வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்

100% சிரிக்க

ஜனவரி, 2007 க்கான தொகுப்பு

லக்கி லுக்… பிக் ஹிட்… பிக் சல்யூட்…

பதிந்தவர் vavaasangam மேல் ஜனவரி 31, 2007

நவம்பர் மாதத்தில் ஒரு நாள்.. ஒரு முறை நம்ம லக்கி லுக் கூட தொலைப்பேசியில் பேசியிருக்கேன்..

அப்புறம் புத்தகக் கண்காட்சியிலே ஒரு தரம் நேர்ல்ல பார்த்து ஒரிரண்டு வார்த்தைப் பேசிக்கிட்டோம்….

இப்போ எதுக்கு இந்தப் பில்டப்புன்னு கேக்குறீயளா?

இருக்கே.. போன மாசம் நம்ம சங்கத்து அட்லாஸ் வாலிபர் அவர் தானே….

பொதுவா அட்லாஸ் அப்படின்னா ஒரு திடகாத்திரமான ஆளு முதுகுல்ல டின் கட்டினாப்பல்ல் டன் கணக்குல்ல இருக்க ஒரு பாறையைச் சொமக்க வச்சிருப்பாயங்க…நம்ம சங்கத்துக்கு வர்ற அட்லாஸ்களும் அப்படித்தான்.. மக்களைச் சிரிக்க வைச்சு சந்தோஷப் படுத்தணும்ங்கற இமாலய வெயிட்டை முதுகுல்ல சங்கம் கட்டி விட்டுரும்… அவ்ங்களும் சளைக்காமச் சுமைய சுகமாச் சுமந்து மக்களையும் சிரிக்க வைப்பாங்க…

இதே கணக்கோடுத் தான் நம்ம லக்கியும் வர வச்சோம்.. ஆனாப் பாருங்க அவ்ர் வந்த நேரம் சங்கத்துக்கு மொத்தமும் ப்யூஸ் பிடுங்கி விட்டுட்டாயங்க பிளாகரைப் பெத்த புண்ணியவான்க..

லக்கி வரும் போது… கூட நின்னு கும்மி அடிக்க ஆரும் இல்ல.. என்னடாக் கூப்பிட்டாயங்க… வந்துப் பார்த்தா வெறிச்சோடி கிடக்கே.. ஒரு வேளை நம்மளை வச்சு காமெடி கீமெடி பண்ணுறாங்களோன்னு யோசிக்கமா… டகார்ன்னு சங்கத்துக்குள்ளே ஒரு விளக்கைக் கொளுத்தி வெளிச்சம் போட்டு… கூட்டி பெருக்கி சுத்தம் பண்ணி.. சொம்ம கலகலன்னு திருவிழா ரேஞ்சுக்கு ஒரு மாசமும் பட்டயக் கிளப்பிட்டார்…

நண்பா லக்கி.. சங்கம் மொத்தத்தையும் கிட்டத்தட்ட தனி ஆளாவே நின்னு ஒரு மாசமும் தோளில் தாங்கி.. மக்களையும் சிரிக்க வச்சு.. கலக்கிப்புட்டீங்க…

ஓவராப் பீல் ஆவுறோம்ன்னு பாக்குறீயளா.. சங்கத்துப் பயபுள்ளக தல சொல்லுற மாதிரி பாசக்காரப் பயல்வ…

லக்கிக்கு சங்கம் சார்பா மனமார்ந்த வாழ்த்துக்கள்.

.... இங்கே பதியப்பட்டது தேவ் | 10 மறுமொழிகள் »

சங்கம் ஸ்போர்ட்ஸ்| SANGAM SPORTS

பதிந்தவர் vavaasangam மேல் ஜனவரி 30, 2007

சங்கத்து வாசலில் கையை இடுப்பில் வைத்து கொண்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்கிறார் தல கைப்பு…

“எலேய் எல்லாம் எங்கலே போயிட்டீக??? இங்கன ஒருத்தன் இருக்கறதையே மறந்துடறீக… சத்தம் போட்டு கொண்டிருக்கிறார்.”

அங்கே வேகமாக ஓடி வரும் ராயலை பார்த்ததும் பீதி அடைகிறார்…

“எலேய் ராயலு ஏன்யா இப்படி பீதிய கிளப்பற மாதிரி ஓடி வர?”

