வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்

100% சிரிக்க

தல கிடைச்சிட்டார்

Posted by vavaasangam மேல் April 26, 2007

தல கிடைச்சிட்டாரு

.... இங்கே பதியப்பட்டது காமெடி, சந்திரமுகி, சிவாஜி, ரஜினி, வடிவேலு, chandhramuki, chandramukhi, chandramuki, Cinema, Comedy, kalaaithal, kalaaythal, kalaithal, lollu, Rajini, Rajini kanth, Rajni, Rajni kanth, sangam, shivaji, Siripu, super Star, vadivel, varuthapadatha vaalibar sangam, varuthapathadha | Leave a Comment »

இது எப்படி இருக்கு???

Posted by vavaasangam மேல் April 26, 2007

இது எப்படி இருக்கு???

.... இங்கே பதியப்பட்டது காமெடி, சிவாஜி, நகைச்சுவை, ரஜினி, Rajini, Rajini kanth, Rajni, Rajni kanth, shivaji, sivaji, super Star | Leave a Comment »

காணாமல் போன Greg கைப்புள்ள – வெளிவராத உண்மைகள்!

Posted by vavaasangam மேல் April 25, 2007

சங்கத்திலே கொண்டாட்டம் ஆரம்பிச்சு ரொம்ப நாளா ஆகிப்போச்சு, ஆனா அகில உலக வருத்தப்படாத வாலிபர் சங்கத்தோட இணையற்ற ஒப்பிலா தலைவர் கிரேட் கைப்புள்ளயே மட்டுந்தான் காணோம். என்னாச்சு ஏதாச்சு’ன்னு அவருக்காக நைட்பகலா உழைச்சு ஓடாப் போனே சங்கத்து சிங்கங்கள் எல்லாமே கன்னத்திலே கைவைச்சிட்டு கஷ்டத்திலே இருக்கோமின்னு மட்டுமின்னு நினைச்சிராதீங்க, நாங்கெல்லாம் பயங்கரமான சந்தோஷத்திலே மிதந்துட்டு இருக்கோம்.

அதுக்கான காரணம் என்னான்னு பார்த்தா தல கிரேட் கைப்புள்ள’யா இருந்து கிரேக் கைப்புள்ள’யா ஆகி சங்கத்திலே ஆப்பு வாங்கினது பத்தாமே இந்திய கிரிக்கெட் டீம்’க்கே கோச்சா போயி அங்க ஒன்ன முடியாமே இப்போ டோட்டல் டோமேஜ் புள்ளயா ஆகிட்டாரு’லே. அந்த சந்தோஷத்துக்காக ஸ்விட் எடுத்து கொண்டாடி கொண்டாடி களைப்பாகி போயிருக்கோம். இந்தமாதிரி நேரத்திலே கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கட்டுமின்னு பங்களாதேஷ் vs பெர்முடா விளையாடின சரித்திரபுகழ் மேட்ச பார்த்திட்டு இருந்தோம்.

சரி மேலே இருக்கிறதெல்லாம் கதை சொல்லுறமாதிரி இருக்கு. இனிமே லைவ் கமெண்டரி…

தேவ்:-
“ஏலேய் மக்கா நல்லா என்ஞாய் பண்ணுங்கய்யா! இதிலே நாமே காயப்போட்ட பசங்களும் நம்மளை காயப்போட்ட பசங்களும் ஒன்னுக்கூடி மேட்ச் விளையாடிட்டு இருக்காங்க!”

சிபி:- “ஹி ஹி…. இன்னிக்கு யாரு ஜெயிச்சாலும் தோத்தாலும் நம்ம தல’க்கு பெரிய ஆப்பு வைக்கனும்”

ஜொள்ளு:- “டூட்ஸ், அந்த கேமிரா மேன்ஸ் எல்லாரையும் மாத்தனும்! ஒரு பயலுகளும் எனக்கு ஏத்த மேட்சை காட்டமாட்டேன்கிறாய்ங்கே”

வெட்டி:- “ஆனாலும் பாண்டி நீயி அநியாத்துக்கு கடமை வீரனா இருக்கீயே? நாங்கெல்லாம் மேட்ச் பார்த்திட்டு இருந்தா நீ அங்க திரியிற பட்சி தெரியலைன்னு அங்கலாய்க்கிறே?”

ஜொள்ளு:- “சுமா சுமா என்னையவே சொல்லாதீங்கய்யா? நீங்களெல்லாம் வாய் விட்டு சொல்லலை! நான் வாய் விட்டு ஜொள்ளிறேன்! அம்புட்டுதான் வித்தியாசம்!”

புலி:-” கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்”

இளா:- “என்ன புலி பசிக்கிதா? இந்த பாப்கார்ன் சாப்பிடு சரியா போயிரும்!”

புலி:- “யோவ் விவ், அந்த டிவி பின்னாடி இருக்கிற ஜன்னலிலே பாருங்கய்யா! ஏதோ கை தெரியுது? அய்யோ இங்க ஏதோ ஒரு ஜகன்மோகினி உள்ளே வந்துருக்கு சாமியோவ்!”

சிபி:- “நான் இங்கேதானே ஒட்கார்ந்து இருக்கேன்! யாரு எனக்கே தெரியாமே ஜகன்மோகினியா??”

சட்டென்னு ஒரு உருவம் உள்ளே நுழைக்கிறது, ஆளு பார்க்க பூனை பழமொழியிலே வர்ற விலங்கினத்தோட சுத்தமான நிறம், அந்த நிறத்துக்கு சம்பந்தமே இல்லாமே முட்டியை தொடற அளவுக்கு கிளிப்பச்சை கலருலே ஜிலுக்கு பர்முடா, ஜிவு ஜிவுன்னு கண்ணை பறிக்கிற செவப்பு கலருலே ஒரு தேநீர் சட்டையும் போட்டுக்கிட்டு “தல” சங்கத்து குடிசைக்குள்ளே என்டர்..

தேவ்:- ” தல எங்க போயிருந்தே? நீ கொஞ்சநாளு இல்லைன்னோதும் நிறைய ஸ்கூப்நீயூஸ் பரவிருச்சு! அதுவுமில்லாமே ஒனக்கு எங்கதான் இப்பிடியெல்லாம் அட்ராக்ட்வான கலருலே டிரெஸ்ல்லாம் கிடைக்கிது?”

