வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்

100% சிரிக்க

மே, 2006 க்கான தொகுப்பு

முக்கிய அறிக்கை – நாகை சிவா

பதிந்தவர் vavaasangam மேல் மே 31, 2006

நம் இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகள் அணியிடம் தொடரை இழந்த சேதியை மூன்று நாள் தாமதமாக ஜொள்ளு பாண்டியின் மூலம் அறிந்த நம் தல கைப்புள்ளளை மன வேதனையும் ஆத்திரமும் அடைந்தார்.

நம் மகளிரணி தலைவி புதகரத்தில் இருந்து அனுப்பிய புது கைப்பேசியின் மூலம் ஜமைக்காவில் இருக்கும் ராகுல் டராவிட்டை தொடர்பு கொள்ள பலமுறை முயன்றும் முடியாத காரணத்தால் மனம் கொதிப்பு அடைந்து உள்ளார்.

தான் உதைப்பந்து விளையாட சென்ற காரணத்தால் தான் இந்திய கிரிக்கெட் அணி தகுந்த ஆலோசனை கிடைக்காமல் தோல்வி அடைந்து இருக்குகலாம் என்ற குற்ற உணர்ச்சியில், உதைப்பந்தை உதறி விட்டு ஜமைக்கா புறப்பட தயார் ஆன அவரை தேவ் சமாதனப்படுத்தி நம் சங்க விருந்தினர் மாளிகையில் தங்க வைத்து உள்ளார்.

இதுகுறித்து முடிவு எடுக்க, சங்கத்தின் செயல்வீரர்கள் அனைவரையும் இன்று இரவு 11.11மணிக்கு நடைப்பெரும் அவரச கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிகிறோம்.

இக்கூட்டத்தில்,
நம் தல கைப்புள்ள உதைப்பந்தில் தொடர்ந்து உதை வாங்குவதா, இல்லை இந்திய கிரிக்கெட் அணியின் பெருமையை நிலைநிறுத்த ஜமைக்காவுக்கு உடனடியாக புறப்படுவதா? என கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறோம்.

பின் குறிப்பு: ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் நம் சங்க பத்திரிக்கையின் வாயிலாக சங்கத்தின் சிங்கங்களுக்கு அறிவிக்கபடும் என தெரிவித்துக் கொள்கிறோம்.

.... இங்கே பதியப்பட்டது Uncategorized | Leave a Comment »

வரு.வா.சங்கம் – 25வது பதிவு

பதிந்தவர் vavaasangam மேல் மே 30, 2006


சங்கத்தின் இனிய செல்வங்களே

இது சங்கத்தின் சார்பாக வெளிவரும் 25வது பதிவு.

இந்தச் சங்கத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து அன்பு
உள்ளங்களுக்கும் இனிய நன்றி….

இது ஒரு ஆட்டோகிராப் பதிவு

ஆமா சங்கத்தைப் பத்தி என்ன நினைக்கிறீங்களோ அதை வந்துப் பின்னூட்டமா எழுதிட்டுப் போங்க

வாழ்த்துங்க.. வைங்க… எந்த மொழியும் பயன்படுத்தப் படலாம்…

தொடர்ந்து உங்கள் ஆதரவை நாடும்

வரு.வா.ச

.... இங்கே பதியப்பட்டது Uncategorized | Leave a Comment »

கேமரூன் காட்டானும் கண்டமும்…

பதிந்தவர் vavaasangam மேல் மே 30, 2006


ஒரு இளைஞன்னா ஒரு இளைஞி கையைப் பிடிச்சு இழுக்கத் தான் செய்வான்” என முழங்கி, வாலிபர்களின் உரிமைக்காக அன்றே குரல் கொடுத்து (பின்னர் கந்தல் துணியாய் கிழித்து காயப் போடப்பட்ட) தல கைப்புள்ள, கால் பந்து(எக்ஸ்கீஸ் மீ…உதை பந்து) விளையாட செருமேனி சென்றிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதே நேரம் வ.வா.ச. வாஷிங்டன் பகுதி கொ.ப.செவும் புதரகத்தின் பாதுகாவலருமான ஜார்ஜ் புதருடன் பேசி கைப்பு பங்குபெறும் ஆட்டங்களின் பிரத்யேக ஒளிபரப்பு உரிமையை ஸ்கை போர்ட்ஸிடமிருந்து சங்கத்தின் தொலைக்காட்சி சேனலான ‘ஆப்பு டிவி’க்கு மாற்றம் செய்ய ஆற்றலரசி அக்கா பொன்ஸ் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதும் நாம் அறியாததல்ல. தலயின் மீது கொண்டிருக்கும் அபிமானத்தின் காரணமாக ‘புதர்’ இதற்கு உடனுக்குடன் இசைவு தெரிவித்து விட்டதாகவும், அத்துடன் உதைபந்தாட்ட ஓளிபரப்பு அனைத்து நாடுகளிலும் இன்னும் தெளிவாக தெரிவதற்காக, கூடுதலாக நான்கு செயற்கைகோள்களை போர்க்கால அடிப்படையில் ஏவ நாஸா (NASA) விஞ்ஞானிகளை முடுக்கி விட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் சங்கத்து சிங்கங்கள் தேவ்,பாண்டி,சுடான் சிவா ஆகியோர் கேமரூன் நாட்டு காட்டான் ஒருவனை தல மீது கொண்டுள்ள அன்பின் காரணமாகக் குமிறியதும், அதன் எதிரொலியாக அவன் தலயை ஏகவசனத்தில் புரியாத மொழியில் திட்டியதும், முன்னரே ஒரு முறை இணைய ஜோசியரும் தல ஊர்க்காரவுகளுமான தருமி “உனக்கு காலுக்கு கீழே கண்டம்” என எச்சரித்ததும் தலயை சற்றே பீதி அடைய செய்துள்ளது. எனினும் பீதிக்கு பீப்பீ ஊதிவிட்டு, தன் “வருங்கால” சந்ததியினரைப் பாதுகாக்கும் எண்ணத்தில் புதிய கெட்டப்பில் உதைபந்தாட்ட பயிற்சிக்கு ‘தல’ கிளம்பிக் கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட படம்.

