கிட்டு “தல” சங்கத்து குடிசைக்குள்ளே என்டர்..

தேவ்:- ” தல எங்க போயிருந்தே? நீ கொஞ்சநாளு இல்லைன்னோதும் நிறைய ஸ்கூப்நீயூஸ் பரவிருச்சு! அதுவுமில்லாமே ஒனக்கு எங்கதான் இப்பிடியெல்லாம் அட்ராக்ட்வான கலருலே டிரெஸ்ல்லாம் கிடைக்கிது?”

தல:- “ஏலேய் போர்வாளு, ஒனக்கு ரொம்பதான் ஏத்தம்? ஸ்கூப்நீயூஸ் போட்டதே நீதானே? ஏண்டா ஒழுங்கா கிரிக்கெட் விளையாடுங்கன்னு கூட்டிட்டு போனா அதே விளையாடமே அங்க இருக்கிற பொண்ணுகளோட செல் நம்பர்ஸ் வாங்கி SMS அனுப்பி அனுப்பி அங்கயிருக்கிற செல்போன் கம்பெனிஸ் எல்லாமே இன்னவரைக்கு ஜாம்’தான்! இப்போ நான் கொலைவெறியிலே இருக்கேன்! டிரெஸ் எங்ககிடைக்கிது’ன்னு கேட்டு இன்னும் என்னோட கோவத்தை ஏத்தாதே?”

ஜொள்ளு:- “தல நோ டென்சன்! கூல் மேன்! வேணுமின்னா இந்த மேட்ச நிப்பாட்டிட்டு இலியானா நடிச்ச பாட்டை போட்டு விடவா? தெலுங்கு பாட்டுதான்! நமக்கு அர்த்தம் புரியலைன்னா வெட்டிக்காரு செப்புவாரு!”

தல:- “வேணாம் விடு பாண்டி! இப்போ நான் இருக்கிற கோவத்துக்கு அந்த தோத்து போன பசங்களை டெவில் ஷோவிலே கவுண்டர் கேட்கிறமாதிரி கேள்வி கேட்கணும், So கிரிக்கெட் விளையாட போறன்னு சொன்ன அந்த வீணாப்போனவங்களுக்கு போனை போடு! நான் பேசியே ஆகனும்”

ஜொள்ளு எல்லார் நம்பர்’க்கும் போன் பண்ணுறார், வழக்கபோலே எல்லாரும் போனை எடுத்துட்டு “We are busy now”ன்னு கட் பண்ண இவனுகளை இப்பிடிதான் சாய்க்கனுமின்னு விளம்பர ஏஜென்ஸியிலே இருந்து பேசுறோமின்னு சொல்லி டெண்டுல்கர்,டிராவிட்,யுவராஜ் முணு பேத்தையும் ஒரெ லைனில் பிடிச்சி கான்பரன்ஸிலே போடுறார்.

தல:- “அடேய் வீணா போனாவய்களா! காசுன்னுதும் ஓடி வந்திட்டிங்களா? பொணம் எந்திருச்சு ஒட்கார்மின்னு சொன்னதுக்கப்புறம் நீங்களல்லாம் எம்மாத்திரம்!”

கிரிக்.கோஷ்டி:- “ஹலோ! நீங்க யாரு?”

தல:- “ஹிம் மும்பை தாதா! ஆட்டுக்காலு மண்டயனுகளா! நாந்தாண்டா கிரேக் கைப்புள்ள பேசுறேன்!”

டிராவிட்:- “ஹய்யா! ஒங்களை தான் டீமை விட்டு தூக்கிட்டாங்களே? இப்போதான் சந்தோஷமா இருக்கு!”

தல:- “ஏண்டா மண்டையா நீ பேசமாட்டே? நூறடி தூரத்திலே இருந்து லொங்கு லொங்குன்னு ஒருத்தன் ஓடிவந்து பந்து போட்டா அந்த இடத்திலே நிப்பாட்டுறவன் தானே நீயீ?”

டிரா:- “ஹலோ மிஸ்டர் கைப்பு! அது என்னோட திறமை! 100 மைல் வேகத்திலே வந்தாலும் ஒரே இடத்திலே நிப்பாட்டி வைக்கிறது திறமை..”

தல:- “மண்ணாங்கட்டி திறமை! நிப்பாட்டி வைக்கிற திறமையே அடிக்கிற அளவுக்கு வளர்ந்து இருந்தா நாமெல்லாம் போன வேர்ல்ட் கப்’லெ ஜெயிச்சு இருப்போமிடா? ஏண்டா நீ மட்டுமே பேசுறே? அந்த குள்ளகத்திரிக்காவும், சடைமண்டையனும் பேசமாட்டக்கிறாய்ங்கே?”

டெண்டுல்கர்:- “இப்போதான் புது ரூல் போட்டுருக்காங்களே? தலைவர் தவிர யாரும் பேசக்கூடாதுன்னு? அதுதான் நாங்கெல்லாம் பேசலை!”

தல:- “ஏலேய்! சடைமண்டையா? ஒனக்கு என்ன வந்துருச்சு??”

தோனி:-” நான் மவுனவிரதம்”

தல:- “ஒங்களுக்கெல்லாம் ஏத்தம்தாண்டா! அடேய் இம்புட்டு சம்பாரிச்சிங்களே? அதுக்கு ஏத்தமாதிரி விளையாடுனீகளா??”

டிரா:- “ஆமாம் ஒங்களுக்கு கூடந்தான் 1,7500 டாலர் சம்பளம்! அதுக்கு ஏத்தமாதிரி டிரெய்னிங் கொடுத்தீங்களா??”

தல:- “அடபாவிகளா! எனக்கு ஒன்னே முக்கா ரூவா’க்கு கோலிசோடா வாங்கி அதை பெருமையா எல்லார்கிட்டேயும் காட்டி குடி’ன்னு தீர்ந்து போன மினரல் வாட்டர் கேன்’லே தான் கொடுந்தானுக!”

டிரா:- “இப்போ இதுவரைக்கு ஒங்கிட்டே பேசுனதுக்கு அமெண்ட் எப்போ செட்டில் ஆகும்? டாலரா வருமா ? இல்லை ரூபாய்’வா?”

தல:-” என்னது ரெண்டு வார்த்தை பேசுனுதுக்கே காசா? இவிய்ங்களே எதை கொண்டு அடிக்கலாம்? அடேய் புலி இவியங்களே ஒரு உருமி உருமி பயமுருந்துடா?? பாவிபசங்க தொலைஞ்சு போகட்டும்!”

புலி:- “ஓகே தல…. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்”

தல:- “ஏண்டா அயோக்கிய அப்ரெண்டிஸ்களா? சங்கத்தோட முதலாமண்டு போட்டின்னு சொல்லி ஆயிரம் ஓவா தாரேன்னு சொல்லிருக்கீங்களே? மறுபடியும் கஜானாலே கைவைச்சிட்டிங்களா??”

இளா:- “ஆமாம் அந்த கஜானா’விலே பொன்னும்,வைரமும் குவிஞ்சு கிடைக்கிறமாதிரியே பேசு? அதிலே ஒன்னோட ஜிலுக்கு ஜிப்பாவும்,நீ அழுதா ஆட்டுறதுக்கு கிலுகிலுப்பையுதான் இருக்கு! அதே கொண்டு போயி சேட்’கிட்டே அடகு வைக்க கொண்டு போன அவன் அதை பார்த்திட்டு வைச்சிறக்கிறதே நாமே தான் காசு கொடுக்கனுமின்னு எகாந்தாளம் பேசுறான்!”

தல:- “நீரெல்லாம் எலெக்சனிலெ நிக்கலாமய்யா! முச்சு விடாமே பேசிட்டு இருக்கே? யாருடா புதுசா சங்கத்திலே கமலா காமேஷ்’ன்னு யாரோ சேர்ந்து இருக்காலமே! யாரு அது?”

ஜொள்ளு:- “தல அது கமலா காமேஷ் இல்லே? அவங்க ஒரு ஆண்ட்டி, அவங்களை சங்கத்திலே சேர்ந்து என்னா ஆகப்போகுது? அவரு பேரு கமலேஷ் கண்ணன்”

தல:- ” அது சரி? நீ நமிதா,இலியானா’ல்லாம் சேர்ந்திருந்தா குஷியா ஆகிருப்பே?”

ஜொள்ளு:- “ஏந்தான் தல என்னைமாதிரியே நீயும் குடையை தலையிலே கவுத்தி போட்டு இருக்கே?”

தல:- “ஹிம் அப்பிடி கேளு கேள்வியை? தோத்திடோம்மின்னு எல்லாபயலுகளும் என்னை கொட்டி கொட்டியே பூசணிக்கா சைஸ்க்கு தலை வீங்கி போயி கிடக்கு! அதை வெளியே தெரியமே இருக்கிறதுக்காக தான் அதை மூடி மறைச்சி வைச்சிருக்கேன்”

இராம்:- “தல! எல்லாரும் பருத்திவீரன் படம் பார்த்திட்டு ஒன்னை பிணந்திண்ணி’ன்னு நினைச்சிட்டாங்களா??”

தல:- “ஏலேய் ராயலு நக்கலா? என்னாட ஆச்சு 105 போட்டி பதிவுகளும்? எவ்வளோ பேரை சார்ட் லிஸ்ட் பண்ணிருக்கீங்க? அதை சொல்லுங்கடா அயோக்கிய அப்ரெண்டிஸ்களா??

போர்வாள்:-” ஓகே தல! மக்களே நாலு நாளா கண்முழிச்சி 105 பதிவுகளும் படிச்சி 14 பதிவுகளை இப்போதைக்கு அடுத்த சுற்றுக்கு தேர்ந்தெடுந்து இருக்கோம்.”