“தல!!! ஊர்ல ஜல்லிக்கட்டு நடக்குது. போன வருஷம் உன் கால உடைச்சி குப்ப தொட்டில தூக்கி எறிஞ்சிதே அந்த கட்டதுரையோட கன்னுக்குட்டி, அது
இந்த வருஷமும் உன்னைய பாசமா தேடிக்கிட்டு இருக்கு… “

“எலேய் ஜல்லிக்கட்டுனு வீர விளையாட்டுக்கு போனா அப்பப்ப அடிப்படத்தான் செய்யும்… அதெல்லாம் எங்க வீர வரலாறுல ஜகஜம்…”

“அதுக்கு பயந்து தான் இந்த வருஷம் நீ ஊருக்குள்ள வராம இருக்கனு கட்டதுரை எல்லார் முன்னாடியும் சொல்லிட்டு இருக்கான்…”

“அப்படியா சொல்றான் அந்த கட்டதுரை???”

“ஆமாம் தல…”

“உண்மை எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சா?”

“ஆமாம் தல… அதுக்கு பதிலா தான் அங்க இந்த வருஷம் புதுசா நடக்க போற புட் பால் மேட்ச்ல சங்கம் உன் தலமைல கலந்துக்க போகுதுனு நம்ம போர் வாள் சவுண்ட் விட்டுட்டாரு…”

“இந்த போர் வாள் சும்மாவே இருக்க மாட்டான்யா!!! நம்மல வம்புல மாட்டி விடறதே அவனுக்கு வேலையா போச்சி… “

சரியாக அந்த நேரத்தில் உள்ளே வருகிறார் தளபதி!!!

“ஏன்யா ராயல இந்த புட் பாலுனா காலல பந்து உதைச்சி விளையாடறது தானே?”

“ஆமா தல…”

“ஏன்யா! நம்ம காலத்தான் உடச்சி புட்டானுங்களே அப்பறம் எப்படிடா நம்ம அதுல கலந்துக்க? வேணும்னே விளையாடி இந்த காலையும் உடைச்சிடுவானுங்களே!!!”

“தல!!! வேணும்னா நம்ம அமெரிக்கம் புட்பால் விளையாடலாம் தல” தளபதி புதிதாக ஐடியா தருகிறார்.

“ஏன்யா சிபி, இதுக்காக நம்ம அமெரிக்கா போய் விளையாட முடியுமா? சின்னப்புள்ள தனமா இல்ல இருக்கு”

“தல! அமெரிக்கன் புட்பால்னா அமெரிக்கா போக தேவையில்லை. கால்ல அடிச்சிட்டு ஆடறதுக்கு பதிலா கைல பந்த தூக்கிட்டு ஓடி போயி கோல் போடனும் அவ்வளவுதான்”

“ஆஹா.. தளபதினா நீதான்யா தளபதி…. கைல எடுத்துட்டு ஓடறதுதான??? பந்த எடுத்துட்டு எப்படி ஓடறேன் பார்”

“ஆமாம் தல… அன்னைக்கு அந்த பக்கத்து வீட்டு நாயிக்கு வெச்சிருந்த பொறைய எடுத்துட்டு எப்படி ஓடி வந்திங்க.. தெரு நாய் எல்லாம் துரத்தி கூட பிடிக்க முடியலையே!!! இந்த விளையாட்டுக்கு உங்களை விட்டா ஆளே இல்லை” தலயின் பெருமையை சொல்கிறார் ராயல்

“எலேய் ராயலு நீ பெருமையா சொல்றீயா இல்லை கலாய்க்கிறியானே தெரியலையா… பேசாம நீயும் என் கூட கலாய்த்தல்ல சேர்ந்துடு” சொல்கிறார் தளபதி…

“சரி.. போட்டிக்கு எல்லாத்தையும் தயார் பண்ண சொல்லுங்க… சங்கத்து சிங்கங்களுக்கு எல்லாம் அழைப்பை அனுப்பிடுங்க…
கட்டதுரையை களத்துல சந்திக்கிறோம்னு மெயில் அனுப்புங்க…
தயாராகட்டும் விளையாட்டு அரங்கம்.. கட்டதுரையா இல்லை இந்த கைப்புள்ளையானு மோதி பார்த்துடுவோம்” தல பெருமையாக சொல்கிறார்…

விளையாட்டு ஆரம்பிக்கிறது…

கைப்புள்ள தலைமையில் வ.வா.ச அணியிணர் ஆர்ப்பாட்டமாக திரண்டு நிற்க, கட்டதுரை தலைமையில் கொலை வெறியுடன் எதிர் அணி திரண்டு நிற்கிறது…

தல, சங்கத்து சிங்களுக்கு கேம் ஸ்ட்ரேட்டஜி சொல்லி தருகிறார்…

மக்கா, யாருகிட்ட பந்து கிடைச்சாலும் என்கிட்ட தூக்கி போட்டுடுங்க.. நான் ஓடி போயி கோல் போட்டுடறேன்… என்ன புரிஞ்சிதா?