அச்சமயம் நமது லத்தீன் அமெரிக்க வட்ட கொ.ப.செவும் உதைபந்தாட்ட சிறப்பு நிருபர்களில் ஒருவருமான பெருசு தலயைத் தொடர்பு கொண்டு கேட்டது.

பெருசு : ஏன் தல? கேமரூன் காட்டானுக்குப் பயந்து தான் நீ இந்த புது கெட்டப்பில் ஆட்டத்துக்குப் போறதா பேசிக்கிறாங்களே? அது உண்மையா?

தல : ஹா…ஹஹ்ஹா! பயமா? எங்களுக்கா? பீரங்கி குண்டு பெடரியில வந்து விழுந்தாலும் பெசகாம் பிரேடு(Parade) நடத்தற பரம்பரைய்யா நாங்க…யாரைப் பாத்து என்ன கேள்வி கேட்டுட்ட?

பெருசு : நான் கேக்கலை தல. அப்படி ஊருக்குள்ளாற பேசிக்கிறாங்க. அத தான் நா கேட்டேன். மன்னிச்சிக்க தல.

தல : சரி…சரி…நம்ம பெருமையை ஊர்க்காரனுவ தெரிஞ்சிக்கிற மாதிரி எதாச்சும் கேளு

பெருசு : சரி தல! இந்த சொக்காயைப் போட்டுக்குட்டு உதை வாங்க…சாரி…உதைபந்தாட போறியே…எதனா வேண்டுதலா?

தல : ஆன்…இது கேள்வி. சொல்றேன்…தமிலெழுத்துல கால், கொம்பு எல்லாம் சரியா போட்டு தப்பில்லாம திருத்தமா எளுதிக்க. நமக்கு எலக்கணம் ரெம்ப முக்கியம். காலுக்கு மத்தியிலே லைட்டு போட்டு வெளாடலாம்…ஆனா ஃபைட்டு போட்டு வெளாடப்படாது…அதுக்காண்டி எடுத்த முன்னெச்சரிக்கை தான் இதுன்னு கொட்டை எழுத்துல கொரியர் ஃபாண்டுல போடு.

ஆயினும் சங்கத்துக் கொள்கைகளில் மிகத் தெளிவாக இருக்கும் பெருசு கேட்ட அடுத்த சில கோக்குமாக்கான கேள்விகளையும் அதற்கு தல தன் பாணியில் அளித்த பதில்களையும் மேலும் பல சுவையான செய்திகளையும் தெரிந்து கொள்ள சங்கத்து நாளேடான “டாக்டர் நமது கைப்புள்ள”யைப் படியுங்கள்.

((தத்துவம் எண்- 1: ஆப்புகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்))

.... இங்கே பதியப்பட்டது ILA | Leave a Comment »

ஆற்றலரசிக்குப் பத்துக் கேள்விகள்

பதிந்தவர் vavaasangam மேல் மே 29, 2006

வழக்கம் போல் சங்கத்துக்கு வந்த தபால் பையை நம்ம பாண்டியும் நானும் பாத்துகிட்டு இருந்தோம். துபாய் பக்கமா இருந்து நம்ம துபாய் ராசா ஒரு மூணு கிலோ பேரீச்சம் பழமும் கூடவே கிலோ கணக்குல்ல பாசமும் அனுப்பியிருந்தார். பிரிச்சுச் சாப்பிட்டோம் நல்லாயிருந்துச்சு… பேரீச்சம் பழத்தைத் தான்ய்யா சாப்பிட்டோம்

ச்சே விஷயத்துக்கு வர்ரோம்…

நமது கைப்புள்ள இதழ் மாதிரி புதரகத்துல்ல நமது புதர் ன்னு ஒரு பேப்பர் வருதாம் அந்தப் பத்திரிக்கையிலிருந்து பொன்ஸ் அக்காவுக்கு ஒரு லெட்டர் வந்து இருந்துச்சு.

வரு,வா.சங்கம் பெரும் புள்ளிங்க அம்புட்டுப் பேர்க்கும் வர்ற லெட்டரைப் பிரிச்சுப் படிச்சு அவங்கிளுக்குப் பதில் போடுறது அம்புட்டும் இந்தத் தொண்டர்கள் வேலைத் தானே… லெட்டரைப் பிரிச்சா.. அக்காவோட அரசியல் எதிரி யாரோ எழுதியிப்பான்(ள்) போல இருந்துச்சு..

அக்காவுக்குப் போன் போட்டா அக்கா சோறு வடிக்காம பர்கர் தின்ன கதையை வெட்டியாப் பேசி போன் பில்லை ஏத்தி விட்டிருச்சு…

அப்புறமா நாங்கப் பதட்டமா லெட்டர் மேட்டரை எடுத்து விட்டு இதுக்கு என்னப் பதில் சொல்லுரதுன்னு கேட்டோம்…

அக்கா விவரத்தை அசால்ட்டாக் கேட்டுட்டு இந்தப் பிஸ்கொத்து கேள்விக்கு எல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன்.. என் பேன்ஸ் பதில் சொல்லுவாயங்கன்னு நச்ன்னு போனைக் கீழே வச்சுட்டாயங்க…

அக்கா பேன்ஸ்ன்னு சொன்னது தலயிலே இருக்குமே அந்த மேட்டரா இல்ல தலக்கு எல்லாமே அந்த மேட்டரான்னு நானும் பாண்டியும் பாயைப் பிராண்டி ஒரு முடிவுக்கு வர முடியாமல் அந்தக் கேள்விகளை அப்படியே சங்கப் பலகையிலே ஒட்டுறோம்ய்யா.. அக்காவோட பேன்ஸ்க்குச் சமர்ப்பணம்.

