வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்

100% சிரிக்க

நவம்பர், 2006 க்கான தொகுப்பு

மாதா பிதா குரு பிகரு

பதிந்தவர் vavaasangam மேல் நவம்பர் 30, 2006

2001 ம் ஆண்டு ஜான்ஸ் கல்லூரி சாலையில் இருக்கும் ரிதம் கேண்டீன் அருகே
அந்த வெட்டி காம்ப்ளக்ஸில் இருந்துகொண்டு உடன் இருக்கும் ஜான்ஸ் கல்லூரி
மாணவர்களை குஷிபடுத்துவதற்காக வருகின்ற போகின்ற பிகர்களைப் பார்த்து
எழுதிய கவிதை இது.

நான் எழுதிய பிறகு அதனை ஏதாவது பிகர் வரும்பொழுது அந்த வரிகளை சத்தம்
போட்டுப் படிக்கும் சாக்கில் நண்பர்கள் உற்சாகமாக கத்துவார்கள். மிகவும்
ஜாலியாக இருக்கும்.

இதோ இன்று அந்த காம்ப்ளக்ஸைக் கடந்து செல்லும்போது அந்த ஞாபகம் வந்ததால்
உடனே வீட்டிற்கு வந்து பழைய டைரியைப் புரட்டி எடுத்து புதுப்பிக்கிறேன்.

*

என் இனிய கல்லூரி பிகர்களே
நீங்கள்
பிரம்மாவால் படைக்கப்பட்டீர்களா?
இல்லை
பிரம்மாவையே படைத்தீர்களா?

எங்கிருந்ததடி வந்தது உங்களுக்கு? – இந்த
ஏகாதிபத்திய அழகு

பிகர்களே! உங்களையெல்லாம்
பிரம்மா எங்கேயோ
அடைத்து வைத்திருக்கிறான் போல!

ஆம்
குற்றால சீசனுக்குக் கொஞ்சம்
பொருட்காட்சிக்குக் கொஞ்சம்
பஸ்ஸ்டாண்டுக்குக் கொஞ்சம்
கல்லூரி விழாவிற்கு கொஞ்சம்
ஊட்டிக்குக் கொஞ்சம்
இப்படிக்
கொஞ்சம் கொஞ்சமாய்
அனுப்புகிறான் போல!

- பிகர்
வேலைதேடி
வெயிலில் சுற்றும்
இளைஞர்களுக்கெல்லாம் இந்த
ஒற்றை வார்த்தைதான்
உயிர் கொடுத்துக்கொண்டிருக்கிறது!

- பிகர்
ரிதம் கேண்டீனில்
டீ குடிக்காமலேயே
இதம் கொடுக்கின்ற
இன்பமான வார்த்தை!

- பிகர்
சுவாசிப்பது போல
இமைப்பது போல
கடலை போடுவது போல
ஜான்ஸ் கல்லூரி ஸ்டிரைக் போல
இந்த வார்த்தை
அடிப்படை தேவைகளுக்கு
அடுத்தபடியாகிவிட்டது!

- பிகர்
ஒற்றை வார்த்தையில்
ஒரு ஹைக்கூ

8 மணிக்கு ஸ்கூல் பிகர்
9 மணிக்கு காலேஜ் பிகர்
9.30 மணிக்கு வொர்க்கிங் பிகர்
9.45 மணிக்கு போலிஸ் பிகர்
ஏனோ தெரியவில்லை இதில்
கடைசிவகை
பிகர் வந்தால் மட்டும்
எமது இளைஞர்கள்
வெட்கப்பட்டு ஓடிவிடுகிறார்கள்!

ஹாய் பிகர்களே
உங்கள்
கண்கள் என்ன
கம்னியூஸ்ட்டா ?
இப்படியா போராட வைப்பது
இதயத்தை?

போங்கடி
உங்களைப்
பார்க்காமலிருக்கவும் முடியவில்லை
பார்த்துவிட்டும் செல்லமுடியவில்லை

ஏமாளியாய் இருக்கும் எங்கள்
இந்திய இளைஞர்களையெல்லாம்
உங்கள்
இதயத்தில் மட்டுமல்ல
பஸ்ஸில் படிக்கட்டிலும்
தொங்கவிடுவதிலும்
உங்களுக்கென்னடி ஒரு
தூரத்து சந்தோஷம்?

நாங்கள் என்னடி
பாவம் செய்தோம்?
கல்லூரிக்கு அப்பாவியாய்
கிளம்புகின்ற அந்த நேரத்தில்தான்
நீங்கள்
மொட்டைமாடியில் துணியுலர்த்தி எங்களை
மொட்டையடிக்க வேண்டுமா?

நீங்கள்
கம்ப்யூட்டர் படித்திருக்கலாம்.
அதற்காக நாங்கள்
வீட்டை விட்டு வெளியேறும் நேரத்தில்தான் உங்கள்
ஜன்னல்கள் திறந்துவிடட்டுமென்று
ஜாவா புரோகிராம் எழுதியிருக்கிறீர்களோ?

எந்தப்பட்டறையில்
தீட்டிக்கொள்கிறீர்களோ
தெரியவில்லை?
உங்கள்
விழி ஆயுதத்தை!

ஜன்னலுக்கு பின்னால்
ஜெயில்கைதிகளைப்போலவே
பயந்து கொண்டிருக்கும்
அந்த
இரட்டைவிழிகள்..
யப்பப்பபா

பாரதியின்
கவிதையை விடவும்
பயங்கரமாயிருக்கிறது!

இந்த டீக்கடையின்
டீயை விடவும்
கொடுமையாயிருக்கிறது!

பஸ்ஸடாண்டில் நிற்கும்போது
தோழிகளோடு
அப்படி என்னதான் பேசுவீர்களோ?
ராஜாவையா…
ஞானியாரையா…
ரூபனையா…
எவனை இன்று
வழுக்கி விடலாமென்று தோள்களைக்
குலுக்கிக் குலுக்கி பேசுகிறீர்கள்?

எங்கள்
எதிரில் வரும் பொழுதுதான்
தோழிகளோடு
சிரித்துச் சிரித்துப் பேச வேண்டுமா?

நாங்கள்
பார்க்கவேண்டுமென்றே யாரும்
ஜோக்கே சொல்லாமல்
சம்பந்தமே இல்லாமல்
சிரிக்கிறீர்கள் என்ற சேதி
சேரியில் இருப்பவனுக்கு கூட தெரியும்!
தயவுசெய்து
சிரிப்பதை நிறுத்துங்கள்
அன்று இரவு
நாங்கள் தூங்க வேண்டும்!

இளைஞர்கள்
நாங்களும் ஒரு
பி.சி. சர்க்கார்தான்!
ஒரு
மாபெரும் மைதானத்தில்
ஒரே ஒரு பிகரை மட்டும்
ஒளித்து வைத்தாலும்
கண்டுபிடித்துவிடுவோம்!
ஆனால்
அவளுக்கு பின்னால்
அண்ணன்கள் இருப்பது
அடிவாங்கிய பிறகுதான் தெரிகிறது!

இன்றைய
இந்திய இளைஞர்களெல்லாம்
நாளொன்றிற்கு ஒரு பிகரைப்
பார்க்காவிட்டால் கூடப்
பைத்தியம் பிடித்துவிடுவார்கள்!

அது ஏன்டி?
ஒரு
வெளுத்துப்போன கைக்குட்டையால்
அடிக்கடி
இதழை சுத்தமாக்குகிறீர்கள் – எங்கள்
இதயத்தை அசுத்தமாக்குகிறீர்கள்!

எந்தட் டெய்லரிடம்
உங்கள்
சுடிதாரைத் தைக்கிறீர்களோ?
ஒருவேளை
எலிசபெத் டெய்லராக இருக்குமோ?

அது எப்படியடி?
அழுக்கு சுடிதார் அணிந்தாலும்
அழகாகவே இருக்கிறீர்கள்!

குளிக்காமல் வந்தாலும் எங்களைக்
குப்புறவிழச் செய்கிறீர்கள்!

குற்றாலத்திற்கு வருகிறீர்களே
குளித்துவிட்டுப் போகவேண்டியதுதானே ஏன்டி
இடித்துவிட்டு போகிறீர்கள்?

பொருட்காட்சிக்கு வந்திருக்கும்
அனைத்து இளைஞர்களையும்
அழைத்து வாருங்கள்!
பிகர்காட்சிதானே நடக்கிறது என
பிதற்றிக்கொண்டிருப்பார்கள்

- பிகர்
விடுதியில் இருக்கும்
ரூபனின் வாழ்வை
ரூட் மாறச்செய்கிறது!

- பிகர்
மூர்த்தியோடு தங்கியிருக்கும்
ராஜாவை
ராட்சஷனாக்குகிறது!

-பிகர்
பைக்கில் சுற்றும்
ஞானியின் வாழ்வை
நாசமாக்கிச் செல்கிறது!

-பிகர்
கேண்டீனில் இருக்கும்
ஜோதியின் மனசை
வீதியிலே எறிகிறது

-பிகர்
கடலையோடு திரியும்
சுடலையின் வாழ்வை
சுட்டுவிட்டுப் போகிறது!