சரி தல… சங்கத்து சிங்கங்கள் ஒன்று சேர சொல்கிறார்கள்…

இப்ப சவுண்ட் எல்லாம் நல்லா தான் கொடுக்கறீங்க.. இந்த ஆர்ப்பாட்டத்த ஆட்டத்துல காட்டனும்.

சரி… யோவ் அம்பையர் ஸ்டார்ட் த கேம்… நாங்க ரெடி… தல வீரமாக முழங்குகிறார்…

ஆட்டம் அமர்க்களமாக ஆரம்பிக்கிறது…

போர் வாள் பந்தை எடுத்து தலையை நோக்கி போட அதை தல சரியாக பிடிக்கிறார்…

எதிர் அணியினர் அனைவரும் தலயின் காலை பிடித்து இழுத்து மல்லாக்க படுக்க வைத்து ஒரேடியாக மேலே விழுகிறார்கள்…

“எலேய்!!! என்னய விடுங்கடா… பந்து என்கிட்ட இல்லை.. சொன்னா நம்புங்கடா” கதறுகிறார் தல

பந்து ஜொள்ளு பாண்டியின் கையில் போக… வேகமாக தரையில் கிடக்கும் கைப்புவின் கையில் பந்தை திணித்து ஓடுகிறார் ஜொ.பாண்டி…

“ஏலேய் ஐயோக்கிய அப்பரண்டீஸிகளா!!! கீழ கிடக்கறவன் கையில ஏன்யா பந்த திணிக்கிற?” தல சொல்லி முடிப்பதற்குள் எதிர் அணியினர் அனைவரும் தலயின் மேல் வேக வேகமாக விழுகிறார்கள்.

“அடப்பாவி மக்கா!!! இதுக்கு தான் பந்த திணிச்சிட்டு வேகமா ஓடுனியா?” கத்தி கொண்டிருக்கிறார் தல…

“இல்ல தல… அந்த பக்கம் நிறைய ஃபிகர்ஸ் இருக்கு அதப்பாக்கத்தான் வேகமா போறேன்” கடமை வீரனாக சொல்கிறார் ஜொ.பாண்டி

“ஏன்யா பாண்டி இந்த ரத்த பூமியிலும் உனக்கு ஒரு கிளுகிளுப்பு தேவைப்படுதா?”

மீண்டும் சிங்கங்களை கூட்டி புது ஸ்ட்ரேடஜியை சொல்கிறார்…

“இனிமே யாருக்கிட்ட பந்து கிடைச்சாலும் எனக்கு தரக்கூடாது புரியுதா? நீங்களே பந்த எடுத்துட்டு போய் கோல் போடுங்க… உடம்பு இப்பவே ரணகளமாயிடுச்சி”

“சரி தல” அனைவரும் கோரஸாக சொல்கிறார்கள்

போர்வாள் பந்தை எடுத்து வேகமாக ஓட…

கட்டதுரை டீமிலிருக்கும் அனைவரும் அப்பாவியாக நின்று கொண்டிருக்கும் கைப்பு மீது பாய்ந்து மேலே விழுகிறார்கள்!!!

“அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்…
என்கிட்ட தான் பந்தே இல்லையேடா.. அப்பறம் ஏன்டா இப்படி என் மேலயே விழறீங்க?” கண்ணீருடன் கட்டதுரையை பார்த்து கேட்கிறாட் கைப்பு

“உன் சங்கத்து ஆளுங்க யாருக்கிட்ட இருந்தாலும் உன் மேல தான் விழுவோம்” தெனாவெட்டாக சொல்கிறார் கட்டதுரை

“எலேய் சங்கத்து சிங்கங்களா… உங்களுக்கெல்லாம் குச்சி மிட்டாயும் குருவி உருண்டையும் வாங்கி தறேன்.. அந்த பந்தை அவனுங்க கையில கொடுத்துடுங்கடா” கெஞ்சுகிறார் கைப்பு

“தல!!! நம்ம முன் வெச்ச கால பின் வைக்க கூடாது.. எப்படியும் இந்த ஆட்டத்துல ஜெயிச்சி நம்ம வீரத்த நிலைநாட்டனும்” வீரமாக சொல்கிறார் போர் வாள்!!!