தல:- “ஏலேய் போர்வாளு, ஒனக்கு ரொம்பதான் ஏத்தம்? ஸ்கூப்நீயூஸ் போட்டதே நீதானே? ஏண்டா ஒழுங்கா கிரிக்கெட் விளையாடுங்கன்னு கூட்டிட்டு போனா அதே விளையாடமே அங்க இருக்கிற பொண்ணுகளோட செல் நம்பர்ஸ் வாங்கி SMS அனுப்பி அனுப்பி அங்கயிருக்கிற செல்போன் கம்பெனிஸ் எல்லாமே இன்னவரைக்கு ஜாம்’தான்! இப்போ நான் கொலைவெறியிலே இருக்கேன்! டிரெஸ் எங்ககிடைக்கிது’ன்னு கேட்டு இன்னும் என்னோட கோவத்தை ஏத்தாதே?”

ஜொள்ளு:- “தல நோ டென்சன்! கூல் மேன்! வேணுமின்னா இந்த மேட்ச நிப்பாட்டிட்டு இலியானா நடிச்ச பாட்டை போட்டு விடவா? தெலுங்கு பாட்டுதான்! நமக்கு அர்த்தம் புரியலைன்னா வெட்டிக்காரு செப்புவாரு!”

தல:- “வேணாம் விடு பாண்டி! இப்போ நான் இருக்கிற கோவத்துக்கு அந்த தோத்து போன பசங்களை டெவில் ஷோவிலே கவுண்டர் கேட்கிறமாதிரி கேள்வி கேட்கணும், So கிரிக்கெட் விளையாட போறன்னு சொன்ன அந்த வீணாப்போனவங்களுக்கு போனை போடு! நான் பேசியே ஆகனும்”

ஜொள்ளு எல்லார் நம்பர்’க்கும் போன் பண்ணுறார், வழக்கபோலே எல்லாரும் போனை எடுத்துட்டு “We are busy now”ன்னு கட் பண்ண இவனுகளை இப்பிடிதான் சாய்க்கனுமின்னு விளம்பர ஏஜென்ஸியிலே இருந்து பேசுறோமின்னு சொல்லி டெண்டுல்கர்,டிராவிட்,யுவராஜ் முணு பேத்தையும் ஒரெ லைனில் பிடிச்சி கான்பரன்ஸிலே போடுறார்.

தல:- “அடேய் வீணா போனாவய்களா! காசுன்னுதும் ஓடி வந்திட்டிங்களா? பொணம் எந்திருச்சு ஒட்கார்மின்னு சொன்னதுக்கப்புறம் நீங்களல்லாம் எம்மாத்திரம்!”

கிரிக்.கோஷ்டி:- “ஹலோ! நீங்க யாரு?”

தல:- “ஹிம் மும்பை தாதா! ஆட்டுக்காலு மண்டயனுகளா! நாந்தாண்டா கிரேக் கைப்புள்ள பேசுறேன்!”

டிராவிட்:- “ஹய்யா! ஒங்களை தான் டீமை விட்டு தூக்கிட்டாங்களே? இப்போதான் சந்தோஷமா இருக்கு!”

தல:- “ஏண்டா மண்டையா நீ பேசமாட்டே? நூறடி தூரத்திலே இருந்து லொங்கு லொங்குன்னு ஒருத்தன் ஓடிவந்து பந்து போட்டா அந்த இடத்திலே நிப்பாட்டுறவன் தானே நீயீ?”

டிரா:- “ஹலோ மிஸ்டர் கைப்பு! அது என்னோட திறமை! 100 மைல் வேகத்திலே வந்தாலும் ஒரே இடத்திலே நிப்பாட்டி வைக்கிறது திறமை..”

தல:- “மண்ணாங்கட்டி திறமை! நிப்பாட்டி வைக்கிற திறமையே அடிக்கிற அளவுக்கு வளர்ந்து இருந்தா நாமெல்லாம் போன வேர்ல்ட் கப்’லெ ஜெயிச்சு இருப்போமிடா? ஏண்டா நீ மட்டுமே பேசுறே? அந்த குள்ளகத்திரிக்காவும், சடைமண்டையனும் பேசமாட்டக்கிறாய்ங்கே?”

டெண்டுல்கர்:- “இப்போதான் புது ரூல் போட்டுருக்காங்களே? தலைவர் தவிர யாரும் பேசக்கூடாதுன்னு? அதுதான் நாங்கெல்லாம் பேசலை!”

தல:- “ஏலேய்! சடைமண்டையா? ஒனக்கு என்ன வந்துருச்சு??”

தோனி:-” நான் மவுனவிரதம்”

தல:- “ஒங்களுக்கெல்லாம் ஏத்தம்தாண்டா! அடேய் இம்புட்டு சம்பாரிச்சிங்களே? அதுக்கு ஏத்தமாதிரி விளையாடுனீகளா??”

டிரா:- “ஆமாம் ஒங்களுக்கு கூடந்தான் 1,7500 டாலர் சம்பளம்! அதுக்கு ஏத்தமாதிரி டிரெய்னிங் கொடுத்தீங்களா??”

தல:- “அடபாவிகளா! எனக்கு ஒன்னே முக்கா ரூவா’க்கு கோலிசோடா வாங்கி அதை பெருமையா எல்லார்கிட்டேயும் காட்டி குடி’ன்னு தீர்ந்து போன மினரல் வாட்டர் கேன்’லே தான் கொடுந்தானுக!”

டிரா:- “இப்போ இதுவரைக்கு ஒங்கிட்டே பேசுனதுக்கு அமெண்ட் எப்போ செட்டில் ஆகும்? டாலரா வருமா ? இல்லை ரூபாய்’வா?”

தல:-” என்னது ரெண்டு வார்த்தை பேசுனுதுக்கே காசா? இவிய்ங்களே எதை கொண்டு அடிக்கலாம்? அடேய் புலி இவியங்களே ஒரு உருமி உருமி பயமுருந்துடா?? பாவிபசங்க தொலைஞ்சு போகட்டும்!”