நமது புதர் கேட்கும் பத்து கேள்விகள்

1. உங்கள் பதிவு ப்ரொபைலில் இருக்கும் அந்தப் பொன் குவியலை நீங்கள் எப்படி சம்பாதித்தீர்கள்?
சங்கத்தில் களவாடிய நிதியா? இல்லை சங்கம் பெயரைச் சொல்லி நீங்கள் ஊழல் செய்த நிதியா?

2. பலப் பதிவுகளிலும் உங்களை சின்னப் பெண் எனக் கூறும் நீங்கள்.. உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி சகப் பதிவாளர்களை மிரட்டி உங்களை அக்கா எனக் கூறுமாறு தொடர்ந்து பயமுறுத்துகிறீர்களாமே? இது சரியா?

3. தேர்தல் நேரத்தில் சங்கத்து வேட்பாளர்களுக்கு ஆதரவாக எங்குமே பிரச்சாரம் போக மறுத்து விட்டு… இப்போது மட்டும் அயல் நாட்டு சங்க வளர்ச்சி திட்டம் என்று புதிய திட்டம் வகுத்து அயல் நாடு சென்று டாலர் தேத்துவது நியாயமா?

4.புதரகத்தில் நீங்கள் மேற்கொண்டிருக்கும் அரிசி சோறு வடிப்பான் கருவி ஊழல் உண்மையா? தேவையின்றி சோறு வடிக்கும் சிறுப் பிரச்சனையைப் பெரிதாக்கி சங்கத்தாரின் பொன்னான நேரத்தை வீணானச் சோற்றுப் புராணப் பதிவுகளில் ஈடுபட வைப்பது மாபெரும் துரோகம் ஆகாதா?

5. சங்கத்தில் உங்களுக்கு பிகுலு பட்டத்துடன் வழங்கியப் பிகுலைத் தலக்கு எதிராகவே பயன்படுத்துவது.. அதாவது தல உதை பந்து விளையாடும் இடங்களில் ஒருவனைக் கூடவே தலப் பின்னால் ஓட விட்டு தலக் கைப்புப் பந்து எடுக்கும் போதெல்லாம் அவன் பிகுல் அடிப்பதைப் பார்த்து மகிழ்வது.. இது குற்றமல்லவா?

6. கைப்பொண்ணுவை வா.வ.சவில் ( சரியாகப் பார்க்கவும் வரு.வா.ச அல்ல) வா.வ.ச… இணையச் சொல்லி மிரட்டியது.. கைப்பொண்ணுக்கு மீசை முளைக்க வைத்தது.. அதற்கு விளக்கெண்ணெய் தடவியது எனக் கொடுமைகள் இழைத்தது சரியா?

7.சங்கத்துக்கு மிகவும் நெருக்கமானப் பின்னூட்ட சூப்பர் ஸ்டார் இலவசங்களின் இமயம் வாக்குறுதிகளின் வங்கி இலவசக் கொத்தனார் மீது சங்கத்திலிருந்து தட்டு முட்டுச் சாமான்களை லவட்டிச் சென்றதாய் குற்றம் சாட்டி மிரட்டியது.. இப்போது சாதம் வடிப்பது போன்ற சுமாரான சமையல் குறிப்புக்களைக் கொடுத்துவிட்டு பரோட்டாப் போடுவது எப்படி என்ற மாபெரும் சாதனைப் பதிவுப் போட்டு மீன்கொத்தி அன்பர்களின் அமோக ஆதரவு பெற்று அமைச்சரான கொத்தனாரின் உணவுத் துறை இலாகாவைக் கைப்பற்ற நீங்கள் சதி செய்கிறீர்களாமே?

8.வெண்பாவைக் கட்டாயக் கல்வியாக்கி வருத்தப் படாத வாலிபர்களின் நெஞ்சில் வேல் பாய்ச்சியது மிகப் பெரியக் குற்றம் அல்லவா?

9.கீதா அக்காவின் ஆறு லட்சம் ரசிகர் மன்றங்களைக் கலைத்தது… இன்னும் அவருக்கென் இருக்கும் சில நூறு மன்றங்களையும் பின்னூட்டமிட்டு கலவரப் பூமியாக மாற்றுவது என பெரும் சதி திட்டம் தீட்டி வருகிறீர்களாமே?

10. எல்லாவற்றுக்கு மேலாக உங்கள் மீது கூறப் படும் குற்றச்சாட்டு சங்கத்தின் உயர்வான…உயிரான… கொள்கையான வருத்தப் படாமல் இருப்பதை மீறியது.. உங்கள்த் தனி பதிவில் மட்டுமின்றி பிற பதிவுகளிலும் சென்று ‘வருத்தப்படுவதாய்’ பிரகடனம் செயதிருப்பது உங்கள் இயக்கத்திற்கு இழைக்கும் கொடுந்துரோகம் என்று நீங்கள் நினைக்கவில்லையா?

அக்கா ஆற்றலரசியே பதில் சொல்லுங்கள்….