இறைவா
சுகர் தவிர்த்து வாழக்
கற்றுக்கொடுத்தாய்!
அதுபோல
பிகர் தவிர்த்தும் வாழக்
கற்றுக்கொடுப்பா!
எங்களால்
ஏமாந்து கொண்டிருக்கமுடியவில்லை

எந்த பஸ்ஸும் வரவில்லை
பஸ் வந்தால் பிகரில்லை
பிகரிருந்தால் அழகில்லை

பாளை பஸ்ஸ்டாண்ட்

இப்படிப்
புரு விளம்பரத்ததையெல்லாம்
காப்பியடித்துக்கொண்டிருக்க முடியாது!

தினம் ஒரு
ஜீன்ஸ் பேண்ட்
அணிந்து வர முடியவில்லை

சேமித்த பணத்தையெல்லாம்
ஷேவிங் கிரீமுக்கே
செலவிட முடியவில்லை

பட்டதரிகள் எல்லாம்
பவுடர்தாரிகளாக முடியவில்லை

பிச்சையெடுத்துப்
போன் செய்ய முடியவில்லை

ஒருநாளைக்கு
32453 முறை
தலையை சீவிக்கொண்டிருக்க முடியாது

இந்தக் கவிதையை
எழுதிக்கொண்டிருக்கும் நேரம்கூட
எதிர்வீட்டு பிகர் ஒன்று
மொட்டைமாடியில் டீ குடிப்பது போல
என்னை
பார்த்துக்கொண்டிருக்கிறது
போங்கடி நீங்களும்
உங்க லுக்கும்!…

பிகரைப் பார்த்துக்கொண்டே

- ரசிகவ் ஞானியார்

.... இங்கே பதியப்பட்டது நிலவு நண்பன் | 14 மறுமொழிகள் »

டிசம்பர் மாத அட்லாஸ் வாலிபர்

பதிந்தவர் vavaasangam மேல் நவம்பர் 30, 2006

“எலேய் தேதி முப்பதாச்சி சங்கத்து கூட்டுங்கப்பு” சவுண்ட் விட்டுக்கொண்டே தல கைப்பு உள்ள வர…கூடவே புதுசா சேர்ந்த ராயலும் சங்கத்துக்குள் வர…

உள்ளே இருக்கும் சங்கத்து சிங்கங்களெல்லாம் தலய ஒரு லுக் உட்டவுடனே ஜெர்க் ஆகிறார்…

“எல்லாம் இங்கனத்தான் இருக்கீங்கனு தெரியாம ஓவராத்தான் சவுண்ட் விட்டுட்டனோ” என்று மனதிற்குள் நினைத்தவாரு ஒரு கர்ஜனையோட ஆரம்பிக்கிறார்!!!

“எலேய் வெட்டி உங்கிட்ட என்ன சொன்னேன்?”

“என்ன சொன்னீங்க?”

“போன வாரம் உங்கிட்ட என்ன சொன்னேன்?”

“போன வாரம் எங்கிட்ட என்ன சொன்னீங்க?”

ஆஹா ஆரம்பிச்சிட்டான்யா!!!

“ராயலு இதுக்கு மேல நான் பேசினேனா ரணகளமாயிடும்… நீயே அவன்கிட்ட கேளு”

“வெட்டி, அதான்யா நம்ம தலைக்கு ஆப்பு வாங்கறதுக்கு துணையா ஒருத்தர பிடிப்போமேயா. அவர் பேரு என்ன?
ஹா…அதான் அட்லாஸ் வாலிபரு. இந்த மாசத்துக்கு அட்லாஸ் வாலிபரு ரெடியா?”

“அதெல்லாம் எப்பவோ ரெடி… பதிவோட வெயிட்டீங்ல இருக்காரு!”

“ஆஹா! யாருப்பா அது? நம்ம ரேஞ்சுக்கு ஆப்பெல்லாம் தாங்குவாறா?”

“ராயலு என்ன இப்படி கேட்டுட்ட? ஒரு பொண்ணு ஓட்டனதுக்கே நீ போட்டோவ மாத்திட்ட… நாலு தமிழ் பொண்ணுங்க கூட்டமா சேர்ந்து ஓட்டனத பெருமையா பதிவு போட்டு இன்னும் போட்டோ போட்டுருக்க சிங்கமுங்க!!!”

“அது சரி.. நம்ம ரேஞ்சுக்கு கவிதை எழுதுவாரா?” தளபதி பெருமை பொங்க கேட்கிறார்!!!

“தள!!! கடைசி ரெண்டு பதிவும் கவிதைனு ஏதோ எழுதி வெச்சிருக்கிறார். அதுல அவருக்கு ஏன் தூக்கம் வரலைனு ஒரு கவிதை பல பேர சிந்திக்க வெச்சிருக்கு”

“ஓ! நம்ம ரேஞ்சிக்கு ஏதாவது ஆராய்ச்சியெல்லாம் பண்ணியிருக்காறா?” ஜொள்ளு தவிப்போட கேட்கிறார்.

“ஜொள்ளு! உனக்கு முன்னாடியே ஏன் எதற்கு எப்படினு ஒரு ஆராய்ச்சி பதிவ போட்டுட்டாரு! அவரு கேட்ட கேள்விகளை பார்த்துதான் நம்ம ஜொள்ளு பேச்சியக்காவே பல பதிவுகள போட ஆரம்பிச்சாங்க!!! நிஜமல்ல கதைனு நிஜத்துல அவரு விட்ட ஜொள்ள பத்தி ஒரு தொடரே போட்டாருப்பா”

“சரி, நம்ம ரேஞ்சுக்கு நக்கல் நையாண்டி எல்லாம் வருமா?” புலி நக்கலாக கேட்க

“தீபாவளி அன்னைக்கு பொங்கல் பதிவு போட்டாருப்பா! இது போதுமில்ல”

“யாரடா அது நமக்கு தெரியாம இவ்வளவு பெரிய தில்லாலங்கடி?” விவசாயி ஆர்வமாக கேட்க

“விவா, வெடக்கோழிய எப்படி பிடிக்கிறதுனு நம்ம வாசுக்கு சொல்லி கொடுத்தாரே!!! இதுக்கு மேலையும் சொல்லனுமா?”

எல்லாரும் புரிந்துகொண்டு “வாவ் கலக்கல்” என்று சொல்ல…

தலை ஜெர்க்காகிறார்…

“ராஸ்கல்ஸ் என்னது இது சின்ன புள்ளத்தனமா? பேர சொல்லாம என்னதிது விளையாட்டு?”

“தல நீ மட்டும் கேள்வி மேல கேள்வி கேட்டு மனுசன கொல்லுவ… நாங்க பண்ணக்கூடாதா?”

“அதெல்லாம் சொல்லப்படாது!!! நான் கேள்வி கேப்பேன் நீ பதில் சொல்லனும். நீ கேள்வியெல்லாம் கேக்கப்படாது”

“சரி தல… ரொம்ப சவுண்ட் விடாத! நான் பார்ட்டிக்கு போறேன்… போயிட்டு வந்து சொல்றேன்” சொல்லிவிட்டு வெட்டி வெளியே போகிறார்.

“டேய் அப்பரண்டீசுகளா!!! யாராவது சொல்லுங்களேன்டா. யார்டா அந்த அட்லாஸு?”

“தல இன்னுமா தெரியல? நம்ம மில்வாக்கி நாயகன்தான்” சொல்லிவிட்டு இடத்தை காலி செய்கிறார் போர்வாள் தேவ்!!!

இதுக்கு மேலயும் கேட்டா நமக்கு விவரம் பத்தாதுலனு நெனச்சிக்குவானுங்க இந்த அப்பரண்டீசுங்க. எப்படியும் நாளைக்கு பதிவ போடும் போது
பார்த்துக்கலாம். அது வரைக்கும் தெரிஞ்ச மாதிரியே எஃபக்ட்ட கொடுத்துடுவோம் …

“சரி சரி!!! எல்லாம் பார்ட்டிக்கு ரெடி பண்ணுங்க. நான் போய் நம்ம கட்டதுரைய சந்திச்சிட்டு வரேன்” சவுண்ட்விட்டு எஸ்ஸாகிறார் கைப்பு!!!

.... இங்கே பதியப்பட்டது வெட்டிப்பயல் | 26 மறுமொழிகள் »

இது ஒரு நகைச்சுவை நாள்

பதிந்தவர் vavaasangam மேல் நவம்பர் 29, 2006

*

தப்பு செய்றது எப்பவுமே தப்புதான்.

யார் செஞ்சாலும் தப்பு தப்புதான்.

தப்புங்கறது சில சமயம் தப்பு இல்லைன்னு நினச்சு நாம செய்ற சில காரியங்களால தப்பா போயிடும். எதுக்கு இத இப்போ சொல்றேன்னா..

