வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்

100% சிரிக்க

ஆகஸ்ட், 2006 க்கான தொகுப்பு

இது நம்ம ஆளு

பதிந்தவர் vavaasangam மேல் ஆகஸ்ட் 31, 2006

வணக்கம் … வந்தனம்… இது செப்டம்பர் மாதம்.. புதிய நாள்… இங்கே பக்கத்துல்ல இவருக்கு வரவேற்பு தட்டி எல்லாம் கட்டி வச்சு ஒரு வாரமாச்சு..

பினாத்தலாருக்கு முன்னுரைக் கொடுக்கறதுங்கறது சூரியனுக்கே டார்ச் லைட் அடிக்கிற மாதிரி தான்.

பளிச்சுன்னு சொல்லணும்ன்னா ஒரு சூப்பர் ஸ்டார் பாட்டு நமக்கு டக்குன்னு ஞாபகம் வருது

“பொதுவாக என் மனசுத் தங்கம்
ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம்…

இந்த வரிகள் நம்ம ஆளுக்கு நச்சுன்னு பொருந்தும். இது வரை வலை உலகில் நடத்தப் பட்ட போட்டிகளில் பெரும்பான்மையானவற்றில் நம்ம ஆளு வெற்றி மாலைச் சூட தவறியதில்லை. இவர் வென்ற போட்டிகளையும் அதன் விவரங்களையும் அறிந்துக் கொள்ள இங்கே சுட்டுங்கள்.

கலகலன்னு சிரிக்க வைக்கிறது நம்ம ஆளுக்குக் கைவந்தக் கலைன்னா.. கல் மனசையும் கலங்க வச்சிருக்கு அவருடையப் பல படைப்புகள்.

ஒரு பல்சுவைப் பதிவாளர். பேச்சிலே எப்போதும் ஒரு அழகியச் சிரிப்பினைத் தேக்கி வைத்திருப்பவர். பழகுவதில் எளிமை, இனிமை, தோழமை என்ற குணங்களுக்குச் சொந்தக்காரர்.

அடிப்படையிலே ஒரு ப.ம.க. காரர் தான் நம்ம ஆளு ஆனாலும் சங்கம் மற்றும் சங்கத்து மக்கள் மீதும் தனிப்பாசம் கொண்டவர்.

நம்ம ஆளு நகைச்சுவையை அள்ளி விட்ட சிலப் பதிவுகள் உங்களுக்காக
அவள் விகடன் பதிப்பித்தஅவன் விகடன்

தான் காரோட்டியக் கதையை நகைச்சுவையாய் கூறிய ஆத்தா நான் பாசாயிட்டேன்

மற்றும் இவரது ஒண்ணரைப் பக்க துக்ளக், கொள்கை டிராக்கர் போன்ற அரசியல் நையாண்டி பதிவுகளும் படிக்க படிக்க சிரிப்பை அள்ளித் தெளிப்பவை.

இவர் சினிமா தயாரித்தப் பதிவுகளும் வெகுப் பிரபலம்… ஆமாங்க ஷங்கருக்கு முன்னாடியே சிவாஜி எடுத்தாரு… கஜினின்னு கலக்குனார்….பதிவுலக ஸ்பீல்பெர்க் கணக்கா நம்ம ஆளு அடிச்ச லூட்டிக்கு அளவே இல்லைங்க.

ஒரு போட்டியிலே ஜெயிச்சு கலக்கனவங்க இருக்காங்க.. பாத்திருக்கோம்.. நம்ம ஆளு ஒரு போட்டிக்கு தலைப்பு மட்டும் கொடுத்தேப் பட்டயக் கிளப்புனார்ன்னா பாருங்களேன்

கதை, கவிதை, கட்டுரை, சினிமா விமர்சனம் என நம்ம ஆளு பொளந்துக் கட்டாத ஏரியாவே கிடையாதுங்க.

இவ்வளவு தானா இவர் பதிவுகள்ன்னு கேட்கறவங்களுக்கு… இதெல்லாம் சும்மா ட்ரெயிலர் தான் இந்த மாசம் சங்கத்துல்ல நம்ம ஆளு மெயின் பிக்சரே ஓட்டுவாரு பாருங்க

இந்த மாதம் நம்ம ஆளு பினாத்தல் சுரேஷ் தான் அட்லாஸ் வாலிபர்…

கட்டம் எல்லாம் கட்டி அலங்காரமா வாங்கய்யா வாங்கன்னு வரிசையில்ல நின்னு சங்கத்து மக்கள் எல்லாம் உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

வழக்கம் போல ஸ்டார்ட் மியூசிக் தான்… ஆப்புகளை அள்ளி அடிங்க… நம்ம ஆளு நின்னு ஆடுவார்..

.... இங்கே பதியப்பட்டது தேவ் | 12 மறுமொழிகள் »

குயி…குயி…குயி…குயிஜு

பதிந்தவர் vavaasangam மேல் ஆகஸ்ட் 30, 2006

குயி…குயி…குயி…குயிஜு அப்படின்னே ஒரு 10 பதிவு போட்டு அறிவாளியா காட்டிகிட்ட கைப்புக்காகவே இந்தக் கேள்விகள். இப்படியே குயி…குயி…குயி…குயிஜு ன்னு வெச்சு, எல்லாம் மக்களையும் எவ்வளவு நாள்தான் திசை திருப்பறது. அப்படியே பின்னூட்டம் வேற போட்டு பரிசு கெலிக்கிறார். உம்மையாவே அறிவு ரொம்ப ஜாஸ்தியாகிப்போச்சு நம்ம கைப்புக்கு.

போன முறை சினிமா கேள்விகளை மட்டுமே போட்டு கலாய்த்தது சங்கம். அதுக்கு வரவேற்பு் நல்லா இருக்கவே இந்த முறை விவரமாக வேற வேற துறைகளிலும் சினிமா, வலை உலகம்னு எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி ஒரு மிக்ஸ்டு ஃப்ரூட் சாலட்டா அள்ளி விட்டு இருக்கோம். மக்கா, பதிலைக் கண்டுபுடிச்சா அது கைப்பு குடுத்த ட்ரெய்னிங்க்ன்னு நெனச்சுக்குவோம். இல்லைன்னா….கைப்பு திரும்பவும் குயி குயி’ன்னு சொன்னாருன்னா ..ஹூ ஹூம் சொல்ல மாட்டோம் செஞ்சு காட்டுவோம். சரி கேள்விக்கு வருவோம்

கம்ப்யூட்டர்ஜி மக்களுக்கு அந்த கேள்விகளை காட்டுங்க.
டொடொடொயங்க்

1) இடைவேளை எடுத்துக்கொண்டு ரொம்ப நாளாக தன் களப்”பணியை” செய்யாமல் இருந்தவர் இவர். மீண்டும் வந்த பொழுதும் ஒன்றுமே செய்யமுடியாமல் போனதாம். இவர் மட்டைகிளப்பைச் சேர்ந்தவராம். ‘திருட்டு’ மாம்பழங்கள் என்றால் ரொம்ப இஷ்டமாம். துப்பு- தினமலர்.

2) ஒரு ஊரில் நடந்த வலை மாநாட்டில்(???!!!!) கலந்து கொண்டவர்களில் இருவர் ‘சிங்கிள்’ எடுத்தவர்கள், ஒருவர் ஒரு ‘சிங்கிளும்’ ஒரு பவுண்டரியும் அடித்தவர், இன்னொருவர் இரண்டு பவுண்டரிகளை அடித்தவர். பவுண்டரிகளின் “தொல்லைகளே ஆவாது சாமி” என்று அந்த இரண்டு ‘சிங்கி’ள்களும் நாட்டை விட்டே பறந்து விட்டார்களாம்.

3) இவர்கள் தவற்றைக்கண்டு ‘புயல்’ எனப் பாய்ந்து வேட்டையாடியதில் கிடைத்தது இரண்டு இலக்கம் ‘சரக்கு’. இந்த கூட்டத்தில் ஒருவன் சிக்கியதால் வந்த வினையே இது. இதுக்கும் ஒரு துப்பு, போலீஸார்.

4) இவர் இவரோட லட்சியத்துக்காக் போராடியவர். இதற்காக ஒரு புரட்சியே நடந்து கொண்டு இருக்கிறது. துப்பு, போராடியவருக்கு நிர்வாகமே எதிரியாம்.

5) பெரிய ‘கலக’த்தை உருவாக்கியவர், போனால் போகட்டும் என விட்டுவிட்டது நிர்வாகம். இவர் ரொம்ப நல்லவர்ர்ர்ர்ன்னு சொன்னது ஒரு சாரார்.

6) வலைப்பதிவை சேர்ந்த இவருக்கு ஒரு பெரிய வீடும் 5+ சின்ன வீடுகளும் உள்ளதாம். இதில் ரகசியம் எல்லாம் ஒன்றும் இல்லை, நேரடியாகக் கேட்டால் மனம் திறந்து ஒத்துக்கொள்வாராம். துப்பு- இவர் கண்ணாடி, சால்வை அணிந்த ‘சக்கி’.

7) முதலாமவர்(கள்) தனித்தனியாக வலைச் சேவை செய்து தன் பொழப்பை விற்று வந்தார்கள். இரண்டாமவர் ரொம்ப பிரபலமானவர், திடீரென்று பல இடத்தில ‘கால்/கை’ வைத்து வெற்றி பெற்றவர். இரண்டாமவர் இப்போது முதலாமவரின் துணையோடு இன்னும் பிரபலமாகிறாராம். உள்ளுக்குள் என்ன ‘Bond’ஓ ஆண்டவருக்கே வெளிச்சம்.