அக்கா இந்தக் கேள்வியைக் கேட்டவனைத் தூக்கிப் போட்டு துவம்சம் பண்ணிடுறோம்ன்னு நானும் பாண்டியும் பிளட் பாயிலாகிக் கேட்டப்போ

தம்பிகளா.. நீங்கப் பிளட் பாயிலாகதீங்க… போய ஆளுக்கொரு ஆப் பாயில் அடிச்சுட்டு உங்க வேலையைப் பாருங்க.. இந்தக் கேள்விகளுக்கு என் ரத்ததின் ரத்தங்களும் உடன்பிறப்புக்களும் பதில் சொல்லுவாயங்கன்னு கூலாச் சொல்லிட்டாங்கப்பூ

.... இங்கே பதியப்பட்டது Uncategorized | Leave a Comment »

உதை பந்து!

பதிந்தவர் vavaasangam மேல் மே 27, 2006


உலக கோப்பை கால்பந்தாட்டத்தில் கலந்து கொள்ள ஜெர்மனி சென்றுள்ள கைப்புவின் முதல் பேட்டி:
(சற்று முன்புதான் தல ஒரு பயிற்சி ஆட்டத்தில் வழக்கம் போல பலரை பந்தாடி விட்டு களைப்புடன் வந்து அமர்ந்தார்).

பேட்டி இதோ:

நிருபர்: எப்படி இருக்குங்க கால்பந்தாட்டம்

கைப்பு: மொதல்ல பேர மாத்துய்யா, உதை பந்துன்னு பேர் வை. உதைச்சுதானே ஆடுறாங்க அப்புறம் என்ன?

நிருபர்: எவ்வளவோ விளையாட்டு விளையாடி இருப்பீங்க இந்த விளையாட்டு உலகம் முழுசும் பிரபலமா இருக்கு, நீங்களும் சேர்ந்ததனால இன்னும் பரபரப்பாயிருச்சு.. அதனால்…

கைப்பு:(குறுக்கிட்டு) என்னைய்யா விளையாட்டு இது, இங்கிட்டும் அங்கிட்டும் ஓட ஓட ஒரே பந்தை உதைச்சுகிட்டு, சே. எல்லாருக்கும் ஒண்ணொண்ணு குடுத்துறலாமில்ல. சின்னபுள்ளத்தனமா.

நிருபர்: ரொனால்டோ, பெக்ஹாம், ரூனே எல்லாம் உங்களுக்கு பயந்துக்கிட்டு ஊர விட்டு ஓடிட்டாங்கன்னு பேசிக்கிறாங்களே, அது உண்மையா?

கைப்பு: அது உண்மைதான். நான் விளையாட்ட விட்டு போக என்கிட்ட கெஞ்சினாங்க . நாந்தான் அவுங்களையெல்லாம் சமாதானபடுத்தி கூட்டி வந்தேன். பின்னாடி சங்கத்துல சேர்த்துகிறதாவும் வாக்கு கொடுத்துட்டேன். இருந்தாலும் போட்டின்னு வந்துட்டா கைப்பு சிங்கம் மாதிரி குதிச்சிருவானுல. இந்த போட்டிக்கு அப்புறம் சங்கத்துல கேட்டு உதை பந்தாட்டத்திலிருந்து VRS வாங்கிரலாம்னு இருக்கேன். நமக்கு வேற வேலை இருக்குள்ள…

நிருபர்: இது வரைக்கும் நீங்க ஒரு கோல் கூட போடலையாமே?

கைப்பு: நான் கஷ்டப்பட்டு காலால பந்த உதைச்சுகிட்டே முன்னாடி போறேன் ஒரு லூசுப்பையன் கால குறுக்கால உடுறான், விட்டேன் பாரு ஒரு அறை, ஹாஹா அப்புறம் வருவான பக்கத்துல. யாருகிட்ட இதெல்லாம் நடக்கும். அப்புறமா ஒருத்தன் இடுப்புல இடிக்கிறான் ஒரே உதை..

நிருபர்: பந்தையா?

கைப்பு: அவனத்தான். பின்னே விட்டுறுவோமா? அது கூட பரவாயில்லை. இவ்வளவு கஷ்டப்பட்டு எல்லாரையும் ஏமாத்தி பந்த கொண்டுபோயி அந்த கூடையில போட்டா..

நிருபர்: என்னாது கூடையா? அது கோல் போஸ்ட்டுங்க

கைப்பு: எனக்கு தெரியாதா, உனக்கு தெரியுமான்னு டெஸ்ட்டு பண்ணேன்.(என்னா வில்லத்தனம்). எவ்வளவு கஷ்டப்பட்டு எல்லாரையும் ஏமாத்தி பந்த கொண்டுபோயி கோல் போஸ்ட்ல உதைச்சா பிக்காளி ஒருத்தன் கையால புடிக்கிறான், இருக்கட்டும்னு விட்டுட்டேன். அது யாரோ ஒருத்தன் நம்மல பார்த்து பிகுலு ஊதிட்டே இருக்கான் உதைக்கவும் மாட்டேன்கிறான், அவன் எதுக்கு வேஸ்ட்டா, அவனையும் மாத்தனும்.
பேட்டி தொடரும்

.... இங்கே பதியப்பட்டது Uncategorized | Leave a Comment »

அரிய வாய்ப்பு!!!!!!

பதிந்தவர் vavaasangam மேல் மே 27, 2006

வருத்தப் படாத வாலிபர் சங்கம் என்னும் சங்கம் கண்டு,

அதை கல்கி கண்ட சங்கமாக்கி,

இந்தியா, சூடான், துபாய், பெரு, அமெரிக்கா என்னும் ‘கண்டங்கள்’ கண்ட கண்டமாக்கிய சாரி, சங்கமாக்கிய

என் அன்பிற்கும் மரியாதைக்குமுரிய சிங்கங்களே!!!!!