வ.வா.ச. அப்டிங்கிற பேர்ல உள்ள ‘வா’வ இன்னைக்கி ஒரு நாளைக்கு மட்டும் கடாசிடறது அப்டின்ற முடிவை வாலிபர்களெல்லாம் எடுத்துட்டாங்களாம். அது தப்பில்ல…

அவங்க சங்கம்; அவங்க பேரு. அதனால அது தப்பில்ல…

அதோடு, அந்தக் காலத்து ஆள் ஒருத்தரைப் பத்தி எழுதணும்னா,இன்னொரு அந்த காலத்து ஆள்தான் வேணும்னு அவங்க நினைச்சிருக்காங்க; அதுவும் தப்பில்லைதான்.

ஆனால் இப்படி தப்பே செய்யாத அவங்க பண்ணுன ஒரே தப்பு என்னன்னா,
என்னை இங்க ஒரு நாள் டேரா அடிக்கச் சொல்றதுதான்.

‘ஆனாலும் இந்த ஆண்டவன் இந்தச் சின்னூண்டு நெத்தியில எவ்வளவு எழுதியிருக்கான்,பாத்தீங்களா?” (காதலிக்க நேரமில்லை)
என் தலைவிதி எனக்குத் தொடர்பில்லாத ஒரு சங்கத்தில, அதுவும் நகைச்சுவைக்கு முதலிடம் – இல்ல..இல்ல – முழு இடமே கொடுக்கும் வ.வா.ச. ஆட்கள் என்ன இப்படி பிடிச்சி மாட்டுவாங்களா? உங்க தலைவிதி அவங்க செஞ்ச தப்புனால இப்போ பாருங்க நீங்க இத வாசிக்க ஆரம்பிச்சிருக்கீங்க. (எங்க கடைசிவரை வாசிக்கப் போறீங்க? எனக்கு நம்பிக்கையில்லை. அப்படியே வாசிச்சிங்கன்னா, அது உங்க தப்பு! )

இன்னைக்கி எழுத நினச்சதை ஒரு வாரத்துக்கு முந்தியே எழுதியிருந்தா நல்லா இருந்திருக்கும். இன்னைக்கி நம்ம கலைவாணர் பிறந்த நாள். இதப் பத்தி ஒரு வாரத்துக்கு முந்தியே நினச்சி, இந்த நாளை ஒரு ‘நகைச்சுவை நாள்’ அப்டின்னு நாம பதிவர்கள் எல்லோரும் ஒரு விழாவா கொண்டாடியிருக்கலாம். இன்றைய பதிவுகள் எல்லாமே நகைச்சுவையை மட்டும் அடிப்படையாக வைத்து எழுதி இந்த நாளைக் கொண்டாடியிருக்கலாம். அடுத்த வருஷமாவது இந்த நாளை அப்படி கொண்டாடலாம் – தமிழ்மணத்தில் மட்டுமாவது. இந்த மாதிரி ஒண்ணு ரெண்டு நல்ல விஷயமாவது செய்யலாம்ல..? காதலுக்கு நாளிருக்கு;நன்றி சொல்ல நாளிருக்கு.எல்லோருமா சேர்ந்து சிரிக்கிறதுக்கு ஒரு நகைச்சுவை நாளுன்னு ஒண்ணு இருந்தா நல்லா இருக்கும்ல..அடுத்த வருஷம் பதிவர்கள் சேர்ந்து திட்டமிடுங்க.. வருத்தப்படாதவங்களுக்கு இதில ஒரு முக்கிய ரோல் இருக்கு; பாத்து செய்யுங்க. சரியா?

எல்லா நகைச்சுவை நடிகர்களின் நடிப்பிலும் நான் ஒரு விஷயம் பார்த்திருக்கிறேன். அவங்க காமெடி செஞ்சு முடிச்சதும் ஆடியன்ஸ் ரீயாக்ஷனுக்காக ஒரு சின்ன இடைவெளி தெரியும். ஒரு சில நடிகர்களின் நகைச்சுவைக் காட்சிகள்ல தான் இந்த gap இல்லாதமாதிரி தெரியும். பேசும்போது ஆற்றொழுக்கு நடை அப்டின்னு சொல்லுவாங்களே அதே மாதிரி இவங்க நடிப்பும் ஒரே சீராகச் செல்லும். நம்ம ஊர் ஆள்களில் கலைவாணர், எம்.ஆர்.ராதா இந்த இருவரின் நடிப்பில் இதைக் கண்டதுண்டு. அதனாலே அதில் ஒரு இயல்புத் தன்மை இருக்கும்.

கலைவாணர் வில்லுப்பாட்டில் ஆரம்பித்து, நாடகங்களில் வளர்ந்து சினிமாவுக்குள் வந்தவர். இப்படி வருபவர்களின் நடிப்பில் ஒரு செயற்கைத் தனமும் ஒட்டிக் கொண்டு விடும். ஆனா எப்படின்னே தெரியவில்லை. கலைவாணருக்கிருந்த body language அந்த செயற்கைத்தனம் இல்லாமல் இருந்தது – அதுவும் சினிமாக்களின் ஆரம்ப காலத்திலேயே அவர் அதைப் புரிந்து நடித்தது – உண்மையில் ஒரு பெரிய விஷயம்தான்.

இப்போ வர்ர படங்களில் நம்ம இயக்குனர்கள் “கோனார் நோட்ஸ்” போடுவார்கள் தெரியுமா? அதாவது ஒரு கதாபாத்திரம் ஏதாவது ஒன்று செய்யும் முன் அதைப்பற்றி அந்த பாத்திரமே ஒரு soliloquy-ல் அது எதற்கு ஏன் என்று ஒரு detailed lecture கொடுக்கும்; அதாவது படம் பார்ப்பவர்கள் மடையர்கள்; அவர்களுக்கு ஒவ்வொன்றுக்கும் இது போல் விளக்கம் கொடுத்தால் தான் அவர்களுக்குப் புரியும் என்று நம் இயக்குனர்களுக்கு ஒரு புத்திசாலித்தனமான நினைப்பு. இப்படி இல்லாத தமிழ்ப்படம் கொஞ்சம் அரிது. கடைசியில் கதாநாயகனுக்குப் பைத்தியம் தெளிந்தும் அவன் பைத்தியங்களோடு போனானா; இல்லை பைத்தியமாகவே திரும்பி போனானா என்று ஒரு கேள்வியோடு படம் பார்த்தவர்களைத் தியேட்டரைவிட்டு வெளியே அனுப்பியதே ‘சேது’படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக எனக்குத் தெரியும். இப்படி ஒரு கேள்விக்குறியோடு ஒரு படத்தையே முடித்த பாலாவுக்கு நல்ல தைரியம்தான்.ஆனால் மற்ற படங்களைப் பாருங்கள்; சீனுக்கு சீன் விளக்கவுரை இருக்கும்.

ரொம்ப பழைய படம் (அப்புறம் கலைவாணர் நடித்திருந்தா புதுப்படமாகவா இருக்கும்; வந்திட்டாய்ங்க கத சொல்றதுக்கு) – பணம்னு நினைக்கிறேன். சிவாஜி – பத்மினி..? வரதட்சணைப் பிரச்சனையால் பெண்ணை பிறந்த வீட்டுக்கு விரட்டியிருப்பார்கள். கலைவாணர் மாப்பிள்ளை பையனின் வீட்டில் வேலை செய்து கொண்டிருப்பார். மாப்பிள்ளைப் பையனுக்கு மறைமுகமாக புத்தி சொல்ல நினைப்பார். கையில் ஒரு புறாவுடன் இன்னொரு வேலைக்காரனைத் திட்டிக் கொண்டிருப்பார். கதாநாயகனிடம் நியாயம் கேட்பார்.’பாருங்க, ஒருத்தர் இவனுக்கு இந்த அழகான மணிப்புறாவை இலவசமாகக் கொடுத்திருக்கிறார். அதற்கு அவரிடம் நன்றியோடு இருப்பதைவிட்டு அதை வளர்க்கவும் காசு கேட்கிறான்’ என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார். பத்த வைக்கிறதுதான். நல்லா பத்திக்கும். ஆனா இந்த இடத்தில் புறாவையும் புதுப்பெண்ணையும் ஒப்பிட்டோ அல்லது வேறு மாதிரி கதாநாயகனுக்கு அறிவுரை சொல்றது மாதிரி வசனங்கள் ஏதுமிருக்காது. அதாவது நோட்ஸ் ஏதும் கிடையாது.

சிரிப்பைப் பத்தியே ஒரு பாட்டு – எந்தப் படமென்று நினைவில்லை. அந்தப் பாட்டைக் கேட்டுட்டு ஒரு சின்ன புன்முறுவலாவது வரலைன்னா அவங்கள் என்ன மனுசங்களோன்னுதான் சொல்லணும். பலவகை மனிதர்களின் விநோதச் சிரிப்பை பாட்டாகப் பாடி, சிரித்துக் காண்பிப்பார். நடிப்புக்கு நடிப்பு; சிரிப்புக்கு சிரிப்பு.