8) தமிழ்மணத்தில் தனி மனித தாக்குதல் தவறு என்று தெரிந்த பிறகும், அப்படித் தான் செய்வேன் என்று சொல்லும் பதிவர்கள் இவர்கள். என்று தான் திருந்துவார்களோ? சங்கமாவி யுகே யுகே

.... இங்கே பதியப்பட்டது ILA | 36 மறுமொழிகள் »

ஆப்பரேஷன் போலி வரு.வா.சங்கம் – 2

பதிந்தவர் vavaasangam மேல் ஆகஸ்ட் 25, 2006

முதல் பகுதியை வாசிக்க இங்கேச் சுட்டவும்

கைப்பு கிளம்பிப் போன பிறகு…

சிபியின் ஆவேசமானத் தோற்றம் கண்டு கலங்கிப் போயிருந்தோம் நால்வரும். தளபதி டக்கென்னு பாக்கெட்டுக்குள் கைவிட்டு கையை மடக்கி மேலேத் தூக்கி காற்றில் நாலைந்து முறை ஆட்டிக் காட்டினார்.

” எதாவது தாயத்து மேட்டரா?” இது நான்.
“ச்சே எல்லா தாயத்தையும் டாலருக்கும் பவுண்டுக்குமா வித்து நல்ல ரேட் பாத்துட்டார்ப்பா.. இப்போ ஸ்டாக் இல்ல அவர்கிட்ட்” இது விவசாயி.

கையைத் திறக்கிறார் உள்ளே சிம்ரன் படம்.

“தள, கட்சி மாறிட்டீயா… சிம்ரன் ஆன்ட்டி போட்டோவைக் காட்டுற.. எங்கே அந்த …”
பாண்டியின் கதறல் முடியும் முன், சிபி க்ரீஷ் படத்தில் வரும் ஹிரித்திக ரோஷன் மாதிரி சரக்புரக்கென என்ன என்னமோ வித்தைக் காட்ட கொஞ்ச செகண்டுக்குள் அவர் கோலம் மாறுகிறது.. கருப்பு கோடு கருப்பு பேண்ட் கருப்பு தொப்பி கருப்பு கண்ணாடி கையிலே கருப்பு செல்போன்.. அதுல்ல கருப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு ரிங் டோன்…

பேக் கிரவுண்டில் ஸ்பானீஷ் பாடல் ஒன்று படு ஸ்டைலா ஒலிக்க… ருமுக்குள்ளே குறுக்கும் நெடுக்கும் முப்பது தடவை நடந்தார் தள.

“சிக்கிட்டோம் இனி சிதறாம போறது சிரமம்” இது புலிக்குட்டி சிவாவின் பம்மல் பஞ்ச்.

சிம்ரன் படத்துக்குப் பின்னாடி இருந்தது ஒரு உணவகத்தின் விசிட்டீங் கார்ட். அந்தக் கடையின் நம்பருக்கு சிபி போனைப் போட்டார்.

“ஹலோ … சிம்ரன் ஆப்பக் கடையா….?”

என்னாது கொய்யாலேலே….. திறந்த வாய் மூடாமல் மற்ற நால்வரும் பீதியில் பிளிறினோம். தளபதி எதையும் கண்டுகொள்ளவில்லை

“ஹலோ..ஹல்ல்லோ… நான் வ.வா.சங்கம் தளபதி கலாயத்தல் திலகம் ஜாலித் தம்பி அண்ணன் சிம்பு.. சீ சிபி.. பேசுறேன்.. “ என்று ஏற்ற இறக்கத்தோடு பேசினார்.

“நான் எதோ விதைச்சது விளைஞ்சது.. வித்தது.. விலைப் போகாததுன்னு ஒரு ஓரமா உக்காந்துப் பதிவுப் போட்டுகிட்டு இருக்கேன் என்னிய் சங்கம் அது இதுன்னு கூட்டிட்டு வந்து பங்கம் பண்ணிட்டீங்களே பாவி மக்கா” இது விவசாயி.

“நான் பாட்டுக்கு அத்து வானக் காட்டுல்ல கிடைச்ச பாகிஸ்தான் நாட்டு பிகர்களைப் படம் புடிச்சுப் பாண்டிக்கு அனுப்பி எதாவது ஆகுமாப் பார்ன்னு விசாரிக்க வந்த இடத்துல்ல சங்கம்.. நீ எல்லாம் சிங்கம் சொல்லி மந்தரிச்சு மஞ்சத் தண்ணீ ஊத்தி இப்படிக் கிடத்திப் புட்டியளே மக்கா.. சங்கத்துல்ல சுனாமி வர.. வந்து எல்லாத்தையும் சுருட்டிகிட்டு போக..” புலிக்குட்டி சிவா கண்ணீரில் நனைய…

பாண்டியும் நானும் அங்கிட்டு இருந்து தப்பிக்க எதாவது வழி கிடைக்குமான்னு சுத்தும் முத்தும் பார்த்துகிட்டு இருந்தோம்..

தேவண்ணே… இவங்க இப்படி பொலம்பியே நம்ம கழுத்தை அறுத்துருவாய்ங்கப் போலிருக்கு… நான் வேணும்ன்னா டைம் பாஸ்க்கு நான் சாட்டிங்க்ல்ல கரெக்ட் பண்ண ஒரு ஆன்ட்டி நம்பர் போட்டு தர்றேன் கொஞ்சம் நேரம் கச்சேரி பண்றீங்களா

ஏலே பாண்டி நாங்க விவரம்டீ.. நீ இப்படித் தான் போனத் தடவை.. நயந்தாராவுக்கு நமபர் போட்டுத் தார்ரேன்னு சிபிக்கு அவர் பொண்டாட்டி நம்பரைப் போட்டுக்கொடுக்க.. அவரும் ஒரு பீலிங்க்ல்ல போன்ல்ல நம்ம கவுண்டர் கணக்கா ரொமான்டிக் லுக் எல்லாம் கொடுக்க.. மீதி வரலாரு நாடறியும்… நீ என்னை அத்து விட்டுட்டு இங்கே இருந்து போகவே முடியாது..” பாண்டி கையை இறுக்கிப் பிடிச்சௌ வைச்சுகிட்டேன்.

இந்தக் கேப்பல்ல போன்ல்ல என்னவோ நடந்து இருக்கணும்.. ஒரு வாட்டி தல இப்போ இந்த கிராண்ட் மாஸ்டர் ஷோவுல்ல வருதே ஒரு புள்ள… பேரு கூட காயத்ரி ஜெயராம் ( பெயர் தகவல் உபயம் : நன்றி பாண்டி) அது கிட்ட பேட் வேர்ட்ஸ்ல்ல வாங்கு வாங்குன்னு வாங்கி கட்டுவாரே.. அதே ரியாக்ஷன் சிபி மொகத்துல்ல..

” மே ஐ கம் இன்சைட்” இது நான்.
” ஊ இஸ் தட் டிஸ்டபன்ஸ்” இது விவசாயி..

“நத்திங்.. நான் எல்லாம் பேசிட்டேன்.. ஆப்பக் கடைக்கு அர்த்த ராத்திரியில்ல நம்மளை வரச் சொல்லியிருக்கார். “

“பட் உங்க மொகம் வாடி போயிருக்கு” இது சிவா

” அப்படி தெரியுதா..அது கன்டி நியூஸா வேலைப் பாக்குறேன் இல்ல அதான் வேற ஒன்னும் இல்ல”

“நம்பலாமா?” இது பாண்டி.

” ஒ.கே நம்பலாம் போலி இஸ் மை பெஸ்ட் பிரெண்ட்யா.. நம்புங்க.. போலியும் நானும் ஆர்.எஸ் புரம் கிருஷ்ணா ஸ்வீட்ஸ்ல்ல பலத் தடவை ஒண்ணா போளி எல்லாம் சாப்டு இருக்கோம்யா”

“அப்புறம் அர்த்த ராத்திரில்ல மீட்டீங் எதுக்கு?”

‘அவ்ர் கொஞ்சம் ஷை டைப் .. நம்புங்க வயசுப் பசங்க பாக்க வர்றீங்க ஒரு சின்ன வெக்கம் இருக்கும்ல்ல” சிபி திடமாய் சொன்னார்.

“அவர்ட்ட எல்லாம் பேசிட்டேன்… இப்போ சங்கத்தைப் பெரிய லெவலுக்குக் கொண்டு போறதுக்கு அவரும் ஓ.கே சொல்லிட்டார்.. அதாவது.. நம்ம சங்கத்துப் பேர்ல்ல ஒரு போலி சங்கம் அவரே ரெடி பண்றேன்னு சொல்லிட்டார்…அவர் வழ்க்கமா அனுப்புற போலி லிஸ்ட்வோட லேட்டஸ் வெர்சன் இன்னிக்கு ரிலீஸாமா.. அதுல்ல கடைசிப் பெயரா நம்ம சங்கமும் வந்துருமாம்.. உறுதி கொடுத்துட்டார்”

“அப்புறம் நாமளும் வலை உலகிலே பெரிய பெரிய ஆளுங்க லெவலுக்கு போயிருவோம்.. இது வரைக்கும் நம்மளை எல்லாம் வெறும் தமாஸ் கூட்டம், மூளைக்கெட்ட பசங்க அப்படி பாக்குற அந்த இமெஜ் அப்படியே மாறிடும்… நம்ம தல கைப்புவை இந்த நிகழ்ச்சிக்கு அப்புறம் நம்ம வலை உலக மக்கள் எல்லாரும் ஒரு ஆல்பர்ட் அயன்ஸ்டீனோட மறுபிறப்பாப் பாப்பாங்க அது உறுதி.

இந்தா நம்ம இளா ஒரு அரிஸ்டாட்டில்.. நம்ம தேவு ஒரு ஷேக்ஸ்பியர்…சிவா ஒரு ப்ளூட்டோ…

“தள.. அது பிளேட்டோ.. ப்ளூட்டோ.. டிஸ்னி காமிக்ஸ்ல்ல வர்ற நாயி ண்ணே” இது சிவா

“ம்ம் அது அதே தான் நீயு”

“தள ..என்னிய விட்டுட்டீங்களே.. நானு” இது பாசக்கார பாண்டி.

