வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்

100% சிரிக்க

ஜூன், 2006 க்கான தொகுப்பு

2. அறிஞன் அநிர்பிரும்ம தேவன்: வ.வா.ச. வரலாறு

பதிந்தவர் vavaasangam மேல் ஜூன் 30, 2006

கைப்போங்காவும் விவசாயியும் விருந்து வரிசையில் நிற்கிறார்கள். வாசலில் யானை பிளிறுகிறது.

ஆப்பிரிக்கா தந்த அஞ்சா நெஞ்சனாம் கைப்போங்கா, யானையின் பிளிறலில் சற்று அதிர்ந்த இதயத்தைக் கையால் பிடித்துக் கொண்டு, பயத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல் நிமிர்ந்து யானையைப் பார்த்தான். அதே நேரம், தங்கவை நாச்சியார் என்னும் அந்தக் கம்பீரமான போர்யானையும் நம் நாட்டில் இது என்ன புது மிருகம் என்ற எண்ணத்துடன் கைப்போங்காவைப் பார்த்தது.

அண்ணலும் நோக்கினார்………..
…..
…..
…..
….

தங்கச்சியும் நோக்கினார்…

நோக்கியா போனைக் கொண்டு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கக் காட்சியை விவசாயியும் க்ளிக்கினார்.

பார்த்த நொடியே இருவருக்கும் அந்தப் பேருண்மை தெரிந்து விட்டது. ஆப்பிரிக்கக் கிராமத்திலும் இந்தியக் காடுகளிலும் பிறந்திருந்தாலும், ஏதோ ஒரு இனம் தெரியாத, “அட எல்லாம் நம்ம இனம் தான்” என்று தெரிந்து கொண்ட பாசம், ஒரு கொடியில் பூக்காத அந்த இரு மலருக்குள்ளும் இருப்பது இருவருக்கும் நொடியில் புரிந்து விட்டது.

அன்பு மேலிட்டால், அண்ணனை நோக்கி ஓடி வந்த யானை அப்படியே துதிக்கையில் தூக்கித் தட்டாமாலை சுற்றியதில் இதைச் சற்றும் எதிர்பார்க்காத கைப்போங்காவின் அலறல்கள் விண்ணை முட்டின. கைப்போங்காவின் அதிர்ச்சிக் கூவல்களை, பாசத்தின் ஒலிவடிவமாக எண்ணிய விவசாயி ஆனந்தக் கண்ணீர் மல்க அதை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கையில், கைப்போங்காவும் அதிர்ச்சிக் கண்ணீருடன் “காப்பாத்து காப்பாத்து” என்று வாய் திறக்கப் பயந்து கையால் மேலும் கீழும் அடிக்கத் தொடங்கினான்.

யானை ஓடிவந்ததால், அருகில் பாட்டுக் கச்சேரி நடத்திக் கொண்டிருந்த அறிஞன் அநிர்பிரும்ம தேவனின் தபேலாக்கள் ஒரு முறை விண்ணில் எழும்பிப் பின் கீழே இறங்கின. அநிர் பிரம்ம தேவன் இனிமையான சாரீரம் உடையவன் அல்லன் என்றபோதும் கச்சேரி செய்வதை மட்டும் விடுபவனில்லை. ஏற்கனவே அவரது சத்தம் தாங்காமல் காதை மூடிக் கொண்டிருந்த பக்கத்துத் திண்ணைப் பெரியவர்களும் இதுவரை போல் இல்லாமல் இன்று, தாம் அமர்ந்திருக்கும் இடமே லேசாக ஆட்டம் கண்டதைப் பார்த்து, அநிர்தேவனின் குரலுக்குப் பூமாதேவியே ஆட்சேபம் தெரிவிக்கிறாள் என்று எண்ணி நடுங்கத் தொடங்கி விட்டனர்.

தபேலாக்களை அசைத்துத் தன் இசைத் தவத்தைக் கலைத்தவன் யாரென்று அறிய எண்ணி அநிர்தேவன் கோபத்துடன் வீதியில் இறங்கிப் பார்த்தான். எப்போதும் அவனது கச்சேரித் திண்ணையில் வந்து வாத்தியங்களை அசைத்துப் பார்க்கும் தங்கவை நாச்சியாரின் சேட்டை தான் இது என்பதைப் பார்த்த கணமே புரிந்து கொண்டான்.

இந்த யானையை என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே அவன் நிமிர்ந்தபோது தங்கவையின் பிடியில் ஒரு புதுவிதமான உருவம் இருப்பதையும், அது பயத்தில் அலறுவதையும் கைகாலை அடித்துக் கொள்வதையும் பார்த்த தேவன், சுற்றுமுற்றும் பார்த்தான்.

விவசாயியும் மற்றவர்களும் அந்த விபரீதத்தை உணராமல் கைகொட்டி ரசித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். தங்கவையின் கோரப் பிடியில் சிக்கி இருக்கும் கைப்போங்காவை எப்படிக் காப்பது என்று தேவன் யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் சற்றுத் தூரத்தில் அந்த இளைஞன் நடந்து கொண்டிருந்தான்.

சோழனின் அவையில் போருக்காகத் தூது சொல்ல வந்து பூம்புகார்ப் பெண்களின் அழகில் மயங்கி போர் தொடங்கிய பின்னும், சோழ நாட்டுத் தாவணியைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறேன் என்று கதை சொல்லிக் கொண்டு பூம்புகாரில் நிரந்தரமாக செட்டில் ஆகிவிட்ட வில்லுப் பாண்டிதான் அவன். மின்னலென ஒரு யுக்தி அநிர்தேவனுக்குப் புலப்பட்டது.

(தொடரும்)

.... இங்கே பதியப்பட்டது பொன்ஸ் | Leave a Comment »

கோ.வி..கண்ணன் பதிவு – சங்கத்துக்கு வாங்க

பதிந்தவர் vavaasangam மேல் ஜூன் 29, 2006

கைப்புவை கலாய்த்தால் தான் சங்கத்துல சேர்த்துக்குவோம், கைப்பு எப்படி ஆறு போடுவார் என்று எழுதும்படி சங்கத்தினர் என்னை கலாய்த்ததை தொடர்ந்து, கைப்பு மறுபடியும் கையில் சிக்கிக் கொண்டார்

கைப்புவும் பார்த்தியும் விளம்பர பலகை எழுதும் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பார்த்தி சற்று மேலே சாளரத்தில் நின்று கொண்டிருக்கிறார். கைப்பு கீழே நின்று சுவற்றில் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறார்

இந்தப் பதிவினை மேலும் படித்து ரசிக்க இங்கே சுட்டுங்கள்

.... இங்கே பதியப்பட்டது தேவ் | Leave a Comment »

நமது கைப்பு

பதிந்தவர் vavaasangam மேல் ஜூன் 27, 2006

அதென்ன எல்லாரும் ஆறு ஆறுன்னு எழுத சங்கம் மட்டும் எழுதாம விட்டுட்டா என்ன ஆகிறதுன்னு நினைக்கும் போது, தேவ் “நமது கைப்பு” பத்திரிக்கையின் முதல் பிரதியை ரெடி பண்ணி வெச்சதா B.B.Cல செய்தி வந்துருச்சு.