புலி:- “ஓகே தல…. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்”

தல:- “ஏண்டா அயோக்கிய அப்ரெண்டிஸ்களா? சங்கத்தோட முதலாமண்டு போட்டின்னு சொல்லி ஆயிரம் ஓவா தாரேன்னு சொல்லிருக்கீங்களே? மறுபடியும் கஜானாலே கைவைச்சிட்டிங்களா??”

இளா:- “ஆமாம் அந்த கஜானா’விலே பொன்னும்,வைரமும் குவிஞ்சு கிடைக்கிறமாதிரியே பேசு? அதிலே ஒன்னோட ஜிலுக்கு ஜிப்பாவும்,நீ அழுதா ஆட்டுறதுக்கு கிலுகிலுப்பையுதான் இருக்கு! அதே கொண்டு போயி சேட்’கிட்டே அடகு வைக்க கொண்டு போன அவன் அதை பார்த்திட்டு வைச்சிறக்கிறதே நாமே தான் காசு கொடுக்கனுமின்னு எகாந்தாளம் பேசுறான்!”

தல:- “நீரெல்லாம் எலெக்சனிலெ நிக்கலாமய்யா! முச்சு விடாமே பேசிட்டு இருக்கே? யாருடா புதுசா சங்கத்திலே கமலா காமேஷ்’ன்னு யாரோ சேர்ந்து இருக்காலமே! யாரு அது?”

ஜொள்ளு:- “தல அது கமலா காமேஷ் இல்லே? அவங்க ஒரு ஆண்ட்டி, அவங்களை சங்கத்திலே சேர்ந்து என்னா ஆகப்போகுது? அவரு பேரு கமலேஷ் கண்ணன்”

தல:- ” அது சரி? நீ நமிதா,இலியானா’ல்லாம் சேர்ந்திருந்தா குஷியா ஆகிருப்பே?”

ஜொள்ளு:- “ஏந்தான் தல என்னைமாதிரியே நீயும் குடையை தலையிலே கவுத்தி போட்டு இருக்கே?”

தல:- “ஹிம் அப்பிடி கேளு கேள்வியை? தோத்திடோம்மின்னு எல்லாபயலுகளும் என்னை கொட்டி கொட்டியே பூசணிக்கா சைஸ்க்கு தலை வீங்கி போயி கிடக்கு! அதை வெளியே தெரியமே இருக்கிறதுக்காக தான் அதை மூடி மறைச்சி வைச்சிருக்கேன்”

இராம்:- “தல! எல்லாரும் பருத்திவீரன் படம் பார்த்திட்டு ஒன்னை பிணந்திண்ணி’ன்னு நினைச்சிட்டாங்களா??”

தல:- “ஏலேய் ராயலு நக்கலா? என்னாட ஆச்சு 105 போட்டி பதிவுகளும்? எவ்வளோ பேரை சார்ட் லிஸ்ட் பண்ணிருக்கீங்க? அதை சொல்லுங்கடா அயோக்கிய அப்ரெண்டிஸ்களா??

போர்வாள்:-” ஓகே தல! மக்களே நாலு நாளா கண்முழிச்சி 105 பதிவுகளும் படிச்சி 14 பதிவுகளை இப்போதைக்கு அடுத்த சுற்றுக்கு தேர்ந்தெடுந்து இருக்கோம்.”

  1. செல்வன்
  2. அம்பி
  3. செந்தழல் ரவி
  4. சவுண்ட்
  5. சந்தோஷ்
  6. அருண்
  7. jayashree
  8. அபி அப்பா
  9. மை ஃபிரண்ட்
  10. சைலஜா
  11. டுபுக்கு
  12. CVR
  13. கோல்மால் கோபால்
  14. கண்மணி

இறுதி முடிவுகள் சங்கத்தின் தொடக்க நாளான நாளை அறிவிக்கப்படும்.

.... இங்கே பதியப்பட்டது இராம் | 21 மறுமொழிகள் »

கவுண்டர்’ஸ் டெவில் ஷோ – விஜய்

Posted by vavaasangam மேல் April 24, 2007

முன் குறிப்பு: விஜய் ரசிகர்கள் இதை படித்து டென்ஷனானால் கவுண்டரை பிடிக்கவும்… இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே!!!

எல்லா விசேஷத்துக்கும் டீ.வி பேட்டிக்கு முதல் ஆளா வந்து நிக்கறது நம்ம இளைய தளபதி தான். அவரையே இன்னைக்கு நம்ம நிகழ்ச்சிக்கும் புத்தாண்டு சிறப்பு விருந்தினரா கூப்பிட்டுருக்கோம். அவரும் வழக்கம் போல வர ஒத்துக்கிட்டாரு. சரி இனி நிகழ்ச்சிக்கு போவோம்.

க: வாப்பா விஜய். ஆரம்பத்துல நீ நடிச்ச கேவலமான படத்தை பார்த்துட்டு நீ இவ்வளவு பெரிய ஆளா வருவனு நான் நினைக்கவேயில்லப்பா…

வி: அண்ணா. என்னங்கணா இப்படி சொல்லிட்டீங்க? நான் நடிச்ச எல்லா படமுமே சூப்பர் ஹிட் தானுங்கணா.

க: ஏனுங்க தம்பி இந்த நாளைய தீர்ப்பு, செல்வா, தேவா, விஷ்ணு, சந்திரலேகா, மாண்புமிகு மாணவன், வசந்த வாசல், ராஜாவின் பார்வையிலே இந்த படத்தையெல்லாம் நீங்க தியேட்டர்ல போய் பார்த்துருக்கீங்களா தம்பி?

வி: அண்ணா. நானும் என் ஃபிரெண்ட்ஸும் இந்த படத்தை எல்லாம் தியேட்டர்ல போய் பாத்தோங்கணா.

க: தெரியும். எவனும் வர மாட்டாங்கர தைரியத்துல போய் பார்த்துருப்பீங்க. உங்க கெட்ட நேரம் எவனாவது தப்பி தவறி தியேட்டர் பக்கம் ஒதுங்கியிருந்தானா உங்களுக்கெல்லாம் அப்படியே பொதுமாத்துதான்டீ…

வி: என்னங்கணா இப்படி சொல்லிட்டீங்க. ராஜாவின் பார்வையிலே நானும் அஜித்தும் சேர்ந்து நடிச்சத பார்த்து எங்க ரெண்டு பேர் ரசிகர்களும் தொடர்ந்து பாராட்டிக்கிட்டு இருக்காங்க.