” நீ எல்லாம் லியோ டால்ஸ்டாய் லெவலுக்கு போயிருவ..நாம் எழுதறது எல்லாம் எங்கியோப் போகும்.. நமக்கு இனிமே இந்த தமிழ்மணம் மக்கள்ஸ் சப்போர்ட் வேணாம்.. இங்கிலீஷ் மணம், பிரெஞ்ச் மணம், ஜெர்மன் மணம், ஜப்பான் மணம்ன்னு பிக் அப் ஆகிப் போயிகிட்டே இருப்போம்ய்யா

“எங்களுக்கெல்லாம் பதவி கொடுத்துட்டு நீங்க…தள” விவ்சாயின் கண்களில் கண்ணீர் பொங்கியது.

“இளா.. அவர் தான் சாக்கு ரெட்ஹில்ஸ்” இது நான்

“அது யார்ப்பா.. ?”

“அவர் நம்ம தள மாதிரி பெரிய மேதைப்பா அவர் ப்ரொப்ல்ல அந்த படம் தான் இருக்கும் நீ பார்த்தது இல்லயா விவசாயி”

“அப்படியா? “

தமிழ்மணம் மற்றும் அதையும் தாண்டி எங்களுக்கு கிடைக்கப் போகும் மாபெரும் பெயர் புகழ் இதையெல்லாம் நினைத்து… லா..லா.லா.லா….. ராகம் போட ஆரம்பிச்சோம். தளபதி சிபியின் திட்டத்திற்கு முழு ஆதரவு கொடுப்பதாய் முடிவு செய்தோம்.

ராத்திரி பன்னிரெண்டு மணிக்கு எல்லாரும் மொத்தமாய் கிளம்பி ஆப்பக் கடை வாசலை அடைந்தோம்…

என்ன தள.. கடை அடைச்சு இருக்கு? ” பாண்டி கேட்டான்.

“நாம் கொஞசம் லேட்டுன்னு நினைக்கிறேன். சரி தம்பிகளா எல்லாரும் இங்கேயே வெயிட் பண்ணுங்க நான் உள்ளேப் போய் பாத்துட்டு வர்றேன்”
தள எஙக்ள் கையில் பிஸ்கட் பாக்கெட் ஒன்றை கொடுத்துவிட்டு உள்ளேப் போனார். போகும் முன்னர்,

“தம்பிகளா.. யாராவது இங்கே என்னப் பண்றீங்கன்னு கேட்டு வந்தா.. அவஙக்ளுக்கு எல்லாம் இந்தப் பிஸ்கெட் கொடுத்து பேசிகிட்டே இருங்க… புரியுதா?.. தள உள்ளே போயிட்டு கரேக்ட்டா வேலையை முடிச்சுட்டு வந்துறேன்…இது டைமிங்..”

அப்படின்னு உள்ளே போனார்.தளபதி உள்ளே போய் ஒரு மணிநேரமாகியும் ஆளைக் காணவில்லை. பசி வேற வயிற்றைக் கிள்ளியது. பின்னூட்ட மார்க் பிஸ்கெட்க்களைப் பிரித்து நாங்களே அந்தப் பிஸ்கெட்டுக்களைச் சாப்பிட ஆரம்பித்தோம்.

“இது தப்பில்லயா அடுத்தவங்களுக்குக் கொடுக்க வச்சிருக்க பிஸ்கொத்தெல்லாம் நாமளே சாப்பிடக்கூடாது” பாண்டி பாவமாய் கேட்க

“நோ இது தப்பே இல்ல… இது பத்தி சுஜாதாக் கூட 2002ல்ல..” என ஆரம்பித்த இளாவுக்கு ரெண்டு பிஸ்கெட் எக்ஸ்ட்ரா கொடுத்து அமைதிப்படுத்தினோம்.

“என்னய்யா, பூராப் பிஸ்கோத்தும் காலியாடுச்சு இன்னும் தளபதியே காணும்… “ சிவா எச்சரிக்கை மணி அடிக்க

நாங்கள் பீதி அடைய ஆரம்பித்தோம்….அதே சமயம் ஆப்பக் கடை கிரைண்டர்கள் அலறிப் புடைத்து ஓட ஆரம்பித்தன….

ஆத்தாட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டீ.. என்ற பயங்கரப் பேரிரைச்சலோடு ஒரு கொரல் எங்கள் ரத்தததையே நிறுத்துவதுப் போல் கேட்டது.

“இது நம்ம தலக் கைப்பு கொரல் இல்ல்.. தல எப்போ எப்படி இங்கே வந்தார்….”

அதிர்ச்சியில் நாங்கள் நடுங்கி நின்றோம்….

தொடரும்

.... இங்கே பதியப்பட்டது தேவ் | 18 மறுமொழிகள் »

மனோகரா

பதிந்தவர் vavaasangam மேல் ஆகஸ்ட் 23, 2006

திருக்குரல்’ன்னா பி.சுசீலா, எஸ்.ஜானகி குரல் மாதிரி ஸ்வீட்டா இருக்குமா….?

நடந்து முடிஞ்ச கல்யாணத்துக்கு இப்ப ஏன்ன் சார்ர்ர் மோளம் அடிக்கர்ரீங்க…?

ஞானப்பழம் சாப்பிட்டா, ஞானம் வரும்ன்னா, புளியம்பழம் சாப்பிட்ட புளி வருமா..?

திருக்குரளை எழுதினது யாரு?
நம்ம பெயிண்டர் மணி சார்..

ட்ரெயினுக்கு நேரமாச்சு நான் கிளம்பரேன்..
ட்ரெயினுக்கு நேரமானா, ட்ரெயின் தான கிளம்பனும், நீ ஏன் போற..?

ஈ.பி.கோ.. ஈ.பி.கோ’ன்னு சொல்றீங்களே, அங்கயும் வசந்த் அன் கோ’வில கிடைக்கிற மாதிரி டீ.வி, ப்ரிட்ஜ் எல்ல்லாம் கிடைக்குமா..?

இந்த மாதிரி எல்லாம் பேசுனா அப்புறம் நான் பெனால்ட்டீ குடுத்திடுவேன்..
குடுங்க குடுங்க.. அப்படியே கொஞ்சம் சக்கரை ஜாஸ்த்தியா போட்டு குடுங்க..

நரசிம்மாவா? அது ப்ரிபெயிட் சிம்மா இல்லை போஸ்ட் பெயிட் சிம்மா??

கவிதை எழுத தெரியாது, சாக்ஸஃபோன் வாசிக்க தெரியாது, உனக்கு என்னதான் தெரியும்?
தூர இருக்கிற நிலாவை தெரியும், கண்ணை கட்டி விட்டாலும் கரெக்ட்டா வைன்ஷாப் போக தெரியும்.. அப்புறம்… உங்க அப்பா வச்சிருக்கிற ஆன்ட்டிய தெரியும்.

ஹெலிகாப்டர்க்கு ஏன் வெளியில ஃபேன் வச்சிருக்காங்க, உள்ளார வச்சிருந்தா குளு குளுன்னு போலாமில்ல..

டேய் தல’க்கு ஒரு டீ போடு
தலைக்கு ஷாம்பூ தான போடுவாங்க, நீ எதுக்கு டீ போட சொல்ற?

டேய் டைம் என்னாச்சு?
உன்கையில தான் வாட்ச் கட்டியிருக்கில்ல
அது ஓடலை, அதான் உன்னை கேக்குறேன்..
கட்டி வச்சா எப்படி ஓடும், அவுத்து வுடு அப்பத்தான் ஓடும்..

வண்டிய ஏன் தள்ளிட்டு வர்ற, என்ன பிரச்சனை?
காத்து இல்லை..
அந்த ஆலமரத்துக்கு கீழ போயி நில்லு, அங்க நல்ல்லா காத்து வரும்

படிச்ச பொண்ணா இருந்துட்டு அய்யோ அய்யோ’ன்னு கத்துறா..
ஏன் படிச்ச பொண்ணா இருந்து அழகப்பா யூனிவர்சிட்டி, அண்ணாமலை யூனிவர்சிட்டி’ன்னு தான் கத்தனுமா??

மேல இருக்கிற தெய்வீகவசனங்களோட சொந்தக்காரர்.. நம்ம கைப்புள்ள’க்கு அடுத்தாப்படியா, நம்மள அவரோட ஒவ்வொரு அசைவுக்கு சிரிக்க வைக்கிற கில்லாடி.. திருவாளர். ‘சொட்டை’மனோகர்..


விஜய் டீ.வி’யில லொல்லு சபா பார்க்கரீங்க இல்ல, முன்னயெல்லாம் புதங்கிழம ராத்திரி ஒம்போதுமணிக்குங்கோ’ன்னு சொல்லிட்டிருந்தாங்க இப்ப அது வெள்ளிக்கிழம ராத்திரி ஒம்போது மணிக்குங்கோ’வா மாறியிருக்கு…

இணையத்துல லொல்லுசபா

கவுண்டர் பத்தி ஒரு ஒன்லைனர் பதிவு போட்டது நல்லாயிருக்குன்னு சொன்னீங்களா.. அதுதான் மறுபடியும் அதே மாதிரி பதிவு.. ஹி..ஹீ.

.... இங்கே பதியப்பட்டது கொங்கு ராசா | 14 மறுமொழிகள் »

உதயமாகிறது கிசுகிசு சங்கம்

பதிந்தவர் vavaasangam மேல் ஆகஸ்ட் 22, 2006

ஷெர்லாக் ஹோம்ஸ்’னு ஒரு உப்பு சப்பிலாத மேட்டருக்கு ஒரு மொக்க படத்த உத்து பார்க்க வெச்சவுரு Dr. நமது கைப்பு. இது வேற மாதிரி.. ஜூட்

1)மருத்துவரும் கட்டிட காண்டிராக்டரும் இணைந்து அமானுஷ சக்திகளை எதிர்த்து போராடுகிறார்களாம். வெற்றி நிச்சயமாம், இதற்கு பிண்ணனியில் இருப்பது ரா.ரா வாம்.