நடிகர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையிலும் தாங்கள் நடிக்கும்போது சொல்பவைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமா என்பது அடிக்கடி கேட்கப்படும் ஒரு கேள்வி. பெரியார் படத்திற்கு ராஜா இசை அமைக்க மறுத்ததாக வந்த செய்தியை வைத்து நாம் எல்லோரும் அலசினோமே அதுவும் இதைச் சார்ந்த கேள்விதான். இரண்டுக்கும் தொடர்பு தேவை என்பது கட்டாயம் இல்லை. ஆனாலும் இரண்டும் ஒரே கோட்டில் சென்றால் அதன் மவுசே தனிதான். அந்த வகையில் கலைவாணர் ஒரு நல்ல முன்னோடி.அவர் படத்தில் பொதுவுடமைக் கருத்துக்கள், சமூக நல கருத்துக்கள், அப்போதைய தி,க.வின் கருத்துக்கள், சமய எதிர்ப்பு, மூட நம்பிக்கைகளின் மேல் சாடல் – இப்படிப் பல சேதிகளைச் சொல்லுவதாக வரும். அவைகளை தன் வாழ்க்கையிலும் கடைப்பிடித்தார் என்பதும் எல்லோருக்கும் தெரியும். மனிதனும், நடிகனும் ஒன்றிணைந்த இந்த பிணைப்பு அவர் புகழுக்கு அச்சாணி.

புரட்சிக் கருத்துக்களைப் படங்களில் பேசிவிட்டு, ‘அது நடிப்பு; நடிப்பு வேறு; வாழ்க்கை வேறு’ என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தால் அது ஒரு நடிகனுக்குப் பெரிய சறுக்குதான் என்பதை இந்த நாளில் பார்த்தோமே. சொல்லப்போனால் நாம நடிகரா திரையுலகில் பார்த்த நிழல் மனிதரை விடவும் அந்த நிஜ மனிதரின் குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன. கடைசி நாட்களில் மருத்துவமனையில் இருந்தவரை உதவி வேண்டி பார்க்கப் போனவருக்கு, கொடுக்க ஒன்றுமில்லாத நிலையில் அருகில் இருந்த அவரது வெள்ளிக் கூஜாவைக் கொடுத்தனுப்பினார் என்று வாசித்த நினைவு அந்த மனிதரின் மேல் ஒரு பெரும் மரியாதையை அளிக்கிறது.

நம்ம தமிழ் மக்கள்ட்ட ஒரு “நல்ல” குணம் உண்டு. செத்துட்டா எல்லோரையும் ஓஹோன்னுருவோம். அதனாலேயே ‘அவர் ஒரு சகாப்தம்’ அப்டின்றதில எனக்கு மரியாதை இல்லாம போச்சு. நமக்குப் பிடிச்சிட்டா செத்தவங்களை சகாப்தமாக்கிடுவோம் – அரசியல்வாதிகள் இன்னொரு அரசியல்வாதி இறந்ததும் ‘யாராலும் நிரப்பப்பட முடியாத வெற்றிடம் ஏற்பட்டுரிச்சி’ அப்டின்னு சொல்ற ஒரு வார்த்தை ஜாலம் மாதிரி. அதனால கலைவாணர் கிருஷ்ணன் ஒரு சகாப்தம்னு சொல்லி அவரை சீப் ஆக்க விரும்பவில்லை. ஆனால் தமிழ்த் திரையுலகில் அவரது பெயர் எப்பவுமே மறையாது.

அவர் பிறந்த இந்த நாளில் அவரைப் பற்றிய ஒரு பதிவின் மூலம் அவரை நினைவுகூற நினைத்த வ.வா.ச. வாலிப, வயோதிக – (இன்னைக்கு மட்டும் நானும் இதிலே இருக்கேனே; அதுக்காக வயோதிக அப்டின்னு சேர்த்திருக்கேன்) உறுப்பினர்களுக்கு என் வாழ்த்து.

என்னை இப்படி இழுத்துவிட்ட தப்பை செய்தவர்களுக்கு நன்றி சொன்னாலும் அது தப்புதானே!?

பதிவர்களே, இப்படி என்னை இழுத்துவிட்டவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் இந்தத் தப்பைச் செய்துவிட்டார்கள். அவர்களை மன்னியுங்கள்.

*

.... இங்கே பதியப்பட்டது தருமி | 54 மறுமொழிகள் »

தொடர் கொள்ளை-தொடர் மழை

பதிந்தவர் vavaasangam மேல் நவம்பர் 28, 2006

நெல்லையில் சமீப காலமாக தொடர்ந்து கொள்ளையும் தொடர்ந்து மழையும் மக்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கி வருகின்றது. அவை இரண்டிற்கும் இடையே உள்ள சுவையான வித்தியாசங்கள்.

எண் - தொடர் கொள்ளைதொடர் மழை
1 ஆள் இல்லாத வீட்டில்தான் நுழைவான் -

ஆள் இருக்கின்ற வீட்டிலும் நுழைந்துவிடும்

2 பெரும்பாலும் இரவில்தான் -

பகல் இரவு என்று நேரகாலம் பார்க்காமல் வரும்

3 விலையுயர்ந்த பொருள் – பணம் என்று தேடிப்பிடித்து சுருட்டுவான் -

கையில் கிடைத்ததை அள்ளிக்கொண்டு ஓடும்

4 மக்கள் கூடி நின்று எதிர்த்தால் ஓடிவிடுவான் -

எவ்வளவு மக்கள் கூடி நின்று எதிர்த்தாலும் தகர்த்துவிட்டு நுழையும்

5 காவல்துறைக்கு பயப்படுவான்காவல்துறையே பயப்படும்

6 தனிப்படை அமைத்தால் ஒருவேளை பிடிபடலாம் -

தனிப்படை அமைத்தால் தனிப்படையும் தண்ணியில்தான்.

7 மக்களின் மனநிலை அறிக்கையால்தான் கண்டுபிடிக்கமுடியும் -

வரும்முன் வானிலை அறிக்கையில் சொல்லிவிடுவார்கள்

8 வீட்டைவிட்டு வெளியே சென்றால் பயம். -

வீட்டுக்குள் இருக்கும்போதும் பயம்

9 நகைகளைத் திருடுவான்புன்னகையைத் திருடிவிடும்

10 வீட்டுக்குள் சதிவீட்டுக்குள் நதி

11 வரப்போவது தெரிந்தால் வாசலில் அல்லது
வீட்டைச் சுற்றி காவல் இருக்க வேண்டும் -
வரப்போவது தெரிந்தால் மாடிக்கு செல்ல வேண்டும்

12 வந்தால் பொருட்கள் சுத்தமாகிவிடும் -

வந்தால் இடம் சுத்தமாகிவிடும்

13 பாதுகாப்பு கோரி காவலரிடம் புகார் கொடுக்கலாம் -

பாதுகாப்பு கோரி கடவுளிடம் பிரார்த்திக்கலாம்


-ரசிகவ் ஞானியார்

.... இங்கே பதியப்பட்டது நிலவு நண்பன் | 8 மறுமொழிகள் »

கன்னிப்பதிவு (புது வ.வா)

பதிந்தவர் vavaasangam மேல் நவம்பர் 27, 2006

இடம்: பெங்களூரூ நேரம்: அதிகாலை 11.00

வெள்ளிக்கிழமை அதிகாலையிலே தீடீரென்னு நம்பரை இல்லாமே ஒரு அனானி போன கால்வந்திச்சுங்க… பயந்துதான் போனையே எடுத்தேன்.

“ஹலோ யாருங்க பேசுறது?”

“நான் தல கைப்புள்ள செகரட்டரி பேசுறேன்!”

“ஆகா அப்பிடியா! என்னா விஷயம்?”

“தல உங்களை பார்க்கிறதுக்காக இன்னிக்கு பெங்களூரு வர்றாரு!”

“என்னை எதுக்காக பார்க்க வர்றாரு?”

“அதே அவரு நேரா வந்து சொல்லுவாரு! சரி உங்க வீட்டுக்கிட்டே பெரிய கிரவுண்ட் இருக்கா??”

“எதுக்கு??? தல வந்ததும் அங்கே போய் ஏதாவது விளையாட்டு விளையாடுவாரா??”

“ஹலோ! நம்ம தல சாதாரணமான தலைவரா ??? அவரு பெரிய தலைவர்! அதுனாலே ஹெலிக்காப்படருலே வருவாருய்யா!! அதுக்குதான் மைதானம் இருக்கானு கேட்கிறோம்??? இருக்கா இல்லேய்யா? அது மட்டும் சொன்னா போதும்!”

“இருக்கும்மா! தாயே வரச்சொல்லு! இன்னிக்கு வெள்ளிக்கிழமை அதுனாலே நிறைய வேலை இருக்குங்க! சீக்கிரமா வந்து வேலையை முடிச்சிட்டு போயிட்டாருன்னா கொஞ்சம் நல்லா இருக்கும்!”

“சரி இன்னும் ஒன்றரை மணி நேரத்திலே அதாவது மதியம் 12.30 மணிக்கு வந்துருவார்… அவரு வர்றது ரொம்ப ரகசியமா இருக்கனும்! யாருக்கிட்டேயும் சொல்லிறாதே!!!”

“ஏங்க அவ்வளவு புரெடக்சன் தல’க்கு?”

“அதெல்லாம் அவரே வந்து சொல்லுவாரு!!! சரி போன் வைச்சிரு! தல கிளம்பிட்டாரு!!!”