அதுக்கு விளம்பரம் பண்ண பெரியம்மா நிர்மலா பெரியசாமியை அணுக நினைக்க கீதாக்காவுக்கு வந்துச்சே கோபம்.

அதனால இனிமே அவுங்க செய்தி மற்றும் ஒளிபரப்பு துறையின் ஆமைச்சாராக கைப்பு கைநாட்டு வெச்சு அறிக்கை குடுத்துட்டாரு.

கீதாக்காவும், விடியகாலையில தொண்டை தண்ணி வத்த வத்த அதே பாணியில பேச டிரெய்னிங் பண்ண ஆர்ம்பிச்சுட்டாங்க. அதிலிருந்து ஒரு துளி மட்டும் இங்கே..

* நயன் தாரா மேட்டரில் நடந்த கவிழ்ப்பு சதி என்ன? விளக்குகிறார் சிபி..

* சிந்து பைரவி ராகம் கேட்டு சிதறினேனா? சீறுகிறார் ஜொள்ளு பாண்டி

* ஐ.நாவில் பிடித்த மஞ்ச காட்டு மைனா.. விவரிக்கிறார் நாகை சிவா..

* சான் பிரான்ஸிச்கோவில் சரக்கு அடித்து விட்டு சறுக்கினேனா? சந்தோஷ் தன்னிலை விளக்கம்.

* சித்தூர் கேட்டில் சொப்பன சுந்தரியுடன் சில்மிஷமா? பதில் அளிக்கிறார் கைப்பு..

* யானைக்கு வைத்த கவளைச் சோற்றை பாதி விலைக்கு விற்றேனா? பொங்குகிறார் பொன்ஸ்

பக்கத்துக்கு பக்கம் ஆப்பு,

வாங்கி விட்டீர்களாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

.... இங்கே பதியப்பட்டது ILA | Leave a Comment »

வரு.வா.சங்கம் – BEHIND THE SCENES 1

பதிந்தவர் vavaasangam மேல் ஜூன் 23, 2006

சமீப காலமா வந்திருக்கும் புதிய வலைப்ப்திவர்களுக்காகவும்.. ஏற்கனவே வலைப் பதிந்து வலையை அறித்தெறியும் முயற்சியில் ஈடுப்பட்டிருக்கும் பல கோடி வருத்தப்படாத வாலிபர்களுக்காகவும் இந்தப் பதிவு.

எப்படி வரு.வா.சங்கம் உருவானது?

சுமார் சில நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை ராஜ ராஜ சோழன் ஆண்டு கொண்டிருந்தக் காலம்.
அப்போது கிழக்காப்பிரிக்கா பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட ஒரு குக் கிராமத்தில் கழுதைப் புலிகள் கண்ட படி ஊளை இட அந்த சிம்பொனி சவுண்டில் அவதரித்த குழந்தையின் பெயர் கைப்போங்கா ஆப்புமாங்க.
அது ஒரு தெய்வீக குழந்தை.
அந்தக் குழந்தை நாளொரு மொள்ளமாரித்தனம் பொழுதொரு கேப்மாரித்தனம் எனக் கண்டபடி கட்டுக்கு அடங்காமல் கட்டவிழ்த்த கழுதையாக வளர்ந்து நின்றது.

வருத்தம் என்றால் என்னவென்றே தெரியாத நிலையில் வளர்ந்த அந்த வாலிபனைக் கண்டு ஊரே பயந்தது.
அந்தப் பக்கமாய் சுற்றும் கழுதைபுலிகளின் வாலில் வெடி கட்டி விட்டு வேடிக்கைப் பார்ப்பது…அது வெடிக்கிறதா எனச் சோதனை செய்ய கிட்டப் போய் பார்த்து மூக்கு கிழிவது என்ப் பெரும் கவுரவமாய் வாழ்ந்தான் அந்த வாலிபன்.
அணில் குட்டிகளை விரட்டி சென்று அதன் முதுகில் இருக்கும் பின் கோட்டுக்கான முகவ்ரி தேடுவது எனத் திரிந்தான் அந்த வாலிபன்…

இப்படியிருக்க அந்த வாலிபன் ஒருநாள் ஆப்பிரிக்கா மன்னனின் அந்தப்புரத்தில் எட்டிப் பார்த்ததாய் கைதுச் செய்யப்பட்டு விசாரணைக்கு வந்தான். மன்னன் அவனிடம் விசாரிக்க

டேய் கைப்போங்கா… என் மகளைக் கையப் பிடிச்சு இழுத்தியா?

ஒரு இளைஞன் ஒரு இளைஞியைக் கையைப் பிடிச்சு இழுக்குறது எல்லாம் சகஜம் அதை எல்லாம் பெரிசுப் பண்ணப்பிடாது…

என் அந்தப் புரத்தில் எட்டிப் பார்த்தீயா?

என்ன எட்டிப் பார்த்தீயா? என இவனும் திருப்பிக் கேட்க…

ஒழுங்காச் சொல்லு எட்டிப் பார்த்தீயா?

என்ன ஒழுங்காச் சொல்லு எட்டிப் பார்த்தீயா? என இவனும் திருப்பிக் கேட்க…
என்னடா நான் பேசுறதையேத் திருப்பிப் பேசுறே எட்டிப் பார்த்தீயா?

என்ன என்னடா நான் பேசுறதையேத் திருப்பிப் பேசுறே எட்டிப் பார்த்தீயா? என இவனும் திருப்பிக் கேட்க…

அடேய் கைப்போங்கா வேணாம்டா உண்மைய சொல்லிரு எட்டிப் பார்த்தீயா?

என்ன அடேய் கைப்போங்கா வேணாம்டா உண்மைய சொல்லிரு எட்டிப் பார்த்தீயா? என இவனும் திருப்பிக் கேட்க…

மன்னர் மயக்கமாகிச் சரிகிறார்.

ஆப்பிரிக்காவிற்கு விவசாயக் கலையை அறிவிக்கச் சென்ற ஒரு தமிழ்நாட்டு விவசாயி இதை எல்லாம் வேடிக்கைப் பார்த்து வியந்து நினறார்.
விவசாய பிரசென்டேஷன் முடிந்த நிலையில் இந்த வாலிபனின் வருத்தப் படாத தன்மையைக் கண்டு கண் கலங்கிய அந்த விவசாயி.. அவனைத் தனியே சந்தித்து தன் விசிட்டிங் கார்டைக் கொடுக்கிறார்.
தன்னோடு வரமுடியுமா? வந்தால் நல்ல ஆபர் தருவதாய் கூறுகிறார். கடலைச் சாகுபடி வித்தைகளை பக்காவாகச் சொல்லித் த்ருவதாய் வாக்கும் கொடுக்கிறார்.