2) ரே’னாவுக்கும், கீ’னாவுக்கு கடுக்காக் குடுத்த பி’னா சு’னாவிடம் வகையாக மாட்டிக்கொண்டார். ர.மா’னா வந்துதான் முடித்துவைப்பாரே?

3) வைகைக்காரருக்கும் சென்னைக்காரருக்கும் நடுவில் சிக்கிக் கிடக்கிறதாம் திரி. கொளுத்தப்போவது யாரு?

4) அடக்க ஒடுக்கமாய் இருப்பாராம், அழகிய பெண்கள் மயங்கி இவர் பின்னால் போகிறார்களாம், தப்புகள் செஞ்சா பிடிக்காதாம் நெருப்பென பாய்வாராம். கடைசியில, இது எங்கே போய் முடியுமோ சங்கரா, சங்கரா…

5) புத்தரின் மறுபெயர் கொண்டவருக்கும், மரம் நட்ட சாம்ராட்டுக்கும் நடுவில் உறவுப் பிரச்சினையாம், நட்சத்திர மணியானவருக்கே எல்லாம் வெளிச்சம்.

6) கலகலப்பு கோஷ்டி ஊரு விட்டு ஊருவந்து, இருக்கிற ஒரு டப்பா மேட்டரை உருட்டிகிட்டு, பண்ணும் அழிச்சாட்டியம் தாங்க முடிய வில்லையாம். அட்வஸ் பண்ணியும் கேட்கலையாம். சந்திரனின் சூழ்ச்சி வெற்றி பெருமா?

7) பாலைவன ஊரில் இருக்கும் அவருக்கும், குளு குளு ஊர் பொண்ணுக்கும் இடையில் காதலாம். அஞ்சல்கள் பறக்கும் அவசரத்தைப் பார்த்தால் அடுத்தது என்ன? குள்ளப் புலவர் சொன்ன கதை இது.

8) கிராமத்து ராசா, தோகையப் பார்த்து மயங்கி நின்னாராம், இது வயசுக்கோளாராம். . என்னாத்த சொல்ல.

9) ஆனை மாதிரி செலவு, படகுல சவாரி, பொன்னும் பொருளும் புதைஞ்சு இல்லே கிடக்கு. ரகசியம் தேடிப் போயிருக்காம் ஒரு கும்பல்

10) ஆட்டோவும் இருக்கு, ஆஸிடும் இருக்கும், எதையும் எதிர்த்து ஜெயிக்க துணிவும் இவருக்கு இருக்கு. பட்டைய கிளப்புவாரா?

Disc: இந்தப்பதிவு வழக்கம் போல யாருடைய மனதையும் புண்படுத்த இல்லை. தனிமனித தாக்குதலும் இல்லை.

பதில் தெரிஞ்சா சொல்லுங்க பார்ப்போம்
நன்றி: விசாரணை குழு தலைவர் தேவ், மற்றும் உறுப்பினர்கள்

.... இங்கே பதியப்பட்டது ILA | 72 மறுமொழிகள் »

ஆப்பரேஷன் போலி வரு.வா.சஙகம்.

பதிந்தவர் vavaasangam மேல் ஆகஸ்ட் 18, 2006

ஹல்லோ கைப்புள்ள காலிங்…..

குரல் கேட்டதும் வரப்பில் இடறி விழுகிறார் விவசாயி. பிதற்றலானந்தா ஆசிரமத் திண்ணையில் கலாய்ததலின் நடுவே கதறி எழுகிறார் தளபதி சிபி. பேட்டையில் லொள்ளு அன்ட் ஜொள்ளு எல்லாத்தையும் நிறுத்திட்டு எள்ளென ஆஜரானார் பாண்டி. எதோ சொல்கிறேன்… என்னத்தா நான் சொல்ல எனப் பேச்சைக் குறைத்து புலிக்குட்டி சிவா தலக் குரலுக்கு பணிவாய் பம்மி நிற்கிறார். கச்சேரி மைக் செட்டிலும் தலக் கொரலு காந்தமா ஒலிக்க நானும் வெலவெலத்து நின்னேன்.

” என்னப் பண்றீங்க…அவன் அவன் ஆட்டோ வச்சு அவன் அவன் தலைவனுக்கு ஆப்பை ஆப் ரேட்ல்ல வாங்கி அனுப்பிகிட்டு இருக்கான் இங்கே என்னன்னா அம்புட்டு பயலும் அமுக்கிட்டு ஆளுக்கொரு பக்கம் சிங்கம்லேன்னு சீட்டியடிச்சுகிட்டுத் திரியறீங்களா.. என் சினத்தைச் சுண்டி இழுக்குறீங்க.. இனி சிக்கி சிதற போறீங்க ஆமா”

“ஆமா தல கைப்பொண்ணு கிளம்புனப் போது கூட இப்படி ஆவேசமா ஆகல்லியே.. இப்போ என்ன நடந்துச்சுன்னு இப்படி அவர் வேட்டி அவுந்து விழுறதுக் கூடத் தெரியாமா அவிஞ்சுப் போய் அலறிகிட்டு இருக்கார்”
தளபதி சிபி தலைமையில் மற்ற ஐவரும் ஒரே மாதிரி யோசித்தாலும் யாரும் வாய் திறக்கவில்லை

“நான் பாட்டுக்கு சிவனேன்னு என் வேலையைப் பார்த்துகிட்டு இருந்தேன்.. என்னியக் கூட்டிட்டு வந்து சங்கம் தங்கம்.. கவுரவம் கிராதகம்ன்னு சொல்லி மொத்தச் சோலியையும் முடிக்கத் தான் அம்புட்டுப் பயலும் திட்டம் போட்டுருக்கீங்காது எனக்குத் தெரிஞ்சுப் போச்சுறா.. தெரிஞ்சுப்போச்சு.. முழிக்கற முழியப் பாரு.. அப்ரசெட்டுக்களா”

“தல.. அது அப்ரசட்டு இல்ல.. அப்பரண்டிஸ்.. A..PP..” என்று விவசாயி மகா சிரத்தையோட திருத்த முயல…

“என்ன கிண்டலா.. நான் என்னப் பரீட்சைக்காப் போயிகிட்டு இருக்கேன் பாடம் நடத்திகிட்டு இருக்க..என்னியக் கேக்காம கொள்ளமா தமிழ் சங்கம் ஆரம்பிச்சவன் தானே நீயு”

“தல என்ன கோவம்.. எதுக்கு டென்சன்..” நான் தலயைக் கூல் பண்ண முயற்சிக்க

“கொந்தளிச்சுப் போயிருக்கேன்.. கோபத்தைக் கொப்பளிக்கறதுக்கு முன்னாடி உன் கச்சேரிய நிறுத்தி வை… ஆமா பின்னூட்டம் போட மாட்டீயா நீ… தனிக் கச்சேரி பண்றியா நீ…கண்ணு முழியெல்லாம் குதறிடுவேன் ராஸ்கல்… ஒழுங்காப் போய் சங்கத்துப் பக்கத்துக்கெல்லாம் பின்னூட்டம் போட்டுத் தேவையில்லாம தலக்கு வர்ர ஆப்பு அம்புட்டையும் தடுத்து நிறுத்துப் போ”

“அடேய் அப்ரசட்டுகளா.. அம்புட்டு பேரும் எங்கேடாப் போறீங்க?”
” தேவையில்லாத ஆப்பை எல்லாம் தடுத்து நிறுத்த”
“அதெல்லாம் வேண்டாம் இங்கே வாங்க”
என்னையும் கூப்பிடுறாருன்னு பாசத்தோட நானும் திரும்பி வர…
” ஏய்.. கச்சேரி. அபரச்ட்டு நீ எங்கே திரும்பி வர்ற?”
” அதான் ஆப்பை எல்லாம் தடுக்க வேணாம்ன்னு நீங்கத் தானே சொன்னீங்க”
” அது அவங்களைச் சொன்னேன்.. நீ போய் தேவை இல்லாத அம்புட்டு ஆப்பையும் தடுத்து நிறுத்து.. போ”
‘எனக்கு ஒரு சின்ன டவுட் தல… தேவையான ஆப்பு எது தேவை இல்லாத ஆப்பு எதுன்னு எப்படி கண்டுபிடிக்கிறது?”
“அடேய் அப்ரசட்டு நீ தடுக்குர ஆப்பு அம்புட்டும் தேவை இல்லாத ஆப்பு தான் போதுமா… போய் கொடுத்த வேலையை ஒழுங்காச் செய்.. நல்லா இழுத்து வச்சு லந்து அடிக்கிறாங்க ராஸ்கல்ஸ்”
பாண்டி பதறி பம்முகிறார்.

“ஓங்களுக்கெல்லாம் நல்லாச் சொல்லுறேன் கேட்டுக்கங்க..சங்கத்து மேலக் கடன் சொல்லித் தான் நான் கேமரா வாங்கி படம் புடிச்சுட்டுத் திரியற உண்மையை அந்த கிசுகிசு குரூப் கண்டுபிடிச்சுச் சொல்லுரதுக்குள்ளே சங்கத்து நிதி நிலைமைச் சரியாகணும்… என்னப் பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ எனக்குத் தெரியாது.. பின்னூட்ட எண்ணிக்கை அதிரடியா ஏறணும் ஆமா”

“ஆமாத் த்ல சங்கத்து மேல இருக்க கடனுக்கும் பின்னூட்ட எண்ணிக்கைக்கும் என்ன சம்பந்தம்..”
“கேள்வி எல்லாம் வேறக் கேக்குறீங்களா… அதெல்லாம் ஒரு கணக்கு உங்களூக்குப் புரியாது…”
“அப்படி என்ன கணக்கு?”
“மெதுவாப் பேசுங்கய்யா.. அடி வயிறு கலங்குது… சங்கத்துல்ல கணக்குக் கேட்டாயங்களாம் கிசுகிசுப் போட்டுறப் போறாயங்க”

“சரி… மெதுவாகக் கேக்குறோம் சொல்லுத் தல”

“ம்ம்ம் ஐ.நா. சபையிலே வருததப்படாம வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் திட்டம்ன்னு ஒண்ணு இருக்காம்.. மேலே தம்பி புலிக்குட்டி சொல்லும் கேளூ”

“அதாவது நம்ம கைப்பு மாதிரி மாமாபெரும் தலயின் தலைமையில் முடிச்சவிக்கி வேலையெல்லாம் செய்து மொள்ளமாரி …”

“போதும் நிப்பாட்டு.. நான் புலிக்கேசி இல்ல.. கைப்பு…உஷார் நாங்க.. நாங்களே சொல்லுவோம்”
புலிக்குட்டி பதுங்கி நிற்க.. கைப்பு தொடர்கிறார்.