  1. செல்வன்
  2. அம்பி
  3. செந்தழல் ரவி
  4. சவுண்ட்
  5. சந்தோஷ்
  6. அருண்
  7. jayashree
  8. அபி அப்பா
  9. மை ஃபிரண்ட்
  10. சைலஜா
  11. டுபுக்கு
  12. CVR
  13. கோல்மால் கோபால்
  14. கண்மணி

இறுதி முடிவுகள் சங்கத்தின் தொடக்க நாளான நாளை அறிவிக்கப்படும்.

.... இங்கே பதியப்பட்டது இராம் | 21 மறுமொழிகள் »

வ.வா.ச-1ம் ஆண்டு-நகைச்சுவை போட்டி

பதிந்தவர் vavaasangam மேல் ஏப்ரல் 13, 2007

சுட்டெரிக்கும் வெயிலில் நெடுந்தொலைவு கடக்க முற்படும் பயணிக்கு சிறிது இளைப்பார சின்ன இடமும் தாகம் தீர்க்க குளிர்ந்த நீரும் கிடைந்தால் அப்பயணி அடைவது என்ன? அதைவிட அவன் இளைப்பாற ஒதுக்கும் நிழல் கொடுக்கும் இடத்தில் மெல்லிய சாரல் என குளிர்ந்த காற்று அப்பயணியை உரசி சென்றால் அவன் அடையும் நிலை என்ன??

டேய் மண்டயா? நீ என்ன சொல்ல வர்றே’ன்னு நீங்க கேட்கிறது புரியுதுங்க, எல்லாத்தையும் வித்தியாசமாக செஞ்சு பழக்கப்பட்டு போன நமக்கு இதெயும் கொஞ்சம் வித்தியாசமா ஆக்கனும்மின்னு ஆசைதாங்க… இங்க பயணி சொன்னது உங்களைதான், பயணமின்னு சொன்னது உங்க வாழ்க்கையை, வெயில்ன்னு சொன்னது உங்க வேலையை, குளிர்ந்த நீர்ன்னா நகைச்சுவைங்க.. அப்புறம் நீங்க இளைப்பாற வர்ற இடம் நம்ம வ.வா.சங்கம்… :)


சரி மேட்டருக்கு வாறேன். சங்கத்தோட முதலாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்த்தில் உங்களை மேலும் மகிழ்விக்க போட்டியென்ற நடத்தலாமின்னு சென்ற பதிவென்றில் அறிவித்து இருந்தோம்.

பரிசுப்போட்டி:-

நகைச்சுவையாக ஒரு பதிவு எழுதி அதோட முகவரியை இங்கே பின்னூட்டமிடுங்கள்.

விதிமுறைகள்:-

1) கட்டாயமாக தமிழில்தான் இருக்கனும்னு சொல்ல மாட்டோம், புரியற மாதிரி இருந்தால் சரி.

2) தனிமனித, சமய, மதம் தாக்குதல் இருக்கக்கூடாது.

3) வ.வா சங்கத்தை களமாக கொண்டு எழுதியிருந்தால் முன்னுரிமை

4) எப்பிடியாவது சிரிக்க வைக்கனும்.

5) சங்கம் பாணி காமெடி தவிர்த்து சங்கத்துக்கானப் புது பாணி காமெடி உருவாக்கும் விதத்தில் உங்கள் பதிவுகள் அமைதல் நலம்.

6)பின்னூட்டம் மூலமாக இடுகையை அறியப்படுத்துங்கள். பதிவரின் பெயரில் மட்டுமே அறியப்படுத்த வேண்டும். Anonymous மூலம் இடுகையை தெரிவித்தல் கூடாது.
7) ஒருவர் எத்தனை இடுகை வேண்டுமானாலும் அனுப்பலாம். எப்பொழுது எழுதியிருந்தாலும் பரவாயில்லை.(காலத்துக்கு அப்பாற்பட்டது நகைச்சுவை. ஷிஹி)

பரிசுத்தொகை:-

1000 பொற்காசுகள் இல்லை…………………… (இந்திய பண மதிப்பில் பரிசு, புத்தக வடிவில்)

கடைசி தேதி:-

21-04-2007 11.59 PM IST

உங்களின் நகைச்சுவை சாரல் நம் எல்லாரையும் குளிர்விக்க அன்புடன் வரவேற்கிறோம்.

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

.... இங்கே பதியப்பட்டது இராம் | 44 மறுமொழிகள் »

கவுண்டர் Devil Show – ஜொள்ளுப்பாண்டி

பதிந்தவர் vavaasangam மேல் மார்ச் 15, 2007

கவுண்டர்:- “ஏண்டா கோமுட்டி தலையா சும்மா ஒன்னையே மிதிக்கிறதுக்கு பதிலா சங்கத்திலே திரியறய்வங்களுக்கு ஆப்பு அடிக்கலாமின்னு வந்தா ஒரு பயலுகளையும் காணோம், எல்லா பேரும் வீராசாமியண்ணே நடத்துற அரட்டை அரங்கத்தை வேடிக்கை பார்க்க போயிருப்பாங்களோ?”

கோமுட்டி தலையன்:- “அண்ணே அந்தளவுக்கெல்லாம் அவங்களுக்கு சத்து பத்தாதுண்ணே, லேசா யாராவது சவுண்ட் விட்டாலே பயந்து பம்மிருவாய்ங்கே? வீராசாமிண்ணே பத்தாயிரம் வாட்ஸ்’லே அவரு மட்டுமே மைக் பிடிச்சிட்டு பேசுறாரு, இவிய்ங்கே அந்த சவுண்ட்’க்கே விழுந்துருவானுக…! அண்ணே அங்கே பாருங்கண்ணே! சங்கத்து குடிசையை பார்த்து ஒருத்தன் வாறான், அதிலே பேக்கிரவுண்ட் மிசிக்கெல்லாம் கேட்கிது, அனேகமா ஜொள்ளாதான் இருக்கும், நான் கிளம்புறேன்”

க: “ஏலே கரிச்சட்டி மண்டையா, அவன் வந்ததும் நீ ஏண்டா ஓடுறே? சங்கத்து பயலுகளுக்கு இவனுக்கு ஏதோ இருக்கு? தூரத்திலே ஒருத்தன் தொப்பின்னு சொல்லிட்டு என்னத்தயோ கவுத்துட்டு வாறான், வாடா, வாடா??”

ஜொள்ளு: “அண்ணே என்னாண்ணே நான் உள்ளே வர்றப்போ பெரிய பெரிய அடைமொழியெல்லாம் சொல்லி வரவேற்கன்னு கோமுட்டியண்ணே’கிட்டே சொல்லிருந்தேனே?”

க:“அதானே பார்த்தேன், அதுதான் ஒன்னை பார்த்ததும் கோமுட்டி மண்டையன் ஓடிட்டானா? ஏண்டா அரைடவுசர் மண்டையா? இந்த அட்டு விளம்பரமெல்லாம் தேவைதானா ஒனக்கு?”

ஜொ:“இந்த காலத்திலே பூக்கடைக்கும் வெளம்பரம் வேணுமிண்ணே”

க:“ஒன்னோட மொகரகட்டைக்கு பழமொழி வேறயா? ஒன்னோட மண்டையிலே கவுத்து போட்டுருக்க அந்த கூடையை எடுக்கமாட்டியா நீ?”

ஜொ: “என்னோட அழகை பார்த்து நீங்க மயங்கி விழுந்துட்டா அப்புறம் என்ன பண்ணுறது?”

க: “அப்போ நீ நம்ம கோமுட்டி தலையன் மாதிரி அழகா தான் இருப்பே? முஞ்சியே காட்டுறேன்னு சொல்லி என்னை பயமுருந்திராதே?? ஊரெல்லாம் ஒன்னையே தேடி கடைசியிலே பொம்பளை பிள்ளைக காலேஜ் பக்கமா கூட திரிஞ்சிட்டு இருந்தோம்? நீ இங்கிட்டு வந்திருக்கே?”

ஜொ: “அண்ணே எல்லா நேரமும் முழுநேர வேலையே பார்த்துட்டு இருக்கமுடியுமா? கொஞ்சம் சேஞ்சு வேணுமில்லே அதுதான் காத்து வாங்கலாமின்னு சங்கம் பக்கம் வந்தேன்”

க:“ஆமாம் இவரு பெரிய நெத்தி வேர்வை நெலத்திலே விழறமாதிரி உழைச்சிட்டாரு? சேஞ்ச் வேணுமாம் சேஞ்ச்? பெர்முடாஸ் மண்டையா? ஏண்டா ஜொள்ளுப்பாண்டி’ன்னு பேரு வைச்சிக்கிட்டே?”

ஜொ: “அண்ணே! அது நானா வைச்சிக்கிட்டே பேரு இல்லிங்கண்ணா? அது மக்களா எனக்கு கொடுத்த பட்டமிண்ணா? அது நான் செய்யும் சமுதாயபணிக்கு மக்களா கொடுத்த வெகுமதியா நினைச்சு ஏத்துக்கிட்டேன்”

க:” ஆமாம் இவரு பெரிய சமுதாயகாவலரு? டேய் கூடைமண்டையா! நீ பண்ணுறது சேவையாடா? வார்த்தையை கேட்டா ஜீரணிக்கிறமாதிரி பேசுங்கடா”

ஜொ: “கிரேட் இன்சல்ட்! அண்ணே வேற கேள்வி கேளுங்கண்ணே?”

க:” ஏண்டா மண்டையா ஃபீல்’ஆ பண்ணுறே? பாவம்’டா அந்த ஃபீல், அதை விட்டுறா? ஆராய்ச்சியெல்லாம் பண்ணுறேன்னு சொல்லிட்டு நாலஞ்சு கட்டுரையெல்லாம் போட்டுருக்கீயே? அதை சப்மிட் பண்ணி லண்டன் யூனிவர்சிட்டியிலே டாக்டரு பட்டமா வாங்கப்போறே?”