இப்போது வந்திருக்கிறது ஒரு அரிய வாய்ப்பு.. இதுவரை வலைப்பூக்களில் மக்களின் முகமகிழ்ச்சிக்காக மட்டுமே எழுதிக் கொண்டிருந்த நம்மையும் ஆராய்ச்சி செய்கிறேன் என்று மதுமிதா கிளம்பியுள்ளார்..

உடலை ஆராய்ச்சிக்குத் தந்து ஏனையோரின் உயிர்காக்கும் மருத்துவப் பணிக்கு உதவும் அளவுக்கு பரந்த மனப்பான்மை கொண்ட இவ்வுலகில், நம்ம மதுமிதா கேட்பது என்ன? என்ன?? என்ன???

அட, என்னங்க மது? என்ன கேட்டீங்க? மறந்து போச்சே!!

ஆங்.. மதுமிதா கேட்பது வெறும் விவரங்களைத் தான்.. பதிவர்களின் விவரங்களை..

என்ன விவரங்கள்?!! எல்லாம் தெரிந்தவை தான்..

அட, உங்களுக்குத் தெரிந்தவை, மற்றவர்களுக்கு அதிகம் தெரியாதவை..

“கேள்வி கேட்கத் தான் தெரியும், பதில் சொல்லத் தெரியாது” என்று சொல்லும் சங்கத்தின் சிங்கங்களே, என்ன செய்ய?!!! , “கேள்விகளை நீ கேட்கிறாயா? அல்லது நான் கேட்கட்டுமா?” என்று நம்ம மது கேட்காமல் விட்டு விட்டார்களே!!

என்னென்ன கேள்விகள் என்பதை இந்தச் சுட்டிக்குச் சென்று தெரிந்து கொள்ளலாம்..

என்னென்ன பதில் சொல்லலாம் என்று ஒரு மாதிரிக்கு, நம் சங்கத்தில் இந்தச் சோதனையை ஏற்கனவே கடந்து வந்த கண்மணிகளின் வீட்டுக்குச் சென்று பார்த்து, (காப்பி அடிக்காதீங்கப்பூ… அப்படியே அடிச்சாலும் பேரு ஊராவது யோசிச்சிப் போடுங்க, அப்படியே வெட்டி ஒட்டாதீங்க தம்பிகளா :) ) எழுத கைடு:

1. சித்தூர்காட் சிறுத்தை தல கைப்பு
2. புதரகம் போய் (ஆற்றிக் குடிக்கக் காப்பி கிடைக்காவிட்டாலும்) சங்கப் பணியைத் தவறாது ஆற்றும் பொன்ஸ்
3. நாகை மாவட்ட கொ.ப.செ. சூடான்(ன) சிவா
4. வட அமெரிக்க மேற்குக் கிளைச் செயலாளர் சந்தோஷ்

ஆகவே கண்மணிகளா, எழுதி முடித்த விடைத்தாளை இன்விஜிலேட்டர் கிட்ட கொடுக்காம அப்படியே வந்துருவீங்களே, அது மாதிரி இல்லாமல், இதை எழுதி முடித்தபின், மதுமிதா அக்காகிட்ட பத்திரமாக் கொண்டு போய்ச் சேர்த்துட்டு, அப்புறம் நம்ம சங்கப் பலகைலயும் ஒருவார்த்தை போட்டுடுங்க.. அப்போத்தான் நம்ம சங்க மக்கள் வந்து பார்த்து ஆதரவு கொடுக்க வசதியா இருக்கும்!!!

இத்துடன் சோடா குடிக்கும் வழக்கம் இல்லாததால், நல்லா ஐஸ்போட்டு ஒரு பாதாம் பால் (சிக்கனமா ஒரு 10 டாலரில் போதும், குங்குமப்பூ, பனங்கற்கண்டு எல்லாம் போட்டிருந்தாலும் பரவாயில்லை) கொண்டுவருமாறு சொல்லிக் கொண்டு, என் சிற்றுரையை முடித்துக் கொள்கிறேன்..

பின் குறிப்பு (அதாங்க, மைக்கைப் பிடுங்கினதுக்கு அப்புறமும் பேசினது): வ.வா.சங்கத்தின் உறுப்பினர்கள் மட்டும் தான் என்பதில்லை,
க.பி.க. கழகத்தினர்,
வா.வ.ச வினர்(அட, கவிதா, நீங்களும் நானும் மட்டும் இருக்கோமே, அந்த சங்கம் தான்) ,
ப.ம.க வினர் மற்றும்
எங்கள் சங்கத்துக்கு அடிக்கடி எட்டிப் பார்த்து
ரசித்து விட்டு மட்டும் போகும் (அட ஒரு நெனப்புத்தாங்க!! ) மற்றவர்களும்
மதுமிதாவுக்குப் பதில் சொல்லலாம்…

(கைப்பு ஸ்டைலில் படிக்கவும்) : அவங்க ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவங்க.. யார் எத்தனை பதில் சொன்னாலும் தாங்குவாங்க!!!

தனிக் குறிப்பு: பெருசு: இது உமக்குத் தான்.. அப்படியே கனாக் கண்டுகிட்டு வெண்பாடிகிட்டு இருக்காதீர்.. சீக்கிரமா, ஜூன் 10க்குள்ள முடிச்சி கொடுங்க!!

.... இங்கே பதியப்பட்டது பொன்ஸ் | Leave a Comment »

கைப்பொண்ணுவின் கடைசி கடிதம்

பதிந்தவர் vavaasangam மேல் மே 26, 2006

இன்று காலை வரு.வா.சங்கம் தலைமை நிலையத்துக்கு வந்த கடிதங்களைப் பிரித்துப் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு கடிதம் மற்ற கடிதங்களில் இருந்து மிகவும் வித்தியாசமாக இருந்தது.