“அது பெருசா ஒண்ணும் இல்ல.. ஒரு பின்னூட்டத்துக்கு 100 டாலர் விதம் கடன் கொடுத்துட்டு இருந்தாயங்க… நானும் பணம் வருதுன்னு கையிலே கேம்ரா எடுத்துட்டு லேடிஸ் ஓணான்.. லேடிஸ் பல்லி, லேடீஸ் ஒட்டகம்ன்னு ஜாலியாச் சங்கத்துப் பக்கமே வராமப் படம் பட்மாஎடுத்துகிட்டுத் திரிஞ்சேன்… தீடிரென்னு நேத்து சனிவால்ல இருந்து போன்… “

“தல அது ஜெனீவா”

“எங்களுக்கும் தெரியும்.. நீங்கப் பொ… “
“தலலலல….”
“போதும் நிறுத்துன்னு சொல்ல வந்தேன்.. அதுக்குள்ளே ஏன்ய்யா அலறி உயிரை வாங்குற ஸ்ப்பப்பா”
தலக்கு மூச்சு வாங்குகிறது.

“இப்போ உன் சங்கம் போற போக்குக்கு உனக்கு டாலர் எல்லாம் தர முடியாது.. வேணும்ன்னா வடபழனி கோயில் வாசல்ல விக்குற டாலர் தான் கிடைக்கும்ன்னு ஏகப் பேச்சு பேசிட்டான்…”

இப்போ எங்களுக்கு எல்லாம் விளங்கியது,

“ஆகாப் பின்னூட்டக் கயமைத்தனம் இது தானா.. நான் கூட வேற என்னமோன்னு இல்ல நினைச்சேன்” தளபதி சிபி

“ம்ம்.. நீ ரொம்ப நல்லவன்னு நம்பி இல்ல இருந்தேன்” பாண்டி

“ஆகா… தல கிளம்பிட்டய்யா.. எங்களைச் சிக்கி வச்சிட்டு கிளம்பிட்ட” இது புலிக்குட்டி சிவா

“ஆக மொத்ததுல்ல எங்களை வச்சுக் காமெடி கீமெடி எல்லாம் பண்ணி இருக்க நீயு” இது விவ்சாயி.

நான் கடனேன்னு கொல்லைப் பக்கம் நின்னு வர்ற ஆப்பை எல்லாம் தடுத்துகிட்டு நிக்குறேன்.

கால் கட் ஆகிறது…

தலயின் ஆவேச மிரட்டலால் மிரண்டுப் போன சங்கத்து மக்கள்.. வளைகுடா முதல் வால்பாறை வரையிலான அனைத்துக் கிளைகளுக்கும் தகவல் கொடுத்தப் படி இருந்தனர்.

என்னப் பண்ணா தலயின் புகழை மேலும் பெருக்கலாம்.. பின்னூட்டக் கயமைத்தனம் மீது விசாரணைக் கமிஷன்கள் நியமிக்கப்பட்ட நிலையில் அந்த விபரீதத் திட்டத்தை தளபதி சிபி தன் விழிகள் விரிய சொன்னார்..

அஞ்சுப் பேரும் அல்லு தெறிக்க அம்புட்டும் நடுங்க சிபியைப் பார்த்தோம்…
வேற வழியே இல்ல.. தல புகழை வளர்க்கவும்… முக்கியமாச் சங்கத்துல்ல நம்ம பதவிகளைக் காப்பாத்தவும் இதைப் பண்ணியே தீரணும்…

பாண்டியின் பிஞ்சுக் கண்களில் மழையென கண்ணீர் பீடியில் பொங்கி கிளம்ப…

என் இனமடா நீ என அவனை நான் இறுக கட்டிப் பிடிக்க, என்னையும் தாண்டி மெகா சவுண்டில் அதே டயலாக்கைச் சொல்லிப் பாண்டியைக் கட்டிப் பிடித்தார்.

தள்பபதி… வாக்கு.. சே .. நாக்கு எல்லாம் தள்ளுது.. இது நமக்கு வேணுமா? வேற எதாவது யோசிப்போமே ” புலிக்குட்டி வாலை சுருட்டி வாய்க்குள் விட்டுக் கொண்டு வேண்டுகோள் வைக்க…

தளபதி சிபி மேலும் உறுதியான குரலில் சொன்னார்…
இதை நாம் செய்து தான் தீரணும்.. நம்ம வீரத்திருமகன் தலக் கைப்புக்கு நாம் காட்டுற விசுவாசம் உண்மைன்னா இதை நாமே செய்தே தீரணூம்…

சஙக்த்துக்குப் பலகையில் பெரிய எழுத்துக்களில் அழுத்தமாய் எழுதினார்

ஆப்பரேஷன் போலி வரு.வா.சஙகம்.

நாங்கள் ஐவர் மட்டுமன்றி இந்த தகவலை விடியோ கான்பிரஸ்ல்ல பார்த்துக் கொண்டிருந்த மொததச் சங்கக் கிளை நிர்வாகிகளும் கதி கலங்கி வாய் அடைத்துப் போயினர்…

தொடரும்

.... இங்கே பதியப்பட்டது தேவ் | 21 மறுமொழிகள் »

சங்கம் – கவிதைப் போட்டி- 1

பதிந்தவர் vavaasangam மேல் ஆகஸ்ட் 17, 2006

இந்தச் சங்கத்துக்கும் கவிதைக்கும் என்ன சம்பந்தம் அப்படின்னு நீங்க கேட்டா அதுல தப்பே இல்லை. ஆனா இருக்குன்னு தான் நாங்க பதில் சொல்லுவோம். எதுக்கு தமிழ்ச்சங்கம் அப்படின்னு ஆரம்பிச்சீங்கன்னு ஒருத்தர் தனி மடல்ல என்னையை ரின் சோப்பு இல்லாமையே துவைச்சு தொங்கப் போட்டுட்டாரு. உங்களுக்கு பொதுவுல பதில் சொல்றேன்னு அப்போ தப்பிச்சிகிட்டேன். தமிழ்நாட்டுக்கு அப்பால் இருக்கிற மக்கள் தமிழ்
பேச வாய்ப்பு கம்மியானாலும் தமிழ் மேல ஒரு அக்கறை ஈடுபாடு வந்துரும். இதைப் பொய்’ன்னு சொல்றவங்க கையை தூக்கலாம்.

சரி, போட்டிக்கான் விஷயத்துக்கு வருவோம். இது ஒரு கவிதைப் போட்டி. இது எங்கள் முதல் முயற்சி. உங்கள் ஆதரவைப் பொறுத்து தொடர்ச்சியா போட்டிகளை நடத்த நாங்கள் முடிவு செய்து உள்ளோம்.

* போட்டிக்கான தலைப்பு “இன்னும் இருக்கிறது ஆகாயம்”

* படைப்புகளை அனுப்ப கடைசி நாள் 31-Aug-2006(நள்ளிரவு 23:30-IST)

* படைப்புகளை அனுப்ப – மின்னஞ்சல – kavithai.tsangam@gmail.com

இனி விதிமுறைகள்
1. கவிதைகள் மட்டுமே. ஹைக்கூ, புதுக்கவிதை, மரபுக்கவிதை, எப்படி வேணுமின்னாலும் இருக்கலாம்
2. 20 வரிகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும்
3. ஆங்கில வார்த்தை கலவாமல் இருத்தல் நல்லது
4. ஒருவர் எத்தனை படைப்புகளை வேண்டுமென்றாலும் அளிக்கலாம்.
5. படைப்புகளை எங்களுக்கு யுனிகோட் எழுத்துருவில் மின்னஞ்சல் மூலம் தனி மடலிடல் வேண்டும். தனி மடலில் உங்கள் வலைப்பதிவு முகவரி இருத்தல் அவசியம்.(ஆங்கிலத்தில் இருப்பினும் யுனிகோட்டில மாற்றிக்கொள்ள ஏதுவாக அனுப்பி வைக்கவும்)
7. உங்கள் படைப்பினை தமிழ்ச் சங்கத்தில் தனிப்பதிவாக வெளியிடப்படும்.
8. ஜாதி, மத, சமய, தனி நபர் தாக்குதல் கொண்ட பதிவுகள் போட்டியில் சேர்க்கப்பட மாட்டாது.
9: போட்டிக்கான முடிவுகள் பிறகு அறிவிக்கப்படும்.
10. ‘போட்டிக்கான நடுவர் கவிதைக்கு கௌரவம் தந்த மிகப் பெரிய கவிஞர். அவர் யார் என்பது அடுத்த அறிவிப்பில்!’
11. போட்டிக்கான படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 31-Aug-2006 (நள்ளிரவு 23:30-IST)

.... இங்கே பதியப்பட்டது ILA | 16 மறுமொழிகள் »

ஒன் – லைனர்ஸ்

பதிந்தவர் vavaasangam மேல் ஆகஸ்ட் 16, 2006

நம்ம கூட்டாளிக ஒரு இடத்துல கூட்டமா சேர்ந்தா அந்த இடத்துல கேட்க கிடைக்கிற சில ‘ஒன்-லைனர்’கள இங்க உங்களுக்காக தொகுத்து குடுத்திருக்கேன்.. நீங்களும் படிச்சு (நினைச்சு) ரசிங்க.