“என்னா சொன்னீங்க? சரியா கேட்கலை?”

“கிளம்பிட்டாருய்யா..!! கிளம்பிட்டாருய்யா!!!”

போன் வைக்கப்பட்டதும் எனக்கு பரபரப்பு பத்திக்கிச்சு! எம்பூட்டு பெரிய தலைவரு வர்றாரு? அதுவும் என்னை பார்க்க வேறே வர்றாரு? வர்றதில்லாம் சரி அதுக்கு ஏன் அதிலே ரகசியம். இப்பிடியே சிந்திச்சுக்கிட்டே இருந்தேனா மறுக்கா இன்னொரு போன்! ஆனா அதுவும் வேறே நம்பர்.

“ஹலோ யாரு பேசுறது”

“சினனச்சாமி ஸ்டேடியத்திலே இன்னிக்கு மதியம் 12.20க்கெல்லாம் வந்திரு!!”

போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது! ஆகா மணி இப்பொ பதினொண்ணு! இங்கெயிருந்து கிளம்பி ஸ்டேடியத்துக்கு போறதுக்குள்ளே பாதி உசுரை போயிருமே! தல ஆகாயமார்க்கமா வந்து இறங்கிறதுக்குள்ளே, நாமே சாலை மார்க்கமா போய் சேர்றதுக்குள்ளே பாதி செத்து சுண்ணாம்பை ஆயிருவோம், ஊரா இது பக்கத்து தெருவுக்கு போறதுக்கு எழுபதிரண்டு சிக்னலு, ஒன்வேயி, ஸ்பிட்லிமிட்’ன்னு சட்டத்திட்டங்க.

இடம்: சின்னச்சாமி ஸ்டேடியம் நேரம்: அதிகாலை 12.20

அகில உலக வருத்தப்படாத வாலிபர்களின் ஒப்பில்லா,எல்லையில்லா,தங்க தலைவன் ஆகாயமார்க்கமாய் வரும் கண்கொள்ளா காட்சியே காண என்தவம் செய்தேன் என் இறைவா??? இம்மாதிரி கப்பித்தனமா நினைச்சிக்கிட்டு இருந்தோப்பா சடாரன்னு நிக்கிற நிலத்துலே அப்பிடியே ஒரு ஆரம் பிடிச்சு வட்டம் சுத்த ஆரம்பிச்சிதது. நாமெல்லாம் ஆறடி அறுபது கிலோ சிங்கமில்லே அப்பிடியே பக்கத்திலே இருந்த ஒரு கம்பத்தை பிடிச்சிக்கிட்டே வானத்தே பார்த்தேன்.

சங்கத்து வாகனம்

நம்ம தல மஞ்ச சொக்கா அதுக்கு மேலே ஒரு செக்க்செவ்வன்னு ஒரு செவப்பு கலருலே கிழிச்சே கோட்டு ஒன்னே போட்டுக்கிட்டு கையிலே பைனாகுலரே வேறே பிடிச்சிக்கிட்டு “ஹாய் ராயலு”ன்னு சவுண்ட் விட்டாருப்பா!! அப்பிடியே சோத்துக்குள்ளே குழம்பை ஊத்துனா டக்குன்னு நடுவிலே ஊடுருவி உள்ளே போறேமாதிரியே ஹெலிக்காப்படரு நடுமையமா ஸ்டேடியத்திலே இறங்கிச்சு.. அதிலே இருந்து இறங்கி ஒரு சிங்கம் கணக்கா தல நடந்து வந்தாரு பார்க்கணுமே! பின்னாடி ரெண்டு பாடிக்கார்ட்ஸ் ஏகே45 பிடிச்சிக்கிட்டு வந்தாங்க..

ராஜ நடை

“வாங்க அகில உலக வருத்தப்படாத வாலிபர் தலைவரே! எதுக்காக நீ வர்றதே இவ்வளவு ரகசியமா வைச்சிருக்கிமின்னு சொன்னீங்க?”

“எனக்கு எங்கேயிருந்து எப்படி, எந்த ரூபத்திலே ஆப்பு வர்ருமின்னு தெரியாது! அதுவும் இந்த ஊருக்குள்ளே ஒரு ஆளு என்னை ஓப்பேத்தினிமின்னே டிராக்டருலே திரியறார்! அவருக்காவே தாய்யா இம்பூட்டு புரெடக்சன்! பார்த்திய்யா பின்னாடி ரெண்டு பயலுவேல்லே? நமக்கு வாகனமும் ஓட்டிக்கிட்டு போலிஸ் மாதிரி துப்பாக்கியே தூக்கிட்டு பாதுக்காப்புக்கும் வர்றாயங்கே! இப்போ பார்ப்போம் யார் நம்மக்கிட்டே மோதறதின்னு??”

“ஆமா தல! உங்களுக்கு இம்பூட்டு பாதுக்காப்பு தேவைதான்!”

“நான் எதுக்கு வந்திருக்கேன் தெரியுமா? உன்னை சங்கத்திலே சேர்க்கலாமின்னு நேர்காணல் நடத்த வந்திருக்கேன்! ம் சொல்லு உனக்கு என்ன வ.வா’க்கான தகுதி இருக்கு???”

“ஓ அப்பிடியா!! அதெல்லாம் எனக்கு நிறையவே இருக்குன்னு நினைக்கிறேன்!”

“சரி வரிசையா சொல்லு பார்ப்போம்!!”

“1)ரெண்டு ஸ்டாப்ன்னாலும் பஸ்ஸிலே போயிரலாமின்னு வெயிட் பண்ணி பண்ணி வெறுப்பாகி கடைசிலே நடக்க ஆரம்பிச்சா நாலு பஸ் சர்புர்ன்னு என்னை கடந்து போகும்????

2)பத்தாவது படிக்கிறொப்பா ரெண்டு தடவை கோட்டு அடிச்சு மூனாவது தடவையா பாஸ் பண்ணுறதுக்குள்ளே ஊருஉலகத்தோட ஏச்சுபேச்சுக்களுக்கெல்லாம் அசரதாதது!!!!???

3)ரெண்டாவது ஆட்டம் சினிமா பார்த்து மறுநா எங்கப்பாருக்கிட்டே வெளு வாங்கி விழுப்புண் விழுந்தாலும் கொஞ்சநேரத்துக்கு அழுது முடிச்சிட்டு அவருக்கிட்டே காசு வாங்கிட்டு மார்னிங்ஷோ சினிமாவுக்கு போனது!!!

4)இவ்வளவு காலமா இங்கிலிபிசே தெரியமே அதே என்னமோ கரைச்சு குடிச்சே கணக்கா வவ்வால்,கிராம்மாருன்னு எல்லாமே தெரிஞ்சமாதிரியே வெள்ளைக்கார தொரைக்கிட்டெய்ல்லாம் இங்கிலிபிசுலேயே பேசுறது!!”

“ஓகே! நெருங்கி வந்திட்டே! இன்னும் வேறே இருந்தா சொல்லு! இந்த பிளாக், ஒயிட்’ன்னு வேறே ஏதாவது இருக்கா???”

ஓ இருக்கே தல! ஒரு மேட்டருமில்லாம ஒரு வருசமா ப்ளாக் எழுதறது??

எந்த பதிவுல யார் ஆப்படிச்சாலும் வலிக்காத மாதிரியே நல்லவனா ஆக்ட் வுடறது??

கட்டதுரைய பார்த்தா எங்க தலக்கிட்ட முடிஞ்சா மோதி பாருடானு சவுண்ட் விடறது??”

“சரி நான் நினைக்கிற எல்லாதகுதியும் உன்க்கிட்டே இருக்கு! யூ ஆர் அப்பாயிண்டெட்”

ஆப்பு ஆயிண்மெண்ட்

“உனக்கு இன்னிலிருந்து அப்போ ஆயிண்மெண்ட்’தான் தடவணும்”

“வொய்”

“நான் என்ன உனக்கு ஜால்ரா அடிக்கவா வர்றேன்! ஆப்படிக்க வர்றேன்!!!!”

“ஹி ஹி நாங்கெல்லாம் எதுக்கும் அஞ்சாத சிங்கமெல்லே! சேர்ந்து போகதே கருஞ்சிறுத்தயப்பு!! நீ இன்னிலிருந்து சங்கத்து டெக்னால்ஜிலே ஆப்ரைண்டிஸா ஜாயின் பண்ணிக்கோ! உனக்கு என்னோட செகரட்டரி ஆப்பர் லெட்டர் அனுப்புவாங்க! ஒரே கண்டிசன் நீ ஒழுங்கா இருந்தேனா எந்த பிரச்சினையிலும் காப்பாத்த வருவேன்! அதிகபிரசங்கிதனம் பண்ணனு வை!! எந்த கம்பத்திலே யாரு கட்டி வச்சு அடிச்சாலும் நாப்பாட்டுக்கு போயிக்கிட்டே இருப்பேன்! என்னா சொல்லுறே???”

“இல்லெ தல! நான் நல்லவந்தான்!”

“எல்லா பயலுவெல்லும் வர்றப்போ சொல்லுறதுதானே!!”