உடைந்த இதயம் வடிவில் இருந்த அந்தக் கடிதத்தை பாண்டியும் நானும் பார்த்து திடுக்கிட்டோம் காரணம்… அந்தக் கடித்தின் அனுப்புனர் பெயர்….எங்கள் ஒன்னே முக்கால் வயதில் இருந்து எங்களின் ஓரேத் தானை தலைவனாக நாங்கள் முழு மனதோடு ஏற்று கொண்ட எங்கள் ‘தல’ பாசமிகு அண்ணன் கைப்புவின் உயிருக்குச் சொந்தக் காரியாகிய அன்பு அன்றில் பேர்ட் மற்றும எங்கள் மரியாதைக்கும் பாசத்திற்குமுரிய அண்ணியாம்… கைப்பொண்ணு…
அந்தப் பெயர் கோழிக் கிறுக்கலாய் கவ்ரின் பின்புறம் இருந்தது .

எங்கள் இருவர் கண்களிலும் கண்ணீர் கட்டிக் கொண்டது.. அவ்வ்வ்வ்வ்வ் என்ற சங்கத்தின் நாத ஒலிக் கூட எழுப்பமுடியாமல் திக்கி திணறி விக்கி உதறி நின்றோம் நாங்கள்….

கடித்ததின் முதல் வரியிலேயே ஒரு பேரல் காதல் வழிந்தது….
அந்த முதல் வரி என்னன்னா…

இந்த பாரசீக பேரட் மனசுல்ல வந்து கொய்யாச் செடி நட்டு வச்ச என் மம்முதக் கொய்யாலே.. என் காதல் அய்யாலே….

அதுக்கு மேலப் படிக்க முடியாம நாங்க அப்படியே அழுக ஆரம்பிச்சிட்டோம்.

கடிதத்தின் ரிவர்ஸ்ல்ல விலாசம் தேடுனோம்… அதுல்ல எதோ அமெரிக்கா அட்ரஸ் இருந்துச்சு….(புத்ரகம் வரு.வா.ச கிளைக்கு கடித்தின் நகல் அனுப்பப்ப்ட்டுள்ளது.. விவரங்கள் தனிப் பதிவில்)

அதுக்கு அடுத்த வரி எங்களைப் பதற வைத்தது…

அது…மேக்னட் கலர்ல்ல வந்து பிஷ் நெட் போட்டு என்னைக் கவர் பண்ண களவாணி மாமனுக்கு இந்த க்யூட் கைப்பொண்ணு எழுதும் கடைசி மடல்…..

பாண்டி கூட்டிட்டு வந்தப் பிரெஞ்சுப் பொண்ணு அது பிரெஞ்சு இல்லன்னு சொல்லிருச்சு… கடித்திலே இதுக்குப் பொறவு வர்ற செயதி எல்லாம் தலை கீழா தமிழ்ல்ல தான் எழுதி இருக்கு இந்தா மொத்தம் கடிதமும் அதன் விவரமும்…

என் ஆச சிரிப்பு எம்.சீ.ஆரே.. உம்ம மேல கொண்ட லவ்க்கு எப்படி நான் விளக்கம் கொடுப்பேன்…?

மொதமொதல்ல வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்ட் பக்கம் என்னைப் பாத்ததும் என்னைய வச்ச கண்ணு வாங்காம சைட் அடிச்சுகிட்டே நின்னிங்க…அப்போ உங்களைப் பாத்துப்புட்ட உங்க அய்யாகிட்ட, அம்புட்டு பயலும் வேடிக்கைப் பாக்க டவுசர் கிழிய அடிய வாங்கிட்டும் கொஞசம் கூட அசராம என்னியப் பாத்து ஒரு சிரிப்பு சிரிச்சியளே அதச் சொல்லவா?

அதுக்கு அப்புறம் எங்கப்பார் இளவ்ட்டக் கல்ல தூக்குனாத் தான் உனக்கு எம்பொண்ணை உனக்குக் கொடுப்பேன்ன்னு சொன்னத்துக்காக இளவ்ட்டக் கல்லைத் தூக்கப் போய் மூச்சு திணறி முக்கி மூணு மாசம் ஆண்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியிலே கிடந்தியளே அந்த வீரத்தைச் சொல்லவா?

ஆத்தூர்ல்ல அச்சு முறுக்கும்… கம்பத்துல்ல கடலை உருண்டையும்… பெரிய குளத்துல்ல பெப்பர் மின்ட்டும் வாங்கி கொடுத்த என் வில்லேஜ் வீராண்டியில்ல நீங்க….

தேனி டவுண்ல்ல வசந்து தியேட்டர்ல்ல இன்ட்ர்வெல் விடும் போது தேன் முட்டாய் வாங்கப் போன நீங்க… அது இல்லாம திரும்பி வர… நான் கண் கலங்க…. அங்கிட்டு இருந்த தேன் கூட்டுல்லயே கைய விட்டு தேனீகிட்ட கொட்டு வாங்கியும் கம்பீரமாக் கதறி பெரும் கலவரமே செஞ்ச காதல் அரசா… என் கனவு புருசா…

என் அழகு ராசா மேல எம்புட்டு பேருக்கு கண்ணு….உங்க அழகு எனக்கு மட்டும் தான்ன்னு உங்க ஆத்தாக் கிடாரி மேல சத்தியம் ப்ண்ணியளே…

ம்ம்ம் இம்புட்டு வீரம்.. காதல்… பாசம்.. இது எல்லாம் எந்தப் புள்ளக்குக் கிடைக்கும்

டார்லிங்!!!! ராசா அழகு ராசா ஐ லவ்ஸ் யூ….

ஆனா அந்த சரளாக்கா அன்னிக்கு உங்களைப் பார்த்து ஆயிரம் இருந்தாலும் ஆம்பிளைன்னா மீசை வேணும்டான்னு சொன்னதேக் கேட்டு என் சின்ன இதயம் சிதறிப் போச்சு.