கழுதைப் புலி வால்களில் வெடி வைத்து அதுகளிடம் கடி பட்டும் கண்ட மன்னர்களிடம் அடிப்பட்டும் இன்னும் எவ்வளவு நாள் வாழ்கிறது என யோசித்த அந்த வாலிபன் ஓ.கே சொல்ல அங்கு அக்ரிமெண்ட் சைன் ஆப் ஆகிறது…

ஆப்பிரிக்கா கண்டமே அன்றைய தினத்தைப் பேரல் பேரலாக பீர் குடித்துக் கொண்டாடின. குறிப்பாக கழுதைப் புலிகளை அந்த வாலிபனுக்கு தங்கள் பேக் ஏரியா பலவாறு ஜெர்க் காட்டியபடி குதூகாலமாய் கொண்டாடின…

அந்த விவசாயியோடு கப்பலேறிய கைப்போங்கா வந்து இறங்கியது பூம்புகார் கடற்கரை…
அங்கு வாசலில் யானைக் கட்டப் பட்டிருந்த ஒரு அரண்மனைக்குள் கைப்போங்கா அழைத்துச் செல்லப்பட்டான்.

வரவேற்பறையில் பொற்குவியல் குவிந்திருந்தது கண்ட கைப்போங்கா ஹே..ஹேன்னு எகத்தாளமாய் சிரித்தான்…

சுவர்களில் வெண்பாக்கள் வடிக்கப் பட்டு வழிந்துக் கொண்டிருந்தன… கைப்போங்கா வெண்பாக்களைப் பார்த்து லேசாய் மிரண்டாலும் பார்வையில் கெத்து குலையாமல் நின்றது விவசாயிக்குப் பெரும் பீதி ஏற்படுத்தியது…

ஆமா விவசாயி பாய் என்னிய எதுக்கு இங்கேக் கூட்டிட்டு வந்தே.. இது என்ன இடம்.. இதுக்கு ஓனர் யாரு என்று நக்கலாய் கேட்டான் கைப்போங்கா…

விருந்து ரெடி… விருந்து ரெடி… என ஒரு பெண்குரல் கேட்க பல சைடுகளில் இருந்தும் மக்கள் மாளிகைக்குள் வெள்ளமெனப் பாயந்தனர்.
ஆகா… அமிர்த்ம்… ஓஹோ… என விருந்து உண்ணும் முன்னே பாராட்டுக்கள் தொடங்கின…

ஏய்யா விவ் ( விவசாயிக்கு நிக் நேம்) ஆமா இன்னும் சோறே கண்ணுல்ல காட்டல்ல அதுக்குள்ளே அம்புட்டு பேரும் அப்படி சவுண்ட் விடுறாங்க… ஆமா இவக யாரு.. என்ன?

இவங்க ரொம்பப் பெரிய ஆளு… அரச பரம்பரை ஆனா ரொம்ப நல்லவங்க… யார் ஊரை விட்டு வெளியே போயிட்டு ஊருக்குத் திரும்பி வந்தாலும் உட்னே விருந்து வச்சு கொண்டாடிடுவாங்க.. அவ்வளவு உயர்ந்த மனசு…

ஆமா இப்போ யார் திரும்பி வந்துருக்கா.. பெரிய ஆளா…

பெரிய ஆள் தான்..

யாருப்பா

அந்தா வாசல்ல நிக்குதுப் பாரு யானை அது தான் போருக்குப் போயிட்டு திரும்பி வந்துருக்கு அதுக்கு தான் இம்புட்டு மரியாதை.. இந்த விருந்து சமைச்சதும் அதுக்கு தான் ….இவங்களைப் பத்தி நீங்கத் தெரிஞ்சிக்க இன்னும் நிறைய இருக்கு….

கைப்போங்காவும் விவசாயியும் விருந்து வரிசையில் நிற்கிறார்கள். வாசலில் யானை பிளிறுகிறது.

தொடரும்

.... இங்கே பதியப்பட்டது தேவ் | Leave a Comment »

வ.வா.ச தொண்டனின் பதில் (பேராசிரியர் கார்த்திக் ஜெயந்த்)

பதிந்தவர் vavaasangam மேல் ஜூன் 22, 2006

கொஞ்ச நாட்களுக்கு முன் பேராசிரியர் கார்த்திக் ஜெயந்த் புதரகப் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்திருந்தப் பேட்டியில் இருந்து சங்க மக்க்ளின் கவனத்திற்காக இப்போது சங்கப் பலகையில் மறு ஒளிபரப்பு

நான் இந்த பதிவை எழுதுவது ஒரு பொறை கடையிலிருந்து, ஆகவே இங்கு ஓடும் பாட்டுக்களும், வசனங்களும் எனது பதிவில் தெரிந்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல.

வ.வா. சங்கத்தின் மிக முக்கியஸ்தரான அக்கா ஆற்றலரசி பொன்ஸ் அவர்கள் சங்கத்துக்கு வந்ததாக கூறப்படும் ஒரு கடிதத்துக்கு பதில் சொல்லும் பதிவில், நான் இதுகாறும் அரசியல், பொது வாழ்வு, மக்கள் தொண்டு, இலக்கிய பணி, உருவாக்க சிந்தனை, பொருளாதார மேம்பாடு, இன்னும் என்னிலடங்காத்துறைகளில் நான் பெற்றிருந்த இடத்தை ஒரே நாளில் புல்டோசர் கொண்டு இடிக்கும் விதத்தில் இருப்பதாக சங்கத்தின் சில முக்கியஸ்தர்கள் கருதுவதால், இந்த அறிக்கையை சங்கத்தின் தூண் என்று சொன்னாலும் கூட சங்கபலகையில் இடம் / அனுமதி மறுக்கபட்ட நிலையில் நானே எனது சொந்த செலவில், எனது சொந்த ஊடகத்தில் வெளியிடும் கட்டாயத்துக்கு தள்ளபட்டுள்ளேன்.

மேலும் விவரமாய் படிக்க

இந்த அறிக்கைக்கு தொடர்பான பிற விவரங்கள் 1

இந்த அறிக்கைக்கு தொடர்பான பிற விவரங்கள் 2

.... இங்கே பதியப்பட்டது தேவ் | Leave a Comment »

‘கை’ திடீர் மாயம் – திடுக்கிடும் உண்மைகள்

பதிந்தவர் vavaasangam மேல் ஜூன் 21, 2006

‘நாம ரெண்டு பேரும் செத்துச் செத்து வெளாடலாமா” என்று பாசத்தோட கூப்பிட்டு என்னைய கதிகலங்கச் செய்யும் பாசத்தின் பிறப்பிடம், சங்கத்தின் உண்மைத் தொண்டன் – “கை” என்று அனைவராலும் அழைக்கப்படும் தேவ் ஆறு வருசம் லீவு சொல்லிட்டு திடீர்னு மாயமா மறைஞ்சு போனது நம்ம எல்லாத்துக்கும் தெரியும். ஆனா காணாமப் போனவரு எங்கே போனாரு என்ன ஆனாருன்னு யாராச்சும் நெனச்சுப் பாத்தீங்களாய்யா? அந்தப் பாசப்பிழம்பை நீங்கல்லாம் இம்புட்டு சீக்கிரம் மறந்திட்டீங்கன்னு நெனக்கும் போது தான் மேல்(Male இல்ல) எல்லாம் கொதிக்குதுய்யா.