ஜொ:“அண்ணே என்ன இப்பிடி கேட்டுபிட்டியேளே? நான் ஆராய்ச்சி பண்ணி போட்டதுக்கு மக்களே எனக்கு டாக்டரு பட்டம் குடுத்துட்டாங்க.. எதுக்கு லண்டன் யுனிவர்சிட்டியெல்லாம்? நான் வரைஞ்ச கட்டை சில குறிப்புங்கிறே பதிவுக்காக அமெரிக்கன் யூனிவர்சிட்டியிலே கெளரவடாக்டர் பட்டம் குடுக்கவந்தாங்க! நாந்தான் ஓவரு விளம்பரமெல்லாம் ஒடம்புக்கு ஆவாதுன்னு வேணாமின்னு சொல்லிட்டேன்!”

க: “அடேய் தண்ணிக்குள்ளே முக்கியெடுத்த பஞ்சுமிட்டாயி மண்டையா! பொய் சொன்னாலும் பொருந்துறமாதிரி சொல்லு? அது என்னாடா எல்லா பித்தளைகாரங்களுக்கு வாறத சந்தேகம் ஒனக்கு எப்பிடி வந்துச்சு, அதிலே எதுக்காவது உருப்படியா பதில் கிடைச்சதா?”

ஜொ: “அண்ணே! அது கோடிக்கணக்கான ஆம்பிளைச் சிங்கங்கள் மனசிலே இருந்துச்சு, அதை நான் எல்லாருக்கும் பொதுவா இருந்து கேள்விகணைகளை தொடுத்து பார்த்தேன்?”

க:“அடேய் கிபோர்ட் மண்டையா? கிணத்துக்குள்ளே கல்லை தூக்கிப்போட்டுந்தேன்னா ஒரு சொட்டு தண்ணியாவது ஒன்னோட முஞ்சிலே தெரிச்சிருக்கும், ஆனா நீ கேட்ட கேள்விக்கு ஒன்னாவது விடை கிடைச்சதா? அதுக்கு பதிலா ஒன்னாருவா ஆமவடையை வாங்கி தின்னுட்டு போயிருக்கலாமில்லே நீ?

ஜொ: “அண்ணே அதுக்கு நானெல்லாம் அசந்தேனா? ஆபாசத்துக்கும் கவர்ச்சிக்கும் இருக்கிற வித்தியாசத்தை பத்தி ஆராய்ச்சிப் பண்ணினதுக்காக இந்தியாவிலே இருக்கிற யூனிவர்சிட்டியிலே டாக்டரு பட்டம் குடுக்கவந்தாங்க! வழக்கம்போலே நாந்தான் வேணாமின்னு சொல்லிட்டேன்!”

க: அடேயே போதுமிடா, அத்து தொங்குதுடா, விட்டுறுடா அந்த இத்து போன ரீல்சுத்துற வேலையே! ஏண்டா ஆட்டுக்கல் மண்டையா அஞ்சரைக்குள்ளே வண்டின்னு ஒன்னு எழுதுனேயே? அந்த தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இருந்துச்சா’ன்னு சொல்லு, ஏண்டா இப்பிடியெல்லாம் கலவரமா தலைப்பை போட்டு படிக்க ஓடிவர வைச்சிட்டு ஏமாத்திறீங்க?

ஜொ:“அண்ணே! நான் படத்தோட கதையே சொல்லிருந்தை விட நான் படம் பார்க்க போன கதைதானே நல்லா இருத்துச்சு, இம்புட்டு ஞாபகமா வச்சு எப்பிடிண்ணே கேள்வியெல்லாம் கேட்கிறீங்க? ஒங்க கடமையுணர்ச்சி புல்லரிக்க வைக்கிதுண்ணே?

க: “ஏண்டா அதை தேடி படிச்சு நீ எங்கயோ அடி வாங்கினதை எழுதி வைச்சிருந்தை பார்த்ததும் ஒன்னையே நேரா பார்த்தா தூக்கி போட்டு பந்தாடலமின்னுதான் இருந்தேன்..? ஆனா நீ போட்ட நாட்டுக்கட்டை ஆராய்ச்சி கட்டுரை நல்லா இருத்துச்சுடா ஜொள்ளுமண்டையா? ஆனா எப்பிடிரா நாளைக்கோ நாளைன்னக்கோ வேணுமின்னு நினைச்சு கூட பார்க்கமே ஜொள்ளு விட்டுக்கிட்டே இருக்கே?”

ஜொ: “அண்ணே இதைதான் ஜொள்ளானந்தா ஜொள்ளு விடறவன் எல்லாம் கெட்டவனும் இல்லை ஜொள்ளு விடாதவன் எல்லாம் நல்லவனும் இல்லை’ன்னு ஜொள்ளீருக்காரு, அவரு ஜொள்ளுரையை பின்பற்றுபவன் நானு ”

க:“பின்பற்றுபவன்,ஊக்குபற்றுவன்னு ஏதாவது உளறுனே அப்பிடியே வந்து காதை கடிச்சிபிடுவேன், ஏண்டா வேகாத முட்டை மண்டையா? அடிபட்டு உங்கப்பா ஆஸ்பத்திரில படுத்து கெடந்தாருன்னு சொன்ன, அந்த நேரத்துலகூட நர்ச சைட் அடிக்கறயே நீயெல்லாம் என்னாதாண்டா நினைச்சிட்டு இருக்கே?

ஜொ:“அண்ணே ஒரு கடமைவீரனுக்கு அவனோட கடமைதானே முக்கியம்! எந்தவொரு நெருக்கடியிலும் தன்னோட கடமையிலிருந்தும் கடுகளவு கூட தடம் மாறக்கூடாதுன்னு பெரியவங்க சொல்ல கேட்டுருக்கேண்ணே? அதுதான்”

க: இஞ்சி இடுப்புன்னா என்னான்னு தெரிஞ்சு என்னந்தான் பண்ணப்போறே நீயி? ஏதோ பாட்டு எழுதன ஆளு ஒரு எதுகைமோனைக்கு எழுதினா அதை வைச்சி ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு திரியுறே? ஏண்டா குட்டிச்சுவரா போனவனே , குட்டி குட்டி‘ன்னு நூறு மொறை சொல்லிட்டு நாய்க்குட்டிய சொன்னேன்னு பசப்பினலே, உண்மைலயே நாய்க்குட்டியதான் சொன்னியா?”

ஜொ: “அண்ணே! அது நாயி இல்லிங்கண்ணா! பூனைங்கண்ணா!”

க:“ஆமாம் ரொம்பமுக்கியம், ஒன்னையெல்லாம் ஒரேநேரத்திலே எல்லாம் பேட்டியெடுக்க முடியாது போலே? இப்போ மணி நாலாக போவுது! இந்நேரம் காலேஜ்’லாம் விட்டு கிளியா வெளியா பறக்க ஆரம்பிச்சிருக்கும், போயி ஒன்னோட கடமையை ஆற்றிட்டு வா? நானும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு டீக்கடையிலே ஆத்துறமாதிரி ஒன்ன ஆத்துறேன் அப்புறமா?”

கவுண்டர் பிரேக் விட்டதும் பாண்டி வில்லிருந்து புறப்படும் அம்பென தன் களப்பணியாற்ற கிளம்புகிறார்……

.... இங்கே பதியப்பட்டது இராம் | 15 மறுமொழிகள் »

ஹோலியா???

பதிந்தவர் vavaasangam மேல் மார்ச் 2, 2007

நம்ம ஊர்ல சோறு- அவிங்க ஊர்ல ரொட்டி

நம்ம ஊர்ல சாம்பாரு- அவிங்க ஊர்ல பன்னீரு

நம்ம ஊர்ல அரைக்கீரை- அவிங்க ஊர்ல பாலக்

நம்ம ஊர்ல வேட்டி- அவிங்க ஊர்ல பைஜாமா

நம்ம ஊர்ல காஞ்சிபுரம் பட்டு- அவிங்க ஊர்ல சுடிதாரு

நம்ம ஊர்ல அச்சம், வெட்கம், நாணம், பயிர்ப்பு – அவிங்க ஊர்ல அச்சம் மட்டும்தாங்க

நம்ம ஊர்ல முத்தம்- அவிங்க ஊர்ல சும்மா

நம்ம ஊர்ல சர்தார்ஜி- அவிங்க ஊர்ல மதராஸி

ஏன் இவ்வளவு வித்தியாசம்.. ஏன் இவ்வளவு இடைவெளி

நம்ம ஊர்ல மஞ்ச நீராட்டு- அவிங்க ஊர்ல ஹோலி

இவ்வளவுதான் நாங்க சொல்ல வந்தது.