கரபுர கரடி லேகியமெல்லாம் தடவிப் பார்த்தும்.. ஏன் மடக் மடக்குன்னு குடிச்சுப் பார்த்தும் எம் பொம்முக்குட்டி சிங்கத்துக்கு மீசையும் தாடியும் வளரவேயில்லையே.

இந்த ஏக்கத்துல்லயே என் வெயிட்டும் குறைஞ்சது.. என் கலரும் போயிகிட்டு இருந்துச்சு…

ஆச ராசா மீசையிலே இந்த கருப்பு ரோசா முகம் புதைச்சு லவ்ஸ் பண்ணனும்ங்கற கனவெல்லாம் கலைஞ்சுப் போயிட்டே இருந்தது…

என் மம்முத ராசாவும் என் மனக் கவலையைப் போக்க ஐடெக்ஸ் பென்சில் வச்சு வித்விதமா மீசை வரைஞ்சிட்டு வந்து செல்லம் அழுவாதாடா கண்ணுன்னு ஆறுதல் சொல்லுவீங்க.. அது என் மனசை எவ்வளவு வலிக்க வச்சதுத் தெரியுமா?

பென்சில் மீசை முகம் கழுவும் போது அழிஞ்சுப் போயிரும்ன்னு எனக்காக மூணு மாசம் முகம் கழுவாம என் ராசா கருத்து வேறப் போயிட்டீங்க… என் மவராசா காதலைப் போல வருமா?

அப்புறம் முகம் கழுவல்லன்னா நாறிப் போயிரும்ன்னு எடுத்துச் சொல்லி நீங்களும் முகம் கழுவிட்டு என் ஆசைக்காக ஒட்டு மீசை வச்சுட்டு நிப்பீங்க…
அந்த ஒட்டு மீசையை அந்த எடுப்பட்ட பயல்வ பார்த்தீபனும் கட்டத்துரையும் ஊதுவத்தி வச்சு நீங்க உறங்கும் போது சுட்டு சுட்டு விளையாடுவாய்ங்க… அதைக் கூட எம்மேல இருக்க அளவுக்கதிமான பியார் காரணமாப் பொறுத்துகிட்டு புன்னகைப்பீங்களே…

அய்யா எருமைக்கெல்லாம் பெருமை, கருமை பொறுமைன்னு புத்தி சொன்னவரே…

என்னாலேத் தாங்க முடியல்ல நீங்க மீசை இல்லாம தனியாப் போய் கண்ட சரக்க அடிச்சிட்டு கண்டமேனிக்கு புலமபறதை..

அதுன்னாலே நான் ஒரு முடிவு பண்ணுனேன்… உங்களுக்கு மீசை வளர எம்புட்டு செலவு ஆனாலும் பரவாயில்லன்னு…

ஆராய்ச்சிக்கு அஞ்சு கண்டம் சுத்தி வந்தேன்… அன்டார்டிக்காவுக்கு கூடப் போயிட்டு வந்தேன்…

என் முயற்சிக்கு நல்ல பலன் வந்துச்சு… மீசை முளைக்கிற மூலிகையை புதரகத்துல்ல ஒரு புதருக்குப் பின்னாலேக் கண்டுபிடிச்சேன்…

ஆனா..எப்படி சொல்லுவேன்…

இந்தக் கட்டத்துரையும் அவன் குரூப்பும் நான் கண்டுபிடிச்ச மூலிகையைப் புடுங்கி என் முகத்துல்ல மூணு வாரம் தேய்ச்சு விட்டுட்டாங்க…

அதுனால்ல…

அய்யோ இனி நான் உங்க முகத்துல்ல எப்படி விழிப்பேன்…

என் அழகு ராசா.. வீரமாண்டி …அழகனுக்கெல்லாம் அழ்கன்ன்னு அசலூர் சந்தையில்ல பேர் எடுத்த மம்முத சிங்கத்து முகத்துல்ல நான் எப்படி முழிப்பேன்… அய்யோ

என்னிய சிரிக்கச் சொல்லி போட்டாவெல்லாம் புடிச்சாயங்க…

நான் என் பாட்டி ஊர் கிழக்காப்பிரிக்காவுக்குப் போறேன்… இனிமே நான் உன்னியப் பாக்க திரும்பி வரவேமாட்டேன்…

எனக்காக ஒண்ணு செய்வீயா மாமா.. அந்தக் கட்டத்துரை குரூப் கிட்டே தான் உனக்காக ஆசயாத் தயாரிச்ச மூலிகைத் தைலம் இருக்கு அதை எப்படியாவது நீ அவங்க கிட்ட இருந்து கைப்பற்றி மூணுவாரம் தேச்சு மீசை வளத்துக்கோ மாமா.. அப்போ நீ என் மேல வச்சுருக்க காதல் உண்மையானதுன்னு இந்த ஊருக்கே தெரியும்…

லவ் அன்ட் லவ் ஒன்லி
உன் பாச ஜிலேபி கைப்பொண்ணு:(

லெட்டர் கூட வந்த புகைப்படம் உங்கள் பார்வைக்கு….

அந்த புகைப்படத்துக்குப் பின்னாடி இருந்த விஷயம்

மாமா இன்னொரு விஷ்யம் அந்தக் கும்பல் கூட ஒரு பொண்ணும் இருந்துச்சு… அந்தப் பொண்ணு கைப்பொண்ணைக் கொல்லணும்.. அப்படின்னு சவுண்ட் வேற கொடுத்துச்சு.. நான் பயந்துப் போயிட்டேன்.. அந்தக் குரல் நம்ம சங்கத்துக் கூட்டத்துல்ல கேட்டுருக்கேன்…ஆனா யாருன்னு சொல்ல பயமா இருக்கு….பாத்து மாமா
மேலும் விவரங்களுக்கு காத்திருங்கள்…

.... இங்கே பதியப்பட்டது Uncategorized | Leave a Comment »

வெள்ளை மாளிகையில் தலக் கைப்புள்ள..