ஹ.. ஹா. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா

(வாட் டூ யூ வான்ட் சார்?)
பீஸ் ஆஃப் மைன்ட்..

டேய்.. வந்ததே ராங்கு, இதுல என்னடா சாங்கு..?

ஹூ ஈஸ் த்தட் ட்டிஸ்ட்டபன்ஸ்..?

என்னடா சிரிப்பு அது, கரடி கக்கூஸ் போற மாதிரி..?

உங்க தம்பி நல்லவ்ருங்கோ.. வல்லவருங்கோ. தங்கம்ங்கோ.. கோல்டுங்கோ.. டையமன்டுங்கோ..

போதும்டா சாமி.. ரீல் அந்து போச்சு..

ஹை.. எகுறுங்கோ.. ஆஹா எகுறுதுங்கோ.. மச்சானுக்கு எகுறுதுங்கோ..

ஓ.. இனி இதுல டான்ஸ் வேற ஆடசொல்லுவாங்க போல இருக்குதுப்பா..

இஸ்தலக்கடி லோலா சுந்தரி அஸ்தலக்கடி கோல கொப்புற கொய்யா

இதுக்கு பேரு தான் மேண்டில்.. இது தான் ப்பளீர்ர்னு எரியும்..

அண்ணன் நல்லவரு, வல்லவரு, பெண்ட் எடுக்கறதுல வல்லவரு

அண்டடாயர் கணக்கு பார்க்கரீங்க, டண்டடாயர்டண்டடாயர்ன்னு..

நாலு வூடு வாங்கி திங்கற நாயிக்கு, லொல்லப்பாரு,
எகத்தாளத்தப்பாரு,
பழமையப்பாரு,
வந்தன்னா குறுக்கெட்டி முதிச்சுபொடுவேன்

மாப்பி.. யூ கோ, ஐ கம்மிங்

மை நேம்? குண்டலகேசி, தேர்ட் ஸ்டான்டர்ட், அவ்வையார் ஆரம்ப்ப பாட சாலை..

அதாவது, கழுதை மேய்க்கிற பையனுக்கு இவ்வளவு அறிவான்னு எல்லாருக்கு பொறாமை
(அக்காங்ண்ணே)

கோழி குருடா இருந்தாலும், குழம்பு ருசியா இருக்குதாங்கிறது தான்டா நமக்கு முக்கியம்

டேய், பழம் பழுக்கலைன்னாலும் இந்த ஆல் இன் ஆல் அழகு ராஜா புகை போட்டு பழுக்க வைப்பான்டா

எங்களுக்கும் வெக்கம் வேலாயுதம், சூடு சூலாயுதம், மானம் மாரியாத்தா, எல்லாம் இருக்கு

இது உலக மகா நடிப்புடா சாமியோவ்..

அட்றா.. அட்றா.. அட்றா சக்கை

நோ’ப்பா. ப்ரூஸ்லீ மை ஃப்ரண்ட், அவர் டெத்துக்கு அப்புறம், எனக்கு இந்த கராத்தே எல்லாம் புடிக்கறதில்ல

காந்தகண்ணழகி.. தோ இங்க ப்பூசு, சைட்ல பூசு, பேக்..


ஸ்டார்ட்ட் மீசிக்..

சங்கூதுற வயசுல சங்ங்க்கீதா..

ரிஜக்ட்டட்..

இங்க சந்த்ரு சந்த்ரூன்னு ஒரு மானஸ்த்தன் இருந்தான்..

என்னை பார்த்து எப்படிர்றா அந்த கேள்விய கேட்ட..? ம்ம்.. என்னைய பார்த்து..?

முப்பது ருவா முழுசா குடுத்தா, நான் மூணு நாலு கண்ணு முழிச்சு வேலை செய்வன்டா

எட்டணா போட வக்கில்லாத நாயி.. லா பேசுது பாத்தியா

செய்யிறதயும் செஞ்சுட்டு, திருவிழாவுல காணாம போன புள்ள மாதிரி முழிக்கறதப்பாரு

டேய்.. நீ எந்தந்த நேரத்துல் எந்தஎந்த டைப்புல மூஞ்சிய மாத்துவேங்கிறதெல்லாம் எனக்கு தெரியும்டா

ஓ.. லுக் தேர்.. சவுத் இண்டியன் டயானா

குட்மார்னிங் ஆப்பீசர். ச்சரீங்க ஆப்பீசர்

யோவ் தாடி, முதல்ல வாயுல கைய விட்டு வாந்தி எடுய்யா, உன் தொல்லை தாங்க முடியல..

சாகும் போது கூட அடுத்தவனுக்கு தொந்திரவு குடுக்காம சாகமாட்டானுகப்பா இவனுக

அண்டப்புளுகு ஆகாச்ப்புளுகு கேள்விப்பட்டிருக்கேன்.. இது உலகமகாப்புளுகுடா சாமி

டேய், பொள்ளாச்சி சந்தையில, அத்தனை ஊர்கவுண்டனுகளுக்கும் டேக்கா குடுத்துட்டு, கலெக்டர் மச்சான்னு பொய் சொல்லி, கவர்மென்ட் கார்லயே மெட்ராஸ் வந்தவன்டா நான்.. எங்கிட்டயே உன் டகால்டி வேலைய காட்டுற பாத்தியா

நாட்டுல இந்த தொழிலதிபர்க தொந்திரவு தாங்க முடியலைடா சாமீ.. புண்ணாக்கு விக்கறவன், குண்டூசி விக்கவரவன் எல்லாம் தொழிலதிபர்ங்கிறானுக

மொத்தத்தையும் படிச்சதுக்கப்புறம் நம்ம கூட்டாளிகள பத்தி ஒரு தெளிவான அயிப்பராயத்துக்கு வந்திருப்பீங்கன்னு நம்பறேன்.. :)

(சும்மா ஒரு அவசர உப்புமா பதிவு.. கண்டுக்காதீங்க..)

.... இங்கே பதியப்பட்டது கொங்கு ராசா | 14 மறுமொழிகள் »

கோவியாரின் நாடக சபா – பாகம் 2

பதிந்தவர் vavaasangam மேல் ஆகஸ்ட் 16, 2006

பாகம் 1

காட்சி 3 :

எனக்கு வேணும் … எனக்கு வேணும் … ஆசை .. ஆசை ஆயாக்கட ஆப்பம் பாயாமேல ஆசப்பட்டு … இங்கிட்டு வந்து மாட்டிக்கிட்டேனே … அவ்வ்வ் .. சுத்தி நின்னு அடிக்கிற மாறியே இருக்கே … இன்னிக்கு பிளாஸ்திரி தான் …. ஐயோ … இந்த நேரம் பார்த்து சிவாவைக் காணும்… சொக்கா …. நானே சொக்காவை கிழிச்சிக்கறத்துக்குள்ள வந்துடய்யா என் ராசா… ! அவன் இல்லை வரமாட்டான் நம்பாதே … அவ்வ்வ்வ்வ்வ் !

ட்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ங்,
மறுபடியும் சிவா சின்னப்பிள்ளையின் முன் தோன்றுகிறார்
சின்னப்பிள்ளை : வா அப்பு … லொள்ளுதானே … !
சிவா : அதைவிடும் பரிசு கிடைத்ததா ?
சின்னப்பிள்ளை : எல்லாம் கெடச்சிது … கீழ்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு வண்டிக்கு ஆளு அனுப்பாததுதான் குறை … செத்த பொருத்திருந்தா … அவனுங்க சொக்காவை கிழிச்சி அனுப்பியிருபானுக … எம காதக பயலுவ …!
சிவா : சின்னப்பிள்ளை என்ன உளருகிறீர்
சின்னப்பிள்ளை : உளரலப்பு … உண்மையைத்தேன் சொல்றேன் … நீ வடித்ததில் ஜொள் இல்லையாம்
சிவா : என் பாட்டில் ஜொள் இல்லையென்று சொன்னவன் எவன் ?
சின்னப்பிள்ளை : ம் … ஒனக்கு எகனைக்கு மொகனையா மாத்தி மாத்தி நக்கலா பதில் குடுக்கறத்துக்குன்னே ஒருத்தன் இருக்கான் …
சிவா : எனக்கு சரிக்கு சரி லொள்ளு பண்ண ஒருவன் இருக்கிறானா எவன் ?
சின்னப்பிள்ளை : பேரு நக்கலாராம்
சிவா : சின்னப்பிள்ளையாரே … ! என் கூடவாரும் !
சின்னப்பிள்ளை : அப்பு ஆளவிடுவியா … ஏற்கனவே பசி காதை அடைக்கிது…!
சிவா : இப்ப வருவிரா வரமாட்டிரா ? என்று கோபமாக பார்க்கிறார்.
சின்னப்பிள்ளை மனதுக்குள் … ‘விடமாட்டேங்கிறானே… !வரலைன்ன .. அங்கன ஆவுனுங்க செய்யததை இவன் செஞ்சிடுவானோ’ நினைத்து பயந்தபடி
சின்னப்பிள்ளை : ம் விதியாரை விட்டிச்சு … வர்ரேன் வர்ரேன் ….. ஆப்பு வாங்கனும்னு விதியிருந்தா யாரால மாத்த முடியும் அவ்வ்வ்வ்வ்வ்வ்.
இருவரும் ஜொள்ளுப் பாண்டியின் அரண்மனையை நோக்கிச் செல்கிறார்கள்

காட்சி 4 :
சிவாவும் சின்னப்பிள்ளையும் உள்ளே நுழைகிறார்கள்
சிவா : என் பாட்டில் ஜொள் இல்லை என்று லொள்ளு பண்ணியவ எவன் ?
ந.நக்கீரர் : அவையடக்கத்துடன் கேட்டால் அதற்குத் தக்க நக்கல் செய்யப்படும்
சிவா : ஓ நக்கல் பேசுகிறவரிடம் நாவடக்கமாக பேசவேண்டும் ? நீர் யார்
ந.நக்கீரர் : நானே நக்கலா … நானே உமது பாட்டில் லொள் இல்லையென்றேன்

சிவா : ஓ நீர் தான் நக்கல் நக்கீரரா …. ? என் பாட்டில் என்ன ஜொள் இல்லை ?