அதனால் எல்லாரும் தண்ணீ அடிச்சு, தப்பா நினைக்கப்படாது, கலர் கலரா தண்ணி அடிச்சு
பாங்கு குடிச்சு, சட்டைய எல்லாம் நாசமாக்கி

சந்தோசமா ஹோலி கொண்டாடுங்க” மக்கா

கிழே இருக்கிறத copy பண்ணி Browser Address bar’லே போடுங்க…. :)

javascript: i=0; c=["red","green","blue","yellow","magenta","orange","black","cyan"]; a=document.links;setInterval(‘i++;a[i % document.links.length ].style.color=c[i % c.length]‘,10);void(0); alert(“‘Dear friend, wish you a Very HAPPY HOLY’,\ ..******..”);

.... இங்கே பதியப்பட்டது இராம் | 13 மறுமொழிகள் »

டவுசர் பாண்டி (vol-2)

பதிந்தவர் vavaasangam மேல் பெப்ரவரி 16, 2007

காதலர்தினம் ஒரு வழியா முடிச்சுபோச்சு, காதலன் காதலிக்கிட்டே பேசுறதும், காதலி காதலன்’கிட்டே பேசுறதும் பார்க்கிறப்போ ‘அப்பிடியே நம்மையறியாமே உள்ளுக்குள்ளே ஒன்னு பொங்கி வந்து அவனுகளை தலைமுடியை பிடிச்சு நறுக் நறுக்குன்னு நாலு குட்டு வைக்கணும் போலே தோணும். வீட்டுலே உட்கார்ந்து எழுதி வந்து மேடையிலே பேசுறமாதிரி பேசிட்டு திரிவானுக… அதுவும் நம்மளை மாதிரி காஞ்சுபோன கேஸ்களுக்கு அவனுக பேசுறத கண்டா அப்பிடியே பத்திட்டு வரும், அதாவது நம்மளை மாதிரி’ன்னு சொன்னது காதலர் தினத்தை அன்பர் தினம் , அதிசயமாய் வேலை பார்க்கும் தினமா கொண்டினவங்களுக்கு தான் சொல்லுறேன். வேற யாரும் டென்சன் ஆகவேணாம்….!!!!!

லவ் பண்ணிட்டு திரியறவயங்கே கூட ஆளுக்கு ஒருத்தர் துணை ஒன்னு இருப்பாய்ங்கே… அப்பிடி உட்கார்ந்து கிடந்த நம்ம டவுசரு பாண்டி சொல்லுறத கேளுங்க.


“எங்கவீட்டுலே யாராவது பொண்ணுக கூட பேசிட்டு இருக்கிற பார்த்தா பிரச்சினை ஆகிறும்.. ஸோ கொஞ்சம்கூட வாடா! நாமெல்லாம் இருந்தா கூட்டமா சேர்த்து கும்மாளம் போடற மாதிரி இருக்கும்’ன்னு சொல்லி கூட்டிட்டு போறீங்களே, உனக்கு அங்கே துணை இருக்கு, எனக்குன்னு யாராவது இருக்காங்களான்னு நினைச்சி பார்த்தீங்களாடா வீங்கி போன அரவிந்தசாமிகளா?”

“டேய்! இன்னிக்கு எனக்கும் அவளுக்கும் பெரிய சண்டை’டா! அவளை திட்டிட்டு வந்துட்டேன்! இப்போ என்ன ஆனாளோ? சாப்பிட்டாளா? தூங்குனாளோ?? இப்பிடி பல வகையா திங்க் பண்ணீறீங்களே..அவிஞ்சு போன அடுப்புலே வெந்து போன சாமிகளா? ஒங்ககூடவே குரங்கு குட்டியாட்டம் திரியுற எங்களுக்கு எப்பாவது வடையும் டீயும் வாங்கி தரனுமின்னு யோசிச்சுருக்கீங்களடா போண்டா தலையனுகளா?”

“ஊரெல்லாம் தொத்து வியாதி பரவிறுக்கே! நம்ம பயப்புள்ள’க்கு என்னாச்சோன்னு பார்க்கவந்த இடத்திலேயும் “ரெண்டு மூணு நாளா அடிச்ச காயச்சலிலே வெளியே எங்கயும் போகமுடியலை! அவளையும் பார்க்கமுடியலையே? ஐயோ ஐயோ’ன்னு கதருற ஒங்களை எல்லாம் ஏண்டா சிக்கன்குனியா டைனோசர் வந்து கடிச்சு வைக்கலை??”

“நம்ம பண்ணுற லவ்’லே எப்பாவது அடி கிடி வாங்க வேண்டியாதிருந்தா இந்த பயப்புள்ளயும் வாங்கட்டுமின்னு கூட்டிட்டு போறே பாசக்கார மச்சானுகளா!… ஊரோட ஒத்து வாழனுமின்னு பழமொழிக்கு ஏத்தமாதிரி அடிக்க வர்றவங்களோட சேர்த்து நாங்களும் குடுப்போமிடா எண்ணை சட்டியிலே வெந்து எந்திரிச்ச கோழிமண்டயனுகளா”

.... இங்கே பதியப்பட்டது இராம் | 34 மறுமொழிகள் »

கவுண்டர் Devil Show – வெட்டிப்பயல்

பதிந்தவர் vavaasangam மேல் பெப்ரவரி 7, 2007

கவுண்டர் நடத்தும் டெவில் ஷோ நம்ம வெட்டிப்பயல் பதிவில் படித்து இருப்பீர்கள். கவுண்டர், சினிமா நட்சத்திரங்களிடம் கேள்வி கேட்டு அலுத்துவிட்டபடியால் ஒரு மாற்றாக நம்முடைய வலைப்பதிவர்களிடம் அவருடைய பேட்டியை தொடரலாமின்னு முடிவு செய்கிறார். எப்பவும் அடுத்தவருக்கும் நமக்கு நாமே ஆப்புகள் பலவகையாய் வைத்து பழகிய சங்கத்து சிங்கங்களிடம் ஆரம்பிக்கிறார். முதன்முதலாக கவுண்டரிடம் சிக்கி சின்னபின்னாவென ஆனவரை பற்றி அறிய மேலும் படியுங்கள்.

கவுண்டர்:- வாங்க சங்கத்து இளையதளபதி, பாஸ்டன் புயல் , அறிவுச்சுடர், வெட்டிப்பயல் பாலாஜி அவர்களே!

வெட்டிப்பயல்:- என்ன வரவேற்ப்பெல்லாம் பலமா இருக்கு! எதுக்கு இவ்வளோ அடைமொழிகள் எல்லாம்??

க: பிளாக்கர் மண்டயா? நீதானடா இப்பிடியெல்லாம் சொல்லி வரவேறங்கன்னு கோமுட்டி தலையன்கிட்டே சொல்லிவிட்டுருக்கே! அதுக்கு வேற அவனுக்கு முருக்கு பொட்டலம் லஞ்சமா வேறே குடுத்திருக்கே! இங்கே வந்து நல்லவன்மாதிரி ஆக்ட் குடுக்கிறீயா பல்புமண்டயா?

வெ: சரி சரி விடுங்க… யாரும் பார்க்கலை! அப்பிடியே மெயிண்ட்ண் பண்ணிக்குவோம்.

க:அப்பறம் என்னடா உன்னை எல்லாரும் வெட்டி வெட்டினு சொல்றாங்க?

வெ: அது என்னோட ப்ளாக் பேருங்கண்ணா!

க: எதுக்குடா அந்த பேரை வெச்ச?

வெ: வெட்டியாத்தானே இருக்கோம் ஏதாவது உருப்படியா பண்ணுவோம்னு ஆரம்பிச்சாதாலஅந்த பேரையே வெச்சிட்டேன்!

க: ஓ!!! அப்படினா உன்னை பொருத்த வரைக்கும் வெட்டியா இருக்கவங்க தான்ப்ளாக் எழுதறாங்கனு சொல்லற!

வெ: தெய்வமே! நான் அப்படி சொல்லலை… மத்தவங்க எல்லாம் பல வேலைகளுக்கிடையேசெய்யும் போது நாம வெட்டியா இருக்கும்போது ஏன் செய்யக்கூடாதுனுஆரம்பிச்சதால அந்த பேரு…

க: ஹீம்! சரி என்னந்தான் வேலை பார்க்கிறேன்னு சொல்லு?

வெ: நான் என்ன பண்ணுறன்னு இந்த உலகத்துக்கே தெரியுமே?

க: ஆமாம் இவரு.. பெரிய அமெரிக்க ஜனாதிபதி புஷ், இவரை ஊர்உலகத்துக்கே தெரியுது, அரை வேக்காடு மண்டயா, என்னப்பண்ணுறேன்னு ஒழுங்க சொல்லு, இல்லே அப்பிடியே வந்து காதை கடிச்சி வைச்சிருவேன்!

வெ: நானு சாப்ட்வேர் இஞ்சினியர், வேலை நிமித்தமா பாஸ்டன்’லே தங்கியிருக்கேன்.

க: உன்னோட ஹாபியை சொன்னே…. உன்னோட மெயின் வேலை என்னாது?? அதை சொல்லு?

வெ: அப்பிடி மடக்கிறீங்களா? கதை எழுதுவேன், கவிதை எழுதுவேன், கட்டுரை எழுதுவேன், படவிமர்சனம் எழுதுவேன்.

க: டேய் டவுசர் மண்டையா, நிப்பாட்டுடா! மனசிலே என்ன தலைகாணி உறையை அப்பிடியே முழங்காலு வரைக்கும் போட்டு அலையிற எழுத்தாளன்னு நினைப்பா?

வெ: அய்யோ! அதெல்லாம் இல்லீங்கண்ணா! ஏதோ சும்மாயிருக்கிற நேரத்திலே ஏதோ எழுதுறேன், அவ்வளவுதான்!

: ஏண்டா டேய்! நீ ஏதோ அரைவேக்காட்டுதனமா நீ எதாவது பேசுறது ,செய்யுறதையெல்லாம் கூட வேறே எவனோ ஒருத்தன் இதெல்லாம் பண்ணுவான், அவனுக்கு கூட நாங்க கோழின்னு பட்டப்பெயர் வச்சு கூப்பிடுவோமின்னு சொல்லி அதை அப்பிடியே இங்கே எழுதி படிக்கிற மக்களை ஏமாத்துறே இல்லே???

வெ: ஐயோ! இப்பிடியெல்லாம் யாருங்ண்ணா உங்களுக்கு தப்புதப்பா தகவல் சொன்னது???

: உன்னை பத்தி தகவல் சொல்ல ஏஜெண்ட் 007′ஆ வருவான், நீ இப்போ பேசுறப்பவே தெரியலை, அந்த கோழி நீதான்னு??

