மக்களே போன வாரம் கிரிக்கெட் மேட்ச்ல கொஞ்சம் பிஸியா இருந்ததால டெவில் ஷோக்கு லீவ் விட்டாச்சு… ஏண்டா தோத்தீங்கனு நம்ம திராவிட்கிட்ட கேட்டா நீங்க எங்களுக்காக டெவில் ஷோ போடாம விட்டு கொடுத்ததை பார்த்து மனசு வலிச்சுது அதனால இலங்கைகிட்ட நாங்க விட்டு கொடுத்துட்டோம்னு சொல்றான்.
தோத்ததுக்கு என்ன காரணம் சொல்லுது பாருங்க… சரி அத அடுத்த டெவில் ஷோல பார்ப்போம். இப்ப நம்ம நட்சத்திர பதிவர், என்னுடைய சிஷ்யன் கைப்புள்ளய கலாய்க்கற சங்கத்தின் சிங்கம் தேவ் வந்துருக்காரு…
க: “வா தேவு… அது என்ன உன் ப்ளாகுக்கு பேரு சென்னை கச்சேரி? உனக்கு பாட்டு பாட தெரியுமா மேன்??? சொல்லு…”
தேவ்: “அது ஒண்ணுமில்லைங்க கவுண்ட்ஸ்… நான் பொறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைல தான். நான் முன்னாடி தங்கிருந்த வீட்டு கக்கூஸ்ல தாழ்ப்பாள் கிடையாது… சரினு தினமும் நம்ம கச்சேரி தான். இப்ப புது வீடு வந்தாச்சி. என்ன இருந்தாலும் பழச மறக்ககூடாதுனு என் வலைப்பதிவுக்கு சென்னை கச்சேரினு பேர் வெச்சிட்டேன்!”
க: “அட தேவ் மண்டையா… இதுக்குள்ள இத்தன ரகசியத்தை மறைச்சி வெச்சிருக்கியா நீயி… ஆமாம் நீ என்ன வேலை பாக்கற?”
தேவ்: “நான் சாப்ட்வேர் பீல்ட்ல இருக்கேன்..”
க: “டேய் யாருக்கிட்ட டக்கால்ட்டி விடற??? நீ சென்னைல ஏதோ சாய் சாந்தி தியேட்டர்ல ரீல் ஓட்ற வேலை பாக்கறதா கேள்வி பட்டேன்…”
தேவ்: “இது அநியாயம்… அக்கிரமம்…”
க: “டேய் ஓவர் சவுண்ட் விடாத… அப்பறம் கச்சேரில பாட முடியாம போயிடும்…! ஏன்டா அந்த லீ படத்த உலகத்துல பார்த்த ஒரே ஆள் நீயாதாண்டா இருப்ப?? சரி படம் எப்படினு சத்தியராஜுக்கு போன் பண்ணா, “மாம்ஸ் விஜய் டீ.வில டப்பிங் பண்ணி போட்டிருந்தான். என்னமா சண்டை போடறான் அந்த லீ பய. நம்மல மாதிரி யூத்க்கு பிடிச்ச மாதிரி பறந்து பறந்து சண்டை போடறான் மாம்ஸ். என்ன இருந்தாலும் சைனிஸ் படம் சைனிஸ் படம்தான்” அப்படினு ப்ரூஸ் லீ, ஜெட் லீ படத்த பத்தி பேசறான். அவன் மகன் நடிச்ச அவனே பார்க்க மாட்றான். அந்த படத்தையும் விடாம பார்த்து விமர்சனம் எழுதறனா நீ கண்டிப்பா அந்த தியேட்டர்ல ரீல் சுத்தறவனாத்தானே இருப்ப??.”
தேவ்: “மக்கள் பாவம் கஷ்டப்பட கூடாதேனு அந்த கஷ்டத்த நான் ஏத்துக்கிட்டேன்… எங்க தல கைப்ஸ் இந்த மாதிரி பல கஷ்டங்களை அனுபவிச்சிருக்கார்…!”