“நான் ஒன்னே ஒன்னு இந்த மக்களுக்கிட்டே சொல்லிக்கலாமா”

“ம் சொல்லு!”

“மக்களை நானும் இன்னிலிருந்து சங்கத்து ஆளு! யாராவது எனக்கிட்டே வம்பிழுத்தா எங்க தலை வருவாரு! `யாருடா என்சங்கத்து ஆளே அடிச்சதுன்னு???` கேட்பாரு! ஆமா சொல்லிட்டேன்!”

.... இங்கே பதியப்பட்டது இராம் | 26 மறுமொழிகள் »

ராயலோ ராயல்

பதிந்தவர் vavaasangam மேல் நவம்பர் 24, 2006


இன்றைய வருத்தப்படாத வாலிபனுக்கு என்ன வேணும், முதல்ல ஸ்டைல்லா ஓட்ட ஒரு வண்டி, அதுவும் பழைய ராயல் என்ஃபீல்ட் வண்டி வாங்கி ஹேண்டில் பாரை வளைச்சு, நெளிச்சு, நல்லா இருக்கிற வண்டிய கேனத்தனமா மாத்திட்டா “வாவ் சூப்பர்”ன்னு சொல்லுவாங்க மக்கள்.

அப்புறம் என்ன,

சொகமா ஒரு ராயல் சேலஞ்ச் பீர ஏத்திக்க வேண்டியது தான்.

ராயலா ஒரு டின்னர்.

எதுக்கு இதெல்லாம், வாலிபப் பசங்க வெளங்காம போவதான் இத்தனை ராயல் மேட்டரு.

என்னா இத்தனை ராயல் மேட்டருன்னு பார்க்குறீங்களா? அதாங்க வெளங்காம போக எத்தனை வழிங்க ராயலா இருக்கு, அதே மாதிரி “ராயல்” ராம் கைப்புவை வெளங்காம பண்ண வ.வா.சங்கத்துல சேர்ந்துட்டாரு. அவர வரவேற்கத்தான் இப்படி ஒரு வெளங்காத ராயல் பதிவு.

அப்படியே சோத்தாங்கை பக்கம் மேல் மூலையில் “Contributors” ல “ராயல்” ராம் பேர் இருக்குதான்னு பார்த்துக்கங்க.

.... இங்கே பதியப்பட்டது ILA | 22 மறுமொழிகள் »

உங்க மனசுல யாருங்கோ

பதிந்தவர் vavaasangam மேல் நவம்பர் 23, 2006

விஜய் தொலைக்காட்சியில் நான் ரசித்து பார்க்கின்ற நிகழ்ச்சிகளில் கிராண்ட் மாஸ்டரும் ( யார் மனசுல யாரு) ஒன்று.

நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படுகின்றது..

யார் மனசுல யாரு ..? உங்க மனசுல யாரு. இப்போ பார்ப்போமா ?கிராண்ட் மாஸ்டர் ஆரம்பிக்கின்றார்.

அவங்க இப்ப உயிரோட இருக்காங்களா..?

ஆமாம் ஆனால் நிகழ்ச்சி முடியும் பொழுது உறுதியா சொல்லமுடியாது

இப்ப எங்க இருக்காங்க?

என் மனசுல

அரசியல், கலை, இலக்கியம் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா..?

இது சம்பந்தமான அறிவு இல்லை

இயற்பியல், கணிதம், கணிப்பொறி, இவற்றில் ஏதாவது?

ஆமாம் எல்லாப்பாடமும் உண்டு

அவங்க படிக்கிற கல்லூரி காயிதே மில்லத், ஸ்டெல்லா மேரீஸ்..?

ஆமாம்..

காயிதே மில்லத்..?

ஆமாம்

அவங்க விரும்பி அணியுற உடை சுடிதார்?

ஆம்

அவங்களுக்கு பிடிச்ச கலர் பச்சை கருநீலம் கறுப்பு?

ஆம்

கருநீலம்?

ஆம்

உங்களுக்கு பிடிச்ச கலர் அவங்கதானே?

ஆம்

தினமும் காலேஜ்க்கு அவங்க கொண்டுபோற மதிய உணவு தயிர்சாதம் – தோசை – முட்டை சோறு இவற்றில் ஒன்றா?

ஆமாம்

தயிர்சாதம்?

ஆம்

அவங்களுக்கு பிடிச்ச பூ ரோஜா – மல்லிகை – பிச்சுப்பூ?

ஆம்

ரோஜா..?

ஆம்

ரோஜாப்பூவை வித்தியாசமா இடப்பக்கம் வச்சிட்டு வருவாங்களா..?

ஆம்

உங்கள அடிச்சதனால அவங்க செருப்பு சமீபத்துல அறுந்து போச்சா?

ஆம்

இப்ப புதுசா கறுப்பு கலர் பாட்டா செருப்பு வாங்கியிருக்காங்களா?

ஆம்

தினமும் வெள்ளை நிற கைனடிக் வண்டியில வருவாங்களா..?

ஆம்

அவங்க வண்டி நம்பர் டி என் 72 பி 1717 தானே..?

ஆம்..

“அடப்பாவி நம்மகிட்டேயே கள்ளம் பறைஞ்சிட்டியேடா மவனே..அது என் பொண்ணுடா..”

அலறுகிறார் கிராண்ட் மாஸ்டர்..

நீங்களும் இந்த நிகழ்ச்சியில பங்கு பெறனும்னா ஏதாவது பெண்கள் கல்லூரி முன்னால நின்னுக்கிட்டு ஏதாவது ஒரு பொண்ணை லவ் பண்ண ஆரம்பிங்க..உங்க லவ் உண்மையா இருந்துச்சுன்னா..நீங்க தான் அடுத்த போட்டியாளர்..யார்..மனசுல யாரு..? பை..

- ரசிகவ் ஞானியார்

.... இங்கே பதியப்பட்டது நிலவு நண்பன் | 16 மறுமொழிகள் »

பாண்டி- அவசரக் கச்சேரி

பதிந்தவர் vavaasangam மேல் நவம்பர் 22, 2006

Image Hosted by ImageShack.us

கிழக்கப் பார்த்த கம்பத்துல்ல நம்ம பாண்டியை பாட்சா படத்து ரஜினிகாந்து மாதிரி கட்டிப் போட்டிருந்தாங்க…

சங்கத்துல்ல அடிச்ச போனை எடுத்தப்போத் தான் விவரம் தெரிஞ்சுது..
ஆஹா சிக்கிட்டான்ய்யா பாண்டி… இனி சிதறு தேங்காத் தான்டீயோன்னு சங்கத்து சிங்கம் ஒண்ணு டைனமைட்டை மிதிச்ச எபெக்ட்ல்லக் கர்ஜிச்சுட்டு ஒதுங்கிருச்சு.

எங்கேப்பா நம்ம சங்கத்து வாகனம்… எடுங்கப்பான்னு ஆளுக்காளு கொரலு விட.. போன மாதம் பேரீச்சபழ ஆசையில் பாண்டி செய்த பழைய ஊழல் வெளியே வந்தது. வாகனம் விலைக்குப் போடப்பட்ட விவகாரம் பாண்டி மீது இருந்த குற்றங்களின் எண்ணிக்கையை கணிசமாய் உயர்த்தியது.

சங்கத்து சபையின் முன் வாசலில் தளபதியும், இளைய தளபதியும் கம்பத்துப் பக்கம் பாண்டிக்குப் பக்கா காவலாய் நின்றுகொண்டிருந்தனர். தல அகமதாபாளையத்துகாரர்க்ளோடு அண்டாவுக்கு அளவெடுத்து அல்ட்ரா டிஸ்டம்பர் அடிப்பது எப்படி என்று அடிக்கடி மீட்டீங் போட்டு பேசவேண்டி இருப்பதாலும் விவசாயியாரின் டிராக்டர் பாகிஸ்தான் பார்டரில் பஞ்ச்ர் ஆகி நிற்பதால் அவரும் சங்கத்தில் மிஸ்ஸிங்.

கச்சேரிக்கான மைக்செட், சவுண்ட் சர்வீஸ் எல்லாம் பக்காவா செட் பண்ணிட்டு திருப்பதியா.. ச்சே திருப்தியான்னு நான் தளபதியைப் பார்த்துக் கேட்டுட்டு ஓரமா ஓதுங்கி நின்னுட்டேன். சிவா கையிலே சாட்டை எடுத்து தளபதி கையிலேக் கொடுக்க.. ராசுக்குட்டி என்ன நடக்கப் போவுதோன்னு பயத்துல்ல என் கையை எடுத்து அவர் கண்ணை அரையும் கொரையுமாப் பொத்திகிட்டு வேடிக்கைப் பார்த்தார்.

அப்போ நிறுத்துடா….என்று சவுண்ட்

வெள்ளைக் குருதப் பூட்டுன்ன சாரியட்ல்ல இருந்து ட்ரிம் பண்ண மீசையோட புலிக்கேசி மன்னர் இறங்குறாரு…

“ஏ…பாண்டி.. என்ன இது?”

“என்ன என்னாது?”