இப்பச் சொல்றேன் கேட்டுக்கங்க. எம்புட்டுத் தான் தல தெருத் தெருவாத் திரிஞ்சு ஆப்பு வாங்கினாலும் ஒரு மனுசன் இல்லறத்துல வாங்குற “ஆப்பு” மாதிரி வராதுன்னு அனுபவத்துல பட்டு பட்டுத் தெரிஞ்சுக்கிட்ட தேவ் ஒரு மெகா ஆப்புக்கு மெகா ப்ளான் போட்டாப்புல. தலக்கு இல்லறத்துல ஆப்பு வாங்க வைக்க என்ன பண்ணலாம்னு பயங்கரமா யோசிச்சதுல கட்டத்துரை பார்த்திபன் சதியால கெழக்காப்பிரிக்காவுக்குத் திரும்பிப் போன தன்னோட உடன்பிறவா அண்ணி “கைப்பொண்ணு”வைத் திரும்ப சங்கத்து ஹெட்குவார்ட்டர்ஸ்க்கு கூட்டியாறது தான் இதுக்குச் சரியானத் தீர்வுன்னு முடிவுசெஞ்சாப்புல. ஆறு வருசம் லீவுன்னு ஒரு மெகா பீலாவை அவுத்துவிட்டுப் புட்டு சங்கத்து ஆளுங்களுக்கும் டன் கணக்குல அல்வாவைக் குடுத்துப்புட்டு யாருக்கும் தெரியாம “கைப்பொண்ணோட பொறந்த வீடான கெழக்காபிரிக்கா பஞ்சாயத்து யூனியனுக்குக் ராவோட ராவாக் கெளம்பிட்டாப்புல.

அங்கே போனா பட்டித் தொட்டியெல்லாம் கைப்பொண்ணு பேரு தானாம். அவுங்க நாட்டுலேயே கைப்பொண்ணு தான் செவத்தப்புள்ளங்கிறதால லோரியல் ஹேர் க்ரீம், லாங்கைன்ஸ் கைகடியாரம், கோகா கோலா இப்படின்னு இந்தியாவுல ‘அக்கா ஐஸ்” வர்ற வெளம்புரத்துக்கெல்லாம் புக் ஆயிட்டாங்கப் போல. எங்கே பாத்தாலும் கைப்பொண்ணோட போஸ்டரும் பேனரும் தானாம். ஏற்கனவே ‘மிஸ் கெலக்காப்பிரிக்கா’வா வேற தேர்ந்தெடுக்கப்பட்டுட்டாங்களாம். அடுத்ததா ‘மிஸ் ஆப்பிரிக்கா’ பட்டம் வாங்க பூனை நடை பழகிட்டு இருக்கும் போது தான் நம்ம தேவ் கைப்பொண்ணைப் பாத்துருக்காப்புல. “கண்டேன் கைப்புவை ஆப்பினுக் கணியாய்” அப்படின்னு கைப்பொண்ணுக் கிட்ட ‘சொல்லின் செல்வர்’ ஸ்டைல்ல சொல்லப் போன தேவைக் கைப்பொண்ணோட சித்தாப்புக்களல ஒருத்தரு பாத்துட்டாப்புல. பார்த்துட்டு சும்மா போயிருந்தா பரவால்லியே…அதுக்கப்புறம் நடந்ததை நெனச்சா தான் மறுபடியும் மேல் எல்லாம் பதறுது. எங்க நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தர்ற எங்க “குடும்பத்து குலவிளக்கு” கைப்பொண்ணைக் கூட்டிட்டு போகவாடா வந்திருக்கே?”ன்னு ஒரு நாலு நாளு கட்டி வச்சி பேக்சைட்ல கழுதைப்புலியை வச்சி கடிக்க வச்சிருக்கானுங்க. அம்புட்டு வலியிலயும் ‘கை’க்கு சங்கத்து நெனப்பு தானாம்…ஐயோ தல இப்ப ஆப்பு இல்லாம் தவிச்சிட்டிருக்குமேன்னு ரொம்ப தவிச்சிப் போயிட்டாப்புலயாம். எப்படியோ அங்கேருந்து தப்பிச்சி யார் யார் கையைக் காலையெல்லாமோ புடிச்சி ஒரு வழியா எதோ ஒரு கடலோரப் பிரதேசத்துக்கு தேவ் வந்து சேர்ந்திருக்காப்புல.

எறங்குன எடத்துல கழுதைப்புலி கடிக்கு எச்சியைத் தொட்டுத் தொட்டு ஒத்தடம் குடுத்துக்கிட்டே மெல்ல நடந்து வந்தா சங்கத்து கீதமான “ஒன்றா ரெண்டா ஆப்புகள், எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா”ங்கிற பாட்டை யாரோ ரெண்டு கட்டையில பாடுறதைக் கேட்டுருக்காப்புல. ஆஹா…நம்ம சங்கத்து சிங்கங்கள்ல யாரோ ஒருத்தரு இங்கே பக்கத்துல இருக்காருன்னு நம்ம தேவ் புரிஞ்சிக்கிட்டாப்புல. கட் பண்ணா அங்கேருந்து ஒரு நாலு கல்லு தூரத்துல நம்ம வெவசாயி இளா ‘கஜா கா தோஸ்த்’னு சொல்லி கள்ளத் தோணியில ஏறி கதாருக்குப் பதிலா கேரளால எறங்கி அங்கே வேஷ்டி கட்டுன அம்மணிங்களை லுக் விட்டுக்கிட்டே சங்க நாதத்தை மொழங்குன படியே போயிட்டிருக்காப்புல. மறுபடியும் கட் பண்ணா தேவ் சரி நாமும் சங்கத்துப் பாட்டைப் பாடினா அங்கிட்டுப் பாடுற சிங்கம் யார்னு கண்டுபிடிச்சிரலாம்னு இவரும் ஒரு நாலு கட்டையிலே பாட ஆரம்பிக்கிறாரு. அப்படியே வெவசாயி பாட, தேவ் பாட இப்படின்னு ரெண்டு பேரும் பக்கத்துல வந்து அண்ணா தம்பின்னு கட்டிப் பிடிச்சிக்கிறாங்க. தேவைக் கண்டுபிடிச்சாச்சு அடுத்த பஸ்ஸைப் புடிச்சு சீக்கிரம் விதவுட்ல வந்துடுறோம்னு நம்ம வெவசாயி நேத்து டிரங் கால் போட்டு சொன்ன சேதி தான் மேலே?