க: ஓ! அந்த படத்துல அந்த கொடுமையெல்லாம் வேற இருக்கா? நல்ல வேளை நான் பார்க்கல.அது சரி அந்த ரசிகன் படத்துல ஹீரோயினோட அம்மாவுக்கு சோப்பு போடற சீன் யாரோட சிந்தனைல வந்துச்சுப்பா?

வி: அது எங்க அப்பாவோட சிந்தனைதானுங்கணா. அந்த படம் ஹிட்டானது அதுவும் ஒரு முக்கிய காரணம்.

க: டேய்! கேவலமா இப்படி ஒரு சீன் வெச்சிட்டு இதுல உங்களுக்கு பெருமை வேற. உன் வாழ்க்கையிலே நீ பண்ண ஒரு நல்ல விஷயம் என்ன தெரியுமா?

வி: என்னங்கணா?

க: உங்க அப்பா டைரக்ஷன்ல நடிக்கறத நிறுத்தனதுதான்…

வி: இதையே தானுங்கணா எங்க அம்மாவும் சொன்னாங்க.

க: உங்க அம்மா பேச்ச கேளு. அப்பறம் கேப்டன் கூட ஒரு படம் நடிச்சையே அது என்ன படம்பா?

வி: அப்படிங்களா? நியாபகம் இல்லையே! (விஜய் தீவிரமாக சிந்திக்கிறார்)

க: அதாம்பா அந்த யுவராணியோட கபடி ஆடுனியே!

வி: ஓ! நம்ம செந்தூரப்பாண்டி

க: அடப்பாவி. கேப்டனோட நடிச்ச படம்னா நியாபகம் இல்லை யுவராணியோட நடிச்ச படம்னா அடுத்த நிமிஷமே அடிக்கறியே…

வி: அதெல்லாம் மறக்கமுடியுமாங்கணா… அதெல்லாம் ஒரு பொற்காலம்னா. இன்னும் கண்ணுலயே இருக்கு. அப்பறம் இந்த பூவே உனக்காக வந்ததுக்கப்பறம் வாழ்க்கையே மாறிடுச்சிங்கணா.

க: நீ ஒழுங்கா நடிச்ச முதல் படமே அதுதான்.

வி: ஆமாங்கணா. அதுக்கப்பறம் வந்த எல்லா படமும் பயங்கர ஹிட்…

க: டேய்! சும்மா அடிச்சு விடாதடா. எல்லாமே லிஸ்ட்ல இருக்கு. இங்க அவனவனுக்கு தூக்கமே வர மாட்டீங்குது உனக்கு மட்டும் எப்படிடா கனவுல கண்ட இடத்துல எல்லாம் மச்சம் இருக்குற மாதிரி பொண்ணு வருது?

வி: ஏனுங்கணா, உங்க வயசுக்கு எப்படினா அதெல்லாம் வரும்? எங்கள மாதிரி யூத்துக்கு தானுங்க அதெல்லாம் வரும்… (சொல்லிவிட்டு நக்கலாக சிரிக்கிறார்)

இதை கேட்டு கவுண்டர் ஜெர்க்காகிறார்… (மனதிற்குள் நினைத்து கொள்கிறார் : உனக்கு இருக்குடி)

க: அது சரி… இந்த ஷாஜஹானு ஒரு படம் நடிச்சியே. அதுல எதுக்குடா வேற படத்து ஃப்ளாஷ் பேக்கை எடுத்து வைச்ச?

வி: இல்லைங்களே! அது அந்த படத்து ஃப்ளேஷ் பேக் தானே?
ஆனா படத்த பார்த்த எல்லாருக்குமே இப்படி ஒரு டவுட் இருந்துச்சாம். எனக்கு என்னனே இன்னைக்கு வரைக்கும் புரியல

க: அது சரி… அது என்னடா புறாவுக்கு பெல்லடிக்கிறது?

வி: அதுங்களாணா? நம்ம படையப்பால வர பாம்பு புத்துல கை விடற டயலாக்கு இக்வளா இருக்கனும்னு யோசிச்சி வெச்சதுங்கணா.

க: ஏன்டா அடுத்தவனை பார்த்து காப்பி அடிக்கறீங்க? உங்களுக்குனு ஒரு ஸ்டைல வெச்சிக்கோங்கடா. அப்ப தான் வாழ்க்கையில பெரிய ஆளாக முடியும். அப்பறம் அந்த பகவதினு ஒரு படம் நடிச்சியே. அத கதை கேட்டு தான் நடிச்சியா?

வி: அது பாட்ஷா மாதிரி இருக்கும்னு எங்க அப்பா சொன்னாரு. அதனாலதான் கதை கேக்காமலே நடிச்சேங்கணா.

க: இனிமே நான் சொல்றேன். உங்க அப்பா பேச்சை கேக்காத. அப்பறம் உன்னை யாராலும் காப்பாத்த முடியாது…

(தொடரும்…)

(இன்னும் பல படங்கள் இருப்பதால் ஒரே பகுதியில் முடிக்க இயலவில்லை… அடுத்து பல சூப்பர் ஹிட் படங்கள் காத்திருக்கின்றன)

.... இங்கே பதியப்பட்டது வெட்டிப்பயல் | 11 மறுமொழிகள் »

பட்டி மன்றம்!!!

Posted by vavaasangam மேல் April 24, 2007

பட்டி மன்றம்ன உடனே கேரளா பட்டினு நினைச்சுக்காதீங்க….அதாவது சரக்கு போட்டு அப்புறம் சாப்பிடாலாமா…இல்ல சாப்பிட்டு அப்புறம் சரக்கு போடலாமானு ஒரு பட்டி மன்றம்..நடுவர் வேற யார் நம்ம தல கைப்ஸ் தான்…யாரு யாரு எந்த அணினு எல்லாம் கேக்க கூடாது..யாருக்கு என்ன தோனுதோ சொல்வாங்க….சரி பட்டிமன்றத்துக்கு போலாமா..