க: “வாடீ வா… இத்தன நாள் தான் அவன் பேர சொல்லி ஊர ஏமாத்திட்டு இருந்தே? உனக்குனு எழுத சொல்லி ஒரு வாரம் கொடுத்த அதையும் என்னனா அவுட் சோர்ஸ் பண்ணிட்டு இருக்க…??
தேவ்: “நான் அவுங்களுக்குள்ள இருக்கற திறமைய வெளிய கொண்டு வந்துட்டு இருக்கேன்…!!”
க:“இந்த டகால்டி எல்லாம் இங்க வேண்டான்டி… முதல்ல உன் திறமைய வெளிய கொண்டா? அப்பறம் அடுத்தவங்க திறமைய வெளிய கொண்டு வரலாம்!!”
தேவ்: “நான் ஸ்டார் ரிப்போர்ட்டராயிட்டேனு உங்களுக்கு பொறாமை…”
க: “மக்களே!!! இந்த பாவத்துக்கு எல்லாம் நான் ஆள் இல்லை… இவர் ஸ்டாராயிட்டாராம் உடனே நாலு பேர கேள்வி கேட்டு ஸ்டார் ரிப்போர்ட்டராயிட்டாறாம். என்னுமோ ஸ்டார் டீவி ரிப்போர்ட்டர் கணக்கா பேசிட்டு இருக்கான் பாருங்க… அப்பறம் அது என்னடா பக்கம் 78, பக்கம் 102னு உன் இஷ்டத்துக்கு பேர் வெச்சிருக்க?”
தேவ்: “அதுவா… என் தெருல இருந்த 78ம் நம்பர் வீட்ல இருந்த ஃபிகரத்தான் நான் பத்தாவது படிக்கும் போது ரூட் விட்டுட்டு இருந்தேன். அப்ப எல்லாம் தினமும் அவ வீட்டு முன்னாடி தான் சைக்கிள் எடுத்துட்டு சுத்திட்டு இருப்பேன். அதெல்லாம் ஒரு பொற்காலம்…”
க: “ஏண்டா அது பொற்காலம் மாதிரியா இருக்கு? அது ஒரு கனாக்காலம் ரேஞ்சுக்கு இருக்கேடா… அதனால தான் அதுல உன் கதை, கவுஜ எல்லாம் எழுதி பிலிம் காட்டறயா?”
தேவ்: “ஆமாம்னா… நான் அது அவளுக்காக எழுத நினைத்த கவிதைகள்… ஆனா எதுவும் கொடுக்க முடியாமலே போச்சு!!”
க: “ஓ நோ!!! உனக்குள்ள இவ்வளவு சோகம் இருக்கா??? ஆமாம் உனக்கும் இந்த சாம்பு, இரவுக்கழுகு குழுவுக்கும் என்ன சம்பந்தம்? எல்லா பதிவுளையும் அவுங்கள பத்தியே கேள்வி கேட்டுட்டு இருக்க?”
தேவ்: “கவுண்ட்ஸ்… அப்படியெல்லாம் இல்லை, இந்த புலிய பத்தி எல்லாம் கிசு கிசு எழுதி பெரிய ஆள் ஆக்கறாங்க. அப்படியே நம்மலையுல் எழுதினா பெரிய ஸ்டாராயிடலாம் இல்லை.. அதான் பாக்கறேன்!”
க: “இந்த சினிமாகாரவங்க தான் இப்படி கெட்டு போயிருக்காங்கனா… நீங்களுமா??? சரி தேவு.. இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிட்டு ஓடி போயிடு… அது என்ன போர் வாள்??? நீ என்னைக்காவது போர்ல வாள் எடுத்து சண்டை போட்டிருக்கியா???”
தேவ்: “ஓ அதுவா??? சண்டைனு வந்துட்டா நான் வாள் வாள்னு கத்திட்டு இருப்பேன்… அது அப்படியே போர் வாளாயிடுச்சி.. இத மட்டும் வெளிய சொல்லிடாதீங்கண்ணா… நான் பெரிய லெவல்ல பில்ட் அப் கொடுத்து வெச்சிருக்கேன்…”
சொல்லிவிட்டு அடுத்த பேட்டி எடுக்க ஓடிவிடுகிறார் போர் வாள்!!!