மக்களே! அப்பு வைப்பதே ஒன்றே தன் கடமை என்று எண்ணும் தேவ் தலக்காக முதல் முறையாகக் கழுதைப்புலியிடம் கடி வாங்கியுள்ளார். அந்த கடிக்கு அருமருந்தாய் கை தேவிடம் நீங்கள் சொல்லும் ஆறுதல்கள் அமைய வேண்டும் என்று தங்களிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

“தலக்காக கழுதைப்புலி கிட்ட கடி வாங்கினியாடா…’கை’ செல்லம்? ரொம்ப வலிக்குதாடா? இனிமே நீ இந்த இல்லறம் இல்லாத அறம்னு இந்த மாதிரி வேலையெல்லாம் பண்ண அப்புறம் என்னை மனுசனாவே பாக்கமுடியாது. எனக்கு நீங்க தாண்டா கண்ணுங்களா முக்கியம். அதை புரிஞ்சி நடந்துக்கங்க. இந்த சேதியை நேத்து நைட்டு கேட்டதுலேருந்து ரெண்டு ஃபுல் மீல்ஸ் ரெண்டு குவார்ட்டரு இதைத் தவிர அன்னந்தண்ணி எறங்கலைய்யா..எறங்கலைய்யா”

.... இங்கே பதியப்பட்டது கைப்புள்ள | Leave a Comment »

விருந்து சமைக்கிறாங்க வ.வா.சவிலே..

பதிந்தவர் vavaasangam மேல் ஜூன் 17, 2006

நூறாவது பதிவில் அண்ணன் கைப்புவின் புகழைப் பறை சாற்றிப் பெருமை சேர்த்த கழகப் போர்வாள் கச்சேரி தேவ் தம் வலையுலகப் பயணத்தில் நூறு என்னும் மைல்கல்லை அடைந்ததைப் பாராட்டி அண்ணன் கைப்பு சொந்த சமையல் செய்து விருந்து வைப்பது என்று முடிவெடுத்திருக்கிறார். அண்ணன் இதுவரை சமையற்கட்டுப் பக்கம் வந்ததே தன் தாயாரிடமிருந்து தீய்ந்த தோசையை வாங்க மட்டுமே என்பதால் சமையலறையில் உதவிக்காக சங்கக் கண்மணிகள் கை கொடுக்க வருகிறார்கள்.

கைப்பு டீக்காக ஏப்ரான் எல்லாம் அணிந்து தொப்பியுடன் சமையலுக்குத் தயாராக வருகிறார்.

கைப்பு: ஓகே.. சங்க மெம்பர்ஸ், எல்லாரும் ரெடியா? சமையலை ஆரம்பிப்போமா?

பாண்டி: எல்லாம் ரெடி தல.. நீ சொன்னதும் ஆரம்பிக்க வேண்டியது தான்..

கைப்பு: ஆமாம், சங்கத்து மக்கள் எல்லாரும் இருக்காங்க சரி, அதோ அந்தாண்ட நிக்குதே ஒரு பொண்ணு, அது யாரு பாண்டி?

பாண்டி: ஹி ஹி.. தல, என்ன தல அப்படிக் கேட்டுப்புட்டீங்க.. அதான் நம்ம சிந்து.. ஹி ஹி..

பார்த்தி: சிந்துவா? அந்த கம்ப்யூட்டர் லாப் இன்ஸ்ட்ரக்டர்?என்னாது இது.. பெரிய ஊழலா இருக்கும் போலிருக்கு… கம்ப்யூட்டர் லாப் இன்ஸ்ட்ரக்டருக்கு இங்க என்ன வேலைன்னு கேக்கறேன்?.. விசாரிக்கறேன். விசாரணை கமிஷனுக்கு ஏற்பாடு பண்றேன்.. இது ஒண்ணும் சரியில்லை..

சிபி: பார்த்தி, கொஞ்சம் சும்மா இரு.. பாண்டி, ஹி ஹி.. சிந்துவுக்கு சமையல் தெரியும்னு கூட மாட ஒத்தாசையா கூட்டிகிட்டு வந்த தானே?

பாண்டி: இல்ல சிபியண்ணே.. நம்ம சமையல் செய்ய என்ன வேணும்?

பொன்ஸ்: என்ன வேணும்? மைக்ரோவேவ் ஒவன் வேணும்.. அதுல பவர் பட்டனைப் பார்த்து..

இளா: ஆரம்பிச்சிட்டாங்கப்பா.. விட்டா சோறு வடிச்சி, கொழம்பு வச்சி, வெண்பாவும் வடிச்சிட்டுத் தான் மூடுவாங்க.. அக்கா.. பொன்ஸக்கா.. கொஞ்சம் சும்மா இருங்கக்கா.. பாண்டி சொல்லட்டும்…

பாண்டி: சமையல் செய்ய, முதல்ல ரெசிபி வேணாமா? அதான், என்னென்ன ரெசிபி வேணும்னு சொல்றீங்களோ, அதையெல்லாம் கம்ப்யூட்டர்ல தேடிக் குடுக்க எனக்கு உதவியாத் தான் சிந்து வந்திருக்கு.. சிந்து, கமான் யா.. கொஞ்சம் டீ போடுவது எப்படின்னு தேடு பார்க்கலாம்..

பொன்ஸ்: டீ போட எல்லாம் எதுக்கு கம்ப்யூட்டர்.. என் கிட்ட விடுங்க தல.. என்னோட அடுத்த பதிவே.. மைக்ரோவேவில் டீ போடுவது எப்படி?ங்கிறது தான்

பெருசு: ஐயோ ஐயோ.. இந்த டீ போடுவது மாதிரி சின்ன மேட்டரை எல்லாம் விடுங்கப்பா.. என்னா இது.. சின்ன பிள்ளத் தனமா. அப்படியே முன்னேறி ஹைடெக்கா உப்புமா சாப்பிடுவீங்களா.. டீப் போடறாங்களாம் டீ..

கைப்பு ( பெருசுவை அதிசயமாகப் பார்க்கிறார், தனக்குள்): நம்ம சங்கத்துல உப்புமா எல்லாம் செய்யத் தெரிஞ்ச ஆளா?!!! பெரிய ஸ்டார் குக்கா இருப்பார் போலிருக்கே.. இவரை விடக் கூடாது.. (வெளியில்) அட பெருசு, வெவரமான ஆளாத் தான் இருக்கீரு.. உப்புமாவே செஞ்சுடுவோம்.. உப்புமா உங்க டிபார்ட்மென்ட் ஆமாம், சொல்லிட்டேன்.. பாண்டி, இவருக்கு உப்புமா செய்ய என்ன வேணும், ஏது வேணும்னு கேட்டு லிஸ்டுவாங்கிக்க..