ந.நக்கீரர் : பாட்டை ஏற்றியவர் நீர் வராமல் யாரோ ஒருவரிடம் கொடுத்தனுப்பியதன் காராணம் ?
சிவா : காரணம் ஆயிரம் இருக்கிறது … அவற்றை உம்மிடம் சொல்லி … ஜொள் சங்கதிகளை உம்மிடம் மொத்தமாக விற்க முடியாது … ஒன்று மட்டும் சொல்கிறேன் … சரியாக 5 மணிக்கு எத்திராஜ் காலேஜ் வாசலில் ஆஜராகிவிடுவது வழக்கம்… அதுதான் சின்னப் பிள்ளையிடம் கொடுத்து அனுப்பினேன் … உமக்கு என்ன ஓய் ?

ந.நக்கீரர் : சரி நீர் வடித்த ஜொள் பாடலை பாடிக்காட்டு ஓய் !

சிவா : நன்றாக கேட்டுவிட்டு பிறகு லொள்ளு பேசு ஓய், இதோ கேளும்

காலேஜ் பிகர்கள்,
கட்டிளங் குமரிகள்,
அங்கயற் கன்னிகள்,
மணமான மாதுக்கள்,
பேத்தி கண்ட பாட்டிகள் … ஏன் ?
அத்தினி, சித்தினி, பத்தினி பெண்களுக்கும்
இன்னும் எத்தனையே
வகை தமிழ் பெண்டிருக்கும்,
நெற்றிப் பொட்டில் வைக்க
ஸ்டிக்கர் பொட்டே சிறந்தது !

ந.நக்கீரர் : பாடலின் பொருள் … ?

சிவா : ம் … புதுக்கவிதை புரியவில்லை என்று சொல்லும் ஒரு புலவரை வைத்திருப்பது ஜொள்ளுப் பாண்டிக்கு வெட்கக்கேடு ! சரி நானே சொல்லிவிடுகிறேன்

தமிழ் பெண்களில் எத்தனை வகை இருந்தாலும், எந்த வயதாக இருந்தாலும் அவர்களின் நெற்றியில் வைக்க ஸ்டிக்கர் பொட்டே சிறந்தது … !

ந.நக்கீரர் : சாந்துப் பொட்டுதான் சிறந்தது என்கிறேன் நான் !

சிவா : எப்படி சரி என்கிறீர்கள் ?

ந.நக்கீரர் : சாந்து பொட்டுதான் நம் பாரம்பரியம், நம் பண்பாடு, நம் கலாச்சாரம்

சிவா : பழம்பெருமை பேசுகிறீர் நக்கலாரே !

ந.நக்கீரர் : உண்மையாகத் தான் சொல்கிறீரா, ஸ்டிக்கர் பொட்டு சிறந்ததென்று ?

சிவா : காலேஜ் பிகர்கள்மீது ஆணையிட்டுச் சொல்கிறேன்

ந.நக்கீரர் : சத்தியமாக ?

சிவா : ஒட்டுமொத்தமாக அனைத்துப் பிகர்கள் மீதும் ஆணையிட்டுச் சொல்கிறேன் … ஸ்டிக்கர் பொட்டே சிறந்தது !

சிவா கோபமாகிறார்

சிவா : நக்கலாரே … நன்றாக என்னைப் பாரும் .. நான் வடித்த பாடலில் ஜொள் இல்லையா ?

ந.நக்கீரர் : நீரே ஜொள்ளுக்கெல்லாம் ஜொள்ளலானாக இருக்கட்டும் … அரண்மனை காவல் ராஜபாளையம் நாய்களே … நீர் வடிக்கும் ஜொள்ளைப் பார்த்து தலைகுணிந்தாலும் … உம் பாட்டில் ஜொள் இல்லை … ஜொள் இல்லை !

சிவா நக்கலாரை மேலும் கீழும் பார்த்து பிரகாசம் ஆகிறார்

சிவா : ஜொள்ளுபாண்டி மன்னரே … ! அவையோர்களே … ! நக்கலாரின் அங்க வஸ்திரத்தைப் பாருங்கள் … ஆடையைப் பாருங்கள்… அவர் அவைக்கு வரும் முன்னர் இவருடன் வண்டியில் வந்த பிகரின் சாந்து/குங்குமம் இவரது ஆடையில் ஒட்டியிருப்பதைப் பாருங்கள் … அங்க வஸ்திரத்திலும் ஆடையிலும் சாந்து பொட்டு … அதாவது குங்குமம் எங்கும் பட்டிருக்கிறது பார்த்தீர்கள் தானே !

சிறிது நேரம் எல்லோரும், ஜொள்ளையும், லொள்ளையும் மறந்து ‘கொள்’ என்று சிரிக்கிறார்கள்

நக்கலாரின் லூட்டி வெளியில் தெரியவந்ததை நினைத்து நக்கலார் வெட்கத்தால் தலைகுனிகிறார் !

சிவா : ஜொள் மன்னா ! அதற்காகத்தான் சொன்னேன் … சாந்து பொட்டு அசவுகர்யமானது … காட்டிக் கொடுத்துவிடும் .. அதுமட்டும் தானா இல்லை இல்லை …. . மேலும் அதை வைத்துக் கொள்ளும் பெண்களுக்கு கலப்படம் காரணமாக நெற்றித்தோல் வெளிர்ந்து அரிப்பும் வரும் !

நக்கலார் சிக்கல் தீர்ந்ததும் மெதுவாக சிவாவை நோக்கியபடி,
ந.நக்கீரர் : ஜொள்ளரே … சாந்து குங்குமம் விற்கும் அனைவரும் தொழில் நசிந்து சாப்பாட்டிற்கு வழியில்லாமால் போய் கஷ்டப்படுவார்களே என்ற நல்லெண்ணத்தில் அவ்வாறு கூறினேன். மன்னியுங்கள் எங்காவது தவறியிருந்தால்.

சிவா: நக்கலாரே… ! எல்லாம் எமக்குத் தெரியும். உங்கள் நக்கலை ரசித்து லொள்ளு பண்ணுவே நான் இங்கு வந்தேன். வந்திருப்பது லொள்ளிலும், ஜொள்ளிலும் வல்லவர் என்று தெரிந்தும். தொடர்ந்து எக்குதப் பாகவே பேசி எல்லி நகையாடி நக்கல் செய்ததற்கு உங்களை போற்றி மகிழ்கிறேன் . வாழ்க உமது நக்கல். இனி உங்களுக்கு ஒரு காலமும் இல்லை சிக்கல்.

ஜொள்ளுப்பாண்டி : ஆகா அருமையான விளக்கம் தீர்ந்தது சந்தேகம் … இனி அந்தப்புர மங்கையர் அனைவருக்கும் ஸ்டிக்கர் பொட்டையே சிபாரிசு செய்கிறேன். இந்தாருங்கள் ஒரு லெட்சம் ரூபாய்க்கான காசோலை.

சிவாவிடம் கையெழுத்துட்டு கொடுக்கிறார்

காட்சி 5 :

மண்டபத்துக்கு திரும்பவும் வருகிறார்கள்

சின்னப்புள்ளை :அப்பு சிவா… ! ஆகா பரிசு எனக்கே கிடைத்துவிட்டது

சிவா : ரொம்ப குதிக்காதே சின்னப்புள்ள … காசோலை அதுவும் கிராஸ் பண்ணப்பட்ட காசோலை என் பெயரில் இருக்கிறது … வா .. நாயர் கடையில் ஒரு பொறையும் டீயும் வாங்கித் தருகிறேன் … சாப்பிட்டு விட்டு மண்டபத்தில் போயி படுத்துக்க.

சின்னப்புள்ளை : ஆகா பரிசு தரேன் சொல்லி சொல்லி பட்டை போட்டுட்டான்யா போட்டுட்டான் !

திரை
*******************************************
ஆக்கம் : கோவி.கண்ணன்
மேற்பார்வை : எஸ்.கே
*******************************************
சங்கப் பக்கங்களில் இந்த நாடகப் பதிவினை வெளியிட அனுமதியளித்த நண்பர் கோ.வி.கண்ணனுக்கு சங்கத்தின் சார்பில் எங்கள் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

.... இங்கே பதியப்பட்டது தேவ் | 7 மறுமொழிகள் »

கோவியாரின் நாடக சபா – பாகம் 1

பதிந்தவர் vavaasangam மேல் ஆகஸ்ட் 14, 2006

லொள்ளுபவர்கள் : கைப்புள்ளை சின்னப்புள்ளையாக, நாகை சிவா லொள்ளு சிவாவாக, நாமக்கல் சிபியார் நக்கல் நக்கீரராக, ஜொள்ளுப்பாண்டி ஜொள்ளுப்பாண்டியாகவே

தயாரிப்பு : வருத்தப்படாத வாலிபர் சங்கம்

அனைத்து வலைநண்பர்களுக்கும் இந்த நாடகம் சமர்பணம்

காட்சி 1 : மண்டபம்

மண்டபத்தில் தனியே நாஷ்டாவுக்கு துட்டுக்கு எவன் தலையை தடவலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார் சின்னப்புள்ளை. அந்த நேரத்தில் தண்டோரா சத்தம் பலமாக கேட்கிறது.

“நாட்டு மக்களுக்கோர், நற்செய்தி … ! நம் மன்னன் ஜொள்ளுப் பாண்டிக்கு பெரும் பிரச்சனையில் ஒரு பெருத்த சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது அதை உடனடியாக தீர்த்து வைப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை பரிசாக வழங்கப்படும்”
என்று அறிவித்துச் சென்றான் அரண்மனை அறிவிப்பாளான்.