தல:அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்….ரொம்ப நல்ல தலைப்பு இதுல என்ன நன்மை தீமைனு அலசி ஆராய நம்ம சிங்கங்கள கேட்டுக்கறேன்…

விவசாயி(ILA) : அதாவது அமெரிக்காகாரன் பாசுமதி அரிசிக்கு பேடண்ட் வாங்கி இருக்கான்…ஆனா நம்ம ஐ.ஆர்.20 போட்டமுனா விளைச்சல் நல்லா இருக்கும்…

தல: யோவ் எத பத்தி பேச சொன்னா எத பத்தி பேசிட்டு இருக்க….

போர்வாள்(தேவ்): அதுபாருங்க இந்த டாஸ்மாக் கடைலயும் டூப்ளிகேட் சரக்கு விக்கராங்கன்னு நம்ம ஸ்டார் ரிப்போர்டர் விசாரிக்க போயி இருக்காரு…

தல: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்…எல்லா பயலுகளும் இப்படி தான் இருக்காங்க….

தளபதி(சிபி): நான் என்ன சொல்ல வரேனா..பழனிக்கு போனீங்கன்னா சித்தனாதன் கடைல பஞ்சாமிர்தம் வாங்கிட்டு சாப்பிடுங்க…..

தல: வேனாம்…என்ன கொலகாரனா ஆக்கிடாதீங்க….

ராம்: இங்க பெங்களூரு பப்புல பிகருங்க என்னமா இருக்குராய்ங்க….நான் தினமும் பப்புக்கு போவேன்….

நான்: ஆமா ராயலு…இங்கயும் அதே கூத்து தான்….

தல: அடேய்…என் பொருமைக்கும் ஒரு எல்லை உண்டு…..

வெட்டி:ஹைதராபாத்துல இப்போ ரியல் எஸ்டேட் நல்லா இருக்குனு கேள்வி பட்டேன்….

தல: போதும் நிறுத்திக்குவொம்…இதுக்கு மேல எவனாவது ஒரு வார்த்தை பேசுனீங்க…அப்புறம் நான் மனுசனாவே இருக்க மாட்டேன்…என்ன மேட்டருனுனே எவனும் கவல படாம அவன் அவன் பிரச்சனைய பேசிட்டு இருக்காய்ங்க…..

புலி(நாகை சிவா): தல டென்சன் ஆகாதீங்க…நான் பேசரேன் கேளூங்க….அதாவது பிரியானி சாப்பிட்டு சரக்கு அடிச்சா என்ன..சரக்கு அடிச்சிட்டு பிரியானி சாப்பிட்டா என்ன..எல்லாம் நமக்கு தான….

தல: டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்…இது பட்டி மன்றம் எதுனா ஒன்னு சொல்லு….

ஜொல்ஸ்: புலி சொல்றது சரி தான்…போத்திட்டு படுத்தா என்ன படுத்துட்டு போத்துனா என்ன…ஆனா போத்தி விடுறதுக்கு இலியானாவோ இல்ல நமீதாவோ வருவாங்களா…..

தல: அடேய் அப்ரசன்டிசுகளா…நீங்க எல்லாம் ஏதாவது பேசுவீங்கன்னு தலம தாங்க வந்தேன் பாரு…இதுக்கு டாஸ்மாக்ல ஒரு கோட்டர் வாங்கி அடிச்சிட்டு கட்டதொரை கிட்ட அடி வாங்க போய் இருக்கலாம்….நான் பாட்டுக்கு பெகிரீன் “கேக்கறான்-மேக்கறான்” கம்பேனில பில்டிங் காண்டீட்டு வேல பாத்துட்டு இருந்தேன் என்ன கூட்டி கொண்டாந்து இப்புடி ரணகளம் பன்றாய்ங்களே…..

.... இங்கே பதியப்பட்டது Syam | 65 மறுமொழிகள் »

உங்களுக்கு 40, எங்களுக்கு மட்டும் 105

Posted by vavaasangam மேல் April 23, 2007

“நகைச்சுவைப் போட்டின்னு அறிவிச்சா யாரு வந்து எழுதப்போறாங்க, வேலையை பாருங்கப்பா” இது நண்பர்

” இல்லீங்க, தமிழ் வலைப்பதிவர்களும் நகைச்சுவையா எழுதறாங்க”- இது நம்ம சிங்கம்.

“அப்படியா வேணுமின்னா பாரு ஒரு பத்து பேரு தேறமாட்டாங்க”

“சரிங்க, போட்டி நடத்திட்டு சொல்றோம், தமிழ்ப்பதிவர்ங்க எவ்ளோ பேர் நகைச்சுவயாவும் எழுதறாங்கன்னு”

“இப்போ இந்த போட்டி நடத்தி என்னாத்த கிழிக்கப் போறிங்க”

“வ.வா.ச ஆரம்பிச்சு ஒரு வருசம் ஆச்சுங்க. அதுக்கு Global Warming Awareness’ம் அறிவிச்சு இருக்கோம். போட்டிக்கு வர பதிவுகளை தொகுப்பாக்கினா அப்படியே நல்ல நகைச்சுவை தொகுப்பும் கிடைக்கும். பதிவர்ங்ககிட்டே இருக்கிற நகைச்சுவை உணர்வையும் வெளிக் கொணர ஒரு நல்ல சந்தர்ப்பமாவும் அமையும்”

“சொன்னா கேட்கவா போறீங்க, எப்படியோ போங்க”

கைப்பு: ஆஹா, அந்த நண்பர் சொன்ன மாதிரியே மக்கா கவுத்திட்டாங்கய்யா கவுத்திடாங்க. போட்டிக்கு வந்த பதிவுகள் மட்டும் அதிகமில்லை அப்பு
105
.

ஷ் ஷ் அப்பப்பா இப்பவே கண்ண கட்டுதே, அன்னந்தண்ணி இல்லாம படிச்சாவே 2 வாரம் ஆவுமே. மின்னாடி சொன்ன மாதிரி 26ம் தேதிக்குள்ள ரிஜல்ட்டை சொல்லிருவாய்ங்களா? சொல்லுங்க அப்ரசண்டிகளா?