“எலேய் போர் வாளு!!! இங்கன ஒருத்தன் இரத்த வெள்ளத்துல மிதக்கறப்ப உனக்கு இந்த விளையாட்டுல கெளிக்கறதுதான் முக்கியமா??? அந்த பந்தை அவனுங்க கைல கொடுத்து தொலைங்கடா”

கைப்புவின் பரிதாப நிலையை பார்த்து பந்தை கட்டதுரையிடம் கொடுக்க அதன் பிறகு மீண்டும் கைப்பு மேல் வேகமாக விழுகிறார்கள் கட்டதுரையின் ஆட்கள். இதுதான் சமயம் என சங்கத்து ஆட்களும் கைப்பு மேல் விழுகிறார்கள்…

“அயோக்கிய பயலுகளா!!! எல்லாம் ஒரு முடிவோடத்தான் விளையாட்ட ஆரம்பிச்சிருக்கீங்களா???
எலேய் தளபதி ஒரு காலு மட்டும் உடைச்சிடப்போறாங்கனு நான் பயந்தா இப்படி உடம்பு முழுசா கட்டு போட வெச்சிடீயே!!!” கைப்பு கதற கதற அனைவரும் மீண்டும் ஒரு முறை தல மேல் தொப தொபவென விழுகிறார்கள்!!!

.... இங்கே பதியப்பட்டது வெட்டிப்பயல் | 20 மறுமொழிகள் »

சங்கத்த இழுத்து மூடியாச்சு

பதிந்தவர் vavaasangam மேல் ஜனவரி 27, 2007

சுட்டிப்பையன்: சார்,என் தலை’ல எறும்பு ஏறுது பாருங்க..!

வாத்தியார்:அதை எடுத்து போடாம, ஏண்டா என்கிட்ட சொல்ற?

சுட்டிப்பையன்: நீங்க தானே சார் சொன்னீங்க,! என் தலை’ல ஒன்னுமே ஏறலனு ?


Student 1: நம்ம டீச்சர்க்கு என்ன ஆச்சு?

Student 2: ஏன்டா??

Student 1: இப்ப தானே போர்ட்’ல திருக்குறள் ‘ அவுங்களே எழுதிட்டு, திருக்குறள எழுதினது யாருன்ன்”னு கேக்குறாரே?


டீச்சர்: படிக்கிற பசங்க ஒரு நாளைக்கு 6 மணிநேரம் தூங்கினாபோதும் .

சுட்டிப்பையன்: ஸ்கூல்லையா?? வீட்லையா சார்??


டீச்சர் :( 1) ஒரு தவளை இருக்கு,
(2) கப்பல்ஒன்னு மூழ்கிகிட்டு இருக்கு,
(3) உருளைகிழங்குவிலை ரூ 3 ஒருகில்லோ . அப்ப எனக்கு வயசு என்ன??

சுட்டிப்பையன்: 32 இருக்கும் சார்.

வாத்தியார்:உனக்கு எப்படி தெரியும் ?

சுட்டிப்பையன்: அதுவா சார்..!, என் தங்கைகு வயசு16, அவ ஒரு அரை-லூசு, அதவச்சி தான் சொன்னேன்.


நோயாளி: டாக்டர்..!எனக்கு தினமும் 16 மணி நேரம் தூக்கம் வருது..!அதுக்கு அலுப்புதானே காரணம்..?

டாக்டர் :அதுக்கு காரணம்அலுப்பு இல்ல..!” கொழுப்பு”..


டாக்டர் : முதல்ல, நீங்க மீன், நண்டு, கோழி சாப்பிடுறதெல்லாம் உடனடியா நிறுத்தியாகனும்..!!

நோயாளி : டாக்டர்..!! இது என்னங்க அநியாயம்..! அதுங்க சாப்பிடுறத போய் நான் எப்படி நிறுத்தமுடியும்??!


டாக்டர்: காதுல பல்லி போகுறவரைக்கும் என்ன பண்ணிட்டு இருந்தீங்க?

நோயாளி : மொதல்ல கரப்பான்பூச்சி தான் டாக்டர் போச்சி. அத புடிக்க தான் போகுதுனு நினைச்சேன்..!


மனைவியிடமும் காதலியிடமும் மறைக்க வேண்டியவை எவை?

மனைவியிடம் காதலியையும்,
காதலியிடம் மனைவியையும் மறைக்க வேன்டும்..


கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தார். நம் ‘குடி’மக்களை பார்த்து அவருக்கு பொறாமை வந்துருச்சு. அப்படி என்னதான் இருக்கு இந்த TASMAC கடைக்குள்ள அப்படின்னு தெரிஞ்சிக்க உள்ளே போய் 5 பீர் அடிச்சாரு. ஒரு மப்பும் ஏறல. அப்புறமா, 2 FULL.. அப்பையும் ஒன்னும் ஆவல..

மறுபடியும் 2 BEER, 3 பிராந்தி

கடைகாரர்க்கு ஆச்சர்யம்,

“யார்யா நீ??
இவ்வளவு சாப்பிட்டும் உனக்கு போதை ஏறல?

அதுக்கு நம்ம கடவுள் ” நான்தான் கடவுள் எனக்கு இந்த போதை ஒன்னும் பண்ணாது‘ன்னாரு

கடைக்காரருக்கு இப்போதான் திருப்தி வந்துச்சு “தொரைக்கு இப்பதான் ஏற அரம்பிச்சி இருக்கு ..! நடக்கட்டும்..! நடக்கட்டும்..!”

.... இங்கே பதியப்பட்டது ILA | 19 மறுமொழிகள் »

மகா ஆப்பு போட்டிக்கு வாங்க…வாங்க…

பதிந்தவர் vavaasangam மேல் ஜனவரி 26, 2007

ஓலக வரலாற்றில் முதன் முறையாக தனி ஒரு மனிதனைக் கலாய்க்க உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு…

வாங்க மக்களே அலுவலக டென்ஷன்… லவ்ஸ் டென்சன்… வாழக்கை டென்சன் இன்னும் இதர பிற டென்சன் எல்லாத்தையும் கொஞ்சம் ஓரம் கட்டி வச்சிட்டு களத்துல்ல ரவுண்ட் கட்ட வாங்க…

டிசைன் டிசைனா ஆப்பு ரெடி பண்ணுங்க…லோட் லோடாக் கொண்டு வந்து இறக்குங்க…

இம்போர்ட் எக்ஸ்போர்ட் எது வேணுமோப் பண்ணுங்க…

குரூப்பா வாங்க!!!
தனியா வாங்க!!!
ஜோடியா வாங்க!!!

ஆனாக் கண்டிப்பா கையிலே ஆப்பு மட்டும் இருக்கணும்… அப்போத் தான் அலவுட் சொல்லிப்புட்டோம்…

‘தல’ ஓலகமெல்லாம் சுத்தி சும்மா ஜல்லிக் கட்டுல்ல இருந்து தெறிச்சு வந்த காளை மாதிரி இந்தா நிக்குறார் பாருங்க…

உங்களுக்காகவே நம்மத் தல ஒரு மாபெரும் போட்டியை அறிவிச்சுருக்கார்…

ஆமாங்க தலக்கு ஆப்பு வைக்கிற போட்டி

ஒருத்தர் எத்தனை ஆப்பு வேணும்ன்னாலும் வைக்கலாம்..

சிறந்த ஆப்புக்கு பரிசுக் கட்டாயம் உண்டு….

விதி.. ஆப்புக்கள் சுத்தத் தமிழில் இருப்பது அவசியம்.

ரெடி ஜுட்டா

ம்ம் இன்னும் என்ன அமைதி தாரைத் தப்பட்டைகளைக் கிழித்துத் தொங்க விடுங்கள்.. கிளப்புங்கள் பட்டய…

.... இங்கே பதியப்பட்டது தேவ் | 30 மறுமொழிகள் »

மீண்டும் அரியாசனத்தில்…!

பதிந்தவர் vavaasangam மேல் ஜனவரி 25, 2007

அந்தப்புறத்தில் இத்தனை ஆடிப் பாடிக் களைத்துவிட்டு மீண்டும் அரியாசணத்திலேறி ஆட்சி புரிய வந்துவிட்டார் எங்கள் தலை கைப்பு!
பராக்…பராக்… பராக்….

ஊழலின்றி தயாரிக்கப்பட்ட பீட்டாயுதத்தோடு போர்க்களங்கள் காணப் புறப்பட்டுவிட்டார்.

மீண்டும்………
அரசவை கூடட்டும்!
ஆப்புகள் தொடங்கட்டும்!
சங்க நாதம் ஒலிக்கட்டும்!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்………………………………………!

.... இங்கே பதியப்பட்டது நாமக்கல் சிபி | 115 மறுமொழிகள் »