வெ: அது நானில்லை! நானில்லை!

க: நானில்லை? நரியில்லைன்னுட்டு? ஏண்டா பாப்பாயி மண்டயா! நீ பெங்களூரூலே இருக்கிறப்போ, டெய்லி பாயை பிடிச்சி பிராண்டுறது, சுவத்தை பார்த்துக்கிட்டே “எக்கட உந்தி, நம் அம்மாயி” பொலம்பிக்கிட்டே இருப்பியாமே!! அதை பாஸ்டனிலே சும்மா உட்கார்த்திருக்கிற நேரத்திலே கதையா எழுதிட்டே இல்லே??

வெ: கவுண்டருண்ணா, நீங்களும் என்னை சந்தேகப்படுறீங்க? அது என்னோட கற்பனை கதைங்கண்ணா!

க: டேய், பீட்டாதலையா! இதையே எத்தனை பேருக்கிட்டே சொல்லிட்டு திரிவே, அதெப்பிடிடா தூறல் கதையிலே ஏரியா, பஸ்ரூட் எல்லாமே எழுதுனே இல்லே, உனக்கு அதெல்லாம் முழுசா தெரிஞ்சாதானே உன்னோட டைரியிலே எழுதமுடியும்??

வெ: நான் உத்தமன் தான்கிறதே புருப் பண்ண என்ன செய்யணும், சொல்லுங்க?

க: ஆமா இவரு பெரிய நடிகர்திலகம் நடிச்ச உத்தமபுத்தரு, எல்லாத்தையும் எத்தனை நாளுதான் ஏமாத்தப்போறீயோ?? தொரை வெறும் தெலுங்கு படந்தான் பார்ப்பிங்களா, அதை பார்த்திட்டு வந்த அடுத்த அஞ்சுநிமிசத்திலே அதுக்கு ஒரு விமர்சனம் எழுதுறது?

வெ: அது ஏன்ன்னு கூட நான் சொல்லிருக்கேன், வேணுமின்னா என்னோட பொன்னான பதிவை படிச்சிப் பாருங்க, உங்களுக்கே காரணம் புரியும்?

க: அடடேய் எலமண்ட் தலையா! படம் பார்த்ததும் இல்லமா அதெப்பிடியெல்லாம் நக்கல் பண்ணி ரவுசு விடுறே, ஒரு சினிமா படமெடுக்க எவ்வளோ கஷ்டநஷ்டமிருக்குமின்னு தெரியுமா?

வெ: அண்ணே, சினிமா எடுக்கிற கஷ்டநஷ்டம் பத்தி எனக்கு தெரியாது, ஆனா அதை போயிபார்க்கிறப்போ எங்களுக்கு கஷ்டமும் , காசு நஷ்டமும் தான் வருது!

க: அடேய் ஆட்டுகல் மண்டையா! என்கிட்டே ரவுசா? அது ஏண்டா கரம் வைச்சு கேப்டனை வம்பிழுக்கிறே??

வெ: அய்யோ! நான் தெரிஞ்சே எந்த தப்பும் பண்ணுறதில்லை.. அதெல்லாம் தெரியாமே நடக்கிறதுங்ண்ணா?

க: அடேய் ! அடேய் ! அப்போ நீ கேப்டனை கலாய்க்கிறது தெரியாமே நடக்கிறதா??

வெ: அப்பிடிலீங்கண்ணா! நான் கேப்டன் படம் பார்க்கிறது என்னை அறியாமே நடக்கிற தப்புங்கண்ணா? அந்த தப்பை சரி செய்யிறதுக்கு அதை பத்தி கலாய்ச்சிட்டா சரியா போயிருமில்லை???

க: அடேய்! அவரு பைட்’லே காலை சுழட்டி அடிக்கிறது தெரியுமில்லே…??

வெ: ரொம்ப தாங்ஸிண்ணோவ், அடுத்த பதிவுலே அவரோட பைட் ஸ்டைல் வச்சு கும்மிறலாம்!!

க: கும்மிறீயா, அவரை நேரா பார்த்தா அப்பிடியே பம்மிருவே? ஏண்டா சினிமா படமெடுக்க எவ்வளோ கஷ்டமின்னு சொன்னா? நக்கல்நையாண்டியா பண்ணுறே?

வெ: நாங்க பிளாக் எழுதுறதுக்கு எவ்வளோ கஷ்டப்படுறோம், ஆனா நீங்க அதை வந்து இப்போ நக்கல் பண்ணலையா ,அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு , போங்க…!!

.... இங்கே பதியப்பட்டது இராம் | 80 மறுமொழிகள் »

டவுசர் பாண்டி.. பராக்…பராக்…

பதிந்தவர் vavaasangam மேல் பெப்ரவரி 2, 2007

நேத்திலிருந்து காதல் மாசம் ஸ்டார்ட் ஆகிருச்சு, ஆனா நமக்கு காதலே இன்னும் வரலை. வந்தாதானே அதெல்லாம் கொண்டாடமுடியும், இவிங்கங்களோட சேர்த்துக்கிட்டு கும்மாளம் அடிக்கலாம். அது எவிங்க தெரியுமா, வருத்தமே படமாட்டோமின்னு சொல்லிப்பிட்டு பிளாக்கர் பிரச்சினைக்காக லபோதிபோன்னு குதிச்சு அம்புட்டு பேத்தையும் அல்லோகலப்படுத்தி ஸ்கூப் நீயுஸ் போடவைச்சு அதை அப்பிடியெல்லாம் இல்லைன்னு சொல்லி அன்னிக்கு அதை நசநசன்னு ஆக்கி அப்பாப்பா…..

சரி விடுங்க மேலே இருக்கிறதலே உங்களுக்கு என்னா புரிஞ்சாலும் பரவாயில்லை. இது ஒரு விஷயத்தை ஈயடிச்சான் காப்பியடிச்சது மாதிரி ஒன்னு பண்ணமின்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை. அதை இப்போ நிறைவேத்த போறேன். முன்னாடி ஆனந்தவிகடனிலே பராக் பாண்டின்னு ஒரு பகுதி வருமில்லை. இப்போ என்ன காரணமோ நிப்பாட்டிட்டாங்க. அதை நம்மளை மாதிரி காதல் வராத ஆசாமிகள் புலம்பினமாதிரி பொலம்பவிட்டுற வேண்டியதுதான், ஆனா அவரு இங்கே தன்னோட பேரை பராக் பாண்டியிலிருந்து டவுசர் பாண்டின்னு மாத்திட்டாருப்பே.

ஏண்டா அங்க,இங்கன்னு அலம்பலை கொடுத்து எப்பிடியாவது ஒத்தை சொத்தை பிகரையாவது கரெக்ட் பண்ணி, வாழ்கையிலே நாமல்லும் வாலன்டெஸ் டே கொண்டாலாமின்னு பார்த்தா அதுக்குள்ளே டுலெட் போர்டு பார்த்ததும் ஒடனே அட்வான்ஸே போட்டு கெரயத்தை முடிச்சிரீங்களே.. எங்கேயிருந்துடா மொளைக்கிறீங்க ரீஸிஸ்டர்ஆபிஸ் மண்டையனுகளா?

அவனவன் சோத்துக்கு அல்லாடுறப்போ,இப்போதான் மட்டன் பிரியாணி தின்னுட்டு வந்தேன்னு சொல்லி வெறுப்பேத்துற கணக்கா, இந்த வாலன்டெஸ் டே’க்கு நாங்க அங்க போறோம், இங்க போறோம்மின்னு சொல்லி ஏண்டா வெறுப்பேத்தீருங்க பஞ்சர்வாயனுகளா?

எங்கப்பாரு குடுக்கிற டீக்காசிலே செல்லுக்கு ரீசார்ஜ் பண்ணினா, “மச்சான் ஒரெயெரு கால் பண்ணிட்டு தந்துறேன்”னு சொல்லிட்டு ஒன்னை முக்கா மணி நேரமா “ம்ம், சரி, சொல்லு..ஒகே” னு இத்துப்போன ரீக்கார்ட் செவசெவன்னு இராகம் பாடுறமாதிரி பேசி எல்லா காசையும் ஒப்பேத்திறீங்களே. எந்த புத்து’லேயிருந்துடா புறப்படுறீங்க செத்தபாம்புகளா?

அடேய் என்னோட சக்திக்கு மீறீ இந்த பைக்கை வாங்கி தந்துருகேன்னு அப்பாருக அதை எடுக்கிறோப்போ ஓயாமா சொன்னதக்கூட செவன்னேனு கேட்டு வாங்கிட்டு வந்தா, டேய் அஞ்சு நிமிசத்திலே வந்துறேன்னு சொல்லி வாங்கிட்டு போயி அதுகளே கம்ப்யூட்டர் கிளாஸிலே டராப் பண்ணிட்டு உங்க கத்திரிகாயையும் டெவலப் பண்ணிரீங்கீளே.. வால் மொளைக்காத மாருதிகளா?

.... இங்கே பதியப்பட்டது இராம் | 34 மறுமொழிகள் »

களை கட்டும் "தல" கச்சேரி

பதிந்தவர் vavaasangam மேல் டிசம்பர் 10, 2006


தலயின் தீர்க்கமான முடிவினில் சங்கம் மொத்தமும் நடுங்கி நிற்க…

“போடா போடா புண்ணாக்கு.. போடாத தப்புக் கணக்கு..” பாடலைத் தல சங்கராபரணம் ஹீரோ ரேஞ்சுக்கு ராகமாய் முணுமுணுத்தப் படி தன் அறைக்குப் போனார்.