சிங்கங்கள் எல்லாம் ஒன்னா கோரஸாக: முயற்சி பண்றோம்…

.... இங்கே பதியப்பட்டது ILA | 11 மறுமொழிகள் »

உலகக் கோப்பை 2011

Posted by vavaasangam மேல் April 19, 2007

இந்திய கிரிக்கெட் அணியை தண்டிக்கவும் தமிழ் சினிமா நடிகர்களை தண்டிக்கவும் நமது வ.வா சங்கத்திடம் மனு குவிந்தது.
எமது தீர்ப்பு “இனி தமிழ் நடிகர்கள் கிரிக்கெட் ஆடுங்கள், கிரிக்கெட் வீரர்கள் தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்பதே!”

முதல் பகுதி:

இதில் தமிழ் வீரர்கள் கிரிக்கெட் ஆடுவார்கள். அதன் நேரடி வர்ணணை முதல் பகுதியில் வெளிவரும். இரண்டாம் பகுதியில் கிரிக்கெட் வீரர்கள் நடிக்கும் தமிழ் படங்கள் திரையிடப்படும்.

அப்போ ஆட்டத்தை ஆரம்பிப்போமா?

பேட்டிங் ஆர்டர்:

சிம்பு
தனுஷ்
S.J. சூர்யா
விஜய் (Vice Captain)
அஜித்(விஜயகாந்த் ………….. அதாவது Captain)
பிரகாஷ்ராஜ்
கார்த்திக்
நமீதா(Fast Bowler)
பாக்கியராஜ்
வடிவேல் சிங்
ராஜ்கிரண் (கடைசியில் அழுபவர்)

Substitues (அல்லகை’s): T.R. & விஜயகாந்த்
Coach: கவுண்டமணி
Manager: செந்தில்

Toss:
டாஸ் போட ரிக்கி பாண்டிங்கும், Referreeயும் ரொம்ப நேரமாக காத்திருக்கிறார்கள். கடுப்பாகி போன பாண்டிங், நேராக இந்திய Dressing Room நோக்கி விரைகிறார்.

“Captain, Captain, Indian Captain, please வாங்க” என்று கூக்குரலிடுகிறார், பாண்டிங்.
அப்பொழுது, சலங்கை சப்தம் கேக்கிறது. “இன்னிசை அளபெடையே” என்று பாட்டும் ஒலிக்கிறது.
பாண்டிங் குரல் கேட்டதும் சப்தம் திடுக்கென்று நின்றது. ஒய்யாரமாக சலங்கையுடன் நடந்து வருகிறார் அஜித்.

“பாண்டிங்! இனிமேல் என்னை ‘தல’ன்னு கூப்பிடுங்க, ஏன்னா, இந்திய கிரிக்கெட் உலகத்துல இது புது சகாப்தம்……கெட்டதுக்கும் நல்லதுக்கும் நடக்கிற யுத்தம்.” 10 செகண்ட் மெளனத்திற்கு பின் ‘அது’ என்று சத்தமாக கர்ஜிக்கிறார்.

பாண்டிங்கிற்கு விளையாடமலேயே வேர்க்கிறது. “தல! வாங்க Toss போட போகலாம். ஆனால், அதுக்கு முன்னாடி சலங்கையை கழட்டிட்டு வாங்க” என்கிறார். இதற்கு அஜித் மறுத்து வேகமாக தலையாட்ட அங்கே வருகிறார், Vice Captain, விஜய், அஜித்திற்கு சப்போர்ட்டாக.

நிறுத்துங்க Ponting (பூவே உனக்காக background music ஒலிக்கிறது)

“காதலுங்கிறது கால்ல கட்டியிறுக்கிற சலங்கை மாதிரிதான். கட்டறவங்க கட்டி ஆட்டம் போட்டா ஆட்டம் நின்ன பிறகும் சத்தம் கேட்கும்…..
நான் கிரிக்கெட் ஆட்டத்தை சொன்னேன்” என்று பிதற்றுகிறார் விஜய். அஜித்தும் விஜயும் கைத்தட்டிக் கொள்கிறார்கள்.

Ricky Ponting தலைமுடியை பிய்த்துக் கொள்கிறார். “யோவ், light போக போகுதய்யா” என்று கதறுகிறார்.

“ஒரு நிமிஷம் Ponting, நான் இப்போ வர்றேன்” என்று escape ஆகிறார் அஜீத். நேராக canteenல் அமர்ந்திருக்கும் coach கவுண்டமணியிடம் “Tossன்னா என்ன?” என்கிறார். அப்போது கவுண்டமணி அதிர்ச்சி தாங்காமல் குடித்துக் கொண்டிருந்த teaயை எதிரில் அமர்ந்துக் கொண்டிருந்த T.R. முகத்தில் துப்பி விடுகிறார்.

அஜீத்தை பார்த்து “என்ன கண்ணா சொன்ன”. அஜீத் “Tossனா என்ன?” என்கிறார். கவுண்டர் “எங்க இன்னொருக்கா சொல்லு”, அஜித் “Toss, Toss, Toss” என்று கத்துகிறார். கவுண்டர் தலை குணிந்து “இதென்ன சோதனை!, Tossன்னா என்ன அப்படிங்கிறத கூடவா coach சொல்லி தரணும். கடவுளே இது எனக்கு தேவையா?”

Tea முகத்தை துடைத்துக்கொண்டு T.R. பேச ஆரம்பிக்கிறார்.

அஜீத், இந்த Teamற்கு நீ Bossu

அதனால் நீ போடனும் Tossu

1 ரூபாய் coinஅ மேல வீசு!

Ponting சொல்றபடி வீழ்ந்தா நம்ம closeu

எப்படி இருந்தாலும் நம்ப all out for no lossu…..(ஏய் டண்டணக்கா டணுக்ணக்கா என்று இடத்தை விட்டு நகர்கிறார் T.R.)

Toss என்றால் என்னவென்று சரிவர புரியாமல் groundற்கு போகிறார் அஜித்……….இனி ஆட்டம் இனிதே தொடரும் – கமலேஷ் கண்ணன்.