பாண்டி (மனசுக்குள்): தலைக்கு புத்தி போவுது பாரு.. போயும் போயும் விருந்துக்கு உப்புமா எவனாவது செய்வானா?!! ஒரு பிரியாணி, ஒரு சிக்கன் 65ன்னு போட்டா சொகமா சாப்டுட்டு சொகமாத் தூங்கலாம்..ம்ஹும்.. நேரம், (சத்தமாக) பெருசு, முத ஐட்டம் உன் ஐட்டம் தான்யா.. என்ன வேணும் உப்புமா செய்ய? சேமியா உப்புமாவா, இல்லை ரவா உப்புமாவா?

பெருசு: இல்லை இல்லை.. இதெல்லாம் இல்லை.. உப்புமா செய்யணும்னா, எனக்கு இட்லி வேணும்..

பொன்ஸ்: என்னது இட்லியா?

இளா: இட்லி யெல்லாம் யாருக்கு செய்யத் தெரியும்? இட்லி வடைன்னு ஒருத்தர் இருக்காரு.. அவரை வேணா கூட்டிட்டு வரலாம்..

பெருசு: எனக்கு இட்லி இருந்தாத் தான் உப்புமா செய்ய வரும்.. கரெக்டா சொல்லுங்க, இட்லி எப்போ வாங்கியாருவீங்க? எனக்கு அஞ்சுமணிக்கு வெண்பா க்ளாஸ் இருக்கு.. கொத்தனார் வரச் சொல்லி இருக்காரு.. போகணும்..

கைப்பு: ஏய்யா? !! இட்லி எல்லாம் செஞ்சா அத விட்டுட்டு எவனாவது உப்புமா செஞ்சி சாப்டுவானாய்யா? இட்லி செய்யும் அளவுக்கு சமைக்கத் தெரிஞ்சா நாங்க இப்படிப் பேசிகிட்டு இருப்போமா? ம்ஹும்.. இது தேறாத கேஸு.. சரி சரி பாண்டி, நம்ம தான் மெனு முடிவு பண்ணணும் போலிருக்கு.. யாருக்கு என்னென்ன சமைக்கத் தெரியும்னு சொல்லுங்க..

பொன்ஸ்: எனக்கு சாதம் வடிக்க நல்லா தெரியும்ணே.. அதாவது… மைக்ரோவேவ்ல,,

கார்த்திக்: ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப்.. நீங்க சாதம் வடிச்ச கதை தான் அமெரிக்காலேர்ந்து நியூசிவரைக்கும் எல்லாருக்கும் தெரியுமே.. கொஞ்சம் எங்களையும் பேச விட்டா நல்லா இருக்கும்..

அப்போது கீதா வேகமாகக் கதவைத் திறந்து கொண்டு ஆக்ரோஷமாக உள்ளே வருகிறார்

பொன்ஸ் (முணுமுணுப்பாக) வந்துட்டாங்க.. தலைவலி

கீதா : என்ன தலைவரே.. நிரந்தரத் தலைவலியான என்னை விட்டுவிட்டு எல்லாரும் எங்கே போய்விட்டீர்கள்? “சிபி ஏன் குமார காவியம் எழுத வில்லை” என்று திடீர் என்று நினைவு வந்ததால், பாதி சாப்பாட்டில் எழுந்து அவருக்கு போன் செய்த காரணத்தால் நீங்கள் இங்கே இருப்பது தெரிந்தது.. இல்லைன்னா என்னை விட்டு விட்டு நீங்கள் எல்லாரும் என்ன சதி செய்கிறீர்கள் என்றே தெரியாமல் போயிருக்கும்.

பாண்டி: கீதாக்கா, அமைதி அமைதி..சதி இல்லைக்கா, சமையல் தான் செய்யறோம். எதுக்கு இத்தனைக் கோபப் படுறீங்க.. நம்ம தேவ் நூறாவது கச்சேரி போட்டுட்டாப்ல.. அதுக்குத்தேன் எல்லாரும் சேர்ந்து விருந்து சமைக்கப் போறோம்.. இப்போ பொன்ஸக்கா சாதம் வடிக்கப் போறாங்க.. (பொன்ஸ் ஏதோ பேச ஆரம்பிக்கிறார்..)
அக்கா.. இருங்கக்கா.. எப்படி வடிக்கிறதுன்னு கேட்கலை.. இருங்க இருங்க.. பேராசிரியர் கார்த்திக் தோசை சுடுவதில் எக்ஸ்பர்ட்.. அவரு தோசை செஞ்சிடுவாரு.. நீங்க என்னக்கா செய்வீங்க?

கீதா: நான் சாம்பார் நல்லா வைப்பேன்.. நானே சாம்பார் வைக்கிறேன்..

பொன்ஸ்: ஆனா அதுல உப்பு மட்டும் போட மறந்துருவாங்க!!

கீதா திரும்பி பொன்ஸை முறைக்கிறார்.

கீதா: சிலப்பதிகாரத்துல சாம்பாரைப் பத்தி என்ன சொல்லி இருக்குன்னா,..

சிபி: இருங்க இருங்க.. இதெல்லாம் வேண்டாம்… சரி, பாண்டி, எனக்கென்ன வேலை.. நான் என்ன செய்யணும்? கமான்.. டெல் மீ.. கமான்… கை பர பரங்குது..

கார்த்திக்: ஆமா, என்னவோ விருந்துங்கறீங்க ஒரே வெஜிடேரியனா இருக்கு.. மருந்தாகிடப் போகுது.. பார்த்து…

மகேஸ்: ஆமாம்.. எல்லாம் மருந்து ஐட்டமாவே இருக்கு.. ஒரு கிடா வெட்டி பிரியாணி போட்டோம்னு வைங்க..

பொன்ஸ்: ஆடெல்லாம் வெட்டக் கூடாது.. ஆடு பாவம்.. மல்லிச் செடி கூட பாவம்…. இருங்க நான் போய் மேனகா காந்தி கிட்ட சொல்லப் போறேன்..

கைப்பு : ஆகா.. இந்தப் பொண்ணை வச்சிகிட்டு ஒண்ணுமே செய்ய முடியாது போலிருக்கே.. பூனையை மடியில கட்டி சகுனம் பார்த்த மாதிரி..

பொன்ஸ்: ஆமாம் அண்ணே.. எனக்குப் பூனை ரொம்ப பிடிக்கும்.. யானையும் பிடிக்கும்.. யானை இருக்கு பாருங்க..எத்தனை பெரீசு..

பெருசு: இதுக்கு நம்மளே பரவாயில்லை போலிருக்கு.. எந்தத் தலைப்பு கொடுத்தாலும் ஆரம்பிச்சா நிறுத்தாம பேசுறாங்க..

கீதா: ஆமாம்..இந்த ஆடு கோழி எல்லாம் பேசாதீங்க.. பேசாம, போளி செய்யலாம்…

பெருசு: ஆகா, போலியா.. எனக்கு வெண்பா க்ளாசுக்கு நேரமாச்சு..