அதுக்கப்புறம் தல பலவாறு யோசிச்சி யோசிச்சி நம்ம பயலுவே என்னமோ பெரிய பெரிய பேரா சொல்லுறானுவே. நமக்கு தமிழே விட்டா வேறே பாசை எதுவும் தெரியாது. நமக்கு தெரிஞ்ச தமிழில்லாத ஒரு பாட்டு சிங் இன் த ரெயின்’தான். இப்போ வேறே என்ன பண்ணுறது, என் இனிய எதிரி வேறே ஒன்னோட கொரலு நல்லாயிருக்குன்னு வேறே சொல்லிட்டாப்பலே..! அதுக்காக இந்த சீசன்லே கச்சேரியும் பண்ணிரலாமின்னு சபா ஒன்னுலே வேறே துண்டை போட்டு இடத்தே வேறே பிடிச்சி குடுத்துருக்காரு. நமக்கு நல்லாதான் பாடவருமின்னு உலகத்துக்கே தெரியும். ஆனா இது ஒரு சத்தியச்சோதனையா ஆகிறுமே. நல்லா பாடலேன்னா மொதல்லா கல் கொண்டு எறியறப் பயலுவே நம்ம சங்கத்து சிங்ககள்தான், அதுவே நல்லா இருந்தா போஸ்டர் அடிச்சு ஊரெல்லாம் ஒட்டுறது பத்தாதுன்னு வெள்ளைமாளிகையிலிருந்து ஐநா சபை வாசல் வரைக்கும் ஒட்டி அமர்க்களப்படுத்துவானுக.!

அடபாவி அடபாவி என்னை இப்பிடி தனியா புலம்ப வச்சிட்டானுவேலே!! சரி அவிங்ககிட்டே கேப்போம் ஏதாவது ஐடியா இருக்கான்னு??

தல தன் அறையிலிருந்து மின்னலென வெளிவருகிறார். அங்கு வெட்டி கணக்கு லெட்சரில் ஏதோ எழுதி கொண்டிருப்பதை பார்க்கிறார்.

“ஏலேய் கட்டரு, என்னா எழுதுறே?”

“தல, அ.வா’வுக்கு வரவேறப்புக்கு ஆன செலவே பற்று வைக்கிறேன்!”

“ஓ எம்பூட்டு”

“கொஞ்சம்தான் எவ்வளவு அதிலே பணமின்னு இருந்துச்சோ அதே விட 15000 ருபா கூட “

“அடபாவிகளா, சங்கத்து கணக்கிலே இருந்த பணத்தே தீர்த்ததும் பத்தமே அதிலே நஷ்ட கணக்கு வேறே எழுதுறீங்களா? அப்பிடியென்னா செலவு பண்ணீங்க??”

“சவுண்ட்பார்ட்டிக்கு ஒரு ஆளு உசரத்துக்கு ஸ்பீக்கரு கட்டினோம்.”

“என்னாது? ஸ்பீக்கரு பெட்டியா? வெளியே ரெண்டு கொழா ரேடியாதானாய்யா கெடக்கு? அதிலே ஒன்னுலே கொண்டையே வேறே காணோம்? ஆனா உங்களே மாதிரி புரட்டு கதையை சொல்லுறதுக்கு அடிச்சுக்க ஆளே கிடையாதுப்பா!”

“ஏன் தல உள்ளேதானே இருந்தீங்க? இப்போ எதுக்கு வெளியே வந்து சவுண்ட்?” ன்னு போர்வாள் எகிற

“கேட்டியா ஒரு கேள்வி.. ரைட்டுதான் அந்த கேள்வி! செவனேனு தானய்யா இருந்தேன். நான் எந்த வம்பு தும்புக்காவது போயிருக்கேனா..சொல்லு ? இது டிசம்பரு மாசம் நாமெல்லும் கச்சேரி வச்சிருவோமின்னு எனக்குள்ளே இருந்த சங்கீத ஆசையே தூண்டிவிட்டிங்க.. இப்போ அது அனலா தகிச்சு தீயா கொழுந்து விட்டு எரிய ஆரம்பிச்சிருச்சு.”

சட்டென்னு ஏதோ ஞாபகம் வந்ததாய் தேவ்.. தலையே கோணலா திருப்பி விட்டத்தே வெறிக்கிறார்.

“ஆமா தல.. அந்த கச்சேரிலே விளம்பரம் செய்யினுமின்னா சென்னை கச்சேரியே அணுகவுமின்னு நோட்டிஸ் பண்ணினேன், ஆனா இப்போ அதிலே மா மன்னாரு சாப்ட்வேர் கம்பெனி வேறே போயிட்டிருக்கு!”

“ராஸ்கல்! சங்கம் டெக்னாலாஜிஸ்’க்கு போட்டி கம்பெனி ஆரம்பிக்கிறீயா நீயி?”

“அதெல்லாம் இல்லே தல… சங்கத்து டெக்னாலாஜிஸோட இணைந்தே இதுவும் நடக்கும்.”

“என்னோமோ போ ஒன்னை மாதிரியே அதுவும் பிராடுத்தனம் பண்ணமே இருந்தா சரி!”

“தல ஒனக்கு இப்போ என்னா வேணும்?”ன்னு கோபமாய் தேவ் கேட்க

“எனக்கு குச்சி மிட்டாயி வேணும்! ஏலேய் அப்போயிருந்து என்னா சொல்லிக்கிட்டு இருக்கேன்னு தெரியலேயா? நான் கச்சேரிலே பாட்டு பாடணும் அதுக்கு நீங்கெல்லாம் ஒரு ஐடியா கொடுப்பீங்கன்னு வந்தேன்.”

“தல ஒன்னோட குலப்பெருமையே சொல்லுற Sing the Rain பாட்டே தமிழிலிலே முழிபெயர்ந்து அதே அப்பிடியே பாடிருவோமா.” ன்னு சிபி கேட்க, தல சட்டென்னு டென்சனாகி, சிபியே முறைக்க,சிபி தலயே முறைக்க,தல சிபியே முறைக்க,சிபி தலயே முறைக்க,தல சிபியே முறைக்க, இப்பிடியே முறை வச்சு முறைப்பு படலமா இருக்கிறப்போ தீடீரென்னு ஒரு கொரல், குடுத்தது கட்டரு..

“தல, தள நீங்க ரெண்டு பேரும் முறைச்சத யாராவது சினிமாகாரன் பார்த்திருந்தா ரெண்டுபேரும் சேர்ந்து போட்டி சாங் போட்டுறுப்பான்! பாட்டுக்குள்ளே ரெண்டு பேரும் சண்டை, வாக்குவாத போருன்னு கொண்டு வந்திருப்பாங்க”

“அயோக்கிய அப்ரெண்டிஸ்! இங்கே என்ன நடக்கிதுன்னு தெரியமே என்னா பேச்சு பேசுறே? இதுக்குதான் ஓவரா தெலுங்கு படம் பார்க்காதேன்னு சொல்லுறது, இது ஒரு பார்வை பரிமாற்ற போர்முறை, இதே நீ சீக்கிரமே கத்துக்குவே!”

“தல ஒன்னு பண்ணுவோமோ! நீங்க மேடையிலெ ஒட்கார்ந்து பாடுறமாதிரி ஆக்ட் கொடுங்க, நான் பின்னாடி இருந்து டேப்ரிக்கடருலே பாட்டு போட்டு விடுறேன்.”ன்னு பாண்டி சொல்ல

“ஏலேய்! தெரியுமில்லெய் ஒன்னோட வேலை என்க்கிட்டே ஆவாதிடி, யாரவது அங்கிட்டு ஒரு பொண்ணு போச்சின்னா அது பின்னாடியே நீப்பாட்டுக்கு போயிட்டேனா நான் இங்கிட்டு ஒரெ பாட்டே திரும்ப திரும்ப பாடறமாதிரி அவிங்ககிட்டே மாட்டிக்கிட்டு ஒதை’தான் வாங்கணும்.”

“தல ஒன்னு பண்ணலாம்! ஏதாவது ஒரு பாட்டு வாத்தியாருக்கிட்டே போயி செவனெனு பாட்டு கத்துக்கிட்டு வந்திரு, அப்பிடியே ஃபிரஷ்’ஆ நாலு பாட்டு பாடி அப்ளாஸ் வாங்கிரலாம்”

“யாருப்பா இது விவ்’ஆ., ம்ஹீம் நான் கும்பக்கோணத்துக்கு வழிக் கேட்டா கொட்டைப் பாக்கு ரூபாய்க்கு அஞ்சுன்னு ஏத்தமா பதிலே சொல்லுறே! ஏலேய் அப்ரெண்டிஸ்களா நீங்களாவது ஒரு ஐடியா சொல்லுங்க சாமீகளா”

“தல எம்.ஜீ.ஆரோட நாலு பாட்டு, சிவாஜியோட நாலு பாட்டு அதெய்யலாம் மேடையிலே பாடிரு, அதெல்லாம் இப்போ இருக்கிற ஆளுகளுக்கு சரியா தெரியாது, அதெல்லாம் ஒன்னோட பாட்டுன்னு நினைச்சிருவாங்க! என்னா சொல்லுறே” இது கட்டர்

“இது நல்ல ஐடியாதான், ஆனா சிலப்பேருக்கு அந்த பாட்டெல்லாம் தெரியும், ராயல் நீ என்ன சொல்லுறே??”

“தல, பழைய பாட்டுன்னா யாருக்குமே தெரியமே இருக்கிறது மகாலிங்கம்,தியாகராஜர் பாகவதர் பாட்டெல்லாம்தான். நீ அதேவே பாடிறலாம்!”

“ரைட்டேய், இதெல்லாம் மைண்ட்’லே வச்சிருக்கேன்.சரி நான் கச்சேரிக்கு போட்டுக்கிறதுக்கு டிரெஸ் வாங்கிட்டு வந்திய்யா ராயலு?”

“ம் இருக்கு தல! இந்த மஞ்சபையிலே சுருட்டி வைச்சிருக்கேன், இந்தா பாருங்க!”