சின்னப்புள்ளை தனக்குள்
அப்பு .. 1 லட்சம் ரூபாயா … இதை வச்சிக்கிட்டு ஒரு வருசம் வயித்தை கழுவலாமே, இம்புட்டு நேரம் யோசிச்சும் ஒரு யோசனையும் வரமாட்டக்குதே, அந்த பணம் எனக்கில்லை எனக்கில்லை…… இந்த நேரம் பார்த்து ஒரு பயலையும் காணும், அப்பு சிவா … நீ எங்கிட்டு இருக்க… வாப்பு … !

ட்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ங்,
உடனடியாக சிவா அவர் முன் தோன்றுகிறார்

லொள்ளு சிவா : அழைத்து யாரோ ?

சின்னப்புள்ளை : நான்தேன் … ! ஆனா நா ஒன்னும் ஒன்னிய கூப்பிடலயே… ! யாரப்பு நீயீ… ? கெட்டப்பல்லாம் பலமா இருக்கு, பின்லேடன் அட்ரஸ் கேட்டு வந்திருக்கிறாயா ? என்று பயந்தபடி கேட்கிறார்.

லொ.சிவா : ஹா ஹாஹ் … ஹா ….. !
பலமாக சிரிக்கிறார் சிவா

சின்னப்புள்ளை : இப்ப இப்படித் தான் சிரிப்ப… ! அப்பறம் என் சட்டையையும் .. ஒன் சட்டையும் கிழிச்சிட்டு திரும்பி நின்னும் சிரிப்பே ! … ஆள வுடு… நான் யோசிச்சிக்கிட்டு இருக்கேன். எதுக்கும் பின்னால திரும்பு துணியெல்லாம் நல்லா இருக்கான்னு ஒருதடவ பாக்கிறேன் !

லொ.சிவா : சின்னப்புள்ள … நீ என்னை தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறாய் … நான் யாரென்பது தெரியுமா ?

சின்னப்புள்ளை : ஏன்பு நீ யாருவேனுமானாலும் இருந்துட்டு போ … ஒன்னால ஜொள்ளுப் பாண்டி சந்தேகத்தை தீத்துற முடியும்னா நில்லு இல்லையென்றால் திரும்பி அப்படியே போ !

லொ.சிவா : ம் …. க்கும்ம் சின்னப் புள்ளையாரே … !வேண்டுமென்றால் எம்மை சோதித்து பாரும் உனக்கு திறமை இருந்தால், கேள்விகளை நீர் கேட்கிறீரா அல்லது நான் கேட்க்கட்டுமா ?

சின்னப்புள்ள … மனதுக்குள் ஆத்தாடி நம்ம தொப்பையைப் பார்த்து புள்ளையாருன்னு சொல்றானே… இருக்கட்டும்… என்னத் தான் சொல்றான்னு பாப்பமே

சின்னப்புள்ள : இந்தாப்பா இரு … எனக்கு கேக்க மட்டும்தான் தெரியும் … சரி நான் கேகுறத்துக் பதிலை சொல்லு !

லொ.சிவா : சரி நீரே கேளும் … !
சின்னப்புள்ள : பிரிக்க முடியாதது எது ?
லொ.சிவா : ஜீன்சும் டாப்சும்
சின்னப்புள்ள : பிரியக் கூடாதது ?
லொ.சிவா : சாரியும், மல்லிகைப்பூவும்
சின்னப்புள்ள : சேர்ந்தே இருப்பது ?
லொ.சிவா : சுடிதாரும் ஷாலும்
சின்னப்புள்ள : சேரா திருப்பது ?
லொ.சிவா : ஹை ஹீல்சும், புடவையும்
சின்னப்புள்ள : பார்த்து ரசிப்பது
லொ.சிவா : காலேஜ் பிகர்களை
சின்னப்புள்ள: பார்காது ரசிப்பது

லொ.சிவா: சினிமா நடிகைகளை
சின்னப்புள்ள : சொல்லக் கூடியது ?
லொ.சிவா : ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே
சின்னப்புள்ள : சொல்லக் கூடாதது ?
லொ.சிவா : பெண்களிடம் ஐ லவ் யூ
சின்னப்புள்ள : ஆசைக்கு ?
லொ.சிவா : ஜொள்ளு !
சின்னப்புள்ள : அறிவுக்கு ?
லொ.சிவா : லொள்ளு !

சின்னப்புள்ள : அப்பு நீர் ஜொள்ளர் !

லொ.சிவா : இல்லை இல்லை நீர் தான் ஜொள்ளர் !

சின்னப்புள்ள : சரி பாட்டைக் கொடும், ஜொள்ளுப் பாண்டி என்ன தருகிறாரோ, அதைக் கொண்டுவந்து அப்படியே கொடுத்து விடுகிறேன்

லொ.சிவா : எனக்கு அந்த பரிசு வேண்டாம் எல்லாவற்றையும் … நீயே எடுத்துக் கொள்ளும்

சின்னப்புள்ள : ம் நல்லா பிளாஸ்திரி போட்டு அனுப்புவாங்க அதானே தகிரியாமாக சொல்லுறீரு

லொ.சிவா : ஹா ஹாஹ் … ஹா ….. !

சின்னப்புள்ள : லொள்வீக சிரிப்பையா உமக்கு !
சிவா பாடலை எழுதி சின்னப்பிள்ளையிடம் கொடுக்கிறார்

காட்சி 2 : சபை

சின்னப்புள்ள : மன்னா … ஜொள்மன்னா .. பார் மன்னா .. ! பாட்டுடன் வந்திருக்கும் சின்னப்புள்ளையைப் பார் மன்னா !

ஜொள்ளுப்பாண்டி : சின்னப்பிள்ளை ! என் சந்தேகத்தை தீர்த்துவைக்கும் பாடலை கொண்டு வந்திருக்கிறீரா ? எங்கே கொடும் … !

அதற்குள் நக்கல் நக்கீரர் சின்னப்புள்ளையை மடக்குகிறார்
ந.நக்கீரர் : ஜொள்மன்னா சற்று பொறுங்கள் !

சின்னப்புள்ள : நக்கலாரே … மன்னனே அழைக்கும் போது நீர் யாரைய்யா தடுப்பது? உமக்கு என்னய்யா பொறாமை ? நக்கலாரு என்று சொல்றது சரிதாம் போல .. !

ந.நக்கீரர் : சின்னப்புள்ளை … அதை கிடப்பில் போடும் … எங்கே நீர் வடித்த ஜொள்பாடலைப் பாடலை பாடும்

சின்னப்புள்ள : இதோ படுகிறேன் … நன்றாக கேளும்

“காலேஜ் பிகர்கள்,
கட்டிளங் குமரிகள்,
அங்கயற் கன்னிகள்,
மணமான மாதுக்கள்,
பேத்தி கண்ட பாட்டிகள் … ஏன் ?
அத்தினி, சித்தினி, பத்தினி பெண்களுக்கும்
இன்னும் எத்தனையே
வகை தமிழ் பெண்டிருக்கும்,
நெற்றிப் பொட்டில் வைக்க
ஸ்டிக்கர் பொட்டே சிறந்தது !”

ஜொ.பாண்டி : சரியான பாட்டு … சரியான ஜொள்ளு … தீர்ந்தது என் சந்தேகம்

ந.நக்கீரர் : ஜொள் மன்னா, சற்றுபொறும் அவசரத்தில் ஜொள்ளை நினைத்து துள்ளிக் குதிக்காதீர்… ! சின்னப்பிள்ளை இப்படி வாரும்

சின்னப்புள்ள : வந்தேன் நக்கலாரே … உமது நக்கல் லொள்ளு ஆரம்பம் ஆகிவிட்டதா ?

ந.நக்கீரர் : உமது பாட்டில் பிழை இருக்கிறது !

சின்னப்புள்ள : இருக்கட்டும் ஓய்… எவ்வளவு பிழை இருக்கிறதோ … எழுத்துப் பிழையாரிடம் சொல்லி சரிசெய்தால் போகிறது

ந.நக்கீரர் : அது இல்ல ஓய் … பொருள் பிழை

சின்னப்புள்ள : வந்துட்டான்யா … வந்துட்டான் !

ந.நக்கீரர் : சின்னப்புள்ள … உன் சின்னப்புள்ளத் தனத்தை நிறுத்து …. முதலில் சொல்லும் பாட்டை வடித்ததி நீர்தானே ?

சின்னப்புள்ள : ஏ…. ஏன் நான் தான் நான் தான் வடித்தேன் … நக்கலாரே … பின்ன மண்டபத்தில் யாரோ வடித்ததையா எடுத்து வந்திருக்கிறேன் ?

ந.நக்கீரர் : அப்படியென்றால் வடித்த வரிகளுக்கு விளக்கம் சொல்லிவிட்டு பரிசைப் பெற்றுக் கொள்ளும் !

சின்னப்புள்ள : ஏனப்பபு ஜொள்ளுப் பாண்டியே சந்தேகம் தீந்துடுச்சின்னு சொன்னபிறகு போது நீ எதுக்கப்பு நக்கல் பண்ணுகிறீரு ?

ந.நக்கீரர் : சின்னப்புள்ளை … ! சரியான ஜொள்ளுக்கு என் ஜொள் மன்னன் பரிசளிக்கிறான் என்றால் அதைப்பார்த்து முதல் ஜொள்விடுபவனும் நான் தான் … அதே சமயத்தில் பிழையான பாட்டுக்கு பரிசளிக்கிறான் என்றால் முதலில் லொள்ளு பண்ணுகிறவனும் நான் தான்

சின்னப்புள்ள : ம் .. இங்கு எல்லாமே நீர் தானா .. ?

அவையோர் எல்லோரும் சிரிக்க சின்னப்புள்ளை நொந்து நூடூல்ஸ் ஆகி சபையை விட்டு வெளியேறி மண்டபத்துக்கே வருகிறார்.

(தொடரும்)

ஆக்கம்-கோவி.கண்ணன்

ஊக்கம்- சங்கம்

.... இங்கே பதியப்பட்டது தேவ் | 12 மறுமொழிகள் »