“என்னச் செய்தாய்?”

“என்ன என்ன செய்தாய்?”

“ம்ம்ம்ம்கும்..நான் கேட்பதை என்னிடமே திருப்பிக் கேட்கிறானே?”

“என்ன..ம்ம்ம்ம்கும்..நான் கேட்பதை என்னிடமே திருப்பிக் கேட்கிறானே?”

“பாண்டி தம்பி எல்லாத்துல்லயும் விலாட்டுத் தனம் இருக்கப் பிடாது?”

“என்ன பாண்டி தம்பி எல்லாத்துல்லயும் விலாட்டுத் தனம் இருக்கப் பிடாது?”
“அய்யோ அய்யோ.. இன்னும் சின்னப் பில்லயாவே இருக்க நீயு?”

“என்ன அய்யோ அய்யோ.. இன்னும் சின்னப் பில்லயாவே இருக்க நீயு?”

“டேய் பாண்டி வேணாம் எனக்கு கோவம் வராது….?”

“என்ன டேய் பாண்டி வேணாம் எனக்கு கோவம் வராது….?”

“ஸ்ப்பப்பபா இப்போவே கண்ணைக் கட்டுதே?”

“என்ன ஸ்ப்பப்பபா இப்போவே கண்ணைக் கட்டுதே?”

“வேணாம் எனக்கு கோவம் வராது”

“என்ன வேணாம் எனக்கு கோவம் வராது”

“ஒழுங்காச் சொல்லு.. இட்லி வடை சாப்பிட்டியா?”

“என்ன ஒழுங்காச் சொல்லு.. இட்லி வடை சாப்பிட்டியா?”

“டேய் ரகசியமா இட்லி வடைச் சாப்பிட்டியா?”

“என்ன டேய் ரகசியமா இட்லி வடைச் சாப்பிட்டியா?”

“மரியாதையாச் சொல்லு யாராவது இட்லி வடைச் சாப்பிடறதை ஒழிஞ்சு இருந்துப் பார்த்தீயா?”

“என்ன மரியாதையாச் சொல்லு யாராவது இட்லி வடைச் சாப்பிடறதை ஒழிஞ்சு இருந்துப் பார்த்தீயா?”

“டேய் நீ பண்ணுனது ரைட்டாத் தப்பா?”

“என்ன டேய் நீ பண்ணுனது ரைட்டாத் தப்பா?”

“சொல்லிருடா தப்பா ரைட்டா?”

“என்ன சொல்லிருடா தப்பா ரைட்டா?”

நீ அவன் ஆளுதானே.. அவன் பிட்ட எனக்கேப் போடுறீயா.. இனி வாய் பேசி பிரயோஜனம் இல்லை…

புலிக்கேசி கையில் இருந்து கிளம்பிய சாட்டை சரியாகக் குறி தவறி பாண்டியின் இடமும் வலமும் மாறி மாறி அடிக்க.. புலிக்கேசி மன்னர் களைத்துக் கன்னத்தில் கை வைத்து உட்கார்கிறார். டேய் மன்னருக்கு எதாவது புத்துணர்ச்சிக்கு வழி பண்ணுங்கடான்னு மிகவும் பரிதாபமானக் குரலில் மன்னர் கெஞ்சுகிறார்…

அவ்வளவுத் தான் பாண்டி கைக் கட்டுக்களை நொடியினில் அறுத்தெறிந்து விட்டு மின்னலெனப் போய் தலக் கொடியில் காயப்போட்டிருந்த வேட்டியை அவிழ்த்து கம்பங்களுக்கு நடுவினில் கட்டி.. டிஜிட்டல் டால்பி டிஸ்க் பிளேயரில் ஜெசிக்கா சிம்சனின் லோ ஹிப் நடனக் காட்சியினை ஓட விடுகிறான்.

மன்னர் மெய்மறந்து குத்துப் போடுகிறார். கூடவே கச்சேரியும் களைக் கட்டுகிறது..

“ஆடி வா.. ஆடி வா.. ஆணழகைத் தேடிவா.. பாடல் ஸ்பீக்கரில் அலறுகிறது…”

ஆடலின் உச்சத்தில் புலிக்கேசியின் மீசை மண்ணில் விழுகிறது…

“ஆ..தல.. நீயா?” பாண்டி வாய் பிளக்க…

சத்தம் போடாதே… உன்னிய விசாரிக்கத் தான் இந்த வேசம்… இந்தா அந்த பில்ல இடுப்பு மட்டும் தனியாக் கழண்டு விழற மாதிரி என்ன அழகா ஆடுது.. அதை எம்புட்டு அழகா நீயும் ரசிச்சு எங்களையும் ரசிக்க வைக்கற மாதிரி பண்ணியிருக்க்.. இதுல்ல உன்னிய மாதிரி திறமைசாலி நாட்டுல்ல காட்டுல்ல் ஏன் நெட்டுல்ல கூட உண்டாச் சொல்லு?

பாண்டி தல்யைப் பெருமையாய் பாக்குறான்.

“அதை செய் ராசா..அதைச் செஞ்சு மக்களைச் சந்தோசப்படுத்து.. அதை விட்டுட்டு இட்லி சுடுறேன்.. வடைத் திங்குறேன்னு என்ன இது சின்னப்பில்லத் தனமா இல்ல இருக்கு..அதுக்குன்னு இருக்கவங்க அதைச் செய்வாங்க.. நீ வேணாம்.. என்ன?”

விவசாயின் டிராக்டரின் சத்தம் கேட்க எல்லாரும் வாசலைப் பார்க்க…

விவசாயிக்கு ஸ்பெஷலா… ஜெனிபர் லோபஸ் பாடல் 1000 வாட் ஸ்பீக்கரில் அலறியது….

“நல்லது யார் செய்தாலும் சங்கம் கண்டிப்பாப் பாராட்டும்ய்யா…. நல்லதைச் செய்ங்கய்யா…செய்ங்கன்னு தல சவுண்ட்டா சொல்லிகிட்டே அகமதாபாளையத்து அடுத்த மீட்டிங்க்கு விவசாயி டிராக்டரில் கிளம்பிப் போனார்.

வாழ்க வளமுடன்.

.... இங்கே பதியப்பட்டது Uncategorized | 9 மறுமொழிகள் »

சிவாஜி மகராஜா ரிஸ்க் எடுக்கமாட்டார்…

பதிந்தவர் vavaasangam மேல் நவம்பர் 20, 2006

உலகெங்கிலும் இருக்கும் சோமபானப் பிரியர்களே! பெக் அடிச்சா கிக்கு வரும்னு தீர்த்தம் சாப்பிடாதவங்களுக்கும் தெரியும். இருந்தாலும் சரக்கு உள்ளே போனதுக்கு அப்புறம் என்னவெல்லாம் நடக்கும், என்னவெல்லாம் எப்படியெல்லாம் தெரியும்னு ஒரு புண்ணியவான் எழுதி வச்சிருக்காரு. இக்கட கொஞ்சம் ச்சூடண்டி…

மராட்டிய நண்பர் ஒருவர் அறிமுகப் படுத்திய ஆங்கில மொழிபெயர்ப்பு கவிதை கீழே. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

Peg after Peg
I never take risk while drinking
When I come from office in the evening, wife is cooking
I can hear the noise of utensils in the kitchen
I stealthily enter the house

Take out the bottle from my black cupboard
Shivaji Maharaj is looking at me from the photo frame
But still no one is aware of it
Becoz I never take a risk

I take out the glass from the rack above the old sink
Quickly enjoy one peg
Wash the glass and again keep it on the rack
Of course I also keep the bottle inside my cupboard
Shivaji Maharaj is giving a smile

I peep into the kitchen
Wife is cutting potatoes
No one is aware of what I did
Becoz I never take a risk

I: Any news on Chopra’s daughter’s marriage
Wife: Nope, she doesn’t seem to be that lucky. Still they are looking out for her

I again come out; there is a small noise of the black cupboard
But I don’t make any sound while taking out the bottle
I take out the glass from the old rack above sink
Quickly enjoy one peg

Wash the bottle and keep it in the sink
Also keep the Black Glass in the cupboard
But still no one is aware of what I did
Becoz I never take a risk

I: But still I think chopra’s daughter’s age is not that much
Wife: What are you saying? She is 28 yrs old… like an aged horse
I: (I forgot her age is 28) Oh Oh…

I again take out potatoes out from my black cupboard
But the cupboard’s place has automatically changed
I take out the bottle from the rack and quickly enjoy one peg in the sink

Shivaji Maharaj laughs loudly
I keep the rack in the potatoes and wash Shivaji Maharaj’s photo and keep it in the black cupboard

Wife is keeping the sink on the stove
But still no one is aware of what I did
Becoz I never take a risk

I: (getting angry) you call Mr. chopra a horse? If you say that again, I will cut your tongue…!
Wife: Don’t just blabber something, go out and sit quietly…

I take out the bottle from the potatoes
Go in the black cupboard and enjoy a peg
Wash the sink and keep it over the rack
Wife is giving a smile

Shivaji Maharaj is still cooking
But still no one is aware of what I did
Becoz I never take a risk

I: (laughing) So Chopra is marrying a horse!!
Wife: Hey go and sprinkle some water on your face…

I again go to the kitchen, and quietly sit on the rack
Stove is also on the rack
There is a small noise of bottles from the room outside

I peep and see that wife is enjoying a peg in the sink
But none of the horses are aware of what I did
Becoz Shivaji Maharaj never takes a risk

Chopra is still cooking
And I am looking at my wife from the photo and laughing
Becoz I never take what???