கைப்பு: இருங்கம்மா.. இந்த மகளிர் அணியைச் சும்மா இருக்க வைக்கிறதுக்குள்ள மனுசனுக்கு உயிர் போய் உயிர் வருது.. ரெண்டு பேர் இருக்கும் போதே இப்படின்னா, இன்னும் புதுசா கெக்கே பிக்கேன்னு எல்லாத்தையும் போய் கூட்டிட்டு வருது இந்த பொன்ஸு.. கொஞ்சம் அடக்கி வைக்கணும் எல்லாத்தையும்.. சரி சரி.. விவசாயி இளா.. உங்க பண்ணையிலேர்ந்து ஒரு பத்து ஆடு, இருபது கோழி, அஞ்சு கிலோ கோஸ், பத்து கிலோ வெங்காயம் எல்லாம் எடுத்துட்டு வாங்க.. சமையலை ஆரம்பிக்கலாம்..

இளா: (தனக்குள்) அடடா.. என்னது இது.. தின்னே அழிச்சிடுவாங்க போலிருக்கே.. கட்சி நிதி வேற காலியா இருக்கு.. அப்டியே எஸ்கேப் ஆக வேண்டியது தான்.. (சத்தமாக) அண்ணே.. அதெல்லாம் இந்த முறை வெளில வாங்கிக்குங்க.. எனக்கு ப்ளைட்டுக்கு நேரமாச்சு.. கதார் வேற போகணும்.. இப்போ தான் நேரம் பார்த்தேன்.. வரேண்ணே…

கைப்பு: தம்பி.. இளா.. இளா.. (கூப்பிடக் கூப்பிட திரும்பிப் பார்க்காமல் ஓடுகிறார்.. )

(இதற்குள் கட்ட துரை பெருசு, சிபி காதில் ஏதோ சொல்கிறார்)

சிபி: இருங்க தல.. இப்போ எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்..

கைப்பு: அட நீ வேறயா? என்ன உண்மை?

சிபி: நானும் சங்கத்துல தானே இருக்கேன். நானும் இப்போ தானே ஒரு நூறாவது பதிவைப் போட்டேன்.. எனக்கு மட்டும் எந்த ட்ரீட்டும் வைக்கலை.. இப்போ கச்சேரில நூறாவது பதிவுன்ன உடனே பிரியாணி என்ன, ஜிகிர்தண்டா என்னன்னு ஒரே பெரிய ஸ்பெசல் விருந்தே தயார் பண்றீங்க.. அதை வேற என்னை வச்சே வேலை செய்ய வைக்கிறீங்க?? என்ன நடக்குது?

பொன்ஸ்: தளபதி.. தகுதிக்கு மீறி ஆசைப்படக் கூடாது..

கைப்பு: ஐயோ, ஐயோ பேச ஆரம்பிச்சிட்டாளே.. டேய் பாண்டி.. அவளைக் கொஞ்சம் அந்தப் பக்கம் கூட்டிப் போடா…

சிபி: அப்டீன்னா? என்ன சொல்ல வர்றீங்க?

பொன்ஸ்: இப்போ, தேவோட நூறாவது பதிவைப் பாருங்க.. நம்ம சூப்பர் ஸ்டாரு, கைப்புன்னு போட்டு அசத்திட்டாரு.. நீங்களும் போட்டீங்களே ஒரு நூறாவது பதிவு.. ப்ரோபேசன் பதிவாம்ல..
நூறாவது பதிவிலயே நீங்க ப்ரோபேஷன் லெவல் தான் நினைவிருக்கட்டும்..

இதைக் கேட்டதும் தளபதி சிபிக்குக் கோபம் வந்து விடுகிறது, அவரது காது மற்றும் கண் தெரியாமல் போய் விட்டது.(refer to Sibi’s profile). இத்துடன் சங்க உறுப்பினர்களும் பயந்து போய் ஒவ்வொருவராக எஸ்கேப் ஆக, சிபி கோபத்தோடு கைப்புவின் எறும்பை எடுத்து பொன்ஸின் யானை மீது போட்டுவிட்டு “அவன அமுக்கிக் கொல்லுடா மாப்ள…” என்று கத்தத் துவங்க.. கைப்புவும் எஸ்கேப்..

.... இங்கே பதியப்பட்டது பொன்ஸ் | Leave a Comment »

விவசாயி க(உ)தார் விஜயம்

பதிந்தவர் vavaasangam மேல் ஜூன் 14, 2006

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ஒட்டகப் படையில் ஆள் சேர்ப்பதற்காக…(சாரி ஸ்பெல்லிங் மிஸ்டேக்…ஒட்டகம் சேர்ப்பதற்காக) ஞாயிற்றுக் கிழமை கதார் செல்லவிருக்கும் சங்கத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் விவசாயி இளா அவர்களின் பயணம் இனிதே அமைய எங்கள் வாழ்த்துகள்.

இப்பயணத்தின் வாயிலாக கதார் சேக்குடன் வ.வா.ச. கதார் நாட்டு எக்ஸ்டென்ஷன் கவுண்டர் திறப்பது குறித்தும், வளைகுடா வட்ட சங்கத்து சிங்கங்களுக்குப் ப்ளாக்கில் விவசாயம் செய்வது குறித்தும் மகசூலை மேம்படுத்துவது குறித்தும் சிறப்பு பயிற்சி அளிக்கவிருக்கிறார்.

கதார் நாட்டு விமான நிலைய வாயிலில் கடலை சாகுபடி குறித்து கதார் நாட்டு காலேஜ் பசங்களுடன் தன்னுடைய சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பம்பர் விளைச்சல் பெறுவது குறித்து பேச சங்கத்துச் சிங்கம் பாண்டிக்கும் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வ.வா.ச. தென்மதுரை வட்ட கண்மணிகள் விவசாயியை ஞாயிற்றுக் கிழமை அன்று வழியனுப்ப சென்னை மெரினா கடற்கரையில் கரகாட்டம் ஒத்திகை நடத்தியபோது எடுக்கப் பட்ட படம்.

.... இங்கே பதியப்பட்டது கைப்புள்ள | Leave a Comment »

தல’க்கு பொறந்தநாளு

பதிந்தவர் vavaasangam மேல் ஜூன் 13, 2006

.... இங்கே பதியப்பட்டது ILA | Leave a Comment »

வருத்தப்படாதீங்க ப்ளீஸ் !!

பதிந்தவர் vavaasangam மேல் ஜூன் 12, 2006

இப்படியெல்லாம் வருத்தப்படணுமா?

வருத்தப்படாத வாலிபர் சங்கத்துக்கு வந்த பின்னூட்டத்திலே பலபேரு தேவையில்லாமல் வருத்தப்பட்டுகிட்டு இருக்கறத நெனச்சு ‘தல’ கைப்பு ரொம்ப கவலைப்பட்டுகிட்டு இருக்குறாரு. எப்படி வருத்தப்படாம இருக்கறதுன்னு ஆலோசனை நடக்குது.