“அடபாவி அப்ரெண்டிஸ், இது கலராய்யா? ஓரத்திலே படுத்து கிடக்கிற நொண்டி மாடுகூட என்னை தேடி வந்து நச்சுன்னு முட்டிட்டு போகுமிடா? ஏண்டா சட்டைன்னா மஞ்சகலரும்,உள்சட்டை கருஞ்செவப்பு கலரு, பச்சை கலருலே வேட்டியும்தான் கிடைச்சதா?”

“தல நீதானே சொன்னே? எதுவுமே ஒரு அட்ராக்டா செய்யினுமின்னு? அதுதான் போடுற டிரெஸிலே அட்ராக்டிவான கலரா தேடி கண்டுப்பிடிச்சேன்.!”

“சரி அதெல்லாம் ஓகே! யாராவது ஐடியா சொல்லுங்கய்யா?? எப்பிடி மேடையிலே பாடுறதுன்னு??”

“தல மேடையிலே ஏறி ஒனக்குன்னு இருக்கிற இடத்திலே உட்கார்ந்து, மைக்கே எடுத்து வாயை திறந்து பாடணும்!!”

“டேய் ராஸ்கல், ஒனக்கு வரவர ரொம்ப ஏத்தமா போச்சுலே பாண்டி! நான் என்ன கேட்டா நீ என்ன பதிலே சொல்லுறே? சுருதி சுத்தமா எப்பிடிய்யா பாடுறது? யாராவது சொல்லித் தொலைங்கய்யா சாமிகளா… சும்மா இருக்கிறவனே சொறிச்சு விட்டு வேடிக்கை பார்க்கிறதே உங்களுக்கெல்லாம் பொழப்பா போச்சுலே???”

“தல நான் ஒரு ஐடியா சொல்லுறேன்”ன்னு சிபி முன்னுக்கு வருக்கிறார்.

“ம் சொல்லு என்னருமை தளபதியே?”

“தல ஒரு வரியே நாலு அஞ்சு தடவை சும்மா திரும்ப திரும்ப பாடிக்கிட்டே இரு, அது போதும், அப்பிடியே கேட்கிறவங்களுக்கு ஒரு கச்சேரி கேட்கிற எபக்ட் வந்திரும். இதேமாதிரி செஞ்சேன்னு வை, ஒரு பாட்டே பாடி முடிக்க 15லிருந்து 20 நிமிசம் ஆகிறும், அப்பிடியே நாலுப்பாட்டுக்கு ரெண்டு மணிநேரமா இழுந்திரலாம். என்னா சொல்லுறே??”

“அதெல்லாம் சரிதான்! இப்போ என்ன பாட்டே பாடுறது? எனக்கு நல்ல குரல்வளம் இருக்கான்னு தெரியலே?”

“தல நீ பார்க்கதான் பென்சில்லே கோடு வரைஞ்சமாதிரி சரிரம்! ஆனா நீ பாடினா அது கட்டை சாரீரம்!”

“என்னாமோ தள! ஒன்னோட பேச்சே மலை மாதிரி நம்புறேன். இந்த ராகம்,தாளம்,பல்லவியோட பாடணுமே? அதுக்கு என்னா பண்ணுறது?”

“இப்பிடி பண்ணலாம்! கோவைக்கு ஒன்னோட ஹெலிக்காப்டருலே வந்துரு! நீயும் நானும் ராகம்,தாளம்,பல்லவிக்கு போயி ஒவ்வோரு ஷோ’வா பார்த்துட்டு படத்திலே இருக்குற நல்ல பாட்டெல்லாம் கச்சேரிலே வந்து சேர்த்து வச்சு பாடிரு! ஒவ்வொரு பாட்டுக்கு முன்னாடியும் ஒரு போர்டு’லே இது ராகமிலே பார்த்தது, தாளத்திலே பார்த்தின்னு சொல்லிறலாம்!!!”

“ஆனா ஒன்னே ஒன்னு தெரிஞ்சு போச்சு! உங்களளே எனக்கு ஒன்னத்துக்கும் சல்லிக்காசு’க்கு பிரயோசனமில்லன்னு நல்லவே தெரிஞ்சு போய்யா சாமிகளா??? போங்க போய் எனக்கு எப்பிடி ஆப்பு வைக்கலாமின்னு அமெரிக்காகாரன் அடுத்த நாட்டு மேலே குண்டு போடுறதுக்கு யோசிக்கிறமாதிரி பெரிய விஞ்ஞானிகளாட்டம் திங் பண்ணுங்க…”

தல இம்மாதிரி மனசொடிந்து பேசும் பேச்சைக் கேட்டு சங்கத்து சிங்கம்கள் அனைவரும் கவலையுறுகின்றனர்.

“தல நாமே ஒன்னு பண்ணலாம்! நமக்குதானே தெரியலே? வேறே யாராவது அதேபத்தி தெரிஞ்சவங்ககிட்டே கேட்டுப்பார்போமா?”

“ஆங்..பரவாயில்லேயே விவ், இம்பூட்டு நேரமா அமைதியா இருந்தாலும் நல்ல வாசகமா அதுவும் திருவாசகமாதான் சொல்லிருக்கே! இப்போதாய்யா எனக்கு நல்ல ஐடியா’வே வருது! நம்ம சங்கத்து தீரா தலைவி(வலி)யே காண்டக்ட் பண்ணுங்க.. இல்லேன்னோ அந்த விக்கிபசங்களே உசுப்பி விடுங்கய்யா?? அவங்க வந்து என்ன கர்ஜிக்கிறாங்கன்னு பார்ப்போம்… எனக்கு எப்பிடியாவது கச்சேரி பண்ணியே ஆவணும். ஐ வாண்ட் டூ இட் நவ்…

“தல இன்னோன்னு பண்ணலாம்? எனக்கு தெரிஞ்சு பெரிய பெரிய தலைங்கயெல்லாம் பாட்டு பாடி குழந்தைகளை கவர் பண்ணுவாங்க.. நீயும் குழந்தை குழந்தையா இருந்தாதான் பிடிக்குமின்னு சொல்லிறுக்கே?? அதுனாலே மொதல்லே குழந்தைகளை கவர் பண்ணு! அதுக்கப்புறம் கைப்பு அங்கிள்! கைப்பு அங்கிள்! உன் பின்னாடியே எல்லாரும் வந்திருவாங்க..”

“வேணாம் கட்டரு! நானெல்லாம் ஏற்கெனவே பெரிய தலையா ஆகிட்டேன். எனக்கு தெரியவேண்டியது ராகம்,தாளம்,பல்லவி’தான்… பார்ப்போம் அந்த விக்கிபசங்க எம்பூட்டு நாளைக்குள்ளே சொல்லிதாரங்கன்னு?? அவங்கதான் என்னா சந்தேகம் கேட்டாலும் தீர்ந்து வைக்கப்பாலேமே?? எனக்கு இப்போ மீஜீக்’லே பேசிக் நாலெச் வேணும்??”

தலயோட இந்த அறிவிப்பை கேட்டு சங்கத்து சிங்கக்கள் எல்லாரும் அமைதியாகிறார்கள். விக்கிப்பசங்கதான் பாவம் நம்ம தல கேட்கிறகேள்விக்கெல்லாம் எப்பிடிதான் சமாளிக்க போறாங்களா..!! அய்யோ.. அய்யோ!!!!

.... இங்கே பதியப்பட்டது இராம் | 37 மறுமொழிகள் »

கன்னிப்பதிவு (புது வ.வா)

பதிந்தவர் vavaasangam மேல் நவம்பர் 27, 2006

இடம்: பெங்களூரூ நேரம்: அதிகாலை 11.00

வெள்ளிக்கிழமை அதிகாலையிலே தீடீரென்னு நம்பரை இல்லாமே ஒரு அனானி போன கால்வந்திச்சுங்க… பயந்துதான் போனையே எடுத்தேன்.

“ஹலோ யாருங்க பேசுறது?”

“நான் தல கைப்புள்ள செகரட்டரி பேசுறேன்!”

“ஆகா அப்பிடியா! என்னா விஷயம்?”

“தல உங்களை பார்க்கிறதுக்காக இன்னிக்கு பெங்களூரு வர்றாரு!”

“என்னை எதுக்காக பார்க்க வர்றாரு?”

“அதே அவரு நேரா வந்து சொல்லுவாரு! சரி உங்க வீட்டுக்கிட்டே பெரிய கிரவுண்ட் இருக்கா??”

“எதுக்கு??? தல வந்ததும் அங்கே போய் ஏதாவது விளையாட்டு விளையாடுவாரா??”

“ஹலோ! நம்ம தல சாதாரணமான தலைவரா ??? அவரு பெரிய தலைவர்! அதுனாலே ஹெலிக்காப்படருலே வருவாருய்யா!! அதுக்குதான் மைதானம் இருக்கானு கேட்கிறோம்??? இருக்கா இல்லேய்யா? அது மட்டும் சொன்னா போதும்!”

“இருக்கும்மா! தாயே வரச்சொல்லு! இன்னிக்கு வெள்ளிக்கிழமை அதுனாலே நிறைய வேலை இருக்குங்க! சீக்கிரமா வந்து வேலையை முடிச்சிட்டு போயிட்டாருன்னா கொஞ்சம் நல்லா இருக்கும்!”

“சரி இன்னும் ஒன்றரை மணி நேரத்திலே அதாவது மதியம் 12.30 மணிக்கு வந்துருவார்… அவரு வர்றது ரொம்ப ரகசியமா இருக்கனும்! யாருக்கிட்டேயும் சொல்லிறாதே!!!”

“ஏங்க அவ்வளவு புரெடக்சன் தல’க்கு?”