மராட்டிய மூலக் கவிதையை மராட்டிய மொழியில் படிக்கனும்னா(!!???) இங்கு சுட்டுங்கள். சரி…இதை அப்படியே தமிழ்ல நம்மால பேக்க முடியமான்னு பாத்தேன். உஹும்…ஒன்னும் முடியலை. LOL, ROTFL சமாச்சாரத்தை எல்லாம் கெடுத்த பாவம் நமக்கெதுக்குன்னு அப்படியே இங்லிபீசுலேயே போட்டுட்டேன்.

.... இங்கே பதியப்பட்டது கைப்புள்ள | 37 மறுமொழிகள் »

எம் சி ஏ – ஆட்டோகிராப்

பதிந்தவர் vavaasangam மேல் நவம்பர் 17, 2006

[எம் சி ஏ படித்துக்கொண்டிருக்கும்போது கல்லூரி இறுதி ஆண்டில் நண்பர்களுக்கு சும்மா தமாஷாக எழுதிய ஆட்டோகிராப்..டைரியை புரட்டி எடுத்து வந்தது]

என் இனிய கிராமத்து
மாணவர்களே!

ஒரு
ஆர்ப்பாட்டத்தோடு
கல்லூரிக்குள் நுழைந்த
என் இதயம்
இந்த
ஆட்டோகிராப் டைரிக்குள்
அமைதியோடு நுழைகின்றது
(நம்ப முடியலையே)

மீண்டும் எந்தஇடத்தில்
சந்தித்துக் கொள்வோமோ?
தெரியாது,
ஆனால்
இபபொழுது பிரியப்போகிறோம்

நம்பவேமுடியவில்லை
நேற்றுதான்
சேவியர் கல்லூரியில்
தயங்கி தயங்கி
நுழைவுத்தேர்வு எழுத வந்தது போலிருக்கிறது
ஆனால் அதற்குள்
பேர்வெல்(Farewell)….
ஆட்டோகிராப்…
ச்சே ரொம்ப வலிக்குதுப்பா
(என்ன காலில் முள் குத்திடுச்சா)

நாம்
Week-End ல் சந்தித்துக்கொண்டாலும் இது
Strong ஆன நட்பஜதான்
(ஏன் லைட்டான நட்பில்லையா
நீயென்ன டீக்கடையிலையாடா
வேலை பார்க்கிற)

ஒவ்வொரு வாரமும் நமக்கு ரம்சான்
ஒவ்வொரு வாரமும் நமக்கு தீபாவளி
ஒவ்வொரு வாரமும் நமக்கு கிறிஸ்துமஸ்
இப்படி
வருஷப்பண்டிகை அல்ல
வாரப்பண்டிகைதான் நமக்கு

எதை நினைத்துப்பார்ப்பது,
கடைசி பெஞ்சு கலாட்டக்கள்…
விதைக்காமலையே முளைத்த கடலைகள்…
கிண்டலுடனே கடந்த பீரியடு…
சில காதலின் வளர்ச்சிகள்…
பள்ளி வராண்டாவில் தேங்காய் உடைத்தது…

Photobucket - Video and Image Hosting

ஜோசப்புக்கு பெண் பார்த்தது..
ஜன்னலொரம் கடப்பவர்களை கிண்டலடித்தது…
டீக்கடை பெஞ்ச்…
யாருடைய திருமணத்திலும் அழைப்பிதழ் இல்லாமல்
வி எம் எஸ் சாப்பிட்ட சாப்பாடு..
ப்ராக்டிகல் ருமில் செய்த லூட்டி..
ரவுண்டானாவில் அடித்த ரவுண்ட்..
செமினார்கிளாசில் சேட்டைகள் ..
கல்லூரி விழாவில் தோப்புக்கரணம்..
ஜெராக்ஸ் வாங்கிவிட்டு
ஏமாற்றியவர்கள்…
டூர் செல்லும் இரவில் சீட்டுவிளையாட்டு…
பாரீனரோடு எடுத்த Photo..

Photobucket - Video and Image Hosting
பாத்ரூமூக்குள் ஆடிய டான்ஸ்..
கிழிந்தாலு போட்டுவந்த ஜீன்ஸ்..
டூரில் யார் யாரோ ஜோடியோடு
நான் மட்டும் தனியே…(?)
இப்படி
எல்லாமே கனவாகப்போகிறது
(நினைச்சுடாதீங்கப்பா,)

இனிமேல்
குடும்பம- குழந்தை
வேலை-பணம்
என்று
சாதாரண மனிதவாழ்க்கைக்குள்
நுழையப்போகிறோம்
(கவலைப்படாத நைனா)

மீண்டும் சந்திப்போம் என்று
நம்பிக்கையோடு கூறினாலும்
சூழ்நிலைகள் எப்படியிருக்குமோ,

என்றாவது ஒருநாள்
இந்த டைரியை
படிக்கும்பொழுது
என் ஞாபகம் இருக்குமா,
(கண்டிப்பா இருக்காது)

என் பெயர் சொல்லி
யாராவது அழைத்தால்
என் ஞாபகம் இருக்குமா,
(ரொம்ப அலட்டாதடா)

பத்திரிக்கையில் வரும்; என்
கவிதையைக் கண்டால்
என் ஞாபகம் இருக்குமா,

குரங்குசேட்டை செய்யும்
யாரையாவது கண்டால்
என் ஞாபகம் இருக்குமா,
(குரங்குன்னு ஒத்துகிட்டா சரி)

ஆனால்
நான் உங்களையெல்லாம்
ஞாபகப்படுத்தியே
பார்க்கமாட்டேன்
ஏனெனில் என்னையே
நான் எப்படி ஞாபகப்படுத்துவது,
(ஹைய்யா ஐஸ் ஐஸ் ))

அயர்ன் செய்த சட்டை
கூட்ட நெரிசலில் கசங்கிப்போவதைப்போல

இந்த
கடைசிநேரப்பிரிவில் இதயம்
கசங்கிவிட்டது
(யப்பா என்ன சென்டிமென்ட்)

கூட்டம்கூட்டமாய் பழகிவிட்டு
தனித்தனியே பிரியப்போகிறோம்
(சிலபேர் ஜோடியா பிரியறாங்க)

எங்கையோ பிறந்து
பள்ளிவாழ்க்கை எங்கையோ படித்து
கல்லூரி வாழ்க்கையில்
நம்மை நண்பர்களாக்கிய
இறைவனுக்கு நன்றி
(இறைவா மாட்டிவிட்டுட்டியே)

இஙகே நாம்
சந்தித்துக்கொள்ளவேண்டுமென
இறைவன் கட்டளை
சந்தித்துவிட்டோம்
(அரியர்ஸ் வச்சதும்
அவனோட கட்டளையா,)

இப்பொழுது இந்தநேரம்
பிரியவேண்டுமென
இறைவன் கட்டளை
பிரியப்போகிறோம்
(யப்பா சனியன் ஒழிஞ்சது)

உன்னுடைய திருமணத்திற்கு
எல்லோருக்கும்
அழைப்பிதழ் அனுப்பு
மீண்டும்
அனைவரும் சந்தித்துக்கொள்வோம்
(யப்பா வந்துடாதீங்கடா)

இனிமெல்
எந்த வீதிகளில்
எந்த இரயில்வேஸ்டேஷனில்
எந்த பிளாட்பாரத்தில்
எந்த பஸ்டாண்டில்
எந்த ஊரில்
எந்த நாட்டில்
எந்த சாப்ட்வேர் கம்பெனியில்
எந்த சூழ்நிலையில்
மீண்டும் சந்திப்போமோ?

அந்தச் சூழ்நிலையில்
நீ பணக்காரனாகவோ..
நீ தொழிpலதிபராகவோ..
நீ அதிகாரியாகவோ..
எப்படியிருந்தாலும்
பதவிகளை எறிந்துவிட்டு முதலில்
பழைய நண்பனாய் வா!
(வரமாட்டேன் போடா)

நாளைக்கும் நிலவு வரும்
ஆனால்
நாமிருக்கமாட்டோம்
(ஆமா பெரிய தத்துவம்)

நாளைக்கும் சனி ஞாயிறு வரும்
ஆனால்
நாமிருக்கமாட்டோம்
(சரியான லுசுப்பா)

இனியொரு ஜென்மமிருந்தால்
இதே கல்லூரியில்
இதே நண்பர்களாய்
சந்திப்போம் என்று
சங்கடத்தோடு பிரிகிறேன்
(யப்பா முடிஞ்சுது)

- ரசிகவ் ஞானியார்

.... இங்கே பதியப்பட்டது நிலவு நண்பன் | 16 மறுமொழிகள் »