பதிந்தவர் vavaasangam மேல் மே 24, 2006

செர்மனி செல்லும் வழியில் புதரகத்தில் வெள்ளை மாளிகையில் புதரக வரு.வா.ச அபிமானி ஜார்ஜ் புதர் கொடுத்த விருந்தில் கலந்துக் கொண்ட தல நியூயார்க் டைம்ஸ்க்காக அளித்த பிரத்தேயக போஸ்…

இந்தப் படம் அடுத்த நியூயார்க் டைம்ஸ் இதழ் அட்டையில் வரவிருக்கிறது… ஊர் பார்க்கும் முன் சங்கத்து மக்களுக்காக தலயின் சூப்பர் ஸ்டில் இதோ….

புதரகத்தின் புதிய பாட்ஷா என்ற தலைப்பு இந்தப் படத்திற்கு கொடுக்கப் படலாம் என்றும் தெரிகிறது…

.... இங்கே பதியப்பட்டது தேவ் | Leave a Comment »

கைப்புள்ளயின் புதுக் கலாட்டா

பதிந்தவர் vavaasangam மேல் மே 22, 2006

எப்பவும் எதிலும் பரபரப்பாக இருக்க வேண்டும் என விரும்பும் தலக் கைப்பு தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளார்..

பார்க்க படங்கள்…

கே: கைப்பு சார் நீங்க தீடிரென்னு ஜெர்மனி கிளம்புறதாச் சொல்லுறாயங்க உண்மையா?
ப: தப்பாக் கேக்குற… கிளம்பல்ல.. புல்லட் மாதிரி பாஞ்சிகிட்டு இருக்கேன்.. இனிமே நீ அடுத்த கேள்வி கேக்க ஜெர்மனிக்குத் தான் வரணும் ஆமா

கே: அரசியல்ல நீங்க ஆப்பு வாங்குனதுன்னாலேத் தான் இப்படி ஊர் விட்டு ஊர போறதாப் பேசிக்கிறாயங்க உண்மையா?
ப:பாண்டி.. இங்கேப் பார்றா .. நல்லாக் கேக்குறாயங்கய்யா கேள்வியை…. இப்படி கேட்டா நாங்க பயப்பட மாட்டோம்..( மெதுவானக் குரலில்) ஆமா இந்த உண்மையை உன் கிட்ட யாரு சொன்னா?

நிருபர்: நான் சும்மாப் போட்டு வாங்க்னேன்….
கைப்பு: மறுபடியும் போட்டு வாங்குறீயா…..கைப்புள்ள இனி நீ இருக்க கூடாது..கிளம்பிருடா.. கிளம்பிரு.. இல்லன்னா உன் மானத்தை மானிட்டராக்கி ராவா அடிச்சுபுட்டு உன் தன்மானத்தை சைட் டிஷ்ஷா தொட்டு அசிங்கம் பண்ணிருவாய்ங்கடா…
( கைப்பு காணாமல் போகிறார்)

ஜெர்மனி செல்லும் வழியில் புதரக வரு.வா.ச அபிமானியும் புதரக வாஷிங்டன் வெள்ளை மாளிகை தலக் கைப்பிள்ளை ர்சிகர் மன்றத் தலைவருமான ஜார்ஜ் புதரைச் சில நிமிடங்கள் கைப்பு மீட் செய்துள்ளார்…

அப்போது கைப்பு செர்மனிக்கு வருமாறு ஜார்ஜ் புதருக்குப் பாசமிகு அழைப்பு விடுத்தார். செர்மனிக்கு வரும் போது புதர் அணிவதற்கு சிறப்பு சீருடையும் வழ்ங்கினார்.

கைப்பும் புதரும் கலந்து மகிழ்ந்த அந்த விழாவில் கைப்பு கொடுத்த சிறப்பு ஆடையில் புதரின் படம் இதோ

படங்கள் உதவி: விவசாயி இளா

.... இங்கே பதியப்பட்டது தேவ் | Leave a Comment »

வாழ்த்து + போட்டி

பதிந்தவர் vavaasangam மேல் மே 22, 2006

இன்று _ _ ஆம் பிறந்த நாள் காணும் எங்கள் சங்கத்தின் பாதுகாப்பு அரண், தங்கத்தலைவி திருமதி.கீதா சாம்பசிவம் அவர்கள், அனைத்து வளங்களையும் பெற்று பல்லாண்டு காலம் சிறப்புடன் வாழ சங்கத்தின் சார்பாக மனதாற வாழ்த்துகிறோம்.

சரி இப்ப மேட்டரு… “_ _”க்கு மேலே சரியான நம்பரைப் பொருத்தும் முதல் பத்து அதிர்ஷ்டசாலிகளுக்கு, சங்கத்து சட்டியில் இப்போது கிண்டப் பட்டுக் கொண்டிருக்கும் டைமண்டு கல்கண்டு 100 கிராம் டிஜிட்டலாக வழங்கப்படும். குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப் படும் இரண்டு அதிர்ஷ்டசாலிகளுக்கு பம்பர் பரிசாக, சங்கத்து சார்பில் நாளை எங்கள் தானைத் தலைவியுடன் டீ நாஸ்தா பண்ணும் அரிய வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப் படுகிறது.

.... இங்கே பதியப்பட்டது கைப்புள்ள | Leave a Comment »