“அதெல்லாம் அவரே வந்து சொல்லுவாரு!!! சரி போன் வைச்சிரு! தல கிளம்பிட்டாரு!!!”

“என்னா சொன்னீங்க? சரியா கேட்கலை?”

“கிளம்பிட்டாருய்யா..!! கிளம்பிட்டாருய்யா!!!”

போன் வைக்கப்பட்டதும் எனக்கு பரபரப்பு பத்திக்கிச்சு! எம்பூட்டு பெரிய தலைவரு வர்றாரு? அதுவும் என்னை பார்க்க வேறே வர்றாரு? வர்றதில்லாம் சரி அதுக்கு ஏன் அதிலே ரகசியம். இப்பிடியே சிந்திச்சுக்கிட்டே இருந்தேனா மறுக்கா இன்னொரு போன்! ஆனா அதுவும் வேறே நம்பர்.

“ஹலோ யாரு பேசுறது”

“சினனச்சாமி ஸ்டேடியத்திலே இன்னிக்கு மதியம் 12.20க்கெல்லாம் வந்திரு!!”

போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது! ஆகா மணி இப்பொ பதினொண்ணு! இங்கெயிருந்து கிளம்பி ஸ்டேடியத்துக்கு போறதுக்குள்ளே பாதி உசுரை போயிருமே! தல ஆகாயமார்க்கமா வந்து இறங்கிறதுக்குள்ளே, நாமே சாலை மார்க்கமா போய் சேர்றதுக்குள்ளே பாதி செத்து சுண்ணாம்பை ஆயிருவோம், ஊரா இது பக்கத்து தெருவுக்கு போறதுக்கு எழுபதிரண்டு சிக்னலு, ஒன்வேயி, ஸ்பிட்லிமிட்’ன்னு சட்டத்திட்டங்க.

இடம்: சின்னச்சாமி ஸ்டேடியம் நேரம்: அதிகாலை 12.20

அகில உலக வருத்தப்படாத வாலிபர்களின் ஒப்பில்லா,எல்லையில்லா,தங்க தலைவன் ஆகாயமார்க்கமாய் வரும் கண்கொள்ளா காட்சியே காண என்தவம் செய்தேன் என் இறைவா??? இம்மாதிரி கப்பித்தனமா நினைச்சிக்கிட்டு இருந்தோப்பா சடாரன்னு நிக்கிற நிலத்துலே அப்பிடியே ஒரு ஆரம் பிடிச்சு வட்டம் சுத்த ஆரம்பிச்சிதது. நாமெல்லாம் ஆறடி அறுபது கிலோ சிங்கமில்லே அப்பிடியே பக்கத்திலே இருந்த ஒரு கம்பத்தை பிடிச்சிக்கிட்டே வானத்தே பார்த்தேன்.

சங்கத்து வாகனம்

நம்ம தல மஞ்ச சொக்கா அதுக்கு மேலே ஒரு செக்க்செவ்வன்னு ஒரு செவப்பு கலருலே கிழிச்சே கோட்டு ஒன்னே போட்டுக்கிட்டு கையிலே பைனாகுலரே வேறே பிடிச்சிக்கிட்டு “ஹாய் ராயலு”ன்னு சவுண்ட் விட்டாருப்பா!! அப்பிடியே சோத்துக்குள்ளே குழம்பை ஊத்துனா டக்குன்னு நடுவிலே ஊடுருவி உள்ளே போறேமாதிரியே ஹெலிக்காப்படரு நடுமையமா ஸ்டேடியத்திலே இறங்கிச்சு.. அதிலே இருந்து இறங்கி ஒரு சிங்கம் கணக்கா தல நடந்து வந்தாரு பார்க்கணுமே! பின்னாடி ரெண்டு பாடிக்கார்ட்ஸ் ஏகே45 பிடிச்சிக்கிட்டு வந்தாங்க..

ராஜ நடை

“வாங்க அகில உலக வருத்தப்படாத வாலிபர் தலைவரே! எதுக்காக நீ வர்றதே இவ்வளவு ரகசியமா வைச்சிருக்கிமின்னு சொன்னீங்க?”

“எனக்கு எங்கேயிருந்து எப்படி, எந்த ரூபத்திலே ஆப்பு வர்ருமின்னு தெரியாது! அதுவும் இந்த ஊருக்குள்ளே ஒரு ஆளு என்னை ஓப்பேத்தினிமின்னே டிராக்டருலே திரியறார்! அவருக்காவே தாய்யா இம்பூட்டு புரெடக்சன்! பார்த்திய்யா பின்னாடி ரெண்டு பயலுவேல்லே? நமக்கு வாகனமும் ஓட்டிக்கிட்டு போலிஸ் மாதிரி துப்பாக்கியே தூக்கிட்டு பாதுக்காப்புக்கும் வர்றாயங்கே! இப்போ பார்ப்போம் யார் நம்மக்கிட்டே மோதறதின்னு??”

“ஆமா தல! உங்களுக்கு இம்பூட்டு பாதுக்காப்பு தேவைதான்!”

“நான் எதுக்கு வந்திருக்கேன் தெரியுமா? உன்னை சங்கத்திலே சேர்க்கலாமின்னு நேர்காணல் நடத்த வந்திருக்கேன்! ம் சொல்லு உனக்கு என்ன வ.வா’க்கான தகுதி இருக்கு???”

“ஓ அப்பிடியா!! அதெல்லாம் எனக்கு நிறையவே இருக்குன்னு நினைக்கிறேன்!”

“சரி வரிசையா சொல்லு பார்ப்போம்!!”

“1)ரெண்டு ஸ்டாப்ன்னாலும் பஸ்ஸிலே போயிரலாமின்னு வெயிட் பண்ணி பண்ணி வெறுப்பாகி கடைசிலே நடக்க ஆரம்பிச்சா நாலு பஸ் சர்புர்ன்னு என்னை கடந்து போகும்????

2)பத்தாவது படிக்கிறொப்பா ரெண்டு தடவை கோட்டு அடிச்சு மூனாவது தடவையா பாஸ் பண்ணுறதுக்குள்ளே ஊருஉலகத்தோட ஏச்சுபேச்சுக்களுக்கெல்லாம் அசரதாதது!!!!???

3)ரெண்டாவது ஆட்டம் சினிமா பார்த்து மறுநா எங்கப்பாருக்கிட்டே வெளு வாங்கி விழுப்புண் விழுந்தாலும் கொஞ்சநேரத்துக்கு அழுது முடிச்சிட்டு அவருக்கிட்டே காசு வாங்கிட்டு மார்னிங்ஷோ சினிமாவுக்கு போனது!!!

4)இவ்வளவு காலமா இங்கிலிபிசே தெரியமே அதே என்னமோ கரைச்சு குடிச்சே கணக்கா வவ்வால்,கிராம்மாருன்னு எல்லாமே தெரிஞ்சமாதிரியே வெள்ளைக்கார தொரைக்கிட்டெய்ல்லாம் இங்கிலிபிசுலேயே பேசுறது!!”

“ஓகே! நெருங்கி வந்திட்டே! இன்னும் வேறே இருந்தா சொல்லு! இந்த பிளாக், ஒயிட்’ன்னு வேறே ஏதாவது இருக்கா???”

ஓ இருக்கே தல! ஒரு மேட்டருமில்லாம ஒரு வருசமா ப்ளாக் எழுதறது??

எந்த பதிவுல யார் ஆப்படிச்சாலும் வலிக்காத மாதிரியே நல்லவனா ஆக்ட் வுடறது??

கட்டதுரைய பார்த்தா எங்க தலக்கிட்ட முடிஞ்சா மோதி பாருடானு சவுண்ட் விடறது??”

“சரி நான் நினைக்கிற எல்லாதகுதியும் உன்க்கிட்டே இருக்கு! யூ ஆர் அப்பாயிண்டெட்”

ஆப்பு ஆயிண்மெண்ட்

“உனக்கு இன்னிலிருந்து அப்போ ஆயிண்மெண்ட்’தான் தடவணும்”

“வொய்”

“நான் என்ன உனக்கு ஜால்ரா அடிக்கவா வர்றேன்! ஆப்படிக்க வர்றேன்!!!!”

“ஹி ஹி நாங்கெல்லாம் எதுக்கும் அஞ்சாத சிங்கமெல்லே! சேர்ந்து போகதே கருஞ்சிறுத்தயப்பு!! நீ இன்னிலிருந்து சங்கத்து டெக்னால்ஜிலே ஆப்ரைண்டிஸா ஜாயின் பண்ணிக்கோ! உனக்கு என்னோட செகரட்டரி ஆப்பர் லெட்டர் அனுப்புவாங்க! ஒரே கண்டிசன் நீ ஒழுங்கா இருந்தேனா எந்த பிரச்சினையிலும் காப்பாத்த வருவேன்! அதிகபிரசங்கிதனம் பண்ணனு வை!! எந்த கம்பத்திலே யாரு கட்டி வச்சு அடிச்சாலும் நாப்பாட்டுக்கு போயிக்கிட்டே இருப்பேன்! என்னா சொல்லுறே???”

“இல்லெ தல! நான் நல்லவந்தான்!”

“எல்லா பயலுவெல்லும் வர்றப்போ சொல்லுறதுதானே!!”

“நான் ஒன்னே ஒன்னு இந்த மக்களுக்கிட்டே சொல்லிக்கலாமா”

“ம் சொல்லு!”

“மக்களை நானும் இன்னிலிருந்து சங்கத்து ஆளு! யாராவது எனக்கிட்டே வம்பிழுத்தா எங்க தலை வருவாரு! `யாருடா என்சங்கத்து ஆளே அடிச்சதுன்னு???` கேட்பாரு! ஆமா சொல்லிட்டேன்!”

.... இங்கே பதியப்பட்டது இராம் | 26 மறுமொழிகள் »