.... இங்கே பதியப்பட்டது Uncategorized | 17 மறுமொழிகள் »

டெவில் ஷோ – ராயல் ராம்

Posted by vavaasangam மேல் April 19, 2007

மக்களே அடுத்து ஒரு சினிமா பிரபலத்த தான் டெவில் ஷோல கூப்பிடலாம்னு இருந்தோம். தல கூட ரெடியாயிட்டேனு சொன்னாரு. அப்பதான் நம்ம போர்வாள்கிட்ட இருந்து ஒரு போன் நம்ம ராயலுக்கு இன்னைக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லலையானு? சரினு வாழ்த்து சொல்லலாம்னு போன் பண்ணா எனக்கு டெவில் ஷோ போடலைனா நான் பேச மாட்டேனு ஃபீல் பண்ணிட்டாரு. சரினு, அப்படியே டெவில் ஷோக்கு அப்படியே ரெடியாகியாச்சு. இப்ப எல்லாம் நிகழ்ச்சிக்கு போவோம்

கவுண்டர்: “பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராம்”

ராயல்: “மிக்க நன்றி கவுண்ட்ஸ். ஆனா எம் பேர இப்ப வெறும் ராம் இல்லை. “ராயல்” ராம். கெஸட்ல கூட மாத்தியாச்சி.”

கவுண்டர்: “அது என்ன ராயலு. நீ என்ன மைசூர் மகாராஜா பேமிலியா இல்லை இங்கிலாந்து எலிசபத் ஃபேமிலியா?”

ராயல்: “நோ நோ நோ நோ. எலி எல்லாம் எங்க வீட்ல இல்லை. எல்லாத்தையும் தம்பி பிடிச்சிட்டு போயி மஞ்சுளாக்கு கொடுத்துட்டான். என் சொந்த ஊர் மதுரை. அதனால பாண்டிய வம்சமா தான் இருக்கும்னு நினைக்கிறேன்”

கவுண்டர்: “ஏன்டா, பாண்டியன் படத்த தியேட்டர்ல பாக்க காசு இல்லாம சன் டீவில பாத்தவன் நீ? நீ ராயல் ஃபேமிலியா? ஏன்டா உனக்கு இந்த ஓவர் பில்டப்। “

ராயல்: “அது இல்லைங்க கவுண்ட்ஸ். ராயல்னு சொன்னா ஒரு ரிச் இருக்குமேனு தான். அதுவுமில்லாம எனக்கு ரிச்சி ரிச்னா ரொம்ப பிடிக்கும் அதான்.”

கவுண்டர்: “அது எவன்டா அந்த ரிச்சி ரிச்?”

ராயல்: “ப்ளாக்ல என் ஃப்ரோபைல் போட்டோல இருக்கான் இல்ல.அவன் தான் ரிச்சி ரிச். நான் கூட ஏன் போட்டோ மாத்தினேனு ஒரு பதிவு போட்டேனே. நியாபகமில்லை.”

கவுண்டர்: “ஓ! நீ ஏதோ ஒரு பொண்ணுக்கூப்பிட்டு ஃபோரம் போனப்ப இன்னும் ரெண்டு பொண்ணுங்க வந்து ப்ரோபஸ் பண்ணி, கடைசியா மூணு பேரும் சேர்ந்து மொத்தனாங்கனு போட்டியே அதா? அது எப்படிடா உனக்கு மட்டும் இத்தன ஃபிகர் மாட்டுது?”

ராயல்: “அது நம்ம எழுத்து திறமைய பாத்துதான்.”

கவுண்டர்: “டேய்! யாகூ சேட்ல நீ பண்ண அலும்பதான் உங்க போர்வாள் புட்டு புட்டு வெச்சிட்டாரே. இன்னுமும் ஏன்டா உனக்கு இந்த பில்டப்பு.”

ராயல்: “ஹி ஹி ஹி…”

கவுண்டர்: “ஆமா அப்பறம் எதுக்கு அமெரிக்கால இருந்து வரவன எல்லாம் கலாய்ச்ச?”

ராயல்: “ஓ அதுவா? கப்பி வரும்போது சாக்லேட் வாங்கிட்டு வர சொன்னேன். அவன் வாங்கிட்டு வரல. அதனால தான். ஹி ஹி ஹி”

கவுண்டர்: “ஏன்டா அந்த ஒன்றையனா சாக்லேட்டுக்கு நீ இவ்வளவு அலும்பு பண்ணிருக்க.ஆமா அப்பறம் மதுரைல உங்க அப்பத்தாக்கிட்ட பெங்களூருக்கு போறதுக்கு பாஸ்போர்ட், வீசா எல்லாம் வாங்கனும்னு சொல்லியிருக்கியாமே. நிஜமாவா?”

ராயல்: “இந்த உண்மையெல்லாம் உங்களுக்கு யாருங்கண்ணா சொன்னா?”

கவுண்டர்: “நீ உங்க ஊர்ல சொல்லிருக்க விஷயமெல்லாம் கொஞ்ச கொஞ்சமா வெளிய வர ஆரம்பிடுச்சி கண்ணா… அப்பறம் எதுக்குடா ஆனா ஊனா ஃபீலிங் ஆகிடற?”

ராயல்: “ஓ! அதுவா??? சின்ன வயசுல இருந்தே யாராவது எதுனா சொன்னா இப்படி ஃபீல் ஆகற மாதிரி ஆக்ட் விடுவேன். உடனே சாக்லேட் வாங்கி கொடுத்துடுவாங்க.”

கவுண்ட்ஸ்: “இந்த சாக்லேட் பிரச்சனை பெரும் பிரச்சனையா இருக்கும் போல இருக்கே. ஆமா குஷி படம் பார்த்துட்டு வரும் போது பேய் துரத்துச்சி, நாய் கடிச்சினு எல்லாம் போட்டிருந்தியே அது என்ன மேட்டரு?”

ராயல்: “அது ஒண்ணுமில்லைங்க… என் கூட வந்த என் ஃபிரெண்டுக்கும் எனக்கும் ஓட்ட பந்தயம் வெச்சோம்। அப்ப ஓடும் போது நாய் கடிச்சிடுச்சி. “

கவுண்ட்ஸ்: “டேய் எவண்டா ராத்திரி ஒரு மணிக்கு ஓட்ட பந்தியம் வைப்பான்? இதுக்கு தான் ஆன்லைன் ஆவிகள், ஆவி அம்மணி எல்லாத்தையும் பகைச்சிக்க கூடாதுனு சொன்னது. ஏதோ உன் நல்ல நேரம் நாய் உன்னைய விட்டுவெச்சிடுச்சி…”

ராயல்: “ஆமாங்க கவுண்ட்ஸ். சரிங்க கவுண்ட்ஸ் பர்த்டே அதுவுமா நான் ஆம்பிளைங்க கூட பேசி நான் டைம் வேஸ்ட் பண்ண விரும்பலை. நான் கிளம்பறேன்…”

கவுண்ட்ஸ்: “சரி பொறந்த நாளா இருக்கேனு நானும் உன்னை மன்னிச்சி விடறேன். இந்தா சாக்லேட்டு.”