கைப்பூ : இதப்பய புள்ளக எல்லாம் வருத்தப்படாம இருப்பங்கன்னும்னு தான் சங்கத்தை ஆரம்பிச்சா என்னய்யா அல்லாருக்கும் பார்த்தா ஒவ்வொரு கொறை இருக்கும் போல என்ன பண்ணலாம் சொல்லுங்கப்பூ.

சிபி : வருத்தத்தை வருத்தப்பட வைக்க வேண்டும் . வருத்தம் என்னும் விருத்தம் இங்கே தொக்கி நிக்கிறது ஏன் என்ற கோள்வியினை நம்முன் வீருகொண்டு எழுப்பி கெக்கலிட்டு பார்க்கிரது.

கைப்பூ : ஐயா ஐயா சிபி கொஞ்சம் புரியமாதிரி சொல்லுப்பூ. என்னடா சிபி சொல்றது கூட புரிய மாட்டீங்குடேன்னு அவனவன் அப்புறம் புதுசா வருத்தப்பட ஆரப்பிச்சுடுவாங்க !

தேவு : நிறுத்தச் சொல்லுங்க. அவனை நிறுத்தச்சொல்லு இவனை நிறுத்தச்சொல்லு.

கைப்பூ : தேவு எதையப்பா நிறுத்தச்சொல்றே ??

ஜொள்ளு பாண்டி : நான் வரும்போதே என் வண்டிய நிறுத்திட்டு தானே வந்தேன் !

தேவு : நிறுத்தனும். எல்லாரும் வருத்தப் படுறதை நிறுத்தனும் !! ஏன் எப்படி எதுக்குன்னு யாரும் எதுவும் கேள்வி கேட்காம வருத்தப்படுரதை நிறுத்தனும் !!!

பொன்ஸ் : என்ன இப்படி பேசறீங்க? எப்படி நிறுத்தது?? வருத்தப்படாத இருக்கனும்னா எப்படி வருத்தப்படரதுன்னு தெரிஞ்சாத்தானே வருத்தப்படாம இருக்க முடியும் என்ன நான் சொல்றது ??

ஜொள்ளுபாண்டி : ஐயா எல்லாரும் என்னமோ சொல்றீங்களே ‘தல’ என்னான்னு கொஞ்சம் வெளக்கமா சொல்லுங்கய்யா !!!

கைப்பூ : ஏ வெளங்காத பயலே. நானே என்னடா சொல்றாங்க இவங்கன்னு மண்டையப் பிச்சிகிட்டு இருக்கேன் என்கிட்ட போயி வெளக்குன்னு கேட்டுகிட்டு.

விவசாயி : வருத்தம் அப்படீங்கறது வயக்காடுல சாகுபடி செய்யிறப்போ இடையிலே வளர்ற ‘களை’ மாதிரி. அதைய முற்றிலும் களைய முடியாட்டியும் அப்பப்போ களைய முடியும் அப்ப்டீங்கறதைத்தான் நம்ம விவசாய விஞ்ஞானி விஸ்வனாதனும் சொல்லியிருக்காறு. அப்படியே வயக்காட்டிலே ‘ வரப்பு’ ஓரமா ஒக்காந்து யோசிச்சா நல்லா தீர்வு கெடைக்கும் !

பொன்ஸ் : வாவ் !! சரியாகச்சொன்னீர்கள் விவசாயி.. இதையேதான் காளமேகப்புலவரும் சொல்லியிருக்காருன்னு நேத்துதான் படிச்சேன் !

ஜொள்ளு பாண்டி : என்னாச்சு எல்லாருக்கும் . குடுகுடுப்பை காரன் மாதிரி ஆளாளுக்கு என்னமோ புரியாத பாசையிலே சொல்லிகிட்டு இருக்காங்களே !’ இனிமே சங்க மீட்டிங்குக்கே ட்ரான்ஸிலேட்டர் வச்சிக்கனும் போல !

கைப்பூ : யப்பா கண்ணுகளா யாராச்சும் புரியரமாதிரி பேசுங்களேப்பா. உங்க பேச்சைக் கேட்கிறப்போ கண்ணை கட்டிகிட்டு வருதே !

பொன்ஸ் : ஐயோ தல இவ்ளோ நேரமா உயிரைக்கொடுத்து பேசிக்கிட்டு இருக்கேன் புரியலையா ?? ஐயகோ. இப்போதே ஒரு மன்னிப்பு அறிக்கை விடிறேன்.

கைப்பூ : ஆத்தா பொன்ஸு கொஞ்சம் நில்லும்மா ! நான் என்னாத்த சொல்லிபிட்டேன்னு இப்படி அறிக்கை விடுறேன்னு சொல்லுதே ?

பொன்ஸ் : யாரையும் அலட்சியம் செய்வது என் லட்சியமல்ல ! அலட்சியம் என்ற லட்சியம் கொண்டவருக்கு அதைக்கொள்ளாமல் இருக்கதானே நான் பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன் ??

தேவு : வருத்தப்படாத சங்கத்திலிருந்து ஒப்பாரிச்சத்தம் வருவது அழகல்ல ! எங்கெல்ல்லாம் வருத்தமின்மை கண்ணகி சிலைபோல் களையப்பட்டு கொடும் கூற்றாம் ‘கவலை’ முன் வீழ்ந்து கிடக்கிறதோ அங்கெல்லாம் வருத்தப்பாடாதலை மீட்டு மீண்டும் நிறுவவேண்டிய கடமையைத்தான் செய்ய வேண்டுமெயொழியா ஏன் வீழ்ந்ததென வீண் வாதம் விளக்கம் தேவையில்லை !!

பொன்ஸ் : ஆஹா எப்படி முடியும்? வருத்தம் கொள்ளல் பாவமில்லை. வருந்தா மருந்தொன்று உண்டென்று சொன்னால் அது மருந்தல்ல அகழ்தெடுத்த அமிர்தம்.

சிபி : அதைத்தானே பொன்ஸ் நாம் கடைந்து கடைந்து சங்கம் வரும் தங்கங்களுக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.

ஜொள்ளுபாண்டி : என்னய்யா ஆச்சு எல்லாருக்கும் ? ஏதோ சங்ககாலப் படம் பார்த்த மாதிரி பேசிக்கிட்டு இருக்கீயளே !!

கைப்பூ : எலே பாண்டி. எனக்கு அப்படியே கண்ணை கட்டிகிட்டு வருது. கொஞ்சம் கைத்தாங்கலா கூட்டிகிட்டு போறியா ??

தேவு : என்னாச்சு ‘தல’ சோமபானம் சுராபானம்னு எதாச்சும் உள்ள போச்சா ?

கைப்பூ : பானமாவது? பனங்காயாவது ? வருத்தப்படாம இருக்கரது எப்படீன்னுதனே கேட்டேன். இப்படி போட்டு பொளந்து கட்டீட்டீயளே ! ஒன்னூமே புரியலையே ? எவ்ளோ நேரந்தான் புரியரமாதிரியே நான் நடிக்கிறது ??

.... இங்கே பதியப்பட்டது ஜொள்ளுப்பாண்டி | Leave a Comment »