சந்தோஷமாக வாங்கி ஃபிகர்களிடம் கொடுக்க ஓடுகிறார் ராயல் :-)

.... இங்கே பதியப்பட்டது வெட்டிப்பயல் | 8 மறுமொழிகள் »

ராயல் ராம்-பொறந்த நாளு

Posted by vavaasangam மேல் April 19, 2007

ராம்,

  • அவர எல்லாரும் குழந்தைன்னு சொன்னாலும் அவரு வளர்ந்த ஒரு குமரன்.
  • சதா வேலை நினைப்பாவே இருக்கிறவருங்க.
  • வல்லவரு, நல்லவரு நாலும் தெரிஞ்சவரு.
  • திறமை ரெம்வே அதிகம்.
  • மூளை கவுட்டி கவுட்டியா வேலை செய்யும்.
  • பொய் பேசவே மாட்டாரு.
  • பொண்ணுங்களை ஏறெடுத்தும் பார்க்காதவரு, பொண்ணுங்க கிட்டே சேட் பண்ணவே மாட்டாரு.
  • காலையில எழுந்த உடனே பல் விளக்கிருவாரு.
  • பொய் பேசவே தெரியாது.
  • தம், தண்ணின்னு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.
  • கை போன்ல பொண்ணுங்க கிட்டேயும் பேசவே மாட்டாரு, பசங்ககிட்ட கூட அதிகமா பேச மாட்டாரு.
  • சீட்டு, ரேஸ், கேம்பிளிங்க் எதுவுமே தெரியாது.
  • பெங்களூரிலேயே இருந்தா Pubக்கு போனதே கிடையாது.
  • கடைசியா ஒன்னு. அவரு ரெம்ப நல்லவருங்கோஓஓஓஓஓஓஓ

டிஸ்கி: “ஒரு பதிவு முழுசா பொய் மட்டுமே பேச முடியுமான்னு கேட்டவருக்காக”

ராயல் ராமின் பிறந்த நாளுக்காக(Apr-19) இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறோம்

.... இங்கே பதியப்பட்டது Uncategorized | 19 மறுமொழிகள் »

சங்கப் போட்டிப் பதிவுகள் – முழுப் பட்டியல்

Posted by vavaasangam மேல் April 17, 2007

வ.வா.சங்கத்தின் போட்டிக்கு வந்துள்ளப் பதிவுகள்

டோண்டு ராகவன்- 1
டோண்டு ராகவன்- 2
டோண்டு ராகவன்- 3
டோண்டு ராகவன்- 4
டோண்டு ராகவன்- 5

செந்தழல் ரவி -1
செந்தழல் ரவி -2
செந்தழல் ரவி -3
செந்தழல் ரவி -4

ஜி -1
ஜி -2
ஜி -3
ஜி -4

குலவுசனப்பிரியன் -1
குலவுசனப்பிரியன் -2
குலவுசனப்பிரியன் -3
குலவுசனப்பிரியன் -4
குலவுசனப்பிரியன் -5
குலவுசனப்பிரியன் -6
குலவுசனப்பிரியன் -7
குலவுசனப்பிரியன் -8

மாறன் – 1
மாறன் – 2

சந்தோஷ் – 1
சந்தோஷ் – 2
சந்தோஷ் – 3
சந்தோஷ் – 4

ஷைலஜா – 1
ஷைலஜா – 2
ஷைலஜா – 3

செந்தில்- 1
செந்தில்- 2

கோல்மால் கோபால் -1
கோல்மால் கோபால் -2
கோல்மால் கோபால் -3
கோல்மால் கோபால் – 4

அருண்குமார் – 1
அருண்குமார் – 2
அருண்குமார் – 3

சி.வி.ஆர் -1
சி.வி.ஆர் -2
சி.வி.ஆர் -3

மாதங்கி – 1

டுபுக்கு – 1
டுபுக்கு – 2
டுபுக்கு – 3

டேவ் தேவ் – 1

லக்கி லுக் – 1
லக்கி லுக் – 2
லக்கி லுக் – 3
லக்கி லுக் – 4
லக்கி லுக் – 5
லக்கி லுக் – 6
லக்கி லுக் – 7
லக்கி லுக் – 8
லக்கி லுக் – 9
லக்கி லுக் – 10
லக்கி லுக் – 11
லக்கி லுக் – 12
லக்கி லுக் – 13
லக்கி லுக் – 14
லக்கி லுக் – 15
லக்கி லுக் – 16
லக்கி லுக் – 17
லக்கி லுக் – 18
லக்கி லுக் – 19
லக்கி லுக் – 20
லக்கி லுக் – 21
லக்கி லுக் – 22
லக்கி லுக் – 23

அபி அப்பா -1
அபி அப்பா -2
அபி அப்பா -3
அபி அப்பா -4
அபி அப்பா -5
அபி அப்பா -6
அபி அப்பா -7

ராம்C -1

ACE -1

இலவசக் கொத்தனார் – 1

அம்பி – 1
அம்பி – 2
அம்பி – 3
அம்பி – 5

கண்மணி – 1
கண்மணி – 2

உதய் – 1
உதய் – 2
உதய் – 3
உதய் – 4

செல்வன் – 1

மை ஃபிரெண்ட் – 1
மை ஃபிரெண்ட் – 2

நாகை பாலமுரளி – 1
நாகை பாலமுரளி – 2
நாகை பாலமுரளி – 3
நாகை பாலமுரளி – 4
நாகை பாலமுரளி – 5
நாகை பாலமுரளி – 6
நாகை பாலமுரளி – 7

Jayashree -1
Jayashree -2

.... இங்கே பதியப்பட்டது Uncategorized | 17 மறுமொழிகள் »

 
Follow

Get every new post delivered to